Wednesday, December 1, 2010

யார் அப்பன் வீட்டு பணம்?

இந்தியாவில் துக்ளக் தர்பார் நடந்து கொண்டிருக்கிறது. 

பாராளுமன்றத்தின் மழைக்கால தொடர் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பாராளுமன்றம் நடக்கவில்லை. 

பாராளுமன்ற கூட்டு குழு அமைத்து 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.

பாராளுமன்ற கூட்டு குழு அமைக்க முடியாது. பாராளுமன்ற கணக்கு குழு விசாரிக்கட்டும் என ஆளும் கட்சி காங்கிரஸ் கூறுகிறது.

பராளுமன்ற கணக்கு குழுவின் அதிகாரம் குறைவு. ஆனால் பாராளுமன்ற கூட்டு குழுவின் அதிகாரம் அதிகம். அதன் மூலமே முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்பது எதிர்கட்சிகளின் வாதம்.

ஐ.பிஎல் விவகாரத்தில் சசிதரூரை மந்திரி பதவியிலிருந்தும், காமன் வெல்த் கேம் விவகாரத்தில் சுரேஷ் கல்மாடியை கட்சி பதவியிலிருந்தும், ஆதர்ஷ் வீட்டு சங்க ஊழல் விவகாரத்தில் அஷோக் சவானை முதலமைச்சர் பதவியிலிருந்தும் விலக்கினோம். ஆனால் கர்நாடகாவில் நில ஊழலில் சிக்கிய முதல்வர் எடியூரப்பாவை பதவி விலக செய்ததா பாரதிய ஜனதா கட்சி? என எதிர்வாதம் செய்கிறது காங்கிரஸ். 1,76,000 கோடி ஊழல் விவகாரத்திற்கு கூட்டு குழு அமைப்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என புரியவில்லை.

பாராளுமன்றம் செயல்படாததினால் இதிவரை 25 கோடி ரூபாய் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகிவிட்டது. தினசரி அலவன்ஸ் ரூ.2000 /- காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்க மாட்டார்கள் என நீலிக்கண்ணீர் வடிக்கிறது காங்கிரஸ். ரூ.25 கோடிக்கே கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் ஏன் 1,76,000 கோடிக்கு பாராளுமன்ற கூட்டு குழு அமைக்க தயங்க வேண்டும்?

இறுதியாக "பிரதமருக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரிக்கவேண்டும் என்பதே எதிர்கட்சிகளின் நோக்கம். அதற்காகவே ஜே.பி.சி வேண்டும் என கேட்கிறார்கள். நாங்கள் அனுமதிக்க முடியாது" என காங்கிரஸ் கூறுகிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். பிரதமருக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரிக்கும் உரிமை ஜே.பி.சி-க்கு இருக்குமானால், அதற்கு பிரதமரும் கட்டுபட்டவரே!. இதை எப்படி கவுரவ பிரச்சனையாக கருதமுடியும்?  கவுரவம்தான் முக்கியம் (?) என்றால் மன்மோகன் சிங் பதவியை தூக்கி எறிய வேண்டியதுதானே? 

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பிரதமர் உச்ச நீதிமன்றத்தில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு, அவர் பெயரில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்த போது எங்கே போயிற்று இவர்களின் கவுரவம்? கவுரவம் பற்றி உச்ச நீதிமன்றத்தில் வாதிக்க வேண்டியதுதானே?

கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும் பணம் இந்திய மக்களின் பணம். இந்த ஊழலில் காங்கிரசுக்கு சம்பந்தம் இல்லை என்றால் ஏன் ஜே.பி.சி அமைக்க பயப்படவேண்டும்? மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்?

ஊழலில் பறிபோன பணம் ஏதோ சிறிய தொகை அல்ல. இந்திய ஆண்டு பட்ஜெட்டில் 25% அல்லது ஓராண்டு ராணுவத்திற்கு செலவிடப்படும் மொத்த செலவு தொகை!

நீ என்ன யோகியனா என எதிர்கட்சிகளை பதில் கேள்வி கேட்பதால்  காங்கிரஸ் யோக்கியராக முடியாது. காரணம் இது ஆளும் கட்சி, எதிர்கட்சி சம்பந்தபட்ட பிரச்சனை அல்ல. இந்திய பிரஜைகளாகிய எங்கள் பிரச்சனை. எங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் அரசுக்கு உண்டு. நாங்கள் வந்து பாராளுமன்ரத்தில் ஜே.பி.சி அமையுங்கள் என கேட்க முடியாது. எங்கள் குரலாக எதிர்கட்சிகள் குரல் எழுப்புகிறார்கள்.

