Friday, February 4, 2011

ராஜாவுக்கு அடுத்து கலைஞர் குடும்பம்?



ராஜா கைதுக்கு பின் சட்டத்தின் பார்வை கலைஞர் குடும்பத்தின் மீது திரும்பியுள்ளது. அமலாக்கப்பிரிவு  தன் விசாரணையை துவக்கியுள்ளது. 2008-ல்  மார்க்கெட் நிலவரத்துக்கு மிக குறைவான் விலையில் ஸ்பெக்ட்ரத்தை பெற்ற நிறுவனம் DB ரியாலிட்டி குரூப் ஆகும். கருணாநிதியின் குடும்பத்தாருக்கு சொந்தமான கலைஞர் டி.வி-க்கு இந்த நிறுவனம் 214கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் எட்டிசாலட் என்ற நிறுவனத்துக்கு 45 சதவிகித பங்குகளை 2009-ல் விற்பனை செய்தது. எட்டிசாலட்டின்  பழைய பெயர் சுவான் டெலிகாம் ஆகும்.

ராஜாவால் பலனடைந்த நிறுவனம் கருணாநிக்கு லஞ்சமாக மேற்படி 214 கோடி ரூப்பாயை வங்கியுள்ளது என அமலாக்கப்பிரிவு கருதுகிறது. மேலும் நிரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் மூலம், கனிமொழி மற்றும் அவர் தாயார்  ராசாத்தி அம்மாள், ராஜாவுக்கு தொலைபேசிதுறையை ஒதுக்க வேண்டும் எனறு காட்டிய ஆர்வமும்  வலு சேர்ப்பதாக உள்ளது.

ஒரு சில நாட்களில் கனிமொழி, ராசாத்தி அம்மாள் ஆகிய இருவரும் விசாரணைக்கு உள்ளாவார்கள். சூழ்நிலையை உணர்ந்த கருணாநிதி, ராஜாவை முன்னிலைப்படுத்தி, அவர் நேர்மையானவர். இது பழிவாங்கும் நடவடிக்கை என தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். இதன் முன் நடவடிக்கையாகவே பொதுக்குழுவில் ராஜா குற்றமற்றவர் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



7 comments:

  1. கலைஞர் மொழியை கேட்டீர்களா அய்யா,

    "கைது செய்யப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்"

    ReplyDelete
  2. கலைஞர் இன்று திரிசங்கு நிலையில் பாவம்  ஊழிப்பலி புரியாத திருடாடினன் போல அரசியல் நடிப்பில் சிகரம்கலைஞர் இன்று திரிசங்கு நிலையில் பாவம்  ஊழிப்பலி புரியாத திருடாடினன் போல அரசியல் நடிப்பில் சிகரம்

    ReplyDelete
  3. எண்ணத்துப்பூச்சி said...

    கலைஞர் மொழியை கேட்டீர்களா அய்யா,

    "கைது செய்யப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்///

    கருணாநிதியின் பேச்செ இப்பொழுது காமெடியாகி விட்டது

    ReplyDelete
  4. Nesan said...

    கலைஞர் இன்று திரிசங்கு நிலையில் பாவம் ஊழிப்பலி புரியாத திருடாடினன் போல அரசியல் நடிப்பில் சிகரம்கலைஞர் இன்று திரிசங்கு நிலையில் பாவம் ஊழிப்பலி புரியாத திருடாடினன் போல அரசியல் நடிப்பில் சிகரம் ///

    எத்தனை நாளைக்கு தான் ஏமாற்ற முடியும்?

    ReplyDelete
  5. இது இன்னும் வரும் போல உள்ளதே?! DB ரியாலிட்டி குரூப் தேசிய வாத காங்கிரஸ் தலைவர், மதிய விவசாய அமைச்சர் சரத் பவாரின் கம்பெனி என்று அல்லவா தெரிகிறது!?
    அப்துல் கரீம் தெல்கி,அதுதான் பதிவு பத்திர முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதாகி விசாரணையிலும் சரத் பவாரின் பின்னணியில் தான் அந்த பெரும் ஊழல் நடை பெற்றது என்றும் சாட்சியம் அளித்தவர்.நமக்கு, இவைகள் எல்லாம் வெகு எளிதில் மறந்து விடும் என்று இவர்கள் அனிவருக்கும் தெரிந்துதான் உள்ளது.

    ReplyDelete
  6. கொஞ்சம் கொஞ்சமாக வளையம் பெரிதாகிக்கொண்டே போகிறது. எல்லோரும் மாட்டினால் நன்றாக இருக்கும். பார்க்கலாம். நம்பிக்கையே வாழ்க்கை!

    ReplyDelete
  7. Wishes for ur great and open wirtings. Nadakkum indha vishayangalai marakka vaikka, koodiya seekiram thaathaa unnaa viradham thodanguvaar.

    ReplyDelete