Friday, December 31, 2010

இவர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.



                                                                                                                                        




பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் தலித்துகள், சாக்கடை-மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் தொழிலாளர்கள், இயற்கை மற்றும் அரசியல்வாதிகளால் பாதிப்புக்குள்ளாகி வரும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், சுயநலமின்றி கிராமப்பகுதிகளில் ஆசிரியர் பணியை வேலையாக கருதாமல் சேவையாக, கடமையாக செய்துவரும் அரசு, அரசு சார்பு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், லஞ்சம் வாங்க மாட்டேன் என்ற வைராக்கியத்துடன் இன்று வரை பணி புரியும் அரசு அதிகாரிகள்-மருத்துவர்கள், உண்ண உணவு, உடுக்க உடை, படுக்க இடமில்லாமல் பிச்சைக்காரர்களாக மாறிய பிரஜைகள், போன்றவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!



Wednesday, December 15, 2010

சோனியா காந்தி, ராகுல் காந்தி - ரஷ்ய உளவாளிகளா?




டாக்டர். யெவ்கெனியா அல்பாட்ஸ் (Dr.Yevgeniya Albats) என்ற ரஷ்ய பெண் பத்திரிகையாளர் The State within a State: KGB and its Hold on Russia என்ற தன் புத்தகத்தில் சில உண்மைகளை எழுதியுள்ளார். 1991-ல் ரஷ்ய அதிபர் யெல்ட்சின் (Yeltsin) ரஷ்ய உளவு துறைக்கான (KGB) அதிகாரப்பூர்வமாக கமிஷன் ஒன்றை அமைத்தார். அதில் இந்த பத்திரிகையாளர் ஒரு அங்கத்தினர் ஆவார். அங்கத்தினர் என்ற முறையில் கே.ஜி.பி-யின் அனைத்து ரிக்கார்டுகளையும் பரிசீலிக்கும் பொறுப்பும் உரிமையும் உண்டு.

கே.ஜி.பி-ன் தலைமை அதிகாரி "விக்டர் செப்ரிகோவ்" (Victor Chebrikov) என்பவர் டிசம்பர் 1985-ல், சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் பார்ட்டிக்கு(CPSU), "ராஜிவ் காந்தியின் குடும்ப அங்கத்தினரான சோனியா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்தியின் தாயார் பாலா மெய்னோ ஆகிய முவருக்கும் அமெரிக்க டாலரில் பணம் வழங்க அத்தாட்சி வழங்க வேண்டும்" என கடிதம் எழுதியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம் "CPSU/CC/No 11228/3 dated 20/12/1985"-ன் படி அங்கீகாரம் அளிக்கப்பட்டு, பின் "Directive No. 2633/Rs dated 20/12/1985" என்ற அமைச்சர்கள் குழுவின் முடிவுப்படி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பண பட்டுவாடா 1971 வருடத்திலிருந்து வழங்கப்பட வேண்டியதாகும் ஆகும். இந்த பணம் சோனியா காந்தியின் குடும்பத்தாரால் பெறப்பட்டுள்ளது பணம் கொடுக்கப்ட்டது தொடர்பாக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியால் கணக்கு தணிக்கையும் செய்யப்பட்டுள்ளது. CPSU/CC resolution No. 11187/22 OP dated 10/12/1984.

1992-ல் ஊடகங்கள்  "The State within a State: KGB and its Hold on Russia" என்ற புத்தகத்தில் அல்பாட்ஸ் எழுதியுள்ள இந்த விஷயங்கள் உண்மையா என ரஷ்ய அரசிடம் கேள்வி எழுப்ப, உண்மை என ரஷ்யா ஒப்புக்கொண்டதுடன் இதை நியாயப்படுத்தும் வகையில் " It is necessary for Soviet ideological interest" என கூறியது. நவம்பர் 1991-ல்  சுவிட்சர்லாந்திலிருந்து வெளிவரும் "Schweitzer Illustrate" என்ற பத்திரிகையில் " ராஜிவ் காந்தி பெயரில் உள்ள சுவிட்சர்லாந்து வங்கி கணக்குகளில் சுமார் 2.5 பில்லியன் சுவிஸ் பிராங் பணம் உள்ளது" என்ற தகவலை வெளியிட்டது. இந்த தகவலை இந்து பத்திரிகை 1992 ஜூலை 4-ம் தேயிட்ட தனது பதிப்பில் வெளியிட்டுள்ளது. இது பற்றி அவுட் லுக் பத்திரிகையில் 28 ஏப்ரல் 2009 பதிப்பில் ராஜின்டர் புரி  (Rajinder Puri) என்பவர் கட்டுரையை எழுதியுள்ளார்.

