Thursday, February 10, 2011

இந்த அநியாயத்தை யாரிடம் சொல்லி அழ?

உலகத்திலேயே மிகவும் மதிக்கப்பட, ஊக்குவிக்கப்பட வேண்டிய பணிகள் இரண்டு. அவை நல்ல இளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர் பணி, தன் குடும்பத்தினரை விட்டு பிரிந்து - மழை ,வெயில், பனி இவற்றையெல்லம் சட்டை செய்யாமல் எல்லையில் காவல் காக்கும் ராணுவம். இவை இரண்டுமே ஊழல் அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்பட்டு, அவமரியாதை செய்யப்படுகிறது. இதற்கு உதாரணம் தான் இது.                                                               

மேஜர் தரம் சந்த் என்ற ராணுவ வீரர் 1967-ல் தனது  42-வது  வயதில் பணிக்காலத்தில் மரணமடைந்தார். தற்பொழுது 90 வயதான இவர் மனைவி புஷ்பாவந்திக்கு  அரசு வழங்கும் ஓய்வூதிய தொகை எவ்வளவு தெரியுமா? மாதம் 70 ரூபாய்.

கருமாந்திரம். என்ன கணக்கில் 70 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்பது நமக்கு மட்டுமல்ல அந்த அம்மாவுக்கும் புரியவில்ல. ஓய்வு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என மனு மேல் மனுவாக அனுப்பி சில்வர் ஜூப்ளியை வெற்றிகரமாக தாண்டி கோல்டன் ஜூப்ளியை நெருங்கும் நிலையிலும் அவர் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே எழுபது ரூபாய் தான் வழங்கப்பட்டது.

ராணுவம், மத்தியஆயுதப்படை, விமானப்படை, கப்பல் படை ஆகியவற்றில் பணியாற்றிய வீரகளுக்கு  ஓய்வூதியம் நிர்ணயிப்பது, வழங்குவது ஆகியவற்றிற்கு ராணுவ அமைச்சகம் எவ்வித அமைப்பையும் ஏற்படுத்தவில்லை. அந்தந்த பிரிவை சார்ந்த உயர் அதிகாரிகளே  ஓய்வூதியம்  நிர்ணயம்  செய்து வருகிறார்கள். ஆனால் என்ன கணக்கு என்பது புரியாது. ஒரே அந்தஸ்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் எலோருக்கும் ஒரே சமமான் ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. இந்த குளறுபடி ராணுவத்தில் மட்டுமல்லாமல் விமானப்படை, கப்பல் படை ஆகியவற்றிலும் உண்டு. இன்று வரை  இந்நிலை தொடருகிறது.

பொறுத்தது போதும். இனி வேலைக்கு ஆகாது என முடிவு செய்த அந்த தாய் நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டினாள். நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு மற்றும்  பி.எஸ். சஹான் அடங்கிய பெஞ்சு மனுவை பார்த்து அதிர்ச்சி அடைந்து  மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அவசர அவசரமாக அந்த போர் விதவை தாயின் ஓய்வு ஊதியத்தை 70 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தியது. அதன் பின் நீதிமன்றத்தில் ஆஜராகி இது விபரத்தை தெரிவித்தது.

ஆயிரம் லட்சம் கோடி, 2 ஆயிரம் லடசம் கோடி என வரிப்பணத்தை கொள்ளையடிக்கும்  அரசியல்வாதிகளுக்கு, நாட்டை பாதுகாக்கும் ராணுவத்தினருக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்குவதில் மட்டும் ஏன் இந்த பிச்சைக்கார புத்தி? அவங்க அப்பன் வீட்டு பணமா? நாம் என்ன கொடுக்க கூடாது என்றா சொல்கிறோம்? இந்த அநியாயத்தை யாரிடம் சொல்லி அழுது தொலைக்க?


8 comments:

 1. இந்த கன்றாவிக்குத்தான் டெல்லி உயர்நீதி மன்றம் மத்கிய அரசை செவிட்டில் அறைந்தாற் போல சொல்லியதே ?
  //ராணுவ ஊழியர்கள் ஒன்றும் பிச்சைகாரர்கள் இல்லை.அவர்ப்களை அவ்வாறு நடத்தாதீர்கள் . டெல்லியில் ஒரு பிச்சைக்காரனே ஆயிரம் ரூபாய் வரை பிச்சை எடுக்கிறான் //
  சென்ற வருடம் ஏப்ரல் மாதமே இந்த கூத்து நடந்ததே! இந்த லிங்க் சென்று பாருங்கள்.
  http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/04/blog-post.html

  ReplyDelete
 2. இன்னும் கோர்ட்களில் தேங்கி கிடக்கும் போர் விதவை தாயின் மனுக்கள் எந்தனையோ?
  இதை யாரிடம் சொல்லி அழ?

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில்அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள் நன்றி

  ReplyDelete
 4. அய்யா,
  ராணுவ அதிகாரிகள் , தன் கீழ் உள்ள சிப்பாய்களை மிகவும் எவ்வளவு கேவலமாக வைக்க முடியுமோ , அந்த இடத்தில் வைத்து உள்ளனர். சில பைத்தியக்கார அதிகாரிகள் தங்களின் திறமையின்மையின் காரணமாக , முட்டாள் முடிவுகள் எடுப்பர் அதில் அதிகம் பாதிக்க படுவது இந்த சிப்பாய்களே, வேண்டியபோது விடுமுறை கிடைக்காது, அதிகாரிகளின் சொந்த வேலைக்காக அலைக்கழிக்கப்படுவர். அவர்கள் எங்கும் சென்று முறையிட முடியாது. சில வழிகள் இருக்கும் ஆனால் அது நெறைய போரட்டம், நீதி கிடைக்க வாய்ப்பு குறைவு. -- அதிகாரிக்கு எங்கு சென்றாலும் மதிப்புடன் எல்லா வசதியும் கிடைக்கும், ஆனால் இதெல்லாம் சிப்பாயுக்கோ அந்த நிலையில் உள்ளவர்களுக்கோ கிடைக்காது. அதிகம் அவதி , கஷ்ட்டம் நிறைந்த ராணுவ சிப்பாய்க்கு அதிகமான பென்ஷன் தர வேண்டும்.

  ReplyDelete
 5. கக்கு - மாணிக்கம் said...

  இந்த கன்றாவிக்குத்தான் டெல்லி உயர்நீதி மன்றம் மத்கிய அரசை செவிட்டில் அறைந்தாற் போல சொல்லியதே ?///

  சொல்லிக்கொண்டேதான் இருக்கு. ஆனால் இவனுக திருந்தலையே!

  ReplyDelete
 6. சதீஷ் குமார் said...

  இன்னும் கோர்ட்களில் தேங்கி கிடக்கும் போர் விதவை தாயின் மனுக்கள் எந்தனையோ?
  இதை யாரிடம் சொல்லி அழ ///

  மக்களிடம் சட்டம் பற்றிய விழிப்புணர்வு வந்து விட்டது. இல்லைனா இந்த அம்மா கோர்ட்டுக்கு போவாங்களா? மேலும் மக்கள் பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிதுள்ளது.

  ReplyDelete
 7. மாணவன் said...

  வணக்கம் ஐயா, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில்அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள் நன்றி ///

  மிக்க நன்றி

  ReplyDelete
 8. eeasy baby said...

  அய்யா,
  ராணுவ அதிகாரிகள் , தன் கீழ் உள்ள சிப்பாய்களை மிகவும் எவ்வளவு கேவலமாக வைக்க முடியுமோ , அந்த இடத்தில் வைத்து உள்ளனர்.///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete