Monday, January 31, 2011

ஊழல் + கருப்பு பணம் = காங்கிரஸ். ( பகுதி -1)

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நன்கு அலசி பார்த்தால் தான் விஷயம் புரியும்.  இப்பொழுது நம் நாட்டில் அதிகமாக பேசப்படும் விவகாரம்  ஊழலும் கருப்பு பணமும் தான். ஊழல் வந்துவிட்டாலே கருப்பு பணம் தானாக வளர ஆரம்பித்துவிடும்.  ஊழலை தண்ணீர் ஊற்றி வளர்த்த பெருமை காங்கிரஸையே சாரும்.

உதாரணத்திற்கு  வருமான வரியையே எடுத்துக்கொள்ளலாம். ஒருவரின் வருமானம், அதற்கு அவர் செலுத்தவேண்டிய வருமான வரி எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

1,60,001   to  5,00,000          =  10%
5,00,001   to   8,00,000         =  20%
8,00,001 க்கு மேல்            =  30%

இந்த வரி விதிப்பு முறையே எவ்வவளவு முட்டாள் தனமானது?  அதாவது பிரஜைகளின் வருமானம் கூடினால் நாட்டின் வருமானம் கூடும். அதனால்  மக்களின் வருமானம் அதிகரிக்க மக்களை ஊக்குவிக்க வேண்டிய அரசு, வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க  வரியை அதிகரிப்பது எப்படி சரியான நடவடிக்கையாக இருக்கும்? உதாரணத்திற்கு ஒருவர் ரூ.5லடசம் சம்பாதித்தால் ரூ.34,000 ரூபாய் வரி செலுத்தவேண்டும். இது நியாயம் என ஒப்புக்கொள்ளலாம்.அதே வருமானத்தை அவர் கஷ்டப்பட்டு   ரூ.15லட்சமாக அதிகரிக்கிறார் என வைத்துக்கொள்வோம்.. இப்பொழுது ரூ.1,34,000-ஐ (10%) வரியாக செலுத்த  அவர் தயாராக இருப்பார்.. ஆனால் அரசு வரி விதிப்பு முறைப்படி ரூ. 3,04,000 /-  வரியாக அவர் செலுத்தவேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிபவர்கள், தலையெழுத்து என வரியை செலுத்தி தீரவேண்டும். காரணம் அவர் ஊதியத்திலேயே வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு விடும். வருமான வ்ரி மூலம் அரசுக்கு கிடைக்கும் தொகையில் 85%  வியாபாரம் மற்றும் தொழில் துறையிலிருந்து தான் கிடைக்கிறது.

 3,40,000 ரூபாய்க்கு  10%  வரி-ன் படி      =    ரூ.34,000 /-
அடுத்த 3 லட்சத்திற்கு 20% -ன் படி        =     ரூ.60,000 /-
அடுத்த 7 லட்சத்திற்கு 30% -ன் படி        =    ரூ.2,10,000 /-
மொத்தம் 15 லடசத்திற்கு வரி            =    ரூ.3,04,000 / -

