Wednesday, March 23, 2011

ஐயையோ! தலை சுத்துதே!

வரும் ஏப்ரல்13 தேர்தல். யாருக்கு ஓட்டு போடனும்?, ஏன் போடனும்?, ஆட்சி மாற்றத்தால் ஊழல் இல்லாத நிர்வாகம் கிடைக்குமா? என்ற பல கேள்விகளுக்கு பதிலே கிடைக்கவில்லை.

இப்பொழுது நமக்கு இருக்கும் தேர்வுகள் இவைதான். அதாவது காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி. அல்லது அ.தி.மு.க கூட்டணி, அல்லது பாரதிய ஜனதா கட்சி, அல்லது சுயேட்சை வேட்பாளர், அல்லது 49ஓ. அல்லது "ராவணன் ஆண்டால் என்ன? சூர்ப்பணகை ஆண்டால் என்ன? ஊழல் ஒழியப்போவது இல்லை" என முடிவு செய்து ஓட்டு போடாமல் இருப்பது.

1. காங்கிரஸ் , தி.மு.க இந்த ரெண்டு கட்சியுமே ஊழலில் மன்னர்கள்.  இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டையே கூறு போட்டு வித்து விடுவார்கள். அதனால் இந்த கூட்டணி வேலைக்கு ஆகாது.

2. அதிமுக கூட்டணி. ஜெயலலிதா. இந்த அம்மாவுக்கு எலிஸபெத் மஹராணின்னு நினைப்பு. திமிருக்கு பஞ்சமே கிடையாது. சசிகலா வகையறாக்களின் ஆட்டம் சகிக்க முடியாது.  ஊழலும் செய்வார்கள். ஆனால் கருணாநிதியளவிற்கு ஊழல் செய்ய தெரியாது. இதுவும் வேலைக்காகாது.

3. பாரதிய ஜனதா கட்சி. பாவம் இவர்களுக்கு டெப்பாசிட் கிடைப்பதே கஷ்டம். இந்த கொள்ளையில் இவர்கள் ஜெயித்து ஆட்சி அமைப்பது என்பது நடக்காத காரியம். இதுவும் வேலைக்கு ஆகாது.

4. சுயேட்ச்சை வேட்பாளர். இவர்கள் ஜெயித்தலும் பணத்தை வாங்கிக்கொண்டு ஆளும் கட்சிக்கு முந்தானைதான் விரிப்பார்கள். ஆக இதுவும் வேலைக்கு ஆகாது.

5. 49ஓ - கால் கடுக்க வெயிலில் நின்னு 49ஓ வை போட்டலும் எதாவது ஒரு ஊழல் கட்சிதான் பதவிக்கு வரப்போகுது. தமிழ்மணம் மாதிரி நெகடிவ் ஓட்டு  போட வசதி இருந்தா, திமுக கூட்டணிக்கு எதிரா போடலாம்.. ஆனா இல்லையே!  ஆக இதுவும் வேலைக்காகாது.

6. பேசாம ஓட்டு போடாம இருப்பதுதான் பெட்டர். ஆனா அதிலேயும் பிரச்சனை தான்.  எவனாவது  கள்ள வோட்டு போட்டு, அந்த கட்சி ஆட்சிக்கு வந்துட்டால் அந்த பாவம் நமக்குத்தான். ஆக இதுவும் முடியாது. ஐயையோ கண்ணை கட்டுதே!

ஆக, நமக்கு இருக்கும் ஆஃப்ஷன் (1) , ( 2) -ஐ தவிர வேறு வழியில்லை.

அதாவது காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி அல்லது  அ.தி.மு.க கூட்டணி.

கொள்ளைக்காரனா?  திமிர்பிடித்த திருடனா?
(கொள்ளைக்காரனை விட, திமிர் பிடித்த திருடன் மேல்!}

 பசியை போக்கிட  எதை சாபிடுவது? - அழுகிய பன்றிக்கறியா?  சூத்தை கத்திரிக்காயா?
(அழுகிய பன்றிக்கறியை சாப்பிட்டால் மரணம் நிச்சயம்!. சூத்தை கத்திரிக்காய் சாப்பிட்டால் வாந்தி பேதிதான் வரும். உயிர் போகாது.)

அதனால் அ.தி.மு.க-விற்கு  ஓட்டு போடுவதுதான் இன்றைய சூழ்நிலையில் சரியான முடிவாக இருக்கும்.

நீங்க என்ன சொல்றீங்க மக்களே?


15 comments:

 1. விருப்பமில்லாவிட்டாலும் வேறு வழியின்றி இதைத்தான் செய்ய வேண்டும்

  ReplyDelete
 2. வேறு வழியின்றி இதைத் தான் செய்ய வேண்டும்.. குறைந்தது - ஈழத்தமிழர் பிரச்சனைக்காக காங்கிரசைப் பழிவாங்கலாம், இலவசம் என்ற பெயரில் மக்ளை ஏமாற்றும் - 175,000 கோடி ஊழல் செய்து சாதனைக்காக - திமுகவை பழிவாங்கலாம்.. ஆக.. வேறு வழியின்றி அதிமுகவுக்கு குத்த வேண்டியது தான்.. நான் ஊர் இல்லையே என் வோட்டை எவன் குத்துறானோ - பயமா இருக்கு ...

