Thursday, December 2, 2010

நமக்கு எப்போது புத்தி வரும்?

உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை அதிகம் கொண்டதும், அதிகமாக மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் பின் விளைவுகளை கொண்டது "எண்டொ சல்ஃபான்" எனப்படும் பூச்சி கொல்லி ஆகும். இது பெரும்பன்மையான மேலை நாடுகளில் ஒட்டு மொத்தமாக உற்பத்தி மற்றும் உபயோகம் தடை செய்யப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவில உற்பத்தி செய்யப்படுவதுடன் உபயோகப்படுத்தப்படுகிறது. வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கேரளாவில் காசர்கோடு பகுதியில் கெலிகாப்டர் மூலம் அரசு முந்திரி தோட்டத்தில் 1978 ல் இண்டோசஃல்பானை தெளித்தது. இம்மருந்து மண், தண்ணீரில் கலந்து அப்பகுதி மக்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதை உபயோகப்படுத்தி பயிரடப்பட்ட உணவுப்பொருட்களிலும் இதன் நச்சு தன்மை கலந்துள்ளது. இதன் பாதிப்புக்கு உள்ளான காசகோடு பகுதிமக்கள் இதுவரை 500 பேர் மரணமடைந்துள்ளனர். பாதிப்பை கீழே உள்ள படங்கள் விளக்கும்







பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பின் காரணமாக கேரள அரசு, இதன் உபயோகத்தை தடை செய்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் நிவாரணம் கொடுக்க உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் இது தடை செய்யப்படவில்லை. எல்லா விவசாயிகளும் இதன் நச்சுத்தண்மையை உணராமல் உபயோகித்து வருகிறார்கள். அதனால் நாம் நச்சுத்தன்மை கொண்ட காய்கறிகளையே உண்டு வருகிறோம். என்றைக்கு தமிழக அரசு விழித்துக்கொள்ளும் என தெரியவில்லை.




2 comments:

  1. படங்களும் பதிவும், பதற வைக்கிறதே. மேலும் மேலும் இவ்வாறு நடக்காத வண்ணம் தடுக்க முடியாதா?

    ///என்றைக்கு தமிழக அரசு விழித்துக்கொள்ளும் என தெரியவில்லை.///

    ... :-(

    ReplyDelete
  2. இலவசமாக எதைக் கொடுத்தாலும் வாங்கி கொள்ளும் கூட்டம் அல்லவா நமது தமிழ்க் கூட்டம்.இது போல் வாங்கி கட்டிக்கொள்ளும் முன் தடுப்பது நலம்.

    நமது தமிழ்நாட்டில் வேளாண்மை அலுவலரிலிருந்து/அறிவுரைகளிலும் இம்மருந்தை/விடத்தை,பரிந்துரை செய்யும் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல?!!!

    ReplyDelete