Monday, April 4, 2011

தேவை ஆட்சி மாற்றமா அல்லது சட்ட திருத்தமா?....2

உண்மையிலேயே காந்தி முக்காலமும் உணர்ந்த தீர்க்கதரிசி தான். இல்லையென்றால் அரசியல் கட்சி இல்லாத மக்கள் ஆட்சியே நாட்டுக்கு சிறந்தது என சொல்லியிருக்க மாட்டார். இனி அவர் எப்படிப்பட்ட மக்கள் ஆட்சியை விரும்பினார் என்பதை பார்ப்போம்.

கிராம சுயராஜ்யம் என்பதே மகாத்மாவின் கொள்கை. இந்திய ஜனத்தொகையில் கிட்டதட்ட 70% மக்கள் வாழ்வது கிராமங்களில். அவர்கள் எல்லோரும் விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு போன்ற தொழில்களையே செய்பவர்கள் அதனால் இந்தியாவின் முன்னேற்றம் என்பது கிராமங்களின் முன்னேற்றத்தை சார்ந்தே அமையும் என்பதால், அமையும் அரசு கிராமமக்களின் அரசாக இருக்கவேண்டும் என மகாத்மா விரும்பினார்.

அரசியல் கட்சிகள் என்ற அமைப்பே இருக்கக்கூடாது.

கிராமங்கள் நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதியை சார்ந்தவர்கள்  எல்லோரும் முறையே தங்கள் உள்ளாட்சி அமைப்பிற்கான பிரதிநிதிகளை இப்பொழுது செய்வதை போலவே தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் தங்கள் அமைப்பின் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள்.  

சட்டமன்ற தேர்தலில் நேரடியாக யாரும் போட்டியிட முடியாது. அதாவது அந்த தொகுதிக்குட்பட்ட கிராம பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றின் அங்கத்தினர்கள் மட்டுமே போட்டியிட முடியும். அவ்வாறு போட்டியிடுபவர்களில் ஒருவரை தங்கள் தொகுதியின் வேட்பாளராக  மற்ற  பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கவேண்டும்.

இதனால் நேரடியாக யாரும் தங்கள் பண பலம் அல்லது அடியாள் பலம் இவற்றால் எம்.எல்,ஏ வாகவோ, மந்திரியாகவோ அல்லது முதலமைச்சராக ஆக முடியாது.

அரசியல் கட்சிகள் கிடையாது. இதனால் குடும்ப கட்சிகள், ஆட்சி மூலம் நாட்டை கொள்ளையடிக்க முடியாது. நேரடியாக திடீர் அமைச்சர்கள் உருவாக முடியாது. .எம்.எல்.ஏ ஆக தங்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் அல்லது கவுன்ஸ்சிலர்கள், தங்கள் பகுதி மக்களின் விருப்பத்தை அறிந்தே  எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலை ஏற்படும்.

இவ்விதம் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏக்கள் தங்களில் ஒருவரை முதலமைச்சராகவும் இதர அமைச்சர்களையும் தேர்ந்தெடுத்து அரசு அமைப்பார்கள். அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பெரும்பாண்மை மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கும். இதுதான் காந்தி விரும்பிய மக்களாட்சி!

இதைப்போலவே மக்களின் அடிப்படை பிரதிநிதிகளாகிய பஞ்சாயத்து உறுப்பினர்கள், கவுன்சிலர்கள்  மட்டுமே எம்.பி தேர்தலில் நிற்க முடியும். சட்டசபைக்கு எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுத்தது போலவே  எம்பி தொகுதிக்குட்பட்ட பகுதியிலிருக்கும் பஞ்சாயத்து உறுப்பினர்களும், கவுன்சிலர்களும் தங்களில் ஒருவரை  எம்பியாக தேர்ந்தெடுப்பார்கள். அதன் பின் எம்பிக்கள் அமைச்சர்களையும், பிரதமரையும் தேர்ந்தெடுப்பர். எப்படி இருக்கிறது இம்முறை? இதுதான் மக்களாட்சி! மீதியை அடுத்த பதிவில் பார்ப்போம்.




3 comments:

  1. சார்- இது போகாதா ஊருக்கு வழி சொல்லும் முறை.

    இதை விடுத்து நடைமுறையில் சிறிதேனும் சாத்தியமாகும் முறைகளை கற்று தாருங்கள் எங்களுக்கு

    உதாரணமாக, எங்கள் தெரு வார்டு உறுப்பினர் சாலைகள் போட அரசு வழங்கிய பணத்தை அவர் மனைவி பெயருக்கு மாற்றி விட்டார்.
    எங்கள் தெரு விற்கு எங்கள் பஞ்சாயத்து/மாநகராட்சி குடி தண்ணீர் தினமும் வழங்குவதில்லை. கொசு விரட்டும் மருந்து அடிப்பதில்லை.
    எங்கள் தொகுதியில் பேருந்து சரிவர இயங்குவதில்லை.

    இவற்றிற்கு சட்ட பூர்வமாக எங்கள் ஊராட்சி/மாநகர.நகர் வார்ட் உறுப்பினர்கள்/ எம் எல் எ மீது சட்டப் படி நடவடிக்கை எளிய முறையில் எடுப்பது எவ்வாறு / மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் நடவடிக்கை எடுப்பது எவ்வாறு என்று பகிருங்கள்.

    ReplyDelete
  2. ராம்ஜி_யாஹூ said.

    எங்கள் தெரு வார்டு உறுப்பினர் சாலைகள் போட அரசு வழங்கிய பணத்தை அவர் மனைவி பெயருக்கு மாற்றி விட்டார்.
    எங்கள் தெரு விற்கு எங்கள் பஞ்சாயத்து/மாநகராட்சி குடி தண்ணீர் தினமும் வழங்குவதில்லை. கொசு விரட்டும் மருந்து அடிப்பதில்லை.
    எங்கள் தொகுதியில் பேருந்து சரிவர இயங்குவதில்லை.

    இவற்றிற்கு சட்ட பூர்வமாக எங்கள் ஊராட்சி/மாநகர.நகர் வார்ட் உறுப்பினர்கள்/ எம் எல் எ மீது சட்டப் படி நடவடிக்கை எளிய முறையில் எடுப்பது எவ்வாறு / மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் நடவடிக்கை எடுப்பது எவ்வாறு என்று பகிருங்கள். ///

    நிச்சயமாக . ஒரு விளக்கமான பதிவு போடுகிறேன்.

    ReplyDelete
  3. Sir, Lets create moment from our bloggers, i am ready to do my best part in this.

    Join Anna Hazare in fast unto death to demand anti-corruption law

    http://indiaagainstcorruption.org/citycontacts.php
    http://www.facebook.com/IndiACor

    ReplyDelete