Monday, January 31, 2011

ஊழல் + கருப்பு பணம் = காங்கிரஸ். ( பகுதி -1)

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நன்கு அலசி பார்த்தால் தான் விஷயம் புரியும்.  இப்பொழுது நம் நாட்டில் அதிகமாக பேசப்படும் விவகாரம்  ஊழலும் கருப்பு பணமும் தான். ஊழல் வந்துவிட்டாலே கருப்பு பணம் தானாக வளர ஆரம்பித்துவிடும்.  ஊழலை தண்ணீர் ஊற்றி வளர்த்த பெருமை காங்கிரஸையே சாரும்.

உதாரணத்திற்கு  வருமான வரியையே எடுத்துக்கொள்ளலாம். ஒருவரின் வருமானம், அதற்கு அவர் செலுத்தவேண்டிய வருமான வரி எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

1,60,001   to  5,00,000          =  10%
5,00,001   to   8,00,000         =  20%
8,00,001 க்கு மேல்            =  30%

இந்த வரி விதிப்பு முறையே எவ்வவளவு முட்டாள் தனமானது?  அதாவது பிரஜைகளின் வருமானம் கூடினால் நாட்டின் வருமானம் கூடும். அதனால்  மக்களின் வருமானம் அதிகரிக்க மக்களை ஊக்குவிக்க வேண்டிய அரசு, வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க  வரியை அதிகரிப்பது எப்படி சரியான நடவடிக்கையாக இருக்கும்? உதாரணத்திற்கு ஒருவர் ரூ.5லடசம் சம்பாதித்தால் ரூ.34,000 ரூபாய் வரி செலுத்தவேண்டும். இது நியாயம் என ஒப்புக்கொள்ளலாம்.அதே வருமானத்தை அவர் கஷ்டப்பட்டு   ரூ.15லட்சமாக அதிகரிக்கிறார் என வைத்துக்கொள்வோம்.. இப்பொழுது ரூ.1,34,000-ஐ (10%) வரியாக செலுத்த  அவர் தயாராக இருப்பார்.. ஆனால் அரசு வரி விதிப்பு முறைப்படி ரூ. 3,04,000 /-  வரியாக அவர் செலுத்தவேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிபவர்கள், தலையெழுத்து என வரியை செலுத்தி தீரவேண்டும். காரணம் அவர் ஊதியத்திலேயே வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு விடும். வருமான வ்ரி மூலம் அரசுக்கு கிடைக்கும் தொகையில் 85%  வியாபாரம் மற்றும் தொழில் துறையிலிருந்து தான் கிடைக்கிறது.

 3,40,000 ரூபாய்க்கு  10%  வரி-ன் படி      =    ரூ.34,000 /-
அடுத்த 3 லட்சத்திற்கு 20% -ன் படி        =     ரூ.60,000 /-
அடுத்த 7 லட்சத்திற்கு 30% -ன் படி        =    ரூ.2,10,000 /-
மொத்தம் 15 லடசத்திற்கு வரி            =    ரூ.3,04,000 / -

ரூ.1,34,000- க்கு பதில் ரூ.3,04,000 செலுத்த எப்படி மனசு வரும்? கஷ்டப்பட்டு முன்னேறுவதற்கு அபராதமா என்று நிச்சயமாக நினைக்க தோன்றும். அதில் தவறு கிடையாது. வருமானத்தை குறைத்து காட்டி குறைந்த அளவு வரி செலுத்தினால் என்ன? என்ற நினைப்பு தோன்றும். காரணம் அவர் பலவருடங்கள் நஷ்டத்தில் தொழில் செய்திருப்பார். மேலும் அடுத்து வரும் ஆண்டுகளிலும் லாபம் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்?. அவர் தனது வருமானத்தை (வியாபாரம் அல்லது தொழில் மூலம் கிடைக்கும்) ரூ.5லட்சம் என கள்ள கணக்கு  எழுதி ரிட்டர்ன் கொடுத்து ரூ.34,000 /- செலுத்துவார். ஆடிட்டருக்கு, வருமானவரி அதிகாரிக்கு என ரூ.15,000 /-செலவு செய்தாலும் அவருக்கு ஆகும் மொத்த செலவு ரூ.49,000 /- தான். ஆக ரூ.1,34,000 செலுத்த தயாராக இருந்தவர் இப்பொழுது ரூ.2,70,,000 வரி ஏய்ப்பு செய்து விட்டார். ஆக இப்பொழுது அவரிடம் இருக்கும் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.10லட்சம் கருப்பு பணமாக மாறுகிறது. இதை அவர் எப்படி பயன்படுத்துவார்?. உதாரணத்திற்கு அவர் ஒரு வீடு அல்லது மனை வாங்குகிறார். அதன் உண்மையான விலை 20லட்சம் என வைத்துக்கொள்வோம். சொத்தின் மதிப்பை 10லட்சம் என குறைவாக காட்டி பத்திரம் முடித்துவிடுகிறார். ஆக சட்டபூர்வ வருமானத்திலிருந்து வாங்கியதாக ஆகிவிட்டது. இப்பொழுது அவரிடமிருந்த கருப்பு பணம், சொத்தில் முதலீடு செய்யப்பட்டு விட்டது.

வரி ஏய்ப்பு செய்தவர் அடைந்த லாபம் பற்றிய கணக்கு. வரி ஏய்ப்பு மூலம் அவருக்கு கிடைத்த லாபம் ரூ.2,70,000 + குறைவாக மதிப்பை காட்டி சொத்து வாங்கியதால் ரூ.10 லட்சத்திற்கு செலுத்தாத ஸ்டாம்ப் டூட்டி ரூ.1 லட்சம். = ரூ.3 லட்சத்தி எழுபதாயிரம. அதாவது அரசுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் ரூ.3 லட்சத்தி எழுபதாயிரம். இது தற்பொழுதுள்ள வரிவிதிப்பு கொள்கையின் படி.

உண்மையிலேயே இந்த வரி விதிப்பு முறையின் மூலம் இவரால் அரசுக்கு லாபம் கிடைத்திருக்கிறதா? அல்லது நஷ்டம் ஏற்பட்டிருக்கிறதா?

இவர் செலுத்திய வருமான வரி            =       34,000
செலுத்தாத ஸ்டாம்ப் டூட்டி                     =    -1,00,000
ஆக அரசுக்கு நஷ்டம்                                  =   ரூ. 66,000

வருமான வரியை ஸ்லாப் சிஸ்டாமாக வைக்காமல், எவ்வளவு வருமானமாக இருந்தாலும் 10% (உதாரணத்திற்கு) பிக்ஸட் என வைத்திருந்தால்  மேற்படி நபரிடமிருந்து அரசுக்கு கிடைக்கும் வருமானம் என்ன?

வருமானவரி  15 லட்சம் @ 10%     =  ரூ.1,34,000
செலுத்தப்படாத ஸ்டாம்ப் டூட்டி  = ரூ. 1,00,000
ஆக மொத்தம்                                         = ரூ. 2,34,000.


வருமானவரி மத்திய அரசுக்கு, ஸ்டாம்ப் டூட்டி மாநில அரசுக்கு என நீங்கள் கூறலாம். எப்படி இருந்தாலும் அரசு வருமானம் என்பது பொதுவானது தான். ஆக பிக்ஸட் விகிதப்படி வருமான வரி வசூலிக்கப்படுமானால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட போவதில்லை. அதோடு வருமான பணம் முழுவதையும் வங்கி கணக்கில் டெப்பாஸிட் செய்வார்கள்.. இதனால் அந்த பணம் புழக்கத்திற்கு வருவதால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். வரி ஏய்ப்பு பெருமளவில் குறையும். அதோடு கருப்பு பணத்தை வெள்ளையாக்க, அந்த பணத்தை மனை, நிலம் போன்றவற்றில் தேவையில்லாமல் மூதலீடு செய்யப்படுவதால், ராக்கெட் வேகத்தில் பலமடங்கு உயர்ந்துள்ள விலை கீழே இறங்கி விடும். காரணம், தேவைப்படுபவர்கள் மட்டுமே வாங்குவார்கள். இதனால் சாமானியனின் சொந்தவீடு, சொந்த நிலம் என்ற கனவு நிறைவேறும்.

இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் ஆட்சியிலிருப்பவர்கள் இப்படி செயல்படுகிறார்கள்? என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

 தொடரும்.........





Saturday, January 29, 2011

ஆப்பை பிடுங்கிய சர்தார்ஜி!

