Saturday, March 26, 2011

பிளாஷ் நியூஸ்!

வரும் 31ம் தேதிக்குள் சி.பி.ஐ, 2G வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. ராஜா உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளனர். இந்நிலையில் அடுத்த கட்டமாக மூன்று நபர்களை கைது செய்யும்  திட்டத்தை சி.பி.ஐ மிகவும் ரகசியமாக தீட்டி வருகிறது. இவர்களுக்காக திகார் சிறை தயாராகி வருகிறது. அனேகமாக் இந்த கைது 28 -30 தேதிக்குள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Wednesday, March 23, 2011

ஐயையோ! தலை சுத்துதே!

வரும் ஏப்ரல்13 தேர்தல். யாருக்கு ஓட்டு போடனும்?, ஏன் போடனும்?, ஆட்சி மாற்றத்தால் ஊழல் இல்லாத நிர்வாகம் கிடைக்குமா? என்ற பல கேள்விகளுக்கு பதிலே கிடைக்கவில்லை.

இப்பொழுது நமக்கு இருக்கும் தேர்வுகள் இவைதான். அதாவது காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி. அல்லது அ.தி.மு.க கூட்டணி, அல்லது பாரதிய ஜனதா கட்சி, அல்லது சுயேட்சை வேட்பாளர், அல்லது 49ஓ. அல்லது "ராவணன் ஆண்டால் என்ன? சூர்ப்பணகை ஆண்டால் என்ன? ஊழல் ஒழியப்போவது இல்லை" என முடிவு செய்து ஓட்டு போடாமல் இருப்பது.

1. காங்கிரஸ் , தி.மு.க இந்த ரெண்டு கட்சியுமே ஊழலில் மன்னர்கள்.  இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டையே கூறு போட்டு வித்து விடுவார்கள். அதனால் இந்த கூட்டணி வேலைக்கு ஆகாது.

2. அதிமுக கூட்டணி. ஜெயலலிதா. இந்த அம்மாவுக்கு எலிஸபெத் மஹராணின்னு நினைப்பு. திமிருக்கு பஞ்சமே கிடையாது. சசிகலா வகையறாக்களின் ஆட்டம் சகிக்க முடியாது.  ஊழலும் செய்வார்கள். ஆனால் கருணாநிதியளவிற்கு ஊழல் செய்ய தெரியாது. இதுவும் வேலைக்காகாது.

3. பாரதிய ஜனதா கட்சி. பாவம் இவர்களுக்கு டெப்பாசிட் கிடைப்பதே கஷ்டம். இந்த கொள்ளையில் இவர்கள் ஜெயித்து ஆட்சி அமைப்பது என்பது நடக்காத காரியம். இதுவும் வேலைக்கு ஆகாது.

4. சுயேட்ச்சை வேட்பாளர். இவர்கள் ஜெயித்தலும் பணத்தை வாங்கிக்கொண்டு ஆளும் கட்சிக்கு முந்தானைதான் விரிப்பார்கள். ஆக இதுவும் வேலைக்கு ஆகாது.

5. 49ஓ - கால் கடுக்க வெயிலில் நின்னு 49ஓ வை போட்டலும் எதாவது ஒரு ஊழல் கட்சிதான் பதவிக்கு வரப்போகுது. தமிழ்மணம் மாதிரி நெகடிவ் ஓட்டு  போட வசதி இருந்தா, திமுக கூட்டணிக்கு எதிரா போடலாம்.. ஆனா இல்லையே!  ஆக இதுவும் வேலைக்காகாது.

6. பேசாம ஓட்டு போடாம இருப்பதுதான் பெட்டர். ஆனா அதிலேயும் பிரச்சனை தான்.  எவனாவது  கள்ள வோட்டு போட்டு, அந்த கட்சி ஆட்சிக்கு வந்துட்டால் அந்த பாவம் நமக்குத்தான். ஆக இதுவும் முடியாது. ஐயையோ கண்ணை கட்டுதே!

ஆக, நமக்கு இருக்கும் ஆஃப்ஷன் (1) , ( 2) -ஐ தவிர வேறு வழியில்லை.

அதாவது காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி அல்லது  அ.தி.மு.க கூட்டணி.

கொள்ளைக்காரனா?  திமிர்பிடித்த திருடனா?
(கொள்ளைக்காரனை விட, திமிர் பிடித்த திருடன் மேல்!}

 பசியை போக்கிட  எதை சாபிடுவது? - அழுகிய பன்றிக்கறியா?  சூத்தை கத்திரிக்காயா?
(அழுகிய பன்றிக்கறியை சாப்பிட்டால் மரணம் நிச்சயம்!. சூத்தை கத்திரிக்காய் சாப்பிட்டால் வாந்தி பேதிதான் வரும். உயிர் போகாது.)

அதனால் அ.தி.மு.க-விற்கு  ஓட்டு போடுவதுதான் இன்றைய சூழ்நிலையில் சரியான முடிவாக இருக்கும்.

நீங்க என்ன சொல்றீங்க மக்களே?