Monday, November 15, 2010

ஜாலியா விளையாட வாருங்கள்! . - சட்டம் நம் கையில்.

இதுவரை நீங்கள் விளையாடாத விளையாட்டை உங்களுக்கு சொல்லி தருகிறேன். அனுபவம் எதுவும் தேவையில்லை. அதிக பணம் எதுவும் செலவு செய்ய வேண்டாம். அதேபோல நேரத்தையும் அதிகமாக செலவு செய்ய வேண்டாம். இது மத்திய அரசால் சட்ட பூர்வமாக அங்கிகரிக்கப்பட்ட விளையாட்டு!. நாம் விளையாடுவதால் இந்த சமுதாயத்திற்கே பலன் கிடைக்கும். இனி விளயாட்டிற்கு வருவோம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005.
( Right to Information Act 2005.)

நம் தமிழ் நாட்டை பொறுத்த வரையில் இச்சட்டத்தை அதிக அளவில் யாரும் பயன்படுத்துவதில்லை. காரணம் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததும், காசை விட்டெறிந்தால் காரியம் நடக்கிறது. இதுக்கு போய் நேரத்தை வேஸ்ட் பண்ண முடியுமா? என்ற மன நிலையும் ஒரு காரணம். இதுவே ஊழல் மேலும் பெருக வழி வகுக்கிறது. வட இந்தியாவை பொறுத்த வரை நன்காகவே இச்சட்டம் பயன் படுத்தப்படுகிறது. 

டெல்லியில் ஒரு பழைய பேப்பர் பொறுக்கும் ஒருவர், ரேஷன் கார்டு கேட்டு விணப்பித்தார். மாதம் பல ஆகியும் கார்டு கிடைக்கவில்லை. " என்னுடைய  ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ,  வழங்கப்படாதன் காரணம் இவை பற்றி தகவல் தரவும் " என ஆர்.டி.ஐ ஆக்ட் படி  விண்ணப்பித்தார். அதுவரை தூங்கிக்கொண்டிருந்த அதிகாரி இரண்டே நாளில் ரேஷன் கார்டை அவர் வீட்டிற்கே கொண்டு போய் கொடுத்துவிட்டு டீயும் வாங்கி கொடுத்து சமாதானம் செய்துவிட்டு வந்தார். இது ஒருவருடைய தனிப்பட்ட விஷயத்திற்கு இச்சட்டம் பயன்பட்டது.  இனி ஊழலை வெளிக்கொண்டுவந்ததை பார்ப்போம்.

1. இச்சட்டத்தின் மூலம் தகவலை பெற்று தான் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் காமன் வெல்த் கேம் ஊழலை வெளிக்கொண்டுவந்தது.

2. மகாராஷ்டிராவில் முதலமைச்சரை பதவியிலிருந்து தூக்கி எறிந்த ஆதார்ஷ் கூட்டுறவு வீட்டு சங்க ஊழல்.
                                                                                                        
நம்மால் இந்த அளவுக்கு பெரிய ஊழலை அம்பலப்படுத்த முடியாவிட்டாலும், ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பது போல நம் லெவலுக்கு சிறிய ஊழலை அம்பலப்படுத்தலாம். எப்படி, யாரிடம் விண்ணப்பிக்கவேண்டும், அதன் பின் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விலா வாரியாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக, தொடர் பதிவாக பதிவிடப்படும்.  அதற்கு முன்பு இச்சட்டத்தின் நகலை இங்கு கிளிக் செய்து டவுன் லோடு செய்து கொள்ளவும்.

இந்த தொடர் பதிவுக்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். மேலும் உங்கள் தனிப்பட்ட விஷயங்கள், பொது விஷயங்கள் இவை தொடர்பாக யாருக்கு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விபரத்தை பெற உங்கள் கேள்விகளை தெளிவாக பின்னூட்டமாக கொடுங்கள். அடுத்த பதிவில் அதற்கான விளக்கம் கொடுக்கப்படும்.

ஊழலை ஒழிக்க ஒன்றுபடுவோம். வாரீர்.

21 comments:

 1. அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு தொடருங்கள்

  ReplyDelete
 2. மிக நல்ல முயற்சி ! ! அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது....பொது நலம் கருதியும் நாம் இச்சட்டத்தை பயன் படுத்தலாம்தானே

  ReplyDelete
 3. இது ஒரு அருமையான தொடர் உங்களது இந்த கட்டுரையை எனது சிந்திக்கவும் வலைப்பூவில் போட்டுளேன். உங்களது சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நல்ல முயற்சி..உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 5. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக இதைப் பலர் பயன்படுத்துவார்கள்.

  ReplyDelete
 6. Please continue this topic.. ' you are a eye opener of society' Thanks.

  ReplyDelete
 7. ஜிஎஸ்ஆர் said...

  // அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு தொடருங்கள் ///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 8. Ponchandar said...

  மிக நல்ல முயற்சி ! ! அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது....பொது நலம் கருதியும் நாம் இச்சட்டத்தை பயன் படுத்தலாம்தானே?

  ஆமாம்.

  ReplyDelete
 9. புதிய தென்றல் said...

  இது ஒரு அருமையான தொடர் உங்களது இந்த கட்டுரையை எனது சிந்திக்கவும் வலைப்பூவில் போட்டுளேன். உங்களது சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. பணி சிறக்க வாழ்த்துக்கள் ///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 10. ஹரிஸ் said...

  நல்ல முயற்சி..உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.////

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 11. அதி பிரதாபன் said...

  உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக இதைப் பலர் பயன்படுத்துவார்கள் //

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 12. linelogesh said...

  Please continue this topic.. ' you are a eye opener of society' Thanks ///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 13. நல்ல முயற்சி..

  http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_16.html

  ReplyDelete
 14. தயவு செய்து தொடர்ந்து பதிவிட்வும்.மேலும் ஆன் லைன் முலம் எப்படி வின்ன்ப்ப்ம் செய்வ்து என்பதையும் விள்க்க்வும்

  நன்றி

  ReplyDelete
 15. அஹமது இர்ஷாத் said...

  நல்ல முயற்சி ///

  தங்கள் கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 16. Thangaraj said...

  தயவு செய்து தொடர்ந்து பதிவிட்வும்.மேலும் ஆன் லைன் முலம் எப்படி வின்ன்ப்ப்ம் செய்வ்து என்பதையும் விள்க்க்வும் ///

  ஆன் லைன் மூலம் சட்டப்படி விண்ணப்பிக்க முடியும். ஆனால் விண்ணப்ப கட்டணத்தை நெட் பாங்கிங் மூலம் செலுத்தும் வசதியை அரசாங்கம் செய்யவில்லையே? அதனால் தபால் மூலம் தான் விண்ணப்பிக்க முடியும்.

  ReplyDelete
 17. //ஆன் லைன் மூலம் சட்டப்படி விண்ணப்பிக்க முடியும். ஆனால் விண்ணப்ப கட்டணத்தை நெட் பாங்கிங் மூலம் செலுத்தும் வசதியை அரசாங்கம் செய்யவில்லையே? அதனால் தபால் மூலம் தான் விண்ணப்பிக்க முடியும். //

  Thank you for your explanation

  ReplyDelete
 18. Pls delete my prev comment. it was saved by mistake.

  தகவல் அறியும் சட்டம் பற்றிய ஆவணத்துக்கு நன்றி.

  நான் என் மகன் படிக்கும் பள்ளிக்கு inspection சென்று நடவடிக்கை எடுக்குமாறு Inspector of Matriculation Schools க்கு வேண்டுகோள் விடுத்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதோ அதோ என்று இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த தகவல் அறியும் சட்டம் மூலமாக அவர்களிடம் தாமதத்துக்கு காரணம் கேட்கவும் மேலும் நடவடிக்கை எடுத்த பின் inspection குறித்த தகவலகளையும் பெற இயலுமா?

  பள்ளி குறித்த சில விவரங்கள்,

  http://www.virutcham.com/2010/10/நர்சரி-குழந்தைகளின்-மேல்/
  http://www.virutcham.com/2010/09/matric-பள்ளிகளில்-பிள்ளைகளை-சே/
  http://www.virutcham.com/2010/06/ac-இருக்கிற-பள்ளியில-போய்-ச/
  http://wp.me/p12Xc3-Y7 ‎

  ReplyDelete
 19. virutcham said...

  /// தகவல் அறியும் சட்டம் பற்றிய ஆவணத்துக்கு நன்றி.

  நான் என் மகன் படிக்கும் பள்ளிக்கு inspection சென்று நடவடிக்கை எடுக்குமாறு Inspector of Matriculation Schools க்கு வேண்டுகோள் விடுத்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதோ அதோ என்று இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த தகவல் அறியும் சட்டம் மூலமாக அவர்களிடம் தாமதத்துக்கு காரணம் கேட்கவும் மேலும் நடவடிக்கை எடுத்த பின் inspection குறித்த தகவலகளையும் பெற இயலுமா////

  தாங்கள் வசிக்கும் ஊர், பள்ளியின் பெயர், தாங்கள் புகார் செய்த அதிகாரியின் விலாசம், உங்கள் புகார் விபரம் இவற்றை தரவும்.

  ReplyDelete
 20. நான் ஒரு வழியா தொலைபேசியில் IMS அதிகாரியை பிடித்து inspection எப்போது என்பது பற்றி தகவல் அறிந்தேன். இந்த வாரம் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி கூறி இருப்பதால் சில நாட்கள் காத்திருந்து விட்டு அடுத்த அடி எடுத்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

  நீங்களே உதவ முன்வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நன்றி

  பள்ளியின் மேல் நான் குற்றச்சாட்டு வைத்திருப்பதை எதிர்கொள்ள பள்ளி என் மேல் defamation case போடுவதாக எழுத்து மூலமாக மிரட்டுகிறது. நான் அது பற்றி கவலைப்படாமல் பள்ளி எந்தெந்த rules மீறல்கள் செய்திருக்கிறது என்பதை எழுத்து மூலமாக பள்ளிக்கு கொடுத்து இருக்கிறேன். பள்ளி இப்போதைக்கு அடக்கி வாசிக்கிறது. ஆனால் எப்படி எதிர் கொள்ளும் என்பது தெளிவாக எனக்கு தெயரியாததால் நான் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்க விரும்புகிறேன்.

  உங்கள் ஆலோசனையும் எனக்கு இதில் உதவும்.

  ReplyDelete