Saturday, February 26, 2011

நான் மாங்காய் மடையன் தானா?.............சட்டம் நம்கையில்

எனக்கு இப்பொழுது பெரிய சந்தேகமே வந்திருக்கு. என்னால் அதை தீர்த்துக்கொள்ள முடியவில்லை. அதை தீர்த்துக்கொள்ள உங்கள் உதவி தேவை. அதன் அடிப்படையிலேயே இந்த பதிவு!

சமீப காலமாக பத்திரிகைகளில் வரும் செய்திகள், டி.வி. செய்திகள், அமைச்சர்களின் விளக்கங்கள், அரசின் சட்டங்கள், திட்டங்கள் இவற்றை பார்க்கும் பொழுது எனக்கு ஒன்றுமே புரிய மாட்டங்குது. அதனால் பதிவே போடவில்லை. 

இன்று எதேச்சையாக கூகுலில் தமிழ் நாடு வீட்டு வசதிவாரியம் பற்றி சர்ச் செய்தேன். அப்பொழுது என் கண்ணில் பட்ட ஒரு விளம்பரம். கீழே கொடுத்துள்ளேன். அதை படியுங்கள். அதன் பின் என் சந்தேகத்தை கேட்கிறேன். நீங்கள் தெளிவு படுத்துங்கள்.


படித்துவிட்டீர்களா? சரி இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். எனக்கு வருட வருமானம் ரூ.96,000 என வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு ஹெச்.ஐ.ஜி பிளாட்டு வாங்க விருப்பம். "MUTHAMPALAYAM PHASE VIII AT ERODE" ஸ்கீமில் விண்ணப்பிக்கிறேன். அதற்கான தகுதி வருட வருமானம் ரூ.94001-க்கு மேல் இருக்க வேண்டும்.என் வருட வருமானம் ரூ.96,000/- ஆகும். அதனால் விண்ணப்பிக்க எனக்கு தகுதி இருக்கு. விண்ணப்பிக்கிறேன். எனக்கு அலாட்மெண்டும் ஆகிறது என வைத்துக்கொள்வோம். நானும் வாங்கிவிட்டேன். 

இப்பொழுதுதான் பிரச்சனையே ஆரம்பம். மாதா மாதம் தவணை தொகையாக ரூ.13,410 செலுத்த வேண்டும். வருட வருமான்ம் ரூ.96,000 அதாவது மாத வருமானம் ரூ.8,000 உடைய நான் எப்படி 13,410-ஐ செலுத்த முடியும்? 

சட்டப்படி ஒருவருடைய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையை தான் கடன் பாக்கிக்காக ஈடாக்க முடியும். இதன் படி மாதம் ரூ.3000க்கு குறைவான தொகை மட்டுமே என்னிடமிருந்து சட்டப்படி ஈடாக்க முடியும். அப்படியிருக்கும் பொழுது எப்படி ரூ.94,001-க்கு மேல் வருட வருமானம் உடையவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என எந்த கணக்கில் நிர்ணயம் செய்தார்கள்?
ஒருவேளை, பத்துபைசா வருமானம் இல்லாமல் அரசியலுக்கு வந்து கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் (உ.தா. திகார் சிறையில் முகாமிட்டிருக்கும் ராஜா), சம்பளத்தை போல பலமடங்கு லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் (உ.தா. 10 கிலோ தங்கம்,30 லட்சம் பாக்கெட் மணி வைத்திருந்து கைது செய்யப்பட்ட நால்கோ நிறுவன சி.எம்.டி  ஏ.கே. சிரிவஸ்தவா) போன்ற அரசு அதிகாரிகள், அது ஏன் சாதாரண பியூன் போன்றவர்களை மனதில் வைத்து வீட்டு வசதி வாரியம் இப்படி போட்டிருக்குதோ? இவர்களால் முடியும். என்னை போன்ற சட்ட பூர்வ சம்பளத்திற்கு மேல் பத்து பைசா வருமானம் இல்லாதவர்கள் என்ன செய்ய?

