Saturday, January 29, 2011

ஆப்பை பிடுங்கிய சர்தார்ஜி!

ஆப்பை பிடுங்கிய குரங்கு கதை என்னவென்று தெரியுமா?. ஒரு ஊரில் விறகுவெட்டி ஒருவன் இருந்தான். அவன் காட்டிற்கு சென்று மரத்தை வெட்டி பின் அதை சிறு துண்டுகளாக கீறி கட்டு கட்டி கொண்டுவருவான். மரத்தை சிறு துண்டுகளாக வெட்ட கோடாலியால் வெட்டி பின் பிளந்த மத்தின் இடுக்கில் ஆப்பை சொருகி விட்டு கோடாலியை எடுத்து பின், அடுத்த இடத்தை பிளப்பான்.அந்த பகுதியில் குரங்கு கூட்டம் ஒன்று இருந்தது. அதில் ஒரு குரங்கு அவனுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வ்ந்தது. அவன் செய்வது போலவே அதுவும் செய்யும். ஒரு நாள் விறகு வெட்டி குரங்கின் பார்வையில் படும்படி வெட்டிய மரத்தில் உட்கார்ந்து கொண்டு அதில் சொருகியிருந்த ஆப்பை எடுத்தான். பின் மறுபடியும் ஆப்பை மாட்டிவிட்டு  சாப்பிட சென்று விட்டான். இதை பார்த்துக்கொண்டிருந்த குரங்கு ஓடி வந்து தடியின் மீது உட்கார்ந்தது. அதன் வால் மரத்தின் பிளவினுள் தொங்கியது. அதைப்பற்றி கவலைப்படாமல் குரங்கு ஆப்பை அசைத்து அசைத்து வெளியே எடுத்தது. அப்பொழுது மரத்தின் பிளவு சுருங்கி இணைந்து கொண்டது. பிளவில் மாட்டிய வால் மரத்தில் மாட்டிக்கொள்ள, வலிதாங்க முடியாமல் குரங்கு கத்த ஆரம்பித்தது. வாலையும் எடுக்க முடியவில்லை. இதுதான் ஆப்பை பிடுங்கிய குரங்கின் கதை. இனி சர்தார்ஜி கதையை பார்க்கலாம்.

"CENTRAL VIGILANCE COMMISSIONER"  பதவி என்பது  அரசியலமைப்பு சட்டப்படி உள்ள நியமனம் ஆகும். அரசின் செலவினங்கள் முறைப்படி ஊழலின்றி செய்யப்படுகிறதா என்பதை என்பதை கண்காணிக்கும் சர்வ அதிகாரம் கொண்ட அமைப்பாகும். தன் இஷ்டப்படி ஆட்சியிலிருப்பவர்கள் கமிஷ்னரை நியமிப்பது தவறு என உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் கொண்ட மூவர் குழுதான் ஏகமனதாக தேர்ந்தெடுக்கவேண்டும் என வழிமுறையை வகுத்து கொடுத்தது.

இவர்தான் பி.ஜே. தாமஸ்

ஒரு சில மாதங்களுக்கு முன்பு, காலியாகப்போகும் விஜிலியன்ஸ் கமிஷ்னர் பதவிக்கு  மூவர் பெயரை பிரதமர் அலுவலகம் இக்குழுவிற்கு பரிந்துறை செய்தது. மூவரில் ஒருவர்  P.J. தாமஸ் I.A.S.  இவர் கேரள அரசில் " உணவு மற்றும் உனவுபொருள் வழங்கல் துறையின் செயலாளராக இருந்த பொழுது, காலம் சென்ற காங்கிரஸ் தலைவர் கருணாகரன் முதல் அமைச்சராக இருந்தார். அப்பொழுது மலேஷியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது.  இதற்கு மத்திய அரசின் அனுமதி பெறப்படாததுடன், அன்றைய மார்க்கெட் விலையை விட அதிகமான விலையில் இறக்குமதி செய்யப்பட்டது. மேலும் இந்த இறக்குமதிக்கான முடிவை அமைச்சரவை கூடி முடிவெடுப்பதற்கு 10 நாள் முன்பாகவே தாமஸ், மலேஷிய கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்தார்.   இதனால் கேரள அரசுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு பின் பதவியேற்ற கம்யூனிஸ்ட் அரசு இந்த ஊழல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது.  இதில் முதலமைச்சர் கருணாகரன் , தாமஸ் உட்பட 8 நபர்கள் மீது விஜிலியன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் கருணாகரன் தடை உத்தரவு பெற்றார். ஆக வழக்கு நிலுவையில் இருந்தது. கருணாகரன் மறைவுக்கு பின் அவர் வழக்கறிஞர், தன் கட்சிக்காரர் மரணமடைந்த  விஷயத்தை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க, நீதிமன்றம் தடை உத்தரவை விலக்கி, வழக்கு விசாரணையை தொடர 23-12-2010 ல் அனுமதி அளித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் வழக்கு விசாரணை துவங்கும் என கேரள விஜிலியன்ஸ் கோர்ட் அறிவித்துள்ளது. ஆக விசாரணைக்கு இன்றைய சென்டிரல் விஜிலியன்ஸ் கமிஷ்னர் குற்றவாளியாக  கோர்ட்டில் ஆஜராக வேண்டியுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் சிதம்பரமும்  பி.ஜே தாமஸை தேர்வு செய்த பொழுது, எதிகட்ட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், "இவர் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதால் இவரை தேர்வு செய்வது தவறு" என்று ஆட்சேபித்ததுடன், "எஞ்சிய இருவரில் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யுங்கள்" என கூறினார். ஆனால்  ஆட்சேபம் நிராகரிக்கப்பட்டு பி.ஜே. தாமஸ் தேர்வு செய்யப்பட்டார். "டிஸ்அக்ரீட்" என  தேர்வு ரிக்கார்டிலும் சுஷ்மா எழுத்து மூலமாக தன் ஆட்சேபணையை குறிப்பிட்டுள்ளார். ஏகமனதாக கமிட்டி உறுப்பினர்கள் மூவராலும் தேர்வு செய்யப்படாமல் மெஜாரிட்டி  என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பாரத ரப்பர் ஸ்டாம்புக்கு (ஜனாதிபதி) அனுப்பப்பட்டு, அவர் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டார்.

