Thursday, February 10, 2011

ஆப்பு வச்ச உச்ச நீதிமன்றம்.......!

கேரள முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளை மீதான ஊழல் வழக்கில், அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கேரள மாநில முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பாலகிருஷ்ணன் பிள்ளை, இடமலையாறு அணைக்கட்டு நீர் மின்சாரத்திட்ட ஊழல் விவகாரத்தில் சிக்கினார்.

பாலகிருஷ்ணன் பிள்ளை தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து மின் திட்டத்தின் ஒரு சில ஒப்பந்தங்களை தனக்கு வேண்டியவருக்கு வழங்கினார். இதனால் கேரள மின் வாரியத்துக்கு ரூ.2கோடி இழப்பு ஏற்பட்டது என்பதே குற்றச்சாட்டு.

கடந்த 1982ம் ஆண்டு நடந்த இந்த ஊழல் தொடர்பாக 1991ம் ஆண்டில் தான் வழக்கு தொடரப்பட்டது.கேரள உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சரை நிரபராதி என்று அறிவித்த பிறகு, மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாலகிருஷ்ணனுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் பாலகிருஷ்ணன் பிள்ளைக்கு எதிராக சரியான சாட்சியங்கள் இருந்தும் இந்த வழக்கு இத்தனை நாட்கள் இழுத்தடிக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் கண்டிக்கவும் செய்தது.மேலும், அரசியல்வாதிகள் மீதான எந்த ஊழல் வழக்கும் இது போன்று நீண்ட நெடுங்காலம் இழுத்துச் செல்லப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது. 




1 comment:

  1. எங்க சார்,
    இதெல்லாம் சும்மா பாவ்லா காட்ர வேலை.
    இன்னும் 3 மாசம் கழிச்சி பாருங்க,அவருமேல சுமத்தபட்ட குற்றத்துக்கு ஆதாரமில்லன்னு இதே கோர்ட்டே சொன்னாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை

    ReplyDelete