ஆப்பை பிடுங்கிய குரங்கு கதை என்னவென்று தெரியுமா?. ஒரு ஊரில் விறகுவெட்டி ஒருவன் இருந்தான். அவன் காட்டிற்கு சென்று மரத்தை வெட்டி பின் அதை சிறு துண்டுகளாக கீறி கட்டு கட்டி கொண்டுவருவான். மரத்தை சிறு துண்டுகளாக வெட்ட கோடாலியால் வெட்டி பின் பிளந்த மத்தின் இடுக்கில் ஆப்பை சொருகி விட்டு கோடாலியை எடுத்து பின், அடுத்த இடத்தை பிளப்பான்.அந்த பகுதியில் குரங்கு கூட்டம் ஒன்று இருந்தது. அதில் ஒரு குரங்கு அவனுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வ்ந்தது. அவன் செய்வது போலவே அதுவும் செய்யும். ஒரு நாள் விறகு வெட்டி குரங்கின் பார்வையில் படும்படி வெட்டிய மரத்தில் உட்கார்ந்து கொண்டு அதில் சொருகியிருந்த ஆப்பை எடுத்தான். பின் மறுபடியும் ஆப்பை மாட்டிவிட்டு  சாப்பிட சென்று விட்டான். இதை பார்த்துக்கொண்டிருந்த குரங்கு ஓடி வந்து தடியின் மீது உட்கார்ந்தது. அதன் வால் மரத்தின் பிளவினுள் தொங்கியது. அதைப்பற்றி கவலைப்படாமல் குரங்கு ஆப்பை அசைத்து அசைத்து வெளியே எடுத்தது. அப்பொழுது மரத்தின் பிளவு சுருங்கி இணைந்து கொண்டது. பிளவில் மாட்டிய வால் மரத்தில் மாட்டிக்கொள்ள, வலிதாங்க முடியாமல் குரங்கு கத்த ஆரம்பித்தது. வாலையும் எடுக்க முடியவில்லை. இதுதான் ஆப்பை பிடுங்கிய குரங்கின் கதை. இனி சர்தார்ஜி கதையை பார்க்கலாம்.

"CENTRAL VIGILANCE COMMISSIONER"  பதவி என்பது  அரசியலமைப்பு சட்டப்படி உள்ள நியமனம் ஆகும். அரசின் செலவினங்கள் முறைப்படி ஊழலின்றி செய்யப்படுகிறதா என்பதை என்பதை கண்காணிக்கும் சர்வ அதிகாரம் கொண்ட அமைப்பாகும். தன் இஷ்டப்படி ஆட்சியிலிருப்பவர்கள் கமிஷ்னரை நியமிப்பது தவறு என உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் கொண்ட மூவர் குழுதான் ஏகமனதாக தேர்ந்தெடுக்கவேண்டும் என வழிமுறையை வகுத்து கொடுத்தது.

இவர்தான் பி.ஜே. தாமஸ்

ஒரு சில மாதங்களுக்கு முன்பு, காலியாகப்போகும் விஜிலியன்ஸ் கமிஷ்னர் பதவிக்கு  மூவர் பெயரை பிரதமர் அலுவலகம் இக்குழுவிற்கு பரிந்துறை செய்தது. மூவரில் ஒருவர்  P.J. தாமஸ் I.A.S.  இவர் கேரள அரசில் " உணவு மற்றும் உனவுபொருள் வழங்கல் துறையின் செயலாளராக இருந்த பொழுது, காலம் சென்ற காங்கிரஸ் தலைவர் கருணாகரன் முதல் அமைச்சராக இருந்தார். அப்பொழுது மலேஷியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது.  இதற்கு மத்திய அரசின் அனுமதி பெறப்படாததுடன், அன்றைய மார்க்கெட் விலையை விட அதிகமான விலையில் இறக்குமதி செய்யப்பட்டது. மேலும் இந்த இறக்குமதிக்கான முடிவை அமைச்சரவை கூடி முடிவெடுப்பதற்கு 10 நாள் முன்பாகவே தாமஸ், மலேஷிய கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்தார்.   இதனால் கேரள அரசுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு பின் பதவியேற்ற கம்யூனிஸ்ட் அரசு இந்த ஊழல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது.  இதில் முதலமைச்சர் கருணாகரன் , தாமஸ் உட்பட 8 நபர்கள் மீது விஜிலியன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் கருணாகரன் தடை உத்தரவு பெற்றார். ஆக வழக்கு நிலுவையில் இருந்தது. கருணாகரன் மறைவுக்கு பின் அவர் வழக்கறிஞர், தன் கட்சிக்காரர் மரணமடைந்த  விஷயத்தை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க, நீதிமன்றம் தடை உத்தரவை விலக்கி, வழக்கு விசாரணையை தொடர 23-12-2010 ல் அனுமதி அளித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் வழக்கு விசாரணை துவங்கும் என கேரள விஜிலியன்ஸ் கோர்ட் அறிவித்துள்ளது. ஆக விசாரணைக்கு இன்றைய சென்டிரல் விஜிலியன்ஸ் கமிஷ்னர் குற்றவாளியாக  கோர்ட்டில் ஆஜராக வேண்டியுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் சிதம்பரமும்  பி.ஜே தாமஸை தேர்வு செய்த பொழுது, எதிகட்ட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், "இவர் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதால் இவரை தேர்வு செய்வது தவறு" என்று ஆட்சேபித்ததுடன், "எஞ்சிய இருவரில் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யுங்கள்" என கூறினார். ஆனால்  ஆட்சேபம் நிராகரிக்கப்பட்டு பி.ஜே. தாமஸ் தேர்வு செய்யப்பட்டார். "டிஸ்அக்ரீட்" என  தேர்வு ரிக்கார்டிலும் சுஷ்மா எழுத்து மூலமாக தன் ஆட்சேபணையை குறிப்பிட்டுள்ளார். ஏகமனதாக கமிட்டி உறுப்பினர்கள் மூவராலும் தேர்வு செய்யப்படாமல் மெஜாரிட்டி  என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பாரத ரப்பர் ஸ்டாம்புக்கு (ஜனாதிபதி) அனுப்பப்பட்டு, அவர் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டார்.

இவர் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சமூக நல் அமைப்பு மற்றும் முன்னாள் தேர்தல் ஆணையர் ஆகியோரால் பொது நல வழக்கு தொடப்பட்டுள்ளது.   விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. எடக்கு மடக்கான  உச்சநீதிமன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அரசு இப்பொழுது பேந்த பேந்த முழிக்கிறது. அதன் உச்ச கட்டமாக 27-01-2011 அன்று வழக்கு விசாரணையின் போது "பாமாயில் வழக்கில், கேரள அரசு அனுமதி பெற்று, அவருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டுள்ள விபரம், தேர்வு குழுவுக்கு தெரியுமா?" என நீதிபதி கபாடியா கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த  அட்டார்னி ஜெனரல் Goolam E. Vahanvati "  இந்தியன் பீனல் கோடு பிரிவு 120 B -ன் படி தாமஸின் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ள விபரம்  தேர்வு குழுவின் பார்வைக்கு கொண்டுவரப்படவில்லை. தாமஸின் பயோ டேட்டாவிலும் இவ்விஷயம் குறிப்பிடப்படவில்லை" என்றார்.

மேலும் நீதிபதிகள், "இந்த நியமனத்தில், அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டதா என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். எத்தனை நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்தனர்? என கேள்வி கேட்டனர். CPIL என்ற பொது நல அமைப்பின் சார்பாக வாதாடிய பிரஷாந்த் பூஷன் " தாமஸ் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள விபரம், வேண்டும் என்றே கமிட்டியின் முன்னால் வைக்கப்படவில்லை. சுஷ்மா சுவராஜ் ஆட்சேபணையை மீறி அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம், அவரை நியமிப்பது என்ற முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது" என கூறினார். வழக்கு விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

"நீதிமன்றத்தில் தாமஸ் ஊழல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற விபரம் தேர்வுக்கமிட்டிக்கு தெரியாது என அட்டார்னி ஜெனரல் கூறியிருப்பது வடிகட்டிய பொய். நானே பிரதமரிடம் கூறியுள்ளேன். நீதிமன்றத்திற்கு தவறான தகவலை அரசு கொடுத்துள்ளது. எனவே இதுபற்றி நான் நீதிமன்றத்தில்  அபிடவிட் தாக்கல் செய்யப்போகிறேன்" என கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், ராணுவ நில ஊழல், ராணுவ காண்டீன் ஊழல் என தொடர்ந்து வரும் ஊழல்களை  மூடி மறைக்க தங்கள் சொல்படி ஆடும் நபர் செண்டிரல் விஜிலியன்ஸ் கமிஷ்னராக வரவேண்டும் என்பதற்காகவே மன்மோகன் சிங்கும், சிதம்பரமும்  தாமஸை நியமித்தனர். பிரச்சனை சிக்கலாகுவதை கண்ட காங்கிரஸ் அரண்டு போய், பதவி விலகுங்கள், வேறு பதவி தருகிறோம் என தாமஸிடம் பல முறை பேரம் பேசியும், பதவி விலக மறுத்துவிட்டார்.

