Saturday, February 5, 2011

கருணாநிதியின் தர்பார்! உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி K.G. பாலகிருஷ்ணன் பதவியிலிருந்த பொழுது சிலவழக்குகளில் சிலருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாகவும், அதன் மூலம் அவர் குடும்பத்தினர் அதாவது அவரது மருமகன் இருவர், அவரது சகோதரர் ஆகியோர் வருமானத்திற்கு தொடர்பில்லாமல் ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளதாக ஆதாரத்துடன் கேரள சானல்கள் குற்றஞ்சாட்டின. அரசு வழக்கறிஞராக ப்ணிபுரிந்து வந்த அவர் தம்பி பதவி விலகினார். அதை போலவே அவர் மருமகன் பென்னியும் இளைஞர் காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டார். இவர்கள் அனைவ்ரின் மீதும் கேரள அரசு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடை பெறுகிறது.இந் நிலையில்  தமிழக முதலமைச்சர் கருணாநிதி, K.G.பாலகிருஷ்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பொழுது, உச்ச நீதிமன்றத்தில் கிளார்க்காக பணிபுரிந்த கண்ணபிரான் என்பவர் சென்னை அண்ணாநகரை அடுத்துள்ள நுலாம்பூர்  என்ற இடத்திலுள்ள வீட்டுவசதி வாரிய மனைக்கு 7-2-2008-ல் விண்ணப்பித்தார். அடுத்த நாளே அவருக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3-4-2008-ல் மீண்டும் அவருக்கு அண்ணா நகரில் வீட்டு மனை ஒதுக்கப்பட்டது.

இவற்றின் மதிப்பு சுமார் 50 லட்சம் ஆகும். இந்த ஒதுக்கீடுகள் முதலமைச்சரின் விருப்ப ஒதுக்கீட்டின் படி கருணாநிதியால் மாநில அரசு ஊழியருக்கான பிரிவின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கண்ணபிரான்  தமிழக அரசு ஊழியர் அல்ல. மேலும் வீட்டு வசதி வாரிய விதி முறைகளின் படி இரண்டு ஒதுக்கீடுகள் பெற முடியாது.  மேலும் மாதம் பத்தாயிரம் மட்டுமே ஊதியமாக பெறுபவர், இரண்டு ஒதுக்கீடுகளுக்குமான மொத்த தொகையையும் ஒரே தவணையில் செலுத்தியுள்ளார். 

கண்ணபிரான் K.G. பாலகிருஷ்ணனின் பினாமியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி அவர்களிடம் ஒரு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்க கோரி முன்னாள் அமைச்சர் ரஜா தொலைபேசியில் நீதிபதியை தொடர்பு கொண்ட விவகாரத்தில், இது தொடர்பாக நீதிபதி ரகுபதியும், தலைமை நீதிபதியும் K.G.பாலகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதினர். அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்றும் அதற்கு பின் கடிதம் வந்தது ஆனால் அதில் ராஜா பெயர் இல்லை என முன்னுக்கு பின் முரணாக பாலகிருஷ்ணன் பேசி காமெடி பீஸாக ஆனார். ராஜாவை தப்பிக்க வைத்ததிற்கு / வைப்பதற்கு  கருணாநிதி வழங்கிய  பரிசா இது? என்ற கேள்விக்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும்!

கருணாநிதிக்கு இருந்த சுக்கிர திசை மாறி, இப்பொழுது சனீஸ்வர பகவானின் உக்கிர பார்வை பட ஆரம்பித்து விட்டது.
8 comments:

 1. இந்த அரசியல் பிழைப்போர்த்தன் இப்படி நாறி நாற்றமேடுதவர்கள் என்றால் நீதிபதி பதவியில் இருக்கும் சமூக விரோதிகளின் சுய ரூபம் இந்த நாட்டை எங்கு கொண்டு செல்கிறது? எல்லோருமே கூட்டு கலவானிகல்தான்.

  ReplyDelete
 2. கக்கு - மாணிக்கம் said...

  இந்த அரசியல் பிழைப்போர்த்தன் இப்படி நாறி நாற்றமேடுதவர்கள் என்றால் நீதிபதி பதவியில் இருக்கும் சமூக விரோதிகளின் சுய ரூபம் இந்த நாட்டை எங்கு கொண்டு செல்கிறது? எல்லோருமே கூட்டு கலவானிகல்தான் ///

  இப்பொழுது ஊழல் எல்லா துறைகளிலும் தலைவிரித்தாடுகிறது. ஆனால் ஒரு ஆறுதலான் விஷயம் என்னவென்றால் இப்பொழுது எல்லா துறையிலுமுள்ள நேர்மையான அதிகாரிகளே ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். நல்ல முன்னேற்றம் தான். ந்நமும் அவர்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

  ReplyDelete
 3. //கருணாநிதிக்கு இருந்த சுக்கிர திசை மாறி, இப்பொழுது சனீஸ்வர பகவானின் உக்கிர பார்வை பட ஆரம்பித்து விட்டது//
  அவர்கள் திராவிட பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள்.அதனால் கிரக நிலை மாற்றமெல்லாம் அவர்களை ஒன்றும் செய்யாது.அப்படி எதாவது பாதிப்பு நடந்தால் அவர்களுக்கு[சனீஷ்வரன் - குழு]ஒரு கடிதம் எழுதி சரி கட்டி விடுவார் கலைஞர்.

  ReplyDelete
 4. //இப்பொழுது எல்லா துறையிலுமுள்ள நேர்மையான அதிகாரிகளே ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். நல்ல முன்னேற்றம் தான். ந்நமும் அவர்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.//
  நிச்சயம் செய்ய வேண்டிய விஷயம்

  ReplyDelete
 5. விஞ்ஞான ஊழலுக்கு ஏதாவது நோபல் பரிசு கிடைக்க வழி உள்ளதா ? அப்படி இருந்த இன்னும் ஆறு தலைமுறைக்கு அந்த குடும்பத்தை அடிக்க ஆள் இல்லை.

  ReplyDelete
 6. //இப்பொழுது ஊழல் எல்லா துறைகளிலும் தலைவிரித்தாடுகிறது. ஆனால் ஒரு ஆறுதலான் விஷயம் என்னவென்றால் இப்பொழுது எல்லா துறையிலுமுள்ள நேர்மையான அதிகாரிகளே ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். நல்ல முன்னேற்றம் தான். ந்நமும் அவர்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். //

  இந்த Postive approach ஐ வரவேற்கிறேன்.

  ReplyDelete
 7. முந்தைய பின்னூட்டம் Positive - Typo sorry.

  ReplyDelete
 8. தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
  http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html

  ReplyDelete