நான் இந்த விளம்பரத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாத மாங்காய் மடையனா? அல்லது வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மாங்காய் மடையர்களா? சொல்லுங்க சார். இல்லைனா எனக்கு மண்டையே வெடித்து விடும்!


Thursday, February 10, 2011

ஆப்பு வச்ச உச்ச நீதிமன்றம்.......!

கேரள முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளை மீதான ஊழல் வழக்கில், அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கேரள மாநில முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பாலகிருஷ்ணன் பிள்ளை, இடமலையாறு அணைக்கட்டு நீர் மின்சாரத்திட்ட ஊழல் விவகாரத்தில் சிக்கினார்.

பாலகிருஷ்ணன் பிள்ளை தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து மின் திட்டத்தின் ஒரு சில ஒப்பந்தங்களை தனக்கு வேண்டியவருக்கு வழங்கினார். இதனால் கேரள மின் வாரியத்துக்கு ரூ.2கோடி இழப்பு ஏற்பட்டது என்பதே குற்றச்சாட்டு.

கடந்த 1982ம் ஆண்டு நடந்த இந்த ஊழல் தொடர்பாக 1991ம் ஆண்டில் தான் வழக்கு தொடரப்பட்டது.கேரள உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சரை நிரபராதி என்று அறிவித்த பிறகு, மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாலகிருஷ்ணனுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் பாலகிருஷ்ணன் பிள்ளைக்கு எதிராக சரியான சாட்சியங்கள் இருந்தும் இந்த வழக்கு இத்தனை நாட்கள் இழுத்தடிக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் கண்டிக்கவும் செய்தது.மேலும், அரசியல்வாதிகள் மீதான எந்த ஊழல் வழக்கும் இது போன்று நீண்ட நெடுங்காலம் இழுத்துச் செல்லப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது. 
இந்த அநியாயத்தை யாரிடம் சொல்லி அழ?

உலகத்திலேயே மிகவும் மதிக்கப்பட, ஊக்குவிக்கப்பட வேண்டிய பணிகள் இரண்டு. அவை நல்ல இளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர் பணி, தன் குடும்பத்தினரை விட்டு பிரிந்து - மழை ,வெயில், பனி இவற்றையெல்லம் சட்டை செய்யாமல் எல்லையில் காவல் காக்கும் ராணுவம். இவை இரண்டுமே ஊழல் அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்பட்டு, அவமரியாதை செய்யப்படுகிறது. இதற்கு உதாரணம் தான் இது.                                                               

மேஜர் தரம் சந்த் என்ற ராணுவ வீரர் 1967-ல் தனது  42-வது  வயதில் பணிக்காலத்தில் மரணமடைந்தார். தற்பொழுது 90 வயதான இவர் மனைவி புஷ்பாவந்திக்கு  அரசு வழங்கும் ஓய்வூதிய தொகை எவ்வளவு தெரியுமா? மாதம் 70 ரூபாய்.

கருமாந்திரம். என்ன கணக்கில் 70 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்பது நமக்கு மட்டுமல்ல அந்த அம்மாவுக்கும் புரியவில்ல. ஓய்வு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என மனு மேல் மனுவாக அனுப்பி சில்வர் ஜூப்ளியை வெற்றிகரமாக தாண்டி கோல்டன் ஜூப்ளியை நெருங்கும் நிலையிலும் அவர் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே எழுபது ரூபாய் தான் வழங்கப்பட்டது.

ராணுவம், மத்தியஆயுதப்படை, விமானப்படை, கப்பல் படை ஆகியவற்றில் பணியாற்றிய வீரகளுக்கு  ஓய்வூதியம் நிர்ணயிப்பது, வழங்குவது ஆகியவற்றிற்கு ராணுவ அமைச்சகம் எவ்வித அமைப்பையும் ஏற்படுத்தவில்லை. அந்தந்த பிரிவை சார்ந்த உயர் அதிகாரிகளே  ஓய்வூதியம்  நிர்ணயம்  செய்து வருகிறார்கள். ஆனால் என்ன கணக்கு என்பது புரியாது. ஒரே அந்தஸ்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் எலோருக்கும் ஒரே சமமான் ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. இந்த குளறுபடி ராணுவத்தில் மட்டுமல்லாமல் விமானப்படை, கப்பல் படை ஆகியவற்றிலும் உண்டு. இன்று வரை  இந்நிலை தொடருகிறது.

பொறுத்தது போதும். இனி வேலைக்கு ஆகாது என முடிவு செய்த அந்த தாய் நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டினாள். நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு மற்றும்  பி.எஸ். சஹான் அடங்கிய பெஞ்சு மனுவை பார்த்து அதிர்ச்சி அடைந்து  மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அவசர அவசரமாக அந்த போர் விதவை தாயின் ஓய்வு ஊதியத்தை 70 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தியது. அதன் பின் நீதிமன்றத்தில் ஆஜராகி இது விபரத்தை தெரிவித்தது.

ஆயிரம் லட்சம் கோடி, 2 ஆயிரம் லடசம் கோடி என வரிப்பணத்தை கொள்ளையடிக்கும்  அரசியல்வாதிகளுக்கு, நாட்டை பாதுகாக்கும் ராணுவத்தினருக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்குவதில் மட்டும் ஏன் இந்த பிச்சைக்கார புத்தி? அவங்க அப்பன் வீட்டு பணமா? நாம் என்ன கொடுக்க கூடாது என்றா சொல்கிறோம்? இந்த அநியாயத்தை யாரிடம் சொல்லி அழுது தொலைக்க?


Monday, February 7, 2011

இஸ்ரோ - ஸ்பெக்ட்ரம் விற்பனை - 2 லட்சம் கோடி ஊழல்

இப்பொழுது புதிய ஸ்பெக்டரம் ஊழல் வெளியாகியுள்ளது. இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் என்ற மத்திய அரசு அமைப்பாகிய இஸ்ரோ  2005-ல் மிகவும் முக்கிய ஸ்பெக்ட்ரம் ஆகிய 70 மெஹா ஹெர்ட்ஸ் அலை வரிசையை "தேவாஸ்" என்ற தனியார் நிறுவனத்திற்கு வெறும் 1000 கோடிக்கு ஏலமோ அல்லது டெண்டரோ இல்லாமல் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்துள்ளது.

இதனால் நாட்டிற்கு 2 லட்சம் கோடி வருமான  இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாதாரண 20 மெஹா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் B.S.N.L, M.T.N.L ஆகியவற்றிற்கு 12,847 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இன்னும் இஸ்ரோ பற்றிய சி.ஏ.ஜி-யின் கணக்கு தணிக்கை முடியடையவில்லை. தணிக்கை அறிக்கை வெளிவந்தவுடன் மீண்டும் பூகம்பம் வெடிக்கும். 

இந்திரா காங்கிரஸ் என்றால் ஊழல் என்பதை மீண்டும் காங்கிரஸ் நிரூபித்துள்ளது!பிளாஷ் நியூஸ் (7-2-2011)

2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதிக்கும் தொடர்பிருப்பதாகவும் அதனால் அவரையும் இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்க மனு செய்ய விரும்புவதாகவும் சுப்பிரமணியசாமி சி.பி.ஐ-ன் தனி நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் தன் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியுள்ளது மலிவான விளம்பர யுக்தி, அவப்பெயரை ஏற்படுத்துவது என ஆட்சேபித்து, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸை கருணாநிதி அனுப்பியுள்ளார். 