சென்டிரல் விஜிலியன்ஸ் ஆக்ட் - படி  கமிஷ்னரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், மத்திய அரசுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ கிடையாது. ஜனாதிபதி கமிஷ்னர் மீதுள்ள குற்றச்சாட்டை குறிப்பிட்டு பதவி நீக்கம் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யலாம். அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யமுடியும். 

எனவே இப்பொழுது தாமஸை பதவி நீக்கம் செய்து பிரச்சனையை வளர விடாமல் செய்யும் பிரதமரின் முயற்சியும் தோல்வியடைந்து விட்டது.  

ஆப்பை பிடுங்கி அவஸ்தை படும் குரங்கின் நிலையில்  நம்ம சர்தார்ஜி இருக்கிறார்.







Wednesday, January 26, 2011

ஜனவரி 26 - காமெடி நாள். இதுதான் உண்மை!

1967 க்கு பின் இன்று வரை நாம் ஜனவரி 26 -ஐ குடியரசு தினமாகவும் ஆகஸ்ட் 15-ஐ சுதந்திர தினமாகவும் கொண்டாடுவது உண்மையிலேயே காமெடியாக இருக்கிறது. காங்கிரஸ் பிளவுபட்டு சர்வாதிகாரி இந்திரா காந்தி பதவிக்கு வந்தார். மாநிலங்களில்  குடும்ப சுயநலவாத கட்சிகள் பதவிக்கு வந்தது. அதன் பின் இந்தியாவில் சுதந்திரம், ஜனநாயகம் என்பது கழுதை தேய்ந்து குட்டி சுவரான கதையாகிவிட்டது. இரட்டை குடியுரிமை வைத்திருப்பவரும், ரஷ்ய உளவுத்துறையிடமிருந்து சுமார் 10,000 கோடி பணம் பெற்று, சுவிஸ் வங்கியில் தன் பெயரிலும், ராகுல் காந்தி பெயரிலும் போட்டு வைத்திருப்பவருமான இத்தாலிய பெண் இந்திரா காங்கிரசின் தலைவர்! ஆக ஒரு இத்தாலிய பெண்மணியை தலைவராக கொண்ட இன்றைய காங்கிரஸ் ஒரு அந்நிய நாட்டு கட்சியே! அக்கட்சி ஆட்சி செய்யும் பொழுது எப்படி இந்தியா சுதந்திர நாடாக இருக்க முடியும். ஆக சுதந்திர கொண்டாட்டமும் ஒரு கேலி கூத்தே!

குடியரசு என்றால் அந்த நாட்டு மக்களாலேயே அந்த நாடு ஆளப்படுகிறது என்று பொருள். ஆனால் உண்மை நிலை என்ன?  இந்தியாவின் நலனை பற்றி துளியும் கவைப்படாமல், அந் நிய நாடுகளின் லாபத்திற்காக சிறப்பு பொருளாதார மையம், அந்நியர் இந்த நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் வகையில் தாராள பொருளாதார கொள்கைகள், உள் நாட்டு தொழில்கள் நசித்துப்போகும் வகையில் அந்நிய முதலீடுகள் என இங்கு காலணி ஆட்சியே நடைபெறுகிறது. அதேபோல மன்னர் ஆட்சி போல இந்திரா காந்தி, அதன் பின் ராஜீவ் காந்தி, பின் சோனியா காந்தி என பரம்பரை ஆட்சி மத்தியிலும், கருணாநிதி அவருக்கு பின் அவர் வாரிசுகள் என மாநிலத்திலும் பரம்பரை ஆட்சிதான்!. இந்த கொள்ளையில் குடியரசு தினம் கொண்டாடுவது  காமெடியான கொடுமைதான்.

ஆயிரக்கணக்கான  ராணுவத்தினரின்   பாதுகாப்புடன் டெல்லியில் குடியசு தின கொண்டாட்டம். படங்களை பாருங்கள்!




தலையில் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கும் பெண்மணிதான் இந்தியாவின் ஜனாதிபதி. இவரும் இவர் குடும்பத்தினரும் சேர்ந்து பேங் ஒன்றை துவங்கியிருந்தனர். அதில் இவர் தான் இயக்குனர். முதலீடு செய்த பாவப்பட்ட ஏழை  எளியவர்களின் பணத்தை அபேஸ் செய்துவிட்டு வங்கியை இழுத்து மூடிய புண்ணியவதி. அதுமட்டுமா, இவர் ஜனாதிபதியான பின் இவர் கணவர் தன்னுடைய நிலத்தை ஒட்டியுள்ள பலர் நிலங்களை மோசடியாக தன் பெயருக்கு மாற்றிக்கொண்டார். நீதிமன்றம் அந்த நிலங்களை அதன் உரிமையாளர்களுக்கு பட்டா மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் போன்றவர்கள் இருந்த ஜனாதிபதி பதிவியில் இப்படி ஒரு காங்கிரஸ் பெண்மணி!






















நம்மை போலவே பாவப்பட்ட ஜென்மங்கள் இந்த ஜவான்கள். 24 மணிநேரமும் மழை ,பனி, வெயில், குளிர் இவற்றை பற்றி கவலைப்படாமல் எல்லையில் காவல் செய்துவருகிறார்கள். கார்கில் போரில் மரணமடைந்த ஜவான்களுக்கு என்று கூறி 31 அடுக்குமாடி குடியிருப்பை கட்டி அதை காங்கிரஸ் அமைச்சர்களும், ராணுவ அதிகாரிகளும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் தாங்களே பங்கு போட்டு கொண்டார்கள். அதுதான் ஆதார்ஷ் வீட்டு வசதி சங்கம்.

உண்மையிலேயே மகாத்மா காந்தி இன்று உயிரோடு இருந்தால் ஊழல் அரசியல்வாதிகளை சுட்டு கொன்றிருப்பார். 

நாடு நாசமாக போக வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - திமுக கொள்ளை கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க பாரதம்!  ஜெய்ஹிந்த்!


Monday, January 24, 2011

போங்கடா நீங்களும் மயிரை பிடுங்கும் உங்க .................

இனிமே தினமும் மீனவனை இலங்கைக்காரான் சுட்டு கொல்லுவான். அரசியல் வியாதி அறிக்கைவிடுவான், லெட்டர் போடுவான், காக்கா கால்ல எழுதி அனுப்புவான். டெல்லியிலிருந்து வருவான். சீட்டு பேரம் பேசுவான். சுவிஸ் பாங்கில போட்ட பணத்தை எப்படி மாத்துறதுன்னு டெல்லிக்காரனுக்கு கவலை. ஆக அவனவனுக்கு சொந்த கவலை. "மீனவன் செத்தா எனக்கு என்ன? என் பிரச்சனையே பெருசாயிருக்கு" அப்படின்னு நம்மளை பார்த்து நக்கலா கேக்கிறமாதிரி இருக்கு. நாமளும் மாங்கு மாங்குன்னு புலம்பிட்டு இருக்கோம். ஒன்னும் வேலைக்கு ஆகாது. அவனுக வீட்டுல எழவு விழுந்தா அப்ப தெரியும்.

 எங்கேயெல்லாமோ எழவு விழுது. விழ வேண்டிய எழவுகள் விழவே மாட்டங்குது. போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும்!



Saturday, January 22, 2011

வெளிச்சத்திற்கு வராத பதிவு!

கொடி காத்த கிழவி!

மாதங்கினி ஹஸ்ரா (1869 - 1942) எனும் முதிய பெண்மணிக்கு, காந்தி அடிகளின் பாதையே மூச்சு! அவர் பேச்சே வேத வாக்கு! அவரது அதீத காந்தி மபக்தியால், அவரை எல்லாரும் காந்தி பூரி (BURI) என்றே அழைத்தனர். பூரி என்றால் கிழவி என்று பொருள். அந்த செல்லப் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. வெள்ளையனே வெளியெறு இயக்கம் உச்சமடைந்த நேரம். 1942. காந்தி பூரிக்கு 73 வயது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டதுமே, ஆத்திரப்பட்டவர்களில் காந்தி பூரியும் ஒருவர். பலர் ஊர்வலங்கள், எதிர்ப்பு கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தினர். டாம்லுக் காவல் நிலையத்தின் வாயிலில் (இன்றைய மிட்நாபூர் மாவட்டம்), கொடி ஏந்தி காந்தியடிகளை விடுதலை செய்யக்கோரி அறைகூவல் விடுத்தவர்களின் தலைவியாக நின்றார் காந்தி பூரி எனும் மாதங்கினி ஹஸ்ரா! (செப்டம்பர் 29,1942).காவல் நிலையத்தில் ஏற்றியிருந்த யூனியன் ஜாக் எனும் ஆங்கிலக் கொடியை தூக்கி எறிந்துவிட்டு, நமது மூவர்ணக் கொடியை அங்கே நிறுவக் கோரி கோஷங்கள் எழுந்து உச்ச ஸ்தாயியை அடைந்தது!

காவலர்கள் உரக்க எச்சரித்தனர்! “போய் விடுங்கள்”. இல்லையேல் நாய்களைப் போல் சுடப்படுவீர்கள்! யுனியன் ஜாக் கொடியை யாராலும் அசைக்க முடியாது”. மற்றொரு அதிகாரி, “ஏய் கிழவி! இந்த வயதில் உனக்கு எதற்கு வம்பு? போ! ஓடிவிடு!” என்று கூறியபடியே சுடுவதற்கான ஆணை பிறப்பித்து சைகையைச் செய்தார்! எல்லாரும் துப்பாக்கியைக் கண்டதும் ஓட ஆரம்பித்தனர். அசையாமல் நின்ற ஒரே உருவம் - காந்தி பூரி! ஓடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனது கைகளிலிருந்து மூவர்ணக் கொடியை பரித்து, காவல் நிலையத்தை நோக்கி முன்னேறினார். முதலில் அதைக் கண்டு பரிகாசம் செய்த காவலர்கள், முன்னேறும் அந்த வீரக்கிழவியைப் பார்த்து, “போ! போய்விடு! கிழவிகளை எல்லாம் எங்கள் துப்பாக்கி சுடாது,” என்று கூறி விரட்ட முற்பட்டனர்.

முன்னேறிய காந்தி பூரி சடசடவென காவல் நிலைய மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினார். அவரது குறி: மேலே பறக்கும அந்த வெள்ளையனின் கொடியை பறித்துவிட்டு, மூவர்ணக் கொடியை நடுவதுதான்! மேலும் எச்சரிக்கைகள் தொடர்வதை காதில் போடாமல், கொடிக் கம்பத்தை நெருங்கிவிட்ட காந்தி பூரியைப் பார்த்த அதிகாரி கத்தினான்,” ஏய்! நில், நில்.” பலனின்றி அவன் மேற்கொண்டு ‘பட்டென' அக்கிழவியின் மணிக்கட்டைப் பார்த்து சுட்டான்! இடக்கையிலிருந்து ரத்தம் வழிந்தது! வலது கைகளால் மட்டும் கொடிக் கம்பை ஏந்தி கிழவி முன்னேறத் தொடங்கினாள்! மற்றொரு குண்டு அவளது வலக் கையையும் துளைத்தது! அசராத அக்கிழவியின் நெஞ்சைப் பார்த்து சுட்டான் அந்த நயவஞ்சகன்.

காந்தி பூரியின் சரிந்த உடல், மூவர்ணக் கொடியை ஏந்தி, வாய் வந்தே மாதரம், வந்தே மாதரம் என கோஷமிட்டபடி அந்த காவல் நிலையத்தின் உச்சியில் வெட்டிய ‘கொடி மரம் போல்' சாய்ந்தது! முதுமையிலும் இள நெஞ்சமும் வேகமும், வீரமும் கொண்ட இந்த வீரக்கிழவிக்கு நமது நாடு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது! இதேபோல், நாட்டில் கொடி காத்த மாதர்கள் எத்தனையோ பேர்!

விடுதலை வேட்கைக்கு வயதில்லை! உண்மைதான். அதை இந்த காந்தி பூரி எனும் மாதங்கினி ஹஸ்ராவின் கதை மீண்டும் நிரூபிக்கிறது.

Thursday, January 20, 2011

ஏன் என்று சொல்லுங்கள் (2) - சட்டம் நம் கையில்

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், நம் நாட்டிற்கு ஏற்பட்ட சவால் மிகவும் கடினமானது. காரணம் அரசை அமைத்து நடத்தும் அனுபவம் கிடையாது. நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உத்வேகம் இருந்ததே ஒழிய, அதற்கான பாதை பற்றிய தெளிவு இல்லை. இருப்பினும் நாட்டு நலனை மட்டுமே கருத்தில் கொண்டு  டிரையல் - எரர் முறையில் அரசு செயல்பட ஆரம்பித்தது

ஏற்கனவே பெரும்பாண்மை மக்களின் ஜீவாதாரமாக இருக்கும் விவசாயம், கால்நடை பராமரிப்பு, கிராமிய தொழிகள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில்மத்திய அரசு முதல் ஐந்தாண்டு திட்டத்தில் விவசாய வளர்சிக்கும், 2-ம் ஐந்தாண்டு திட்டத்தில் தொழிலுக்கும், மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தில் இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும், விவசாய அதிகாரியும், களப்பணியாளர்களாக கிராம சேவக்களும் நியமிக்கப்பட்டனர். கிராம சேவக்குகள் காலையில் தங்கள் பகுதியிலுள்ள விவசாயிகளை சந்தித்து அரசின் திட்டங்கள், தரமான விதைகள், உரம், பூச்சி கொல்லி மருந்து விபரங்களையும் கூறுவதுடன் கால்நடை பராமரிப்பு அதாவது அவற்றிற்கு வரும் நோய், பாதிப்பு பற்றி விளக்குவார்கள். இந்த நடைமுறை என் ஊரில் ( நெல்லை மாவட்டம் -செங்கோட்டையில்) 1985 வரை செயல்படுத்தப்பட்டு வந்தது. 1986 -ல் நான் சென்னைக்கு வந்துவிட்டதால் இன்றைய நிலை என்ன என்பது தெரியவில்லை. நிச்சயமாக இப்பொழுது அந்நிலை இருக்க வாய்ப்பு கிடையாது.

இதனால் கிராமப்பகுதிகளில், விவசாய கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் மூலம் அங்கத்தினர்களுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டன. கால்நடை வளர்ப்போர் கூடுறவு சங்கங்கள், மற்றும் கிராமிய தொழில் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டு கிராம மக்களின் வருமானம் பெருகி வாழ்க்கை தரம் உயர்ந்தது. இது நான் கண்கூடாக கண்ட விஷயம்.

உதாரணத்திற்கு என் ஊரையே எடுத்துக்கொள்ளலாம். எனது ஊர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை. எனது ஊரை சுற்றி பல கிராமங்கள்.அடிப்படை தொழில் விவசாயம் கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமிய தொழில்கள். இங்கு துவக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள்
1. விவசாய கூட்டுறவு சங்கங்கள். - இதில் சிறு விவசாயிகள் அங்கத்தினராகி விவசாயகடன் பெறுவர்.
2. கூட்டுறவு பால்பண்ணைகள். - கறவை மாடு வைத்திருக்கும் அனைவரும் இதில் அங்கத்தினராகி மாடு வாங்க கடன் பெறுவதுடன் உற்பத்தி செய்யப்படும் பால் சங்கத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு, பணம் வாரா வாரம் பட்டுவாடா செய்யப்படும்.
3. கூடை முடைவோர் கூட்டுறவு சங்கம். - இத்தொழிலை செய்பவர்கள் குறவர் இனத்தை சேர்ந்தவர்கள். சுமார் 150-200 குடும்பங்கள் உண்டு. இவர்களின் தொழில் பன்றி வளர்ப்பு, தேங்காய் பறித்தல், மூங்கிலிலான அழுக்கு துணி போடும் கூடை, காய்கறி கூடை, பழக்கூடைகள். ஆகிவற்றை செய்தல்.
4. மட்பாண்டம் செய்வோர் கூட்டுறவு சங்கம்.- உள்ளூர் தேவைக்கு மட்டுமின்றி கேரளாவிற்கும் இங்கிருந்து லாரி மூலம் அனுப்பபடுகிறது.
5. பிரம்பு தொழில் செய்வோர் கூடுறவு சங்கம். - இச்சங்கம் பிரம்பிலான நாற்காலி, டீபாய், ஊஞ்சல், மற்றும் கலைபொருட்ட்களை உற்பத்தி செய்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தொழில் செய்பவர்கள் மட்டுமே அங்கத்தினராக இருந்தனர். அரசியல் தலையீடு கிடையாது. அதனால் எவ்வித ஊழலுமின்றி செயல்பட்டு, மக்கள் பயனடைந்தனர். விவசாயம், கிராமிய தொழில் வளர்ச்சியடைந்து கிராம பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்தது.

தொடரும்..........


Wednesday, January 12, 2011

ஏன் என்று சொல்லுங்கள் -சட்டம் நம் கையில்

1. உலகத்திலேயே அதிக பரப்பளவில் உணவு தானியம் பயிரிடும் நாடு இந்தியா.