காங்கிரசுக்கும் இந்த ஊழலுக்கும் சம்பந்தமில்லை என்றால், ஜே.பி.சி என்ன அமெரிக்க உளவுத்துறை விசாரணைக்கே தயார் என தன் பரிசுத்தத்தை நிருபிக்க முன் வரவேண்டும். 9 comments:

 1. காங்கிரசுக்கும் இந்த ஊழலுக்கும் சம்பந்தமில்லை என்றால், ஜே.பி.சி என்ன அமெரிக்க உளவுத்துறை விசாரணைக்கே தயார் என தன் பரிசுத்தத்தை நிருபிக்க முன் வரவேண்டும்.


  ......ம்ம்ம்ம்..... என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.

  ReplyDelete
 2. உங்களின் குரலை ஜனனாயகத்தின் ஒட்டுமொத்த குரலாக ஏற்று சம்மந்தப்பட்ட நீதித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்

  ReplyDelete
 3. ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்

  http://arulgreen.blogspot.com/2010/11/blog-post_30.html

  ReplyDelete
 4. ஊழல் பணத்தின் பெரும் பங்குகள் சோனியாவின் பக்கம் திருப்பிவிடப்பட்ட செயல்கள் எல்லாம் வெளியில் வந்துவிடும். இது மிஸ்டர் பொம்மை- மன்மோகன் சிங் அவர்களுக்கும் தெரியும்.அதனால் தான் JPC யை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்த நிலையில் அந்த அம்மா (சோனியா)ஏதோ இந்தியாவில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற வகையில் அறிக்கைகள் விடுவதை என்னவென்று சொல்வது? இந்திய நாட்டு மக்களை எவரும் இங்கு மக்களாக மதிப்பதே இல்லை.
  அதிகாரம் "கைக்கு" வர இருக்கவே இருக்கு "ஜன நாயகமும், மத சார்புஇன்மையும்".

  ReplyDelete
 5. Chitra said...

  காங்கிரசுக்கும் இந்த ஊழலுக்கும் சம்பந்தமில்லை என்றால், ஜே.பி.சி என்ன அமெரிக்க உளவுத்துறை விசாரணைக்கே தயார் என தன் பரிசுத்தத்தை நிருபிக்க முன் வரவேண்டும்.


  ......ம்ம்ம்ம்..... என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.////

  ஏதோ சினிமா தியேட்டரில் பொழுது போக்குக்காக படம் பார்ப்பது போலத்தானே இதுவரை இருந்து வந்தோம்!. இனியும் அப்படியே இருப்போம்.

  ReplyDelete
 6. ஆகமக்கடல் said...

  உங்களின் குரலை ஜனனாயகத்தின் ஒட்டுமொத்த குரலாக ஏற்று சம்மந்தப்பட்ட நீதித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் ///
  உச்சநீதிமன்றம், பாராளுமன்றம் எல்லாவற்றிலும் ஆப்பு வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். சொரணை உள்ளவனுக்குதானே உறைக்கும்!

  ReplyDelete
 7. அருள் said...

  ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல் //
  இன்னும் வந்து கொண்டே இருக்கும்!

  ReplyDelete
 8. கக்கு - மாணிக்கம் said...

  ஊழல் பணத்தின் பெரும் பங்குகள் சோனியாவின் பக்கம் திருப்பிவிடப்பட்ட செயல்கள் எல்லாம் வெளியில் வந்துவிடும். இது மிஸ்டர் பொம்மை- மன்மோகன் சிங் அவர்களுக்கும் தெரியும்.அதனால் தான் JPC யை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்த நிலையில் அந்த அம்மா (சோனியா)ஏதோ இந்தியாவில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற வகையில் அறிக்கைகள் விடுவதை என்னவென்று சொல்வது? இந்திய நாட்டு மக்களை எவரும் இங்கு மக்களாக மதிப்பதே இல்லை.
  அதிகாரம் "கைக்கு" வர இருக்கவே இருக்கு "ஜன நாயகமும், மத சார்புஇன்மையும்"///

  நாட்டை நாசமாக்காமல் விடமாட்டார்கள்.

  ReplyDelete
 9. பாராளுமன்றத்தை செயல்பட விடாமல் இப்படி இன்னும் பல கோடி இழப்புக்கு துணை போகாமல், பாராளுமன்ற நேரம் முடிந்த பின் வெளியில் அமர்ந்து போராடுவது, நாடு தழுவிய கண்டனங்கள் என்று பதிவு செய்ய வேண்டும். வெறும் எதிர் கட்சியின் போராட்டமாக மட்டுமே இருப்பதாலேயே அரசு எருமை மாடு கணக்கா இருக்கு. மக்கள் கருத்துக்களை எதிர்கட்சிகள் பெற்று அரசு முன் வைத்து இது மக்கள் விருப்பம் என்று அழுத்தம் கொடுத்தால் தான் மதிப்பு இருக்கும்.

  ReplyDelete