இந்நிலையில் சுப்பிரமணிய சாமி இன்று கருணாநிதி மீது வழக்கு தொடர அனுமதி கேட்கும் கடிதத்தை தமிழ் நாடு ஆளுநர்க்கு அனுப்பியுள்ளார். தமிழ் நாட்டில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வழங்கப்படும் வீட்டுமனைகளில் பெரும்பாலும் தகுதியற்றவர்களுக்கு, முதலமைச்சரின் விருப்ப ஒதுக்கீட்டில்  மனைகள் ஒதுக்கப்பட்டு ஊழல் நடை பெற்றுள்ளது. என்பதை குறிப்பிட்டுள்ளார். இந்த ஒதுக்கீட்டில் தன்க்கு சாதகமான ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ்,  நீதிபதிகள் ஆகியோருக்கு கருணாநிதி வீட்டு மனை வழங்கியுள்ளார். 30 நாட்களுக்குள் கவர்னர் அனுமதி வழங்காவிட்டால், நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெறப்போவதாக தெரிவித்துள்ளார். கவர்னர் அனுமதி வழங்க மாட்டார் என நம்பலாம். எனவே சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தை அணுகுவார் என எதிர் பார்க்கலாம். 

 எதாக இருந்தாலும், இது தி.மு.க விற்கு தலை வலியை  ஏற்படுத்தும் என்பது தெளிவு.பலி கொடுக்கப்பட்ட ராஜா!

எண்களின் வரிசையில், உச்சம் எதுவென உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆ.ராசா. நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்பதே பெரிய விஷயமாக இருந்த நிலையில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற மிகப் பெரிய தொகையை மிகச் சாதாரணமாகக் கையாண்ட தகைமையாளர்.

அதோ இதோ என எதிர்பார்க்கப்பட்ட அவருடைய கைது, அலைவரிசை ஒதுக்கீடு நடந்து மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு, 2.2.2011 அன்று நடந்தேறியிருக்கிறது. இதன் பின்னணி, பல ஆச்சரியங்களைத் தருகிறது.

முதலாவதாக, மூன்று வருடங்களாக சி.பி.ஐ., காத்த மவுனம். 2008ம் ஆண்டே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முடிந்துவிட்டது. அப்போதே இதில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான முகாந்திரங்கள் எழுந்தன. சட்ட அமைச்சகம் சந்தேகம் தெரிவித்தது; நிதியமைச்சகம் நெறிமுறைகளைக் கடைபிடிக்கச் சொன்னது; பிரதமர் கூட, பார்த்து நடந்துகொள்ளச் சொன்னார். எல்லாருக்கும் ராசா அளித்த ஒரே பதில், "எல்லாம் முறைப்படி தான் நடக்கிறது.'

அப்புறம், சம்பந்தப்பட்ட இரண்டு துறைகளும், பிரதமரும் கப்சிப். இடையில் நடந்தது என்ன? பிரதமரின் கருத்தையும் மீறி ஓர் அமைச்சர் செயல்பட்டு இருக்கிறார் என்றால், அவருக்கு அந்தத் துணிச்சலைத் தந்தது யார்? இந்தியாவில், பிரதமரை விட செல்வாக்கு படைத்தவர் சோனியா ஒருவர் தான் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தானே.

அப்புறம் எப்படி சி.பி.ஐ., நடவடிக்கை எடுக்க முடியும்? அதையும் மீறி இப்போது எப்படி கைது வரை துணிந்தது? எல்லாம், தேர்தல் கூட்டல், கழித்தல் கணக்கு தான்.

கேட்க நாதியில்லாத ஊரில் எத்தனை கோடிகளை சுருட்டினால் என்ன என, தி.மு.க.,வும் காங்கிரசும் இருமாந்திருக்க, சுப்பிரமணியசாமி வழக்கில், சுப்ரீம் கோர்ட் தன் சாட்டையைச் சுழற்றியது. எவ்வளோ முட்டுக்கொடுத்துப் பார்த்த மத்திய அரசு, காரியம் கை மீறிப்போன நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதியை, "கன்வின்ஸ்' செய்து, ராஜாவை ராஜினாமா செய்ய வைத்தது.

