Friday, May 27, 2011

கருத்து கந்தசாமியின் ஐடியாக்கள்!

பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்ற கவலையா?  கவலையை விடுங்கள்!. நம்ம கருத்து கந்தசாமி ஐடியா தருகிறார்.

நீங்கள் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவரா? இது போன்ற வண்டியை தயார் செய்து ஓட்டுங்கள். உடம்புக்கும் நல்லது. பணமும் மிச்சம்!. சுற்று சூழலும் கெடாது.


ஷேர் ஆட்டோவுக்கு பதிலாக இந்த மாதிரி வண்டியை உபயோக படுத்தலாம்.

ஆட்டோ, டாக்சி இவற்றிற்கு பதிலாக இந்த மாதிரி குதிரை வண்டியையும் பயன் படுத்தலாம். சொந்த காருக்கு பதிலாகவும் பயன் படுத்தலாம்.


லோடு வேன், மினி லாரிக்கு பதிலாக ரெண்டு மாடு பூட்டப்பட்ட வண்டியை உபயோகிக்கலாம்.


ரயில் எஞ்சினை கழட்டி விட்டுட்டு 8 காளைமாடுகளை கட்டி ஒவ்வொரு ரயில் பெட்டியாக ஓட்டலாம்.

விபத்தில்லா பயணம், 100% எரி பொருள் சிக்கனம், சுற்று சூழலை பராமரித்தல் போன்ற பலவழிகளில் இத்திட்டம் பயன்படும்.

குறிப்பு:  இருக்கும் பெட்ரோல் நிலையங்களை எல்லாம் முதலில் வைக்கோல், புல், பருத்திக்கொட்டை புண்ணாக்கு விற்கும் நிலையங்களாக மாற்றவேண்டும்

எப்பூடி இருக்கு கருத்து கந்தசாமியின் ஐடியாக்கள்?



1 comment:

  1. மயிலேறி வலம் வந்து கனி பெற்றவரின் பெயர் கொண்டவரின் "ஐடியாக்கள்" அருமையின்றிப் போகுமா? ஆம் நீங்கள் பயன்படுத்துகின்றீர்களா?

    ReplyDelete