Wednesday, December 15, 2010

சோனியா காந்தி, ராகுல் காந்தி - ரஷ்ய உளவாளிகளா?
டாக்டர். யெவ்கெனியா அல்பாட்ஸ் (Dr.Yevgeniya Albats) என்ற ரஷ்ய பெண் பத்திரிகையாளர் The State within a State: KGB and its Hold on Russia என்ற தன் புத்தகத்தில் சில உண்மைகளை எழுதியுள்ளார். 1991-ல் ரஷ்ய அதிபர் யெல்ட்சின் (Yeltsin) ரஷ்ய உளவு துறைக்கான (KGB) அதிகாரப்பூர்வமாக கமிஷன் ஒன்றை அமைத்தார். அதில் இந்த பத்திரிகையாளர் ஒரு அங்கத்தினர் ஆவார். அங்கத்தினர் என்ற முறையில் கே.ஜி.பி-யின் அனைத்து ரிக்கார்டுகளையும் பரிசீலிக்கும் பொறுப்பும் உரிமையும் உண்டு.

கே.ஜி.பி-ன் தலைமை அதிகாரி "விக்டர் செப்ரிகோவ்" (Victor Chebrikov) என்பவர் டிசம்பர் 1985-ல், சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் பார்ட்டிக்கு(CPSU), "ராஜிவ் காந்தியின் குடும்ப அங்கத்தினரான சோனியா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்தியின் தாயார் பாலா மெய்னோ ஆகிய முவருக்கும் அமெரிக்க டாலரில் பணம் வழங்க அத்தாட்சி வழங்க வேண்டும்" என கடிதம் எழுதியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம் "CPSU/CC/No 11228/3 dated 20/12/1985"-ன் படி அங்கீகாரம் அளிக்கப்பட்டு, பின் "Directive No. 2633/Rs dated 20/12/1985" என்ற அமைச்சர்கள் குழுவின் முடிவுப்படி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பண பட்டுவாடா 1971 வருடத்திலிருந்து வழங்கப்பட வேண்டியதாகும் ஆகும். இந்த பணம் சோனியா காந்தியின் குடும்பத்தாரால் பெறப்பட்டுள்ளது பணம் கொடுக்கப்ட்டது தொடர்பாக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியால் கணக்கு தணிக்கையும் செய்யப்பட்டுள்ளது. CPSU/CC resolution No. 11187/22 OP dated 10/12/1984.

1992-ல் ஊடகங்கள்  "The State within a State: KGB and its Hold on Russia" என்ற புத்தகத்தில் அல்பாட்ஸ் எழுதியுள்ள இந்த விஷயங்கள் உண்மையா என ரஷ்ய அரசிடம் கேள்வி எழுப்ப, உண்மை என ரஷ்யா ஒப்புக்கொண்டதுடன் இதை நியாயப்படுத்தும் வகையில் " It is necessary for Soviet ideological interest" என கூறியது. நவம்பர் 1991-ல்  சுவிட்சர்லாந்திலிருந்து வெளிவரும் "Schweitzer Illustrate" என்ற பத்திரிகையில் " ராஜிவ் காந்தி பெயரில் உள்ள சுவிட்சர்லாந்து வங்கி கணக்குகளில் சுமார் 2.5 பில்லியன் சுவிஸ் பிராங் பணம் உள்ளது" என்ற தகவலை வெளியிட்டது. இந்த தகவலை இந்து பத்திரிகை 1992 ஜூலை 4-ம் தேயிட்ட தனது பதிப்பில் வெளியிட்டுள்ளது. இது பற்றி அவுட் லுக் பத்திரிகையில் 28 ஏப்ரல் 2009 பதிப்பில் ராஜின்டர் புரி  (Rajinder Puri) என்பவர் கட்டுரையை எழுதியுள்ளார்.

2.5 பில்லியன் சுவிஸ் பிராங் என்பது 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு  சமம் ஆகும். ஒரு பில்லியன் என்பது  100 கோடி. அதாவது 200 கோடி அமெரிக்க டாலர். இன்றைய கணக்குபடி டாலர் 45 ரூபாய் 85 காசு ஆகும். அப்படியென்றால்  200 கோடி டாலர் என்பது 9170 கோடி ரூபாயாகும்.
எழுத்தாளர் அல்பாட்ஸ் தனது புத்தகத்தில் ராஜிவ் காந்தி குடும்பத்தினர் ரஷ்ய உளவுத்துறையிடமிருந்து பணம் பெற்றார்கள்  என குறிப்பிட்டுள்ளது பொய்யானது என்றால், சோனியா காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மறுப்பு தெரிவிப்பதோடு  சம்பந்தப்பட்ட புத்தக ஆசிரியர் மீது வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் இது பற்றி மூச்சே விடவில்லை!

அதோடு ராஜிவ் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்குகளில் 2.5 பில்லியன் சுவிஸ் பிராங் பணம் இருக்கிறது என்று "Schweitzer Illustrate"என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியையும் காங்கிரஸும், சோனியாவும் மறுக்கவே இல்லை.

பொதுவாக  கே.ஜி.பி., சி.ஐ.ஏ போன்ற உளவுத்துறைகள் மற்ற நாட்டின் ரகசியங்களை தெரிந்து கொள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஏஜெண்ட்களை வைத்திருப்பார்கள். உளவு பார்க்கும் வேலைக்காக அவர்களுக்கு பணம் வழங்கப்படும். ரஷ்ய உளவுத்துறையான கே.ஜி.பி ராஜிவ் காந்தி  குடும்பத்திற்கு பணம் கொடுத்துள்ளது.அப்படியென்றால் ராஜிவ் காந்தியும், சோனியாவும் ரஷ்ய உளவாளிகளா?
ஆண்டவனே இந்தியாவை இந்த தேசத்துரோகிகளிடமிருந்து காப்பாற்று!

 இதன் ஆதார கட்டுரையை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
ஆதாரம் : http://www.outlookindia.com/article.aspx?240332. 


3 comments:

 1. இது வேறயா? நல்லா கிளப்புறாங்க பீதியை........

  ReplyDelete
 2. பீதி இல்லை உண்மையான விஷயம் தான்

  ReplyDelete
 3. இரண்டு வாரங்கள் முன் வந்த துக்ளக் இதழில் அமெரிக்க விமானநிலையத்தில் இந்தியநாட்டுத் துாதுவர் சோதனை செய்யப்பட்டது குறித்த பத்திரிக்கை தகவலை வெளியிட்டு ராகுல்காந்தி அமெரிக்கா சென்றிருந்த போது ஒரு விமானநிலையத்திலிருந்து வெளியேறியபோது பல லட்ச அமெரிக்க டாலர்களை எந்தக்கணக்குமின்றி வைந்திருந்ததாக விசாரிக்கப்பட்டபோது இந்திய அரசிடமிருந்து வந்த வேண்டுகோளின் அவர் விடுவிக்கப்பட்டார் என்று ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.எழுதியவர் சோ அல்ல.
  இக்கட்டுரையைப்படித்தபின் துக்ளக் செய்தி உண்மையாகத்தான் இருக்கம் என்று தெரிகிறது.

  ReplyDelete