2. உலகத்திலேயே அதிக விழுக்காடு உழவு செய்யும் தரம் கொண்ட நிலப்பரப்பு இருப்பது இந்தியாவில்தான்.

3. இந்திய நிலப்பரப்பில் 50 விழுக்காடு விவசாயம் செய்யும் தன்மையுள்ளது.

4.  80 விழுக்காடு விவசாய நிலத்தில் உணவுதானியங்களும், பயிர்வகைகளும் பயிரிடப்படுகின்றன.

5. உலகிலேயே அதிக அளவில் கால்நடைகளின் எண்ணிக்கை இந்தியாவில் தான்.

6. இவை உழவுத்தொழில், இறைச்சி, பால் இவற்றிற்காக வளர்க்கப்படுகிறது.

7. விவசாய உற்பத்தியில் 26 விழுக்காடு பால் உற்பத்தியில் கிடைக்கிறது.

8. உலக மாம்பழ உற்பத்தியில் 50 விழுக்காடு நம் நாட்டில் உற்பத்தியாகுகிறது.

9. ஆப்பிள், வாழைப்பழம், தேங்காய், காப்பிக்கொட்டை, பருத்தி, ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, ரப்பர், புகையிலை, கோதுமை ஆகியனவற்றையும் அதிக அளவில் உற்பத்தி செய்யும்  நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

10. காலிபிளவர், சனல், வெங்காயம் ( !!!!!! ), அரிசி, கரும்பு உற்பத்தியில் இந்தியா 2-ம் இடம் வகிக்கிறது.

11. 60,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் நிறைந்தது இந்தியா.

12. நம் நாட்டில் 65 விழுக்காடுக்கு மேற்பட்டவர்கள் வசிப்பது கிராமங்களில். இவர்கள் தொழில் விவசாயம்.

13. தேசிய உள்நாட்டு உற்பத்தி மதிப்பில்  மூன்றில் ஒரு பங்கு விவசாயம் மூலமாக கிடைக்கிறது.

14. வெளிநாட்டு ஏற்றுமதியில் 10 விழுக்காடு விசாயத்தை சார்ந்ததாகும்.

 இவ்வளவு பிளஸ் பாய்ண்ட் இருந்தும் நம் நாடு என்ன நிலையில் இருக்கிறது? அதை புள்ளி விபரத்தோடு பார்க்கலாம்.


1.இந்தியாவில் பிச்சைக்காரர்களாக இருப்பவர்களின் உத்தேச எண்ணிக்கை 50 லட்சம்.

2. ஒருவேளை சாப்பாட்டுடன் பட்டினி வாழ்க்கை நடத்துபவர்கள் 10 கோடி.

3. நாளொன்ருக்கு 20 ரூபாய்க்கு குறைவான  வருமானத்தில் திரிசங்கு வாழ்க்கை வாழ்பவர்கள் 20 கோடி.

4. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் உணவு கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, திறந்த வெளியில் மழை,வெயிலில் சேமிக்கப்பட்டு நாசமாக்கப்படும் கோதுமையை கொண்டு 10 கோடி பேறுக்கு ஆண்டு முழுவதும் அவர்களின் பசியை நீக்கமுடியும்.

5. ஆண்டுதோறும் இந்திய அரசியல்வாதிகளால் ஊழல் மூலம் சுரண்டப்படும் நம் வரிப்பணம் சுமார் 50,000 கோடி.

6. ஸ்பெக்டிரம் + காமென்வெல்த் கேம் மூலம் ஊழல் செய்யப்பட்ட தொகை சுமார் 2 லட்சம் கோடி. 

அனைத்து இயற்கை செல்வங்கள் இருந்தும் ஏன் இந் நிலை? 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.






Wednesday, January 5, 2011

"சென்ட்ரல் ஆட, ஸ்டேட் ஆட" - முச்சந்தி. சட்டம் நம் கையில்




சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நான்கு போலீஸார் விரட்டியடிக்க, ''அய்யோ என்னை காப்பாத்துங்க'' என்று அலறியபடியே ஓடிவந்துகொண்டிருந்தார் 'சுவருமுட்டி'.!
 
வெளியே ரோட்டில் வந்துகொண்டிருந்த சித்தன் பார்த்துவிட்டு ஓடிச்சென்று அவரை மீட்டு காப்பாற்றினார். ஆசுவாசப்படுத்தி, வெளியே இருந்த டீ கடையில் அமரவைத்து ''என்னய்யா பண்ணின...ஏன் அவிங்க உன்னை விடிட்டியடிச்சாங்க'' என்றார்.
 
''அது ஒண்ணுமில்ல சித்தா. இந்த 'மானாட, மயிலாட' நிகழ்ச்சி நடக்குது இல்ல. அதுமாதிரி நாம 'சென்ட்ரல் ஆட, ஸ்டேட் ஆட'ன்னு ஒரு நிகழ்ச்சி ஏன் நடத்த கூடாதுன்னு போய் போலீஸ்கிட்ட மனு கொடுத்து அனுமதி கேட்டேன்.வாங்கி படிச்சவங்க உனக்கு எம்புட்டு திமிருய்யான்னு அங்கேயே போட்டு புரட்டிட்டாய்ங்க" என்று அழுதார்.
 
சித்தனுக்கு சிரிப்புதான் வந்தது. "ஏன்யா உனக்கு ரொம்பதான் கிண்டலு. அவனவன் நொந்து போயிருக்கிற இந்த நேரத்துல நீ இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதி வேண்டும்னு போய் கேட்டிருக்கியே.."என்று அவர் பங்குக்கு ரெண்டு தட்டு தட்டினார்.
 
"சித்தா, என்ன ஆனாலும் சரிய்யா. விடமாட்டேன். நம்ப அலப்பறை டீமை விட்டு அண்ணா சமாதிகிட்டேயே இந்த ''ஸ்டேட் ஆட, சென்ட்ரல் ஆட' நிகழ்ச்சிய நடத்திடணும்" என்று பிடிவாதம் பிடித்தார் சுவருமுட்டி.
 
'சரி விதி. இப்படி உன் ரூபத்தில் வந்து விளையாடுது. தப்பிக்க முடியுமா...' என்று புலம்பியபடியே தகவல் அனுப்பினார். அடுத்த அரை மணி நேரத்திற்குள் மெரீனா கடற்கரை அண்ணா சமாதி அருகே தொடங்கியது அலப்பறை டீமின் மானாட மயிலாட...ச்சே..., '' சென்ட்ரல் ஆட, ஸ்டேட் ஆட'' நிகழ்ச்சி.!
 
சுவருமுட்டி மாஸ்டர், சித்தன் மாஸ்டர் நீதிபதிகளாக உட்கார, கோட்டை கோபாலு, அன்வர்பாய் ஆகியோர் அறிவிப்பாளர்களாக... நிகழ்ச்சி ஆரம்பமானது.
 
முதலில் மேடைக்கு வந்தது சிபிஐ நடனக் குழுவினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வீடு, அவரது அலுவலகம், உற்றார் உறவினர்கள் வீடு என்று முதல் ரவுண்ட் ரெய்டு என ஓரளவு ஆடிவிட்டு சோடா குடிக்கப் போனது. இரண்டாவது ரவுண்டில் ஆட்டம் சூடு தொடங்கியது. ஆனால் வேகம் இல்லை. கனிமொழி இயக்குனராக இருக்கிறார் என்று சொல்லி, அருட் தந்தை ஜெகத் கஸ்பர் நடத்தி வரும் தமிழ் மையத்தின் அலுவலகத்தில் நுழைந்த 'ஆட்டம்' கூட அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. கடைசியில் நமீதா ஆட்டம் என்று சொல்லி ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் ரத்தினத்தின் வீட்டில் ரெய்டு நடத்தின காட்சிதான் தூள். பட்டையை கிளப்பியது. ஆட்டம் முடிந்து வேர்த்து விறுவிறுக்க மூச்சுவாங்க நின்றது சிபிஐ குழு.நடுவர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ என்ற பதட்டம் முகத்தில் தெரிந்தது.
உட்கார்ந்து ரசித்துகொண்டிருந்த 'சுவருமுட்டி' மாஸ்டர், முகத்தை சீரியஸாக வைத்துகொண்டு அவர்களையே உற்றுப்பார்த்தார்.
 
''சிபிஐ டீம்...? என்ன ஆட்டம் ஆடுறீங்க.! கொஞ்சம் கீழ குனிஞ்சு பாருங்க... உங்க அண்டர்வேரையே காணோம்.! ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு போட்டு கழட்டிடுச்சு.கழட்டினதுகூட தெரியாம இந்த குதி குதிக்கிறீய்ங்க'' என்று சொன்னதும் மொத்த கூட்டமும் கொள்ளென்று வாய்விட்டு சிரித்தது.
 