2.5 பில்லியன் சுவிஸ் பிராங் என்பது 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு  சமம் ஆகும். ஒரு பில்லியன் என்பது  100 கோடி. அதாவது 200 கோடி அமெரிக்க டாலர். இன்றைய கணக்குபடி டாலர் 45 ரூபாய் 85 காசு ஆகும். அப்படியென்றால்  200 கோடி டாலர் என்பது 9170 கோடி ரூபாயாகும்.
எழுத்தாளர் அல்பாட்ஸ் தனது புத்தகத்தில் ராஜிவ் காந்தி குடும்பத்தினர் ரஷ்ய உளவுத்துறையிடமிருந்து பணம் பெற்றார்கள்  என குறிப்பிட்டுள்ளது பொய்யானது என்றால், சோனியா காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மறுப்பு தெரிவிப்பதோடு  சம்பந்தப்பட்ட புத்தக ஆசிரியர் மீது வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் இது பற்றி மூச்சே விடவில்லை!

அதோடு ராஜிவ் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்குகளில் 2.5 பில்லியன் சுவிஸ் பிராங் பணம் இருக்கிறது என்று "Schweitzer Illustrate"என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியையும் காங்கிரஸும், சோனியாவும் மறுக்கவே இல்லை.

பொதுவாக  கே.ஜி.பி., சி.ஐ.ஏ போன்ற உளவுத்துறைகள் மற்ற நாட்டின் ரகசியங்களை தெரிந்து கொள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஏஜெண்ட்களை வைத்திருப்பார்கள். உளவு பார்க்கும் வேலைக்காக அவர்களுக்கு பணம் வழங்கப்படும். ரஷ்ய உளவுத்துறையான கே.ஜி.பி ராஜிவ் காந்தி  குடும்பத்திற்கு பணம் கொடுத்துள்ளது.அப்படியென்றால் ராஜிவ் காந்தியும், சோனியாவும் ரஷ்ய உளவாளிகளா?
ஆண்டவனே இந்தியாவை இந்த தேசத்துரோகிகளிடமிருந்து காப்பாற்று!

 இதன் ஆதார கட்டுரையை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
ஆதாரம் : http://www.outlookindia.com/article.aspx?240332. 


Thursday, December 2, 2010

நமக்கு எப்போது புத்தி வரும்?

உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை அதிகம் கொண்டதும், அதிகமாக மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் பின் விளைவுகளை கொண்டது "எண்டொ சல்ஃபான்" எனப்படும் பூச்சி கொல்லி ஆகும். இது பெரும்பன்மையான மேலை நாடுகளில் ஒட்டு மொத்தமாக உற்பத்தி மற்றும் உபயோகம் தடை செய்யப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவில உற்பத்தி செய்யப்படுவதுடன் உபயோகப்படுத்தப்படுகிறது. வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கேரளாவில் காசர்கோடு பகுதியில் கெலிகாப்டர் மூலம் அரசு முந்திரி தோட்டத்தில் 1978 ல் இண்டோசஃல்பானை தெளித்தது. இம்மருந்து மண், தண்ணீரில் கலந்து அப்பகுதி மக்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதை உபயோகப்படுத்தி பயிரடப்பட்ட உணவுப்பொருட்களிலும் இதன் நச்சு தன்மை கலந்துள்ளது. இதன் பாதிப்புக்கு உள்ளான காசகோடு பகுதிமக்கள் இதுவரை 500 பேர் மரணமடைந்துள்ளனர். பாதிப்பை கீழே உள்ள படங்கள் விளக்கும்







பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பின் காரணமாக கேரள அரசு, இதன் உபயோகத்தை தடை செய்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் நிவாரணம் கொடுக்க உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் இது தடை செய்யப்படவில்லை. எல்லா விவசாயிகளும் இதன் நச்சுத்தண்மையை உணராமல் உபயோகித்து வருகிறார்கள். அதனால் நாம் நச்சுத்தன்மை கொண்ட காய்கறிகளையே உண்டு வருகிறோம். என்றைக்கு தமிழக அரசு விழித்துக்கொள்ளும் என தெரியவில்லை.




Wednesday, December 1, 2010

யார் அப்பன் வீட்டு பணம்?

இந்தியாவில் துக்ளக் தர்பார் நடந்து கொண்டிருக்கிறது. 

பாராளுமன்றத்தின் மழைக்கால தொடர் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பாராளுமன்றம் நடக்கவில்லை. 

