Wednesday, January 12, 2011

ஏன் என்று சொல்லுங்கள் -சட்டம் நம் கையில்

1. உலகத்திலேயே அதிக பரப்பளவில் உணவு தானியம் பயிரிடும் நாடு இந்தியா.

2. உலகத்திலேயே அதிக விழுக்காடு உழவு செய்யும் தரம் கொண்ட நிலப்பரப்பு இருப்பது இந்தியாவில்தான்.

3. இந்திய நிலப்பரப்பில் 50 விழுக்காடு விவசாயம் செய்யும் தன்மையுள்ளது.

4.  80 விழுக்காடு விவசாய நிலத்தில் உணவுதானியங்களும், பயிர்வகைகளும் பயிரிடப்படுகின்றன.

5. உலகிலேயே அதிக அளவில் கால்நடைகளின் எண்ணிக்கை இந்தியாவில் தான்.

6. இவை உழவுத்தொழில், இறைச்சி, பால் இவற்றிற்காக வளர்க்கப்படுகிறது.

7. விவசாய உற்பத்தியில் 26 விழுக்காடு பால் உற்பத்தியில் கிடைக்கிறது.

8. உலக மாம்பழ உற்பத்தியில் 50 விழுக்காடு நம் நாட்டில் உற்பத்தியாகுகிறது.

9. ஆப்பிள், வாழைப்பழம், தேங்காய், காப்பிக்கொட்டை, பருத்தி, ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, ரப்பர், புகையிலை, கோதுமை ஆகியனவற்றையும் அதிக அளவில் உற்பத்தி செய்யும்  நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

10. காலிபிளவர், சனல், வெங்காயம் ( !!!!!! ), அரிசி, கரும்பு உற்பத்தியில் இந்தியா 2-ம் இடம் வகிக்கிறது.

11. 60,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் நிறைந்தது இந்தியா.

12. நம் நாட்டில் 65 விழுக்காடுக்கு மேற்பட்டவர்கள் வசிப்பது கிராமங்களில். இவர்கள் தொழில் விவசாயம்.

13. தேசிய உள்நாட்டு உற்பத்தி மதிப்பில்  மூன்றில் ஒரு பங்கு விவசாயம் மூலமாக கிடைக்கிறது.

14. வெளிநாட்டு ஏற்றுமதியில் 10 விழுக்காடு விசாயத்தை சார்ந்ததாகும்.

 இவ்வளவு பிளஸ் பாய்ண்ட் இருந்தும் நம் நாடு என்ன நிலையில் இருக்கிறது? அதை புள்ளி விபரத்தோடு பார்க்கலாம்.


1.இந்தியாவில் பிச்சைக்காரர்களாக இருப்பவர்களின் உத்தேச எண்ணிக்கை 50 லட்சம்.

2. ஒருவேளை சாப்பாட்டுடன் பட்டினி வாழ்க்கை நடத்துபவர்கள் 10 கோடி.

3. நாளொன்ருக்கு 20 ரூபாய்க்கு குறைவான  வருமானத்தில் திரிசங்கு வாழ்க்கை வாழ்பவர்கள் 20 கோடி.

4. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் உணவு கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, திறந்த வெளியில் மழை,வெயிலில் சேமிக்கப்பட்டு நாசமாக்கப்படும் கோதுமையை கொண்டு 10 கோடி பேறுக்கு ஆண்டு முழுவதும் அவர்களின் பசியை நீக்கமுடியும்.

5. ஆண்டுதோறும் இந்திய அரசியல்வாதிகளால் ஊழல் மூலம் சுரண்டப்படும் நம் வரிப்பணம் சுமார் 50,000 கோடி.

6. ஸ்பெக்டிரம் + காமென்வெல்த் கேம் மூலம் ஊழல் செய்யப்பட்ட தொகை சுமார் 2 லட்சம் கோடி. 

அனைத்து இயற்கை செல்வங்கள் இருந்தும் ஏன் இந் நிலை? 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.






8 comments:

  1. ம்ம்ம்ம்... என்னத்த சொல்ல.... இந்தியா வல்லரசு ஆவது, எப்போது?

    ReplyDelete
  2. இதுக்கு ஆன்சர் ரொம்ப ஈசி. ஜனநாயகம்- இந்திய ஜனநாயகம். இதைத்தான் அயல் நாட்டினர்// banana democracy// என்று கிண்டல் அடிப்பார்கள். மக்களை மொக்கைகளாக ஆக்கிவைத்த ஜனநாயகம். மக்களாட்சி!

    ReplyDelete
  3. Chitra said...

    ம்ம்ம்ம்... என்னத்த சொல்ல.... இந்தியா வல்லரசு ஆவது, எப்போது? ///
    நீங்க அமெரிக்காவிலிருந்து இங்க வந்தவுடன் இந்தியா வல்லரசாகிவிடும்

    ReplyDelete
  4. தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  5. //இதுக்கு ஆன்சர் ரொம்ப ஈசி. ஜனநாயகம்- இந்திய ஜனநாயகம். இதைத்தான் அயல் நாட்டினர்// banana democracy// என்று கிண்டல் அடிப்பார்கள். மக்களை மொக்கைகளாக ஆக்கிவைத்த ஜனநாயகம். மக்களாட்சி!//

    கக்கு நீங்க் என்ன் சொல்ல் வரிங்க் ரானுவ் ஆட்சி வேனுமா

    ReplyDelete
  6. கக்கு - மாணிக்கம் said...

    இதுக்கு ஆன்சர் ரொம்ப ஈசி. ஜனநாயகம்- இந்திய ஜனநாயகம். இதைத்தான் அயல் நாட்டினர்// banana democracy// என்று கிண்டல் அடிப்பார்கள். மக்களை மொக்கைகளாக ஆக்கிவைத்த ஜனநாயகம். மக்களாட்சி//

    ஜனநாயகம் இதுக்கு பொறுப்பல்ல. அரசியல்வாதிகள் என்ற போர்வையில் கிரிமினல்கள் பதவிக்கு வந்ததால் ஏற்பட்ட பாதிப்புதான்.

    ReplyDelete
  7. ஜோதிஜி said...

    தொடர்ந்து எழுதுங்க //

    நன்றி நண்பரே!

    ReplyDelete