  ReplyDelete
 3. நிகழ்காலத்தில்... said...

  //விருப்பமில்லாவிட்டாலும் வேறு வழியின்றி இதைத்தான் செய்ய வேண்டும்//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 4. இக்பால் செல்வன் said..
  ./// நான் ஊர் இல்லையே என் வோட்டை எவன் குத்துறானோ - பயமா இருக்கு ... ///

  கவலையே பட வேண்டாம். யாராவது குத்திடுவான்!

  ReplyDelete
 5. Better lets create a mass 49O, at least this give us some evidence for us to fight legally to create effect on 490 like negative voting system etc

  ReplyDelete
 6. வாக்குகள் எம் வாள்கள் அவற்றை சரியாகப்பயன்படுத்தவில்லையாயின் தீர்ப்பு எம்மையே சாரும்

  ReplyDelete
 7. Thirumurugan MPK said...

  Better lets create a mass 49O, at least this give us some evidence for us to fight legally to create effect on 490 like negative voting system etc /////

  ஊழல் செய்ய முடியாத அளவிற்கு சட்ட திருத்தம் செய்தால் ஒழிய ஊழலற்ற அரசை பார்க்க முடியாது

  ReplyDelete
 8. ஐயா தங்கள் தொகுதியில் யார் போட்டி போடுகிறார்கள்.

  ReplyDelete
 9. //ஆனால் கருணாநிதியளவிற்கு ஊழல் செய்ய தெரியாது. இதுவும் வேலைக்காகாது.//

  தமாசு தமாசு . தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு கொட்டகை வரை நடந்த அம்மாவின் ஊழல் மறந்து போய்விட்டதா?? அம்மா ஒன்றும் ஊழலில் எந்த விதத்திலும் குறைந்தவர் illai.. அய்யா 60 அடித்து 40௦ செய்தால்.. அம்மா 90௦ அடித்து 10௦ தான் செய்வார்.. ஊழலோடு சேர்ந்த - பல மணி நேரம் மக்களை போக்குவரத்தில் நிறுத்திய அதிகார போதை
  , லட்சம் ஊழியரை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பிய ஆணவம்.. வளர்ப்பு மகன் திருமணம காட்டிய ஆடம்பரம்.. பொடா சிறை , அரசு ஊழியர் நாடு ராத்திரி கைது அகங்காரம் .. ராணி மேரி கல்லுரி இடிப்பு கொழுப்பு.. போர் என்றால் சாகத்தான் செய்வார்கள் , உடல் நலனுக்கு எலிக்கறி என்ற திமிர் தெனாவட்டு விளக்கங்கள் .. எல்லாம் கலந்தது தான் அம்மா..

  //சூத்தை கத்திரிக்காய் //


  ஏன் இந்த கெட்ட வார்த்தை அம்மாவை பார்த்து? :)

  ReplyDelete
 10. உங்களின் மற்ற பதிவை பார்க்கும் போது நீங்கள் வைத்திருக்கும் இந்த தலைப்பே சும்மா உவ்வலகாட்டிக்குனு தெரியுது .. அட்ம்க் கு ஒட்டு போடணும்னு உங்க ஆசை.. ஆனா நேர சொல்லாம இப்படி சுத்தி வளைச்சு .. அடேங்கப்பா..

  ReplyDelete
 11. ம தி மு க நாஞ்சில் சம்பத் சொன்னது போல், பேய் வேண்டாம் என்று பிசாசிடம் போனால் அது பிராண்டி விடும்.. பேய் பயப்படுத்தும் , ஆனால் பிசாசு பிடித்து பிராண்டி விடும்.. உஷார்

  ReplyDelete
 12. நேசமுடன் ஹாசிம் said...

  /// வாக்குகள் எம் வாள்கள் அவற்றை சரியாகப்பயன்படுத்தவில்லையாயின் தீர்ப்பு எம்மையே சாரும்///

  அதை எப்படி பயன்படுத்துவது என்பதுதான் பிரச்சனையே!

  ReplyDelete
 13. Muralidharan said...

  ஐயா தங்கள் தொகுதியில் யார் போட்டி போடுகிறார்கள் ///

  மு.க. ஸ்டாலின்

  ReplyDelete
 14. ராஜேஷ், திருச்சி said...

  ம தி மு க நாஞ்சில் சம்பத் சொன்னது போல், பேய் வேண்டாம் என்று பிசாசிடம் போனால் அது பிராண்டி விடும்.. பேய் பயப்படுத்தும் , ஆனால் பிசாசு பிடித்து பிராண்டி விடும்.. உஷார்

  நீங்க என்ன சொல்ல வறீங்க?

  ReplyDelete