அதோடு எல்லாம் முடிந்துவிடும் எனப் பார்த்தால், எதிர்க்கட்சிகள் ஓய்வதாக இல்லை. பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என, அவை ஒரேடியடியாக பிடிவாதம் பிடிக்கத் துவங்கின. "சைக்கிள் கேப்" -ல் சுப்பிரமணியசாமியும், "ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் என்னையே அரசுத் தரப்பு வக்கீலாக நியமிக்க வேண்டும்" என மனுத்தாக்கல் செய்தார்.

சட்டப்படி அதற்கு வாய்ப்பு இருப்பதை அறிந்த காங்கிரஸ், உடனடியாக ராசாவை கைது செய்து, சாமியின் சுனாமியில் இருந்து தப்பியது. சாமி களமிறங்கினால் நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ, பல வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறிவிடும் என்பது காங்கிரசுக்குத் தெரியும்.

சோனியாவின் சம்மதமோ, கருணாநிதிக்குத் தகவலோ தெரிவிக்காமல், சி.பி.ஐ., தன்னிச்சையாக செயல்பட்டிருக்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை. அதனால், எல்லாரும் எதிர்பார்த்த விஷயமாகவே இருந்தது ராசா கைது. டில்லியில் கருணாநிதி இருந்தபோது, சி.பி.ஐ., அலுவலகத்துக்கு ராசா அழைக்கப்பட்டிருக்கிறார். தலைவர் இருக்கும்போது தொண்டர் கைது செய்யப்படுவது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால், விஷயம் இரண்டு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ராசா கைது செய்யப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பே, பெரும்பாலான ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுவிட்டன, "இன்று ராசா கைதாகிறார்' என்று. அந்த அளவுக்கு, ஊரறிந்த ரகசியமாக இருந்திருக்கிறது சேதி. "கையை முதலை கவ்விவிட்டது; துண்டித்துக்கொள்ளாவிட்டால், ஆளே காலி' என்ற  நிலை ஏற்படும் என்பதை, கருணாநிதிக்குப் புரிய வைத்திருக்கிறது காங்கிரஸ்.

ஏற்கனவே, கனிமொழியைத் தவிர, ஆதரிக்க ஆளில்லாமல் தவித்த ராசாவுக்கு, காங்கிரசின் நெருக்கடி, பெரும் ஆபத்தாக அமைந்துவிட்டது. "தேர்தலை எதிர்கொள்வது கடினம்' என அழகிரியும் ஸ்டாலினும் ஏற்கனவே நெருக்கடி கொடுத்தது நினைவிருக்க, வேறு வழியின்றி ராசா கைதுக்கு தலைவரும் தலையகை வேண்டியதாகிவிட்டது. கருணாநிதி இந்தப் பக்கம் சென்னை வந்தார்; ராசா அந்தப் பக்கம் டில்லியில் கைதானார்.

பொதுவாக, கைது என்பதே எதற்காக மேற்கொள்ளப்படுகிறது? குற்றம்சாட்டப்பட்டவர் தப்பித்துவிடக் கூடாது; சாட்சிகளை கலைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான். ராசா விஷயத்தில் இரண்டுமே நடக்க வாய்ப்பில்லை. அப்புறமும் எதற்கு கைது? எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனுத்தாக்கல் செய்ய விஷயம் வேண்டும்; தேர்தல் நேரத்தில் தி.மு.க.,வும் காங்கிரசும் தங்களை புத்தர்களாகக் காட்டிக்கொள்ள வேண்டும். ஒரே கல்லில் மூன்று மாங்காய்.

அப்படி உண்மையிலேயே புத்தர்களாக இருந்திருந்தால், காமன்வெல்த் ஊழல் புகழ் கல்மாடியும், ஆதர்ஷ் ஊழல் புகழ் அசோக் சவானும் கைது செய்யப்படாதது ஏன்? அவர்களிடம் அரசியல் பின்புலம் இருக்கிறது; அளவற்ற பண பலம் இருக்கிறது; முக்கியமாக, டில்லியிலோ, மும்பையிலோ தேர்தல் வரவில்லை; ஆனால், தமிழகத்தில் வர இருக்கிறது.

