Tuesday, June 28, 2011

வீட்டு காய்கறி தோட்டம்

இன்றைக்கு மாதாந்திர பட்ஜெட்டில் சமையலுக்கு தேவையான காய்கறிகளின் செலவுத்தொகை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மூன்று அல்லது நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.600 செலவாகும். இந்த செலவை ஏன் நாம் குறைக்க கூடாது?. இதற்கு ஒரே வழி வீட்டிலேயே ஆர்கானிக் (இயற்கை வழி) காய்கறி தோட்டம் அமைப்பதுதான். இதனால் ஃபிரஷ் ஆக காயகள் பைசா செலவில்லாமல் கிடைப்பதுடன் விஷத்தன்மை கொண்ட பூச்சி மருந்துகள் பயன்படுத்தி வளர்க்கும் செடிகளிலிருந்து கிடைக்கும்  உள்ள விஷத்தன்மை  கொண்ட காய்களை சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.

வீட்டில் காலி இடம் இருந்தால் (மண் பரப்பு) அதில் தோட்டம் போடலாம். அதைப்போலவே மொட்டை மாடியிலும் தோட்டம் போடலாம். இவ்விதம் நாம் போடும் தோட்டத்தில் வளர்க்கும் செடிகள், நமக்கு தேவைப்படும் காய்கறிகளை ஆண்டு முழுவதும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். பொதுவாக நமக்கு தேவைப்படும் காய் வகைகளை பார்க்கலாம். 

1. பச்சை மிளகாய்.
2. இலை கொத்தமல்லி.
3. கீரை
4. கத்தரிக்காய்
5. வெண்டைக்காய்.
6. தக்காளி.
7. வெங்காயம்.
8. கறிவேப்பிலை.
9. அவரை
10. பீன்ஸ்  போன்றவைகள்.

சில செடிகளின் விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும். சிலவற்றை நாற்றாக வளர்த்து அதன் பின் நடவு செய்ய வேண்டும். முதலில் தோட்டத்தை தயார் செய்வது பற்றி பார்க்கலாம். தோட்டம் போடுவதற்கான இடத்தை சுற்றி இரண்டு அடி வெற்றிடமாக இடவேண்டும். நடுவில் உள்ள இடத்தை சுமார் 1 அடி ஆளத்திற்கு நன்றாக மண்வெட்டியால் வெட்டி நன்கு கிளறி விடவேண்டும். அதில் இருக்கும் கல், களை போன்றவற்றை நீக்கிவிட வேண்டும். அதன் பின் ஒரு சதுர அடிக்கு கால் கிலோ (1 செண்ட்  இடத்துக்கு 100 கிலோ) என்ற அளவில் மக்கிய தொழு உரம் போட்டு நன்றாக கலக்க வேண்டும். அதன் பின் ஒரு பாத்திக்கும் அடுத்த பாத்திக்கும் இரண்டரை அடி இடைவெளி இருக்குமாறு நீளத்தில் பாத்தி அமைக்க வேண்டும். இப்பொழுது தோட்டம் ரெடி.

தோட்டம் இல்லாதவர்கள்  தொட்டியில் செடி வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.  உடையாத பழைய பிளாஸ்டிக் பக்கெட்டுகள், பிளாஸ்டிக் கோணிகள் இவற்றில் செடி வளர்க்கலாம்.  தோட்டத்து மண், மண் புழு உரம், மணல் ஆகியவற்றை 1:1:1 என்ற படி சம அளவில் கலந்து கற்கள், களைகள் இருந்தால் நீக்கி விட்டு அவற்றை பக்கெட் அல்லது பிளாஸ்டிக் கோணிகளில் மூன்றில் இரண்டு பாகம் நிரப்பவேண்டும். அவ்வளவுதான். 

இனி விதை விதைத்தல் மற்றும் நாற்று தயார் செய்வதை பார்ப்போம். தக்காளி, கீரை, மிளகாய் போன்றவற்றின் விதைகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அதை விதைக்க முடியாது. முதலில் நாற்றை வளர்த்து அதன் பின்பே நடமுடியும். வெண்டை, அவரை, பாகற்காய், புடலைங்காய், பீன்ஸ் போன்றவற்றின் விதைகளை நேரடியாக தொட்டி அல்லது பாத்திகளில் விதைக்கலாம்.

தினசரி நமக்கு தேவைப்படும் மிளகாய் செடி வளர்ப்பதை பார்ப்போம். நர்ஸரி, அரசு தோட்டக்கலை அலுவலகங்களில் சிறிய பாக்கெட்டுகளில் விதைகள் கிடைக்கும். அவர்றை வாங்கிக்கொள்ளலாம். அல்லது நாம் சமயலுக்கு வாங்கும் மிளகாய் வற்றல் ஒன்று அல்லது இரண்டை (நன்றாக சிகப்பாகவும், காய்ந்தும், நீளமாகவும் உள்ள ) தேர்வு செய்து எடுத்து அதை வெயிலில் காயவைத்து அதிலிருந்து விதைகளை எடுக்கலாம்.

அதன் பின் பிளாஸ்டிக் டிரே ஒன்றை எடுத்து (4" உயரம், 8" அகலம், 12" நீளம் உத்தேசமாக) அதில் முன்பு கூறியபடி மண், மணல், மண்புழு உரம் கொண்ட கலவையை அதில் முக்கால் பாகம் நிரப்பவேண்டும். விதையை அதன் மீது பரவலாக தூவி விட்டு அதை மறைக்கும் அளவிற்கு சுமார் கால் இஞ்சு உயரத்திற்கு அதன் மீது மண்கலவையை தூவ வேண்டும். அதன் பின் பூவாளி அல்லது ஸ்பிரே பாட்டில் மூலமாக நன்றாக மண் ஈரப