''உங்களுக்கு என்னாச்சு. நல்லாத்தானே இருக்கிறீய்ங்க. சிபிஐ டீம்னு சொன்னா ஒரு காலத்துல ஆட்டம் அமர்களப்படுமில்ல. இப்ப என்ன ஆச்சு. இப்படி சொதப்பறீங்க. 2007- அக்டோபர் மாசம் போட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேடு வழக்குல,இப்பதான் வந்து ரெண்டாவது ரவுண்ட் ஆடியிருக்கீங்க. அதுலேயும் வேகமில்ல. 'ஒப்புக்காக' ஆடுறீய்ங்க. என்ன ஒரே ஒரு ஆறுதல்னா ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் ரத்தினத்தை தூக்கி விசாரிச்சதுதான். அந்த நடன மூவ்மெண்ட்ல சி.ஐ.டி. காலனி வீடு மிரண்டு போயிருக்கு. கூடவே 'தாத்தாவும்' அரண்டு போனதா காட்டுற மூவ்மெண்ட் ஓரளவு சுமார்.ஆனாலும் இன்னும் கதற வச்சிருந்தா சூப்பர்னு செல்லலாம். நீங்க 'சுதந்திரமா' ஆடுன மாதிரி தெரியவில்லை. அப்பப்போ சைடில் நிற்கிற சோனியாஜி, மன்மோகன்ஜிய பார்த்துகிட்டே ஆடுறீய்ங்க. பார்க்க சகிக்கல. சோனியாஜியையும், மன்மோகன்ஜியையும் கேட்காம ஆட முடியாதுன்னு சொல்லாம சொல்றீங்க. சைடுல நின்னு அவிய்ங்க காட்டுற சைகைக்கு ஏத்தமாதிரி ஆடுறது,உங்க பேர்ல நம்பிக்கையில்லாம போயிடும். சுயமா, சுதந்திரமா ஆட  பழகுங்க. அப்பதான் இறுதி சுற்றுக்கு வர முடியும். ரெண்டு சுத்து ரெய்டு ஆட்டம் முடிஞ்சதுன்னு போய் சோடா குடிச்சுட்டு கவுந்தடிச்சு படுத்திடாதீங்க.
 
யாரு உங்க கோச்.? போங்க அவிங்க கைய கால பிடிச்சு 'தயவுசெய்து சுதந்திரமா ஆடவிடுங்கன்னு' கெஞ்சுங்க. 41-நாள், ஒரு மண்டலம்னு கண்ணீர்விட்டு கதறுங்க. அப்பவாவது உருப்படியா ஆட முடியுதான்னு பார்ப்போம்னு" விரட்டியடித்தார் சுவருமுட்டி.!
 
கண்ணீர் விட்டழுத சிபிஐ டீம் ''மாஸ்டர்.. மாஸ்டர்... ப்ளீஸ் மாஸ்டர். இப்பதான் சுப்ரீம் கோர்ட்டு எங்களுக்கு முழு சுதந்திரம்னு உத்தரவு கொடுத்திருக்கு.இனிமே எங்களால சுதந்திரமா ஆட முடியும்னு நம்புறோம் மாஸ்டர். ப்ளீஸ் ஒரு வாய்ப்பு கொடுங்க மாஸ்டர்'' என வாய்விட்டு தேம்பியது.
 
''நோ.. நோ.. இதுக்கெல்லாம் அழக்கூடாது. உங்களோட நல்லதுக்குதான் சொல்றம். உங்கள எல்லோரும் பெரிய ஆளா மதிக்கணும்ங்கிற நல்ல எண்ணத்தோடதான் சொல்றம்.போங்க அடுத்த ரவுண்ட் ரெய்டு உருப்படியா நடத்துங்க.ஆ.ராசாவை மடக்கப் பாருங்க.சம்பந்தப்பட்ட 'நெருங்கின-வங்களையும்' மடக்கப்பாருங்க. அப்பத்தான் உங்க பேர்ல நம்பிக்கை வரும். போங்க" என்று விரட்டியடித்தார் சித்தன். பாவம் கோவணத்தோடு மேடையிலிருந்து இறங்கியது சிபிஐ டீம்.
 
மைக் பிடித்தபடி கலகலவென்று பேசியபடி வந்தார் அறிவிப்பாளர் கோபால். ஆனால் பேச்சுதான் புரியவில்லை. அடுத்த ரவுண்ட்டும் சென்ட்ரல்தான் ஆட வருகிறது என புரிந்துகொள்ள முடிந்தது. அதற்கேற்றபடி கோஷ்டி பூசலில் கிழிந்த உடையலங்காரத்தோடு மேடையேறியது காங்கிரஸ் நடனக்குழு...! மேடை 'இருண்ட'... நிலைக்கு சென்றது.!
 
'ஸ்பெக்ட்ரம் ஊழலை ஒரு மூணு வருஷம் தண்ணீருக்கடியில ஒளிச்சு வச்சது, பிறகு வெளிவந்து அம்பலமாகி நாடே சிரிப்பது, முந்தின நாடாளுமன்ற கூட்டத்திலேயும் அமுக்கிப் போட்டது, 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு, முறைகேடு என்று இந்திய தணிக்கைத் துறை சட்டியை போட்டு உடைக்க அதற்கேற்ப எகிறிக் குதித்து ஆடியது எல்லாம் பிரமாதம்.எம்புட்டு அடிச்சாளும் அசரமாட்டோம் என்று பாராளுமன்ற அமளி துமளியை தாக்குபிடிச்ச ஸ்டெப் சூப்பர்.கடைசியில் 22-நாள் பாராளுமன்ற முடக்கம் என்று துணியெல்லாம் நார் நாராக கிழிந்து தொங்க...' மூச்சு வாங்க நின்றது காங்கிரஸ் நடனக் குழ.
 
ஒரே நிசப்தம்.'சுவருமுட்டியும்' 'சித்தனும்' என்ன தீர்ப்பை சொல்லப் போகிறார்களோ என்று பதட்டத்தோடு நிற்பதைப் பார்க்க பாவமாக இருந்தது.
 
 
''என்ன காங்கிரஸ்? யார் உங்க கோச்?" என்று சித்தன் கேட்க,... சோனியா வந்து நிற்கிறார்.
 
கடுப்பாகிப் போன சித்தன் ''ஊர் உலகம் சிரிக்க, மானம் ரோசம் பறக்க, இப்படி கிழிந்தபோன பிறகும் எப்படி மேடைக்கு அனுப்ப உங்களுக்கு மனசு வந்தது. எப்படிப்பட்ட மரியாதையான கட்சி? எவ்வளவு தியாகத்தை செய்த கட்சி.? அதுவெல்லாம் உங்களுக்கு தெரியுமா, தெரியாதா? இப்படி அலங்கோலமா மேடையேற்றுகிற அளவிற்கு உங்க பயிற்சி இருந்திருக்கு. உள்ளூர் பேப்பர் முதல் வெளிநாட்டு பேப்பர் வரைக்கும் எழுதி கிழிச்சான். பிறகுமா நீங்க... என்ன மேடம்.!
 
உங்க சிஸ்டருங்க ரெண்டு பேருக்கு தலா 18-ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் பங்கு பணம் போயிருக்குன்னு சுப்ரமணிய சுவாமி சொன்னப்பவாவது சுதாரிச்சிருக்கணும். கோட்டைவிட்டீங்க. ஆனால் ஒரு  மூவ்மெண்ட்டை சூப்பரா போட்டீங்க. கௌரவம் போனாலும் பரவாயில்லைன்னு சொல்லி பாராளுமன்ற கூட்டத்தை 22நாள் தாக்கு புடிச்ச விதமும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாம சமாளிச்ச விதமும் பிரமாதம். எக்ஸ்லண்ட். உங்களுக்கு அருமையான ஒரு வாய்ப்பு வந்தது. நீரா ராடியா ஒலி, ஒளி.! சூப்பர் எபக்ட் மியூசிக். அதுக்கேற்ற மாதிரி உடனே ஆ.ராசாவை கழட்டி விட்டுட்டு, உடனே கோபாலபுரம் போய் கலைஞருக்கு சவாலா நின்றிருந்தீங்கன்னா கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கும்.
 
அதை விட்டுட்டு என்ன ஆனாலும் சரி. நாங்க ரெண்டு பேரும் பிரியவே மாட்டோம்னு 'பாச மலர்' படம் கணக்கா ஆடுறதுதான் உங்க பேர்ல பெரிய டவுட்டை கொண்டு வந்திருக்கு.ஆனாலும் இடையில உங்க காலை கருணாநிதிஜி வார பார்க்குறது,நீங்க அவரோட காலை வார பார்க்கிறதுன்னு போடுற ஆட்டம் சூப்பர். 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டிற்கு அச்சமே இல்லாத மாதிரி பயந்துகிட்டே ஆடுற இடம் சூப்பரோ சூப்பர்.இந்திய தேசிய மேடைக்கு நீங்கதான் தகுதியானவர்னு நிரூபிக்கிறீங்க. அதாவது சூடு சொரணையில்லாம இருக்கீங்க.! தப்பித் தவறிகூட காந்திஜி பெயரை சொல்லிடாதீங்க.அது என்ன உங்க கம்பெனிக்கு ஒரு பிராண்ட் நேம் மாதிரி..?''
 
"இல்லைங்க மாஸ்டர் அந்த பெயரை நானா சேர்த்துகிட்டதில்ல. எங்க அல்லக்கைங்க வச்சது. நானும் அப்படியே மெயின்டன் பன்றேன்" - சோனியா.
 
''என்னமோ பண்ணுங்க. அதுயாரு பக்கத்தில? இளங்கோவனுங்களா...! போன தேர்தலில் வைகோவும், சீமான் ஆளுங்களும் அவரோட வேட்டியை உருவி விரட்டினது உண்மைதான். அதுக்காக இந்த மேடையிலயும் வந்து டவுசரோடு நிக்கப்படாது. சேம் சேம்.! பரவாயில்ல. அவருமட்டும்தான் உங்க டீமில் கொஞ்சம் 'ரோசத்தோட' ஆடுறாரு. அதுக்காக ஒரு பாராட்டு.
 
அடுத்ததா, ஸ்பெக்ட்ரம் ஊழலை அமெரிக்கா ஒபாமா முதல், காங்கோ காட்டு ஆதிவாசிங்க வரைக்கும் சொல்ற மாதிரி இன்டர்நேஸ்னல் அளவில் பேச வச்சுட்டீங்க. அதுக்காகவே உங்களை சிறந்த ஆட்டக்காரரா தேர்ந்தெடுத்திருக்கோம் மேடம். நீங்க செலக்ட் ஆயிட்டீங்க''என்று சித்தன் சொன்னதும் சோனியாஜியின் கண்களில் கண்ணீர்... ஆனந்தக் கண்ணீர்..
'இப்படி என்னை தேர்ந்தெடுப்பீங்கன்னு நினைக்கவே இல்லை' என்று வாய்பொத்தி அழுதார்.இதுக்கெல்லாம் போய் சத்தம் போட்டு அழ முடியுமா? தாரைத் தாரையாக கண்ணீர் ...
 
"ஓ.கே. ஆடியன்ஸ். இந்த இரண்டு 'சென்ட்ரல் ஆட' நிகழ்ச்சியையும் ரொம்ப நல்லாவே ரசிச்சிருப்பீங்க. இப்போ ஆடப்போறது 'ஸ்டேட் ஆட' டீம்" என்று சொன்னதுமே கூட்டம் விசிலடித்தது...
 
கலைஞர் தனது குழுவோடு மேடைக்கு வந்ததும் 'செம்மொழியால் வணங்குகிறேன்' என்று கூறி, 'தமிழர்களே.. தமிழர்களே' என்றதும், பதட்டத்தோடு ஓடிவந்து மைக்கை வாங்கிய கோபால் 'ஐயா போதும், மொத்த பேரும் ஒடிப்போயிடுவான். நீங்க ஆட்டத்தை தொடங்கினாவே பெட்டரா இருக்கும்' என்று வேண்டிக் கொண்டார்.
 
மஞ்சள் ஆடை தகதகக்க மேடையில் பிரமாதமாக சுழன்றார். ஸ்பெக்ட்ரமா? 1.76 லட்சம் கோடியா? அப்படி ஒரு ஊழலே நடக்கவில்லை என்கிறார். பிறகு நடந்திருக்காது என்கிறார். பொய் பிரச்சாரம். ஆ.ராசா ஒரு தலித் என்பதால் மீடியா எல்லாம் இப்படி பார்ப்பன துவேசம் செய்கிறது என்று பெரிய ரவுண்ட்கட்டி ஆடுகிறார்.கடைசியாக இவ்வளவு பெரிய ஊழலை தனி நபராக செய்திருக்க முடியாது என்கிறார். தலித் இனத்தின் தகதகக்கும் சூரியன் தம்பி ஆ.ராசா என்று பாடிப்பார்க்கிறார். ஆச்சாரியாருக்கு ஒரு நீதி, ஆ.ராசாவுக்கு ஒரு நீதியா? பதவியை ராஜினாமா செய்துவிட்ட பிறகு அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே என்று அதிரடி மூவ்மெண்ட் காட்டுகிறார்.நடன அமைப்புக்கு ஏற்ப பல பாடல்களை வெட்டி ஒட்டி விறுவிறுப்பு, சோகம், என்று முகபாவத்தை நன்றாகவே மாற்றி பின்னி பெடல் எடுக்கிறார்.ஆட்டம் முடிகிறது. ஆனால் மூச்சுமுட்டவில்லை.இந்த மாதிரி எத்தனை மேடையை பார்த்திருப்பாரு.!
 
நம்ப 'சுவருமுட்டி'மாஸ்டர் கலைஞரையே உற்றுப் பார்க்கிறார். ''தலைவரே நீங்க ஊத்தின 'டாஸ்மாக்' சரக்குல ஊறி வளந்த உடம்பு இது. என்னை மாதிரி பல லட்டசக் கணக்கான இளைஞர்களின் வாழ்க்கைய சூறையாடி தள்ளாட வச்ச பெருமைக்கு சொந்தக்காரர்.நீங்களே இப்படி தள்ளாடலாமா. எனக்கு கவலையா இருக்கு'' என்று கண் கலங்கினார். விசுவாசத்தால் தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை... அடுத்தவரான 'சித்தன்' வாய் திறந்தார்.
 
"ஓ.கே. கலைஞர்ஜி...டர்ர்ர்ர்... கிழிச்சிட்டீங்க.... பின்னிட்டீங்க.. ஆகா பிரமாதம்" என தனது இருக்கையில் இருந்து ஒடிச்சென்று கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார்.
 
'''ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.

ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை'-ன்னு தொடக்கத்தில் பாடிகிட்டு, சும்மா அப்படி சுழன்று ஆடுனீங்க பாருங்க.. சூப்பர். உங்களுக்கு எதிரா நின்ன காங்கிரஸ்காரங்க ஒரு 43 வருஷமா உங்க பக்கம் வர்ற முடியாம செய்துட்டீங்க.அதைத்தான் ஆயிரம் 'கை'கள்னு மறைமுகமா சொல்றீங்க. அப்படி உங்களால மட்டுமே மறைமுகமா மிரட்ட முடியும்னு பலமுறை நிரூபிக்றீங்க.
 
ஆடியன்ஸ் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத நேரத்தில அப்படியே பல்டியடித்து 'உன்னை நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே' ன்னு ஆடின இடம் சூப்பர்ப்...அதுவும் உங்களால மட்டுமே முடியும். அப்புறம் 'சோதனை மேல் சோதனை,போதுமடா சாமி'ங்கற பாட்டை எடுத்கிட்டு பொளந்து கட்டுனீங்க. அதுல 'சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது. அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது'ன்னு ராசாத்தி கனிமொழியை நினைச்சு உருகின சீன் சூப்பர். அதைவிட எங்கள பிரமிக்க வச்சது திடீர்னு கோபிச்சுகிட்டு 'ஓய்வு எடுக்கப் போறதா'சொல்லி ஏலகிரிக்கு போனது,பிறகு 'வீட்டுக்கு வந்து சேரலைன்னா என்ன உயிரோட பார்க்க முடியாதுன்னு மிரட்டல் வந்தவுடனேயே ரெண்டே நாளில் சென்னைக்கு வந்ததுன்னு போடுற நடனத்துல பெரிய உருக்கம்.. அட...அட.. நீங்க மட்டுமே அப்படி செய்ய முடியும்.
 
ஒரு பக்கம் சிபிஐ போலீஸ் வர்ற இருக்கிற காட்சி,மறுபக்கம் சின்ன அம்மா தூக்க மாத்திரைய சாப்டுட்டு ஆஸ்பிட்டலுக்கு போய் அட்மிட் ஆனத வெளியில சொல்ல முடியாம, தவியா தவிச்சு சமாளிச்ச விதம் எக்ஸ்லண்ட்.! என்னதான் துவண்டு விழுந்தாலும் அதை வெளியில காட்டிக்காம 'நீரா ராடியா டேப்' இசைத் தட்டு வெளியிட்டு விழாவுலேயும் நீங்க தலைமை தாங்க அடம் பிடிக்கிறது கை தட்ட வைக்கிறது.
 
இடையில இலங்கைத் தமிழர்களுக்காக திடீர்னு போய் உண்ணாவிரதம் இருந்தது, எனக்கு சொத்து இவ்வளவுதான். இருந்த ஒரு வீட்டையும் தான தருமத்துக்கு எழுதி கொடுத்திட்டேன்னு சொல்ற இடம் 'சிரிக்க' வைக்குது. அதே நேரத்தில் டாடா நிறுவனத்தின் 300 கோடி ரூபாய் நிலத்தை ராசாத்தி அம்மா வெறும் இருபத்தைந்து கோடிக்கு பினாமி பெயரில் வாங்கினதை எப்படின்னு மக்களுக்கு பதில் சொல்லாம சமாளிச்சு போடுற மூவ்மெண்ட் அட்டகாசம். நானே ஒரு அடிமை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்னு ஈழத் தமிழர்களுக்கு அல்வா படையல் வச்ச இடமும் பிரமாதம்.ஒரு அடிமையை ஐந்து முறை முதல்வராக உட்காரவச்ச பொது ஜனங்களை உங்களைவிட வேற யாரும் இப்படி கேவலப்படுத்த முடியாதுங்கிறதையும் நிரூபிச்சிட்டீங்க. இப்படி எல்லா விதத்திலேயும் பார்த்தால் உங்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.
 
கடைசியா நீங்க 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை'ன்னு உங்களையும் அறியாமல் சொல்லியழுது ஆடினவிதம் பிரமாதம். நீங்கதான் 'சூப்பர் ஆட்டக்காரர்' '' "யார் உங்க கோச்.?" என்று சித்தன் கேட்டார்.
 
அருகில் இருந்த சமாதியை காட்டி "எதையும் தாங்கும் இதயமாய் தூங்கும் 'அண்ணா'" என்றார் கலைஞர். அவர் கைபிடித்து நடந்துதான் இந்த நடனத்தை கற்றேன்.
 
"எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. அவர் பேரைச் சொல்லி நீங்களாவே இப்படி ஆடுறீங்க.இன்னைக்கு அவர் இருந்தாரென்றால் நீங்க ஆடுற ஆட்டத்தையெல்லாம் பார்த்துட்டு உயிரோடவே செத்து போயிடறேன்னு அழுதிருப்பார். ஓ.கே. சத்தியமாக நாங்க நம்புறோம். நீங்கதான் சூப்பர் ஆட்டக்காரர். போயிட்டு வாங்க" என்று கைகூப்பினார் சித்தன்.
 
"நீங்கள் ஆரியன் அல்ல.  சித்தன் என்ற பெயரில் இருக்கும் ஒரு பச்சை தமிழன். அதுவும் திராவிடத்தை குடிச்சு வளர்ந்த தமிழன். என்னை சிறந்த ஆட்டக்காரர்னு தேர்ந்தெடுத்து நிரூபிச்சிருக்கிறீர்கள்" என்று கூறியபடியே மேடையை விட்டு இறங்கினார் கலைஞர்.
 
"என்ன ஆடியன்ஸ் 'வித்தியாசமான' ஆட்டத்தை ரசிச்சீங்களா. இப்போ கடைசியா வர்றது 'இன்டர் நேஷனல் ஆட்டக்காரர் நம்ப ராஜபக்சே' என்று அறிவிப்பாளர் கோபால் சொன்னதும் கருப்புக் கொடியோடு ஆராவாரம் தொடங்கியது. அதுதான் அவருக்கு ராசி என்பதால் அப்படி ஒரு ஏற்பாடு...
 
வழக்கமான காஸ்ட்யூம்தான்.கழுத்தில் சிவப்பு துணிக்கு பதிலாக மண்டை ஒட்டு மாலை. இடது, வலது கையில் அறுவா, கத்தி, துப்பாக்கி. மேடையில் சுத்தி அதம் பண்ணுகிறார்.விதவிதமான மூவ்மெண்ட். பல்டிமேல் பல்டியடித்து சோகமும், வேகமும் கலந்த பாடலுக்கு ஆடி முடித்தார். மூச்சுவாங்க நடுவர்களை பார்த்து ''என்னைதான் சிறந்த ஆட்டக்காரர்னு சொல்லணும். உலகமே அப்படித்தான் சொல்லுது. நீங்களும் அப்படித்தான் சொல்லணும்.இல்லாட்டி புலி ஆதரவாளர்னு கலைஞர்ஜிகிட்ட சொல்லி உள்ள தூக்கி வச்சுடுவேன்"என்று ப்ளாக்மெயில் செய்தார்.
 
சுவருமுட்டிக்கு கடன் வாங்கி அடித்த சரக்கின் போதை சர்ரென்று இறங்கிவிட்டது. சித்தனோ கதிகலங்கி அழுதார்.ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்ட 'சுவருமுட்டி',
 
''தலைவா ஈரேழு பதினாலு லோகத்துக்கும் நீங்கதான் சிறந்த ஆட்டக்காரர். சாட்சிகளே இல்லாம இனத்தை அழிச்ச பெருமைக்கு சொந்தக்காரர். சீனாவும், இந்தியாவும் சர்டிபிகேட் கொடுத்துவிட்ட பிறகு நாங்க எல்லாம் எந்த மூலைக்கு.!உங்க ஆட்டத்தை பாராட்டியே ஆகணும்ங்க.!! தொடக்கத்திலேயே நீங்க 'பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக. நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக'ன்னு பாடின மூவ்மெண்ட் எங்கேயோ போயிடுச்சு. நீங்க லண்டன் போக, அங்க தமிழருங்க ரவுண்ட் கட்டி விரட்ட, பாதியிலேயே ஓடிவந்ததை பிரமாதமா காட்சிப்படுத்திட்டீங்க. அந்த முகபாவம் இருக்கே.. எப்படி சொல்றதுன்னு தெரியல. புல்லரிச்சு போச்சு... உங்க பக்கத்துல யாருங்க அது. கருணா, டக்ளசுவா நீங்க அழுதா அவிங்க அழுவுறாய்ங்க. நீங்க சிரிச்சா அவிய்ங்க சிரிக்கிறாங்க.  கம்பி எண்ணிகிட்டிருக்கிற சரத் பொன்சேகாவை காட்டி நல்லா ட்ரெயினிங் கொடுத்திருக்றீங்க.
 
அடுத்ததா ''நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன். நீ வர வேண்டும். உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்'' என்று கதறி அழுது போடுற மூவ்மெண்ட் சூப்பரோ சூப்பர். சோனியாவையும், கலைஞரையும் நினைச்சு அப்படி உருக்கமா ஆடுறீய்ங்க. லண்டனில் பறக்க விட்டுட்டு வந்த மானத்தை காப்பாத்த சொல்லி அழறீங்க போல. பாவம் அவிய்ங்க ரெண்டு பேரோட நிலைமையே மோசமா இருக்கு.அல்லாடிகிட்டு இருக்காய்ங்க. பெட்ஷீட் போத்திகிட்டு குமுறி அழற அவிங்களோட கஷ்டம் உங்களுக்கு எங்க தெரியப் போகுது. நீங்க செஞ்ச இன அழிப்புக்கு ஆதாரமா சேனல்-4 வெளியிட்ட வீடியோவுக்கு பதில் சொல்ல முடியாம முழிக்கிற இடம் இருக்கே...உலகத்திலேயே அப்படி ஒரு முழி உங்களுக்கு மட்டும்தான் வரும்.பின்னிட்டீங்க போங்க ராஜபக்சே.அதனால சுத்தி வளைச்சு சொல்லாம சுருக்கமா சொல்றேன். உலகத்திலேயே நீங்கதான் ஒரே கூலிப்படை கொலைகாரர்... மன்னிக்கணும் 'மிகமிக சிறந்த ஆட்டக்காரர்' என்று அறிவித்ததோடு அவசர அவசரமாக இடத்தை காலி செய்தார்கள்.
 
ஆனாலும் நம்ப போலீஸ் விடுமா என்ன.?வந்து சுத்தி வளைத்து கொத்தாக பிடித்துகொண்டார்கள்."நீங்க செய்தது பெரிய தேச துரோக குத்தம்.அதனால தேசிய பாதுகாப்பு சட்டத்துல ஒருவருடம் உள்ள இருக்க வேண்டியதுதாண்டி" என்று போட்டு சாத்தினார்கள்.
 
''யோவ் இது அநியாயமா படலை. சத்தியமா சொல்றேன்யா. நான்  சீமான் இல்லையா.நம்புய்யா..சும்மா ஒரு கூட்டம் கூட்டினதுக்கா ராஜதுரோகம்னு சொல்றீங்க" என்று வடிவேலு கணக்காய் அழுது வடிந்தபடியே போலீஸ் வாகனத்தில் ஏறியதுதான் பாவம்..

- பா.ஏகலைவன்.
 
நன்றி:  குமுதம்.