வேறு வழியின்றி, ராசா பலிகடா ஆக்கப்பட்டுவிட்டார். அந்த ஒரு பலியின் மூலம், மத்தியிலும் மாநிலத்திலும் பல தலைகள் தப்பிவிட்டன.

ஆனால் இந்த நினைப்பிலும் மண் விழுந்துவிட்டது. காரணம் இந்த விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்கானிப்பில் நடைபெறுவதாலும், வழக்கு தொடர்ந்திருக்கும் சுப்பிரமணியசாமியும், பொது நல அமைப்பும் அதன் வழக்கறிஞர் பிரஷந்த் பூஷனும் சாமானியப்பட்டவர்கள் அல்ல. பல திருப்பங்களுடன் அதிரடி விஷயங்களும் அரங்கேறும் என எதிர் பார்க்கலாம்.


Sunday, February 6, 2011

பிளாஷ் நியூஸ்!..........
தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, டாக்டர் சுப்பிரமணியசுவாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2G ஸ்பெக்டரம் ஊழலில் தன்னை சம்பந்தப்படுத்தியுள்ளதிற்கு  24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு கேட்காவிடில் மானநஷ்ட(?) வழக்கு தொடரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

இது வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாகவே உள்ளது. தானாகவே கருணாநிதி வலியப்போய் வம்பை விலை கொடுத்து வாங்குவதாக உள்ளது.சுப்பிரமணியசாமி கோர்ட்டில் கூறியதை எதிர்த்து மான நஷ்ட வழக்கு தொடர முடியுமா? என்பது தெரியவில்லை.

இதற்கு சுப்பிரமணியசாமி, "நீதிமன்றத்தில் கூறியதை ஆட்சேபித்து நோட்டீஸ் அனுப்புவது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்" என கூறியுள்ளார்.


சுப்பிரமணிய சாமியா? கொக்கா?


 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கின் விசாரணையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களும் இடம்பெறுகின்றனவா என்பது குறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு நோட்டீஸ் நோட்டீஸ் அனுப்ப டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டுக்கு முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவே முக்கியக் காரணம் என்பதால், அவரை சட்டப்படி நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரதீப் சத்தா, இந்த வழக்கில் சுப்ரமணியன் சுவாமி எழுப்பிய கேள்வியின்படி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தியுள்ளீர்களா என்று கேட்டு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும், ராசா கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தொடரலாமா என்றும் சிபிஐ-யிடம் நீதிமன்றம் கேட்டுள்ளது.

பின்னர் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதனிடையே, இந்த வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட சிலரது பெயர்களையும் குற்றம்சாட்டப்படுபவர்களின் பட்டியலில் சேர்க்கக் கோரி, மனு ஒன்றை தாம் தாக்கல் செய்யவிருப்பதாக நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.


Saturday, February 5, 2011

கருணாநிதியின் தர்பார்! உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி K.G. பாலகிருஷ்ணன் பதவியிலிருந்த பொழுது சிலவழக்குகளில் சிலருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாகவும், அதன் மூலம் அவர் குடும்பத்தினர் அதாவது அவரது மருமகன் இருவர், அவரது சகோதரர் ஆகியோர் வருமானத்திற்கு தொடர்பில்லாமல் ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளதாக ஆதாரத்துடன் கேரள சானல்கள் குற்றஞ்சாட்டின. அரசு வழக்கறிஞராக ப்ணிபுரிந்து வந்த அவர் தம்பி பதவி விலகினார். அதை போலவே அவர் மருமகன் பென்னியும் இளைஞர் காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டார். இவர்கள் அனைவ்ரின் மீதும் கேரள அரசு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடை பெறுகிறது.இந் நிலையில்  தமிழக முதலமைச்சர் கருணாநிதி, K.G.பாலகிருஷ்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பொழுது, உச்ச நீதிமன்றத்தில் கிளார்க்காக பணிபுரிந்த கண்ணபிரான் என்பவர் சென்னை அண்ணாநகரை அடுத்துள்ள நுலாம்பூர்  என்ற இடத்திலுள்ள வீட்டுவசதி வாரிய மனைக்கு 7-2-2008-ல் விண்ணப்பித்தார். அடுத்த நாளே அவருக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3-4-2008-ல் மீண்டும் அவருக்கு அண்ணா நகரில் வீட்டு மனை ஒதுக்கப்பட்டது.

இவற்றின் மதிப்பு சுமார் 50 லட்சம் ஆகும். இந்த ஒதுக்கீடுகள் முதலமைச்சரின் விருப்ப ஒதுக்கீட்டின் படி கருணாநிதியால் மாநில அரசு ஊழியருக்கான பிரிவின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கண்ணபிரான்  தமிழக அரசு ஊழியர் அல்ல. மேலும் வீட்டு வசதி வாரிய விதி முறைகளின் படி இரண்டு ஒதுக்கீடுகள் பெற முடியாது.  மேலும் மாதம் பத்தாயிரம் மட்டுமே ஊதியமாக பெறுபவர், இரண்டு ஒதுக்கீடுகளுக்குமான மொத்த தொகையையும் ஒரே தவணையில் செலுத்தியுள்ளார். 

கண்ணபிரான் K.G. பாலகிருஷ்ணனின் பினாமியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி அவர்களிடம் ஒரு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்க கோரி முன்னாள் அமைச்சர் ரஜா தொலைபேசியில் நீதிபதியை தொடர்பு கொண்ட விவகாரத்தில், இது தொடர்பாக நீதிபதி ரகுபதியும், தலைமை நீதிபதியும் K.G.பாலகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதினர். அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்றும் அதற்கு பின் கடிதம் வந்தது ஆனால் அதில் ராஜா பெயர் இல்லை என முன்னுக்கு பின் முரணாக பாலகிருஷ்ணன் பேசி காமெடி பீஸாக ஆனார். ராஜாவை தப்பிக்க வைத்ததிற்கு / வைப்பதற்கு  கருணாநிதி வழங்கிய  பரிசா இது? என்ற கேள்விக்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும்!

கருணாநிதிக்கு இருந்த சுக்கிர திசை மாறி, இப்பொழுது சனீஸ்வர பகவானின் உக்கிர பார்வை பட ஆரம்பித்து விட்டது.
Friday, February 4, 2011

ராஜாவுக்கு அடுத்து கலைஞர் குடும்பம்?ராஜா கைதுக்கு பின் சட்டத்தின் பார்வை கலைஞர் குடும்பத்தின் மீது திரும்பியுள்ளது. அமலாக்கப்பிரிவு  தன் விசாரணையை துவக்கியுள்ளது. 2008-ல்  மார்க்கெட் நிலவரத்துக்கு மிக குறைவான் விலையில் ஸ்பெக்ட்ரத்தை பெற்ற நிறுவனம் DB ரியாலிட்டி குரூப் ஆகும். கருணாநிதியின் குடும்பத்தாருக்கு சொந்தமான கலைஞர் டி.வி-க்கு இந்த நிறுவனம் 214கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் எட்டிசாலட் என்ற நிறுவனத்துக்கு 45 சதவிகித பங்குகளை 2009-ல் விற்பனை செய்தது. எட்டிசாலட்டின்  பழைய பெயர் சுவான் டெலிகாம் ஆகும்.