பாராளுமன்ற கூட்டு குழு அமைத்து 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.

பாராளுமன்ற கூட்டு குழு அமைக்க முடியாது. பாராளுமன்ற கணக்கு குழு விசாரிக்கட்டும் என ஆளும் கட்சி காங்கிரஸ் கூறுகிறது.

பராளுமன்ற கணக்கு குழுவின் அதிகாரம் குறைவு. ஆனால் பாராளுமன்ற கூட்டு குழுவின் அதிகாரம் அதிகம். அதன் மூலமே முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்பது எதிர்கட்சிகளின் வாதம்.

ஐ.பிஎல் விவகாரத்தில் சசிதரூரை மந்திரி பதவியிலிருந்தும், காமன் வெல்த் கேம் விவகாரத்தில் சுரேஷ் கல்மாடியை கட்சி பதவியிலிருந்தும், ஆதர்ஷ் வீட்டு சங்க ஊழல் விவகாரத்தில் அஷோக் சவானை முதலமைச்சர் பதவியிலிருந்தும் விலக்கினோம். ஆனால் கர்நாடகாவில் நில ஊழலில் சிக்கிய முதல்வர் எடியூரப்பாவை பதவி விலக செய்ததா பாரதிய ஜனதா கட்சி? என எதிர்வாதம் செய்கிறது காங்கிரஸ். 1,76,000 கோடி ஊழல் விவகாரத்திற்கு கூட்டு குழு அமைப்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என புரியவில்லை.

பாராளுமன்றம் செயல்படாததினால் இதிவரை 25 கோடி ரூபாய் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகிவிட்டது. தினசரி அலவன்ஸ் ரூ.2000 /- காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்க மாட்டார்கள் என நீலிக்கண்ணீர் வடிக்கிறது காங்கிரஸ். ரூ.25 கோடிக்கே கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் ஏன் 1,76,000 கோடிக்கு பாராளுமன்ற கூட்டு குழு அமைக்க தயங்க வேண்டும்?

இறுதியாக "பிரதமருக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரிக்கவேண்டும் என்பதே எதிர்கட்சிகளின் நோக்கம். அதற்காகவே ஜே.பி.சி வேண்டும் என கேட்கிறார்கள். நாங்கள் அனுமதிக்க முடியாது" என காங்கிரஸ் கூறுகிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். பிரதமருக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரிக்கும் உரிமை ஜே.பி.சி-க்கு இருக்குமானால், அதற்கு பிரதமரும் கட்டுபட்டவரே!. இதை எப்படி கவுரவ பிரச்சனையாக கருதமுடியும்?  கவுரவம்தான் முக்கியம் (?) என்றால் மன்மோகன் சிங் பதவியை தூக்கி எறிய வேண்டியதுதானே? 

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பிரதமர் உச்ச நீதிமன்றத்தில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு, அவர் பெயரில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்த போது எங்கே போயிற்று இவர்களின் கவுரவம்? கவுரவம் பற்றி உச்ச நீதிமன்றத்தில் வாதிக்க வேண்டியதுதானே?

கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும் பணம் இந்திய மக்களின் பணம். இந்த ஊழலில் காங்கிரசுக்கு சம்பந்தம் இல்லை என்றால் ஏன் ஜே.பி.சி அமைக்க பயப்படவேண்டும்? மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்?

ஊழலில் பறிபோன பணம் ஏதோ சிறிய தொகை அல்ல. இந்திய ஆண்டு பட்ஜெட்டில் 25% அல்லது ஓராண்டு ராணுவத்திற்கு செலவிடப்படும் மொத்த செலவு தொகை!

நீ என்ன யோகியனா என எதிர்கட்சிகளை பதில் கேள்வி கேட்பதால்  காங்கிரஸ் யோக்கியராக முடியாது. காரணம் இது ஆளும் கட்சி, எதிர்கட்சி சம்பந்தபட்ட பிரச்சனை அல்ல. இந்திய பிரஜைகளாகிய எங்கள் பிரச்சனை. எங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் அரசுக்கு உண்டு. நாங்கள் வந்து பாராளுமன்ரத்தில் ஜே.பி.சி அமையுங்கள் என கேட்க முடியாது. எங்கள் குரலாக எதிர்கட்சிகள் குரல் எழுப்புகிறார்கள்.

காங்கிரசுக்கும் இந்த ஊழலுக்கும் சம்பந்தமில்லை என்றால், ஜே.பி.சி என்ன அமெரிக்க உளவுத்துறை விசாரணைக்கே தயார் என தன் பரிசுத்தத்தை நிருபிக்க முன் வரவேண்டும்.