Wednesday, January 26, 2011

ஜனவரி 26 - காமெடி நாள். இதுதான் உண்மை!

1967 க்கு பின் இன்று வரை நாம் ஜனவரி 26 -ஐ குடியரசு தினமாகவும் ஆகஸ்ட் 15-ஐ சுதந்திர தினமாகவும் கொண்டாடுவது உண்மையிலேயே காமெடியாக இருக்கிறது. காங்கிரஸ் பிளவுபட்டு சர்வாதிகாரி இந்திரா காந்தி பதவிக்கு வந்தார். மாநிலங்களில்  குடும்ப சுயநலவாத கட்சிகள் பதவிக்கு வந்தது. அதன் பின் இந்தியாவில் சுதந்திரம், ஜனநாயகம் என்பது கழுதை தேய்ந்து குட்டி சுவரான கதையாகிவிட்டது. இரட்டை குடியுரிமை வைத்திருப்பவரும், ரஷ்ய உளவுத்துறையிடமிருந்து சுமார் 10,000 கோடி பணம் பெற்று, சுவிஸ் வங்கியில் தன் பெயரிலும், ராகுல் காந்தி பெயரிலும் போட்டு வைத்திருப்பவருமான இத்தாலிய பெண் இந்திரா காங்கிரசின் தலைவர்! ஆக ஒரு இத்தாலிய பெண்மணியை தலைவராக கொண்ட இன்றைய காங்கிரஸ் ஒரு அந்நிய நாட்டு கட்சியே! அக்கட்சி ஆட்சி செய்யும் பொழுது எப்படி இந்தியா சுதந்திர நாடாக இருக்க முடியும். ஆக சுதந்திர கொண்டாட்டமும் ஒரு கேலி கூத்தே!

குடியரசு என்றால் அந்த நாட்டு மக்களாலேயே அந்த நாடு ஆளப்படுகிறது என்று பொருள். ஆனால் உண்மை நிலை என்ன?  இந்தியாவின் நலனை பற்றி துளியும் கவைப்படாமல், அந் நிய நாடுகளின் லாபத்திற்காக சிறப்பு பொருளாதார மையம், அந்நியர் இந்த நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் வகையில் தாராள பொருளாதார கொள்கைகள், உள் நாட்டு தொழில்கள் நசித்துப்போகும் வகையில் அந்நிய முதலீடுகள் என இங்கு காலணி ஆட்சியே நடைபெறுகிறது. அதேபோல மன்னர் ஆட்சி போல இந்திரா காந்தி, அதன் பின் ராஜீவ் காந்தி, பின் சோனியா காந்தி என பரம்பரை ஆட்சி மத்தியிலும், கருணாநிதி அவருக்கு பின் அவர் வாரிசுகள் என மாநிலத்திலும் பரம்பரை ஆட்சிதான்!. இந்த கொள்ளையில் குடியரசு தினம் கொண்டாடுவது  காமெடியான கொடுமைதான்.

ஆயிரக்கணக்கான  ராணுவத்தினரின்   பாதுகாப்புடன் டெல்லியில் குடியசு தின கொண்டாட்டம். படங்களை பாருங்கள்!
தலையில் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கும் பெண்மணிதான் இந்தியாவின் ஜனாதிபதி. இவரும் இவர் குடும்பத்தினரும் சேர்ந்து பேங் ஒன்றை துவங்கியிருந்தனர். அதில் இவர் தான் இயக்குனர். முதலீடு செய்த பாவப்பட்ட ஏழை  எளியவர்களின் பணத்தை அபேஸ் செய்துவிட்டு வங்கியை இழுத்து மூடிய புண்ணியவதி. அதுமட்டுமா, இவர் ஜனாதிபதியான பின் இவர் கணவர் தன்னுடைய நிலத்தை ஒட்டியுள்ள பலர் நிலங்களை மோசடியாக தன் பெயருக்கு மாற்றிக்கொண்டார். நீதிமன்றம் அந்த நிலங்களை அதன் உரிமையாளர்களுக்கு பட்டா மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் போன்றவர்கள் இருந்த ஜனாதிபதி பதிவியில் இப்படி ஒரு காங்கிரஸ் பெண்மணி!


நம்மை போலவே பாவப்பட்ட ஜென்மங்கள் இந்த ஜவான்கள். 24 மணிநேரமும் மழை ,பனி, வெயில், குளிர் இவற்றை பற்றி கவலைப்படாமல் எல்லையில் காவல் செய்துவருகிறார்கள். கார்கில் போரில் மரணமடைந்த ஜவான்களுக்கு என்று கூறி 31 அடுக்குமாடி குடியிருப்பை கட்டி அதை காங்கிரஸ் அமைச்சர்களும், ராணுவ அதிகாரிகளும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் தாங்களே பங்கு போட்டு கொண்டார்கள். அதுதான் ஆதார்ஷ் வீட்டு வசதி சங்கம்.

உண்மையிலேயே மகாத்மா காந்தி இன்று உயிரோடு இருந்தால் ஊழல் அரசியல்வாதிகளை சுட்டு கொன்றிருப்பார். 

நாடு நாசமாக போக வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - திமுக கொள்ளை கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க பாரதம்!  ஜெய்ஹிந்த்!


12 comments:

 1. தமிழ்மலர் said...

  good post...///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றி

  ReplyDelete
 2. ஒரு உண்மையான இந்தியனை பார்த்த மன திருப்தி

  ReplyDelete
 3. //நாடு நாசமாக போக வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - திமுக கொள்ளை கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.//
  இதை நான் மிக்க மனவருத்ததுடன் வழிமொழிகிறேன்.
  அரவரசன்.

  ReplyDelete
 4. ramalingam said...

  நல்ல பதிவு.///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றி

  ReplyDelete
 5. ஆகமக்கடல் said...

  ஒரு உண்மையான இந்தியனை பார்த்த மன திருப்தி///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றி

  ReplyDelete
 6. NAGA said...

  //நாடு நாசமாக போக வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - திமுக கொள்ளை கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.//
  இதை நான் மிக்க மனவருத்ததுடன் வழிமொழிகிறேன்.
  அரவரசன்///
  தங்கள் வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றி

  ReplyDelete
 7. எல்லாமே எல்லாருக்கும் தெரிந்தும் போன முறை திமுக வெற்றி கண்டது. காரணம் ராஜதந்திரம் தொலைகாட்சி.

  இம்முறை அனைவருக்கும் ஆளுக்கு ஒரு கோடி தந்தாலும் தரலாம். காரணம் ராசா தந்திரம்.

  எது எப்படியோ சூரியனின் ஒளிக்கு பயந்து மரத்து நிழல் தேடி போனால் அங்கேயும் ஆபத்து தான்.

  எங்கே ஆபத்து குறைவு என்று பார்ப்பதே தமிழனின் தலையேழுத்தா ?

  ReplyDelete
 8. WiNnY... said..

  எங்கே ஆபத்து குறைவு என்று பார்ப்பதே தமிழனின் தலையேழுத்தா //

  சாப்பிடாமல் இருக்க முடியாது. இருப்பது சூத்த வெள்ளரிக்காயும் அழுகிய ஆட்டு கறியும். எதை சாப்பிட்டால் ஆபத்து குறைவு? வெள்ளரிக்காய்தான். இதுதான் நம்ம தலையெழுத்து!

  ReplyDelete
 9. //இதுதான் நம்ம தலையெழுத்து//

  மாத்த முடியா விட்டாலும் , திருத்தி எழுத நீங்கள் நினைப்பதை, உங்கள் மனதில் உள்ளதை எழுதுங்கள்.

  எனக்கு சுதந்திரத்தின் வலி தெரியாமல் இருக்கலாம், ஆனால் சுதந்திரத்தின் வலிமை தெரியும்.

  ReplyDelete
 10. WiNnY... said...

  //இதுதான் நம்ம தலையெழுத்து//

  மாத்த முடியா விட்டாலும் , திருத்தி எழுத நீங்கள் நினைப்பதை, உங்கள் மனதில் உள்ளதை எழுதுங்கள்.

  முயற்சி உடையார் இகழ்சி அடையார் என்பது பழமொழி. அதுபோல இளைஞர்களால் முடியாதது எதுவுமே கிடையாது. ஆனால் அரசியல்வாதிகளால் இளைஞர்கள் மனதில் ஜாதிப்பிரிவினை, மத பிரிவினை, அந்தனர் - தலித் விரோதம் என்ற நச்சு விதை விதைக்கப்ட்டதால் ஒற்றுமை குறைவு வளர்ந்துவிட்டது. இதை வலைப்பதிவர்களிடையே காணப்படுகிறது. இதனால் நம்மால் எந்த பிரச்சனையையும் முவீச்சுடன் அணுக முடியவில்லை. இதைத்தான் ஊழல் அரசியல்வாதிகள் எதிர்பார்த்தனர். நம்மிடையே ஒற்றுமை ஏற்பட்டால் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கைக்கெட்டிய தூரத்தில் தான்.
  எனக்கு சுதந்திரத்தின் வலி தெரியாமல் இருக்கலாம், ஆனால் சுதந்திரத்தின் வலிமை தெரியும்.

  ReplyDelete