ராஜாவால் பலனடைந்த நிறுவனம் கருணாநிக்கு லஞ்சமாக மேற்படி 214 கோடி ரூப்பாயை வங்கியுள்ளது என அமலாக்கப்பிரிவு கருதுகிறது. மேலும் நிரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் மூலம், கனிமொழி மற்றும் அவர் தாயார்  ராசாத்தி அம்மாள், ராஜாவுக்கு தொலைபேசிதுறையை ஒதுக்க வேண்டும் எனறு காட்டிய ஆர்வமும்  வலு சேர்ப்பதாக உள்ளது.

ஒரு சில நாட்களில் கனிமொழி, ராசாத்தி அம்மாள் ஆகிய இருவரும் விசாரணைக்கு உள்ளாவார்கள். சூழ்நிலையை உணர்ந்த கருணாநிதி, ராஜாவை முன்னிலைப்படுத்தி, அவர் நேர்மையானவர். இது பழிவாங்கும் நடவடிக்கை என தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். இதன் முன் நடவடிக்கையாகவே பொதுக்குழுவில் ராஜா குற்றமற்றவர் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.Wednesday, February 2, 2011

ராஜாவின் சகோதரர் கைது!

முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சரின் சகோதரர் A.K. பெருமாளை நேற்று சி.பி.ஐ, தொலைதொடர்பு துறையில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற சில கம்பெனிகளின் நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடர்பாக மீண்டும் விசாரித்தது. இன்று அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  

அடுத்ததாக இன்னொரு திமுக பிரமுகரும் கைது செய்யப்படுவார் என்ற தகவல்  கருணாநிதியை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. முக்கிய பிரமுகர்களுடன் இன்று ஆலோசனை செய்ய உள்ளார்.


ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் பிமுகர்களுக்குரிய பங்கை திமுக வெளியிட்டால் என்ன செய்ய ? என காங்கிரசும் குழப்பத்தில் உள்ளதாம்!
ராஜா கைது!

திமுக தலைவரும், முன்னாள் மத்திய தொலை தொடர்பு அமைச்சரும், கருணாநிதியின் அன்பு தம்பியுமான ஊழல் மன்னன் ராஜாவை இன்று மதியம் சி.பி.ஐ கைது செய்துள்ளது. அவருடன் தனி உதவியாளர்  ஆர். கே. சண்டோலியாவும், டெலிகாம் செயலாளர் சித்தார்த் பெஹுரியாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஏன் இந்த கொடுமை?

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கு, அல்லது பே கமிஷன் பரிந்துரையை அமுல்படுத்து என ஆண்டுக்கு ஒரு முறை அரசு ஊழியர் போராட்டம்!

தனியார் மயமாக்காகாதே, ஊதிய உயர்வு கொடு என பொதுத்துறை ஊழியர்கள் போராட்டம்!

டீஸ்ல் விலையை குறை என லாரி உரிமையாளர்கள் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சத்துணவு ஊழியர் போராட்டம்!

டாஸ் மார்க் ஊழியர்கள் போராட்டம்!

ஆனால்

படித்துவிட்டு வேலையில்லாமல் எதிர்காலம் என்ன? என்ற கேள்வி குறிக்கு பதில் தெரியாமல் பெட்டிக்கடையில் சோகமாக பீடி குடித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள்

நாளைக்கு என்ன நிலை? என்ற நிலையில் உத்தரவாதமற்ற நிலையில் கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்கள்.

படிக்க வேண்டிய வயதில், வேலை பார்க்கும் குழந்தை தொழிலாளர்கள்.

சுய தொழிலாக, குப்பை பொறுக்கும் சிறுவர்கள்.

எதுவுமே இல்லாமல் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துபவர்கள்.

ஆக எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் ஆதரவாக களத்தில் இறங்கும்  தொழில் சங்கங்கள், அரசியல் கட்சிகள் ஏன் இவர்களுக்கு குரல் கொடுக்க தயாராக இல்லை?

காரணம் சுயநலமா?

இவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்பதாலா?

எனக்கு புரியவில்லை.

உங்களுக்கு புரிந்தால் எனக்கு சொல்லுங்களேன்!