ரூ.1,34,000- க்கு பதில் ரூ.3,04,000 செலுத்த எப்படி மனசு வரும்? கஷ்டப்பட்டு முன்னேறுவதற்கு அபராதமா என்று நிச்சயமாக நினைக்க தோன்றும். அதில் தவறு கிடையாது. வருமானத்தை குறைத்து காட்டி குறைந்த அளவு வரி செலுத்தினால் என்ன? என்ற நினைப்பு தோன்றும். காரணம் அவர் பலவருடங்கள் நஷ்டத்தில் தொழில் செய்திருப்பார். மேலும் அடுத்து வரும் ஆண்டுகளிலும் லாபம் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்?. அவர் தனது வருமானத்தை (வியாபாரம் அல்லது தொழில் மூலம் கிடைக்கும்) ரூ.5லட்சம் என கள்ள கணக்கு  எழுதி ரிட்டர்ன் கொடுத்து ரூ.34,000 /- செலுத்துவார். ஆடிட்டருக்கு, வருமானவரி அதிகாரிக்கு என ரூ.15,000 /-செலவு செய்தாலும் அவருக்கு ஆகும் மொத்த செலவு ரூ.49,000 /- தான். ஆக ரூ.1,34,000 செலுத்த தயாராக இருந்தவர் இப்பொழுது ரூ.2,70,,000 வரி ஏய்ப்பு செய்து விட்டார். ஆக இப்பொழுது அவரிடம் இருக்கும் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.10லட்சம் கருப்பு பணமாக மாறுகிறது. இதை அவர் எப்படி பயன்படுத்துவார்?. உதாரணத்திற்கு அவர் ஒரு வீடு அல்லது மனை வாங்குகிறார். அதன் உண்மையான விலை 20லட்சம் என வைத்துக்கொள்வோம். சொத்தின் மதிப்பை 10லட்சம் என குறைவாக காட்டி பத்திரம் முடித்துவிடுகிறார். ஆக சட்டபூர்வ வருமானத்திலிருந்து வாங்கியதாக ஆகிவிட்டது. இப்பொழுது அவரிடமிருந்த கருப்பு பணம், சொத்தில் முதலீடு செய்யப்பட்டு விட்டது.

வரி ஏய்ப்பு செய்தவர் அடைந்த லாபம் பற்றிய கணக்கு. வரி ஏய்ப்பு மூலம் அவருக்கு கிடைத்த லாபம் ரூ.2,70,000 + குறைவாக மதிப்பை காட்டி சொத்து வாங்கியதால் ரூ.10 லட்சத்திற்கு செலுத்தாத ஸ்டாம்ப் டூட்டி ரூ.1 லட்சம். = ரூ.3 லட்சத்தி எழுபதாயிரம. அதாவது அரசுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் ரூ.3 லட்சத்தி எழுபதாயிரம். இது தற்பொழுதுள்ள வரிவிதிப்பு கொள்கையின் படி.

உண்மையிலேயே இந்த வரி விதிப்பு முறையின் மூலம் இவரால் அரசுக்கு லாபம் கிடைத்திருக்கிறதா? அல்லது நஷ்டம் ஏற்பட்டிருக்கிறதா?

இவர் செலுத்திய வருமான வரி            =       34,000
செலுத்தாத ஸ்டாம்ப் டூட்டி                     =    -1,00,000
ஆக அரசுக்கு நஷ்டம்                                  =   ரூ. 66,000

வருமான வரியை ஸ்லாப் சிஸ்டாமாக வைக்காமல், எவ்வளவு வருமானமாக இருந்தாலும் 10% (உதாரணத்திற்கு) பிக்ஸட் என வைத்திருந்தால்  மேற்படி நபரிடமிருந்து அரசுக்கு கிடைக்கும் வருமானம் என்ன?

வருமானவரி  15 லட்சம் @ 10%     =  ரூ.1,34,000
செலுத்தப்படாத ஸ்டாம்ப் டூட்டி  = ரூ. 1,00,000
ஆக மொத்தம்                                         = ரூ. 2,34,000.


வருமானவரி மத்திய அரசுக்கு, ஸ்டாம்ப் டூட்டி மாநில அரசுக்கு என நீங்கள் கூறலாம். எப்படி இருந்தாலும் அரசு வருமானம் என்பது பொதுவானது தான். ஆக பிக்ஸட் விகிதப்படி வருமான வரி வசூலிக்கப்படுமானால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட போவதில்லை. அதோடு வருமான பணம் முழுவதையும் வங்கி கணக்கில் டெப்பாஸிட் செய்வார்கள்.. இதனால் அந்த பணம் புழக்கத்திற்கு வருவதால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். வரி ஏய்ப்பு பெருமளவில் குறையும். அதோடு கருப்பு பணத்தை வெள்ளையாக்க, அந்த பணத்தை மனை, நிலம் போன்றவற்றில் தேவையில்லாமல் மூதலீடு செய்யப்படுவதால், ராக்கெட் வேகத்தில் பலமடங்கு உயர்ந்துள்ள விலை கீழே இறங்கி விடும். காரணம், தேவைப்படுபவர்கள் மட்டுமே வாங்குவார்கள். இதனால் சாமானியனின் சொந்தவீடு, சொந்த நிலம் என்ற கனவு நிறைவேறும்.

இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் ஆட்சியிலிருப்பவர்கள் இப்படி செயல்படுகிறார்கள்? என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

 தொடரும்.........





11 comments:

  1. நல்லா சொன்னீங்க அண்ணாச்சி.

    kannan from abu dhabi.
    http://samykannan.blogspot.com/

    ReplyDelete
  2. Kannan said...

    நல்லா சொன்னீங்க அண்ணாச்சி ///

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. Vanakkam Aiyaa
    Thelivaana matrum unmaiyaana karuthukkal. Thalaivargal unmai kooruvathillai, unmai uraippavar thalaivar aavathillai. Ithuvae thamilanin thalai vithi.

    Thangal pani sirakka vendukiren

    - moorthy

    ReplyDelete
  4. எளிமையான விளக்கங்கள். எனக்கு பல நேரங்களில் புரியாமல் இருந்த பல செய்திகள் எளிதாக புரிகின்றன.
    தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

    ReplyDelete
  5. மொத்தம் 15 லடசத்திற்கு வரி = ரூ.3,04,000 / -


    10% (உதாரணத்திற்கு) பிக்ஸட் என வைத்திருந்தால்
    ஆக மொத்தம் = ரூ. 2,34,000.


    --

    நஷ்டம்தானே அரசுக்கு..?

    மேலும் செலுத்தப்படாத ஸ்டாம்ப் டூட்டி = ரூ. 1,00,000 , 10% என்றாலும் . அல்லது 10% , 20% , 30% என்றாலுமே செலுத்த விரும்பமாட்டார்கள் பலர்..

    நேர்மை என்பது தனிமனித ஒழுக்கம் மட்டுமே.. எத்தனைக்கத்தனை குறைக்க வழி கண்டுபிடிப்பதையும் சாமர்த்தியம் , வியாபாரா உத்தியாக மக்கள் நினைக்க தொடங்கிவிட்டனர்..

    ReplyDelete
  6. 30 சதம் வரி என்பது அரசு நம்முடன் பார்ட்டனர் போல, எந்தவித உழைப்பும் இல்லாமல் நீ உழை, எனக்கு கொடு, பாக்கெட்டில் போட்டுக்கொள்கிறேன் என்பதுதான்.

    10 சதம் நிரந்தரவரி என்றால் கருப்புப்பணம் அளவு நிச்சயம் குறையும்.

    வெளிநாடுகளில் அதிகம் சம்பாரித்தால் வரிவிகிதத்தில் சலுகை உண்டு என படித்த ஞாபகம், யாரேனும் உறுதிப்படுத்துங்களேன்

    ReplyDelete
  7. Kumar said...

    Vanakkam Aiyaa
    Thelivaana matrum unmaiyaana karuthukkal. Thalaivargal unmai kooruvathillai, unmai uraippavar thalaivar aavathillai. Ithuvae thamilanin thalai vithi.

    Thangal pani sirakka vendukiren ///

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. கக்கு - மாணிக்கம் said...

    எளிமையான விளக்கங்கள். எனக்கு பல நேரங்களில் புரியாமல் இருந்த பல செய்திகள் எளிதாக புரிகின்றன.
    தொடர்ந்து எழுதுங்கள். நன்றி ///

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  9. பயணமும் எண்ணங்களும் said.

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. நிகழ்காலத்தில்... said...

    30 சதம் வரி என்பது அரசு நம்முடன் பார்ட்டனர் போல, எந்தவித உழைப்பும் இல்லாமல் நீ உழை, எனக்கு கொடு, பாக்கெட்டில் போட்டுக்கொள்கிறேன் என்பதுதான் ///

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete