Saturday, February 26, 2011

நான் மாங்காய் மடையன் தானா?.............சட்டம் நம்கையில்

எனக்கு இப்பொழுது பெரிய சந்தேகமே வந்திருக்கு. என்னால் அதை தீர்த்துக்கொள்ள முடியவில்லை. அதை தீர்த்துக்கொள்ள உங்கள் உதவி தேவை. அதன் அடிப்படையிலேயே இந்த பதிவு!

சமீப காலமாக பத்திரிகைகளில் வரும் செய்திகள், டி.வி. செய்திகள், அமைச்சர்களின் விளக்கங்கள், அரசின் சட்டங்கள், திட்டங்கள் இவற்றை பார்க்கும் பொழுது எனக்கு ஒன்றுமே புரிய மாட்டங்குது. அதனால் பதிவே போடவில்லை. 

இன்று எதேச்சையாக கூகுலில் தமிழ் நாடு வீட்டு வசதிவாரியம் பற்றி சர்ச் செய்தேன். அப்பொழுது என் கண்ணில் பட்ட ஒரு விளம்பரம். கீழே கொடுத்துள்ளேன். அதை படியுங்கள். அதன் பின் என் சந்தேகத்தை கேட்கிறேன். நீங்கள் தெளிவு படுத்துங்கள்.


படித்துவிட்டீர்களா? சரி இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். எனக்கு வருட வருமானம் ரூ.96,000 என வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு ஹெச்.ஐ.ஜி பிளாட்டு வாங்க விருப்பம். "MUTHAMPALAYAM PHASE VIII AT ERODE" ஸ்கீமில் விண்ணப்பிக்கிறேன். அதற்கான தகுதி வருட வருமானம் ரூ.94001-க்கு மேல் இருக்க வேண்டும்.என் வருட வருமானம் ரூ.96,000/- ஆகும். அதனால் விண்ணப்பிக்க எனக்கு தகுதி இருக்கு. விண்ணப்பிக்கிறேன். எனக்கு அலாட்மெண்டும் ஆகிறது என வைத்துக்கொள்வோம். நானும் வாங்கிவிட்டேன். 

இப்பொழுதுதான் பிரச்சனையே ஆரம்பம். மாதா மாதம் தவணை தொகையாக ரூ.13,410 செலுத்த வேண்டும். வருட வருமான்ம் ரூ.96,000 அதாவது மாத வருமானம் ரூ.8,000 உடைய நான் எப்படி 13,410-ஐ செலுத்த முடியும்? 

சட்டப்படி ஒருவருடைய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையை தான் கடன் பாக்கிக்காக ஈடாக்க முடியும். இதன் படி மாதம் ரூ.3000க்கு குறைவான தொகை மட்டுமே என்னிடமிருந்து சட்டப்படி ஈடாக்க முடியும். அப்படியிருக்கும் பொழுது எப்படி ரூ.94,001-க்கு மேல் வருட வருமானம் உடையவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என எந்த கணக்கில் நிர்ணயம் செய்தார்கள்?
ஒருவேளை, பத்துபைசா வருமானம் இல்லாமல் அரசியலுக்கு வந்து கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் (உ.தா. திகார் சிறையில் முகாமிட்டிருக்கும் ராஜா), சம்பளத்தை போல பலமடங்கு லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் (உ.தா. 10 கிலோ தங்கம்,30 லட்சம் பாக்கெட் மணி வைத்திருந்து கைது செய்யப்பட்ட நால்கோ நிறுவன சி.எம்.டி  ஏ.கே. சிரிவஸ்தவா) போன்ற அரசு அதிகாரிகள், அது ஏன் சாதாரண பியூன் போன்றவர்களை மனதில் வைத்து வீட்டு வசதி வாரியம் இப்படி போட்டிருக்குதோ? இவர்களால் முடியும். என்னை போன்ற சட்ட பூர்வ சம்பளத்திற்கு மேல் பத்து பைசா வருமானம் இல்லாதவர்கள் என்ன செய்ய?

நான் இந்த விளம்பரத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாத மாங்காய் மடையனா? அல்லது வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மாங்காய் மடையர்களா? சொல்லுங்க சார். இல்லைனா எனக்கு மண்டையே வெடித்து விடும்!


3 comments:

  1. விடையையும் நீங்களே சொல்லி விட்டீர்களே! இது போன்ற திட்டங்கள் முதலில் நம் போன்றவர்களுக்கு அல்ல.

    // பத்துபைசா வருமானம் இல்லாமல் அரசியலுக்கு வந்து கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் (உ.தா. திகார் சிறையில் முகாமிட்டிருக்கும் ராஜா), சம்பளத்தை போல பலமடங்கு லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் (உ.தா. 10 கிலோ தங்கம்,30 லட்சம் பாக்கெட் மணி வைத்திருந்து கைது செய்யப்பட்ட நால்கோ நிறுவன சி.எம்.டி ஏ.கே. சிரிவஸ்தவா) போன்ற அரசு அதிகாரிகள், அது ஏன் சாதாரண பியூன் போன்றவர்களை மனதில் வைத்து வீட்டு வசதி வாரியம் இப்படி போட்டிருக்குதோ? //

    உண்மையில் இவர்களுக்குத்தான் இது போன்ற திட்டங்கள்.

    ReplyDelete
  2. இந்த மாதிரி அபத்தங்களை காசு கொடுத்து விளம்பரம் செய்கிறார்கள்.

    //அதாவது மாத வருமானம் ரூ.12,000//
    அதாவது மாத வருமானம் ரூ.8,000 என்று இருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. நம்மை தட்டிக் கேட்க எவனும் இல்லை என்கிற இறுமாப்பு நம்முடைய அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும்... இவர்களின் ஈனத்தில் விளைந்த கொடுமைகளுக்கு இதுவும் ஒரு உதாரணம். நாம் விழிக்காதவரை இவர்களைப் போன்றவர்கள்தான் நம்மை ஆள்வார்கள். இனியாவது சுயநலம் தாண்டி சிந்திக்கப் பழகுவோம்.

    ReplyDelete