இவர் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சமூக நல் அமைப்பு மற்றும் முன்னாள் தேர்தல் ஆணையர் ஆகியோரால் பொது நல வழக்கு தொடப்பட்டுள்ளது.   விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. எடக்கு மடக்கான  உச்சநீதிமன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அரசு இப்பொழுது பேந்த பேந்த முழிக்கிறது. அதன் உச்ச கட்டமாக 27-01-2011 அன்று வழக்கு விசாரணையின் போது "பாமாயில் வழக்கில், கேரள அரசு அனுமதி பெற்று, அவருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டுள்ள விபரம், தேர்வு குழுவுக்கு தெரியுமா?" என நீதிபதி கபாடியா கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த  அட்டார்னி ஜெனரல் Goolam E. Vahanvati "  இந்தியன் பீனல் கோடு பிரிவு 120 B -ன் படி தாமஸின் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ள விபரம்  தேர்வு குழுவின் பார்வைக்கு கொண்டுவரப்படவில்லை. தாமஸின் பயோ டேட்டாவிலும் இவ்விஷயம் குறிப்பிடப்படவில்லை" என்றார்.

மேலும் நீதிபதிகள், "இந்த நியமனத்தில், அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டதா என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். எத்தனை நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்தனர்? என கேள்வி கேட்டனர். CPIL என்ற பொது நல அமைப்பின் சார்பாக வாதாடிய பிரஷாந்த் பூஷன் " தாமஸ் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள விபரம், வேண்டும் என்றே கமிட்டியின் முன்னால் வைக்கப்படவில்லை. சுஷ்மா சுவராஜ் ஆட்சேபணையை மீறி அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம், அவரை நியமிப்பது என்ற முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது" என கூறினார். வழக்கு விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

"நீதிமன்றத்தில் தாமஸ் ஊழல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற விபரம் தேர்வுக்கமிட்டிக்கு தெரியாது என அட்டார்னி ஜெனரல் கூறியிருப்பது வடிகட்டிய பொய். நானே பிரதமரிடம் கூறியுள்ளேன். நீதிமன்றத்திற்கு தவறான தகவலை அரசு கொடுத்துள்ளது. எனவே இதுபற்றி நான் நீதிமன்றத்தில்  அபிடவிட் தாக்கல் செய்யப்போகிறேன்" என கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், ராணுவ நில ஊழல், ராணுவ காண்டீன் ஊழல் என தொடர்ந்து வரும் ஊழல்களை  மூடி மறைக்க தங்கள் சொல்படி ஆடும் நபர் செண்டிரல் விஜிலியன்ஸ் கமிஷ்னராக வரவேண்டும் என்பதற்காகவே மன்மோகன் சிங்கும், சிதம்பரமும்  தாமஸை நியமித்தனர். பிரச்சனை சிக்கலாகுவதை கண்ட காங்கிரஸ் அரண்டு போய், பதவி விலகுங்கள், வேறு பதவி தருகிறோம் என தாமஸிடம் பல முறை பேரம் பேசியும், பதவி விலக மறுத்துவிட்டார்.

சென்டிரல் விஜிலியன்ஸ் ஆக்ட் - படி  கமிஷ்னரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், மத்திய அரசுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ கிடையாது. ஜனாதிபதி கமிஷ்னர் மீதுள்ள குற்றச்சாட்டை குறிப்பிட்டு பதவி நீக்கம் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யலாம். அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யமுடியும். 

எனவே இப்பொழுது தாமஸை பதவி நீக்கம் செய்து பிரச்சனையை வளர விடாமல் செய்யும் பிரதமரின் முயற்சியும் தோல்வியடைந்து விட்டது.  

ஆப்பை பிடுங்கி அவஸ்தை படும் குரங்கின் நிலையில்  நம்ம சர்தார்ஜி இருக்கிறார்.8 comments:

 1. goog post iyya.

  kannan from abu dhabi.
  http://samykannan.blogspot.com/

  ReplyDelete
 2. கிணற்றுத் தவளை said...

  sooperappu sooper aappu //

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 3. Kannan said...

  goog post iyya.///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 4. நம்ம சர்தாஜிக்கு வேலையே அதுதானே..ஹா..ஹா..

  ReplyDelete
 5. ஜெய்லானி said...

  /// நம்ம சர்தாஜிக்கு வேலையே அதுதானே..ஹா..ஹா.///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 6. உங்கள் பதிவுகள் சும்மா நானும் எழுதினேன் என்று இல்லாமல் பொறுப்புடனும் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்ற அக்கறையுடனும் இருக்கின்றன.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. பொழுது போக்குக்காக நான் எழுதுவது அல்லது பேசுவது கிடையாது. எனக்கு தெரிந்த உண்மைகள் அல்லது என் கருத்துக்கள் பிறரை சென்று அடைவதன் மூலம் சமுதாயத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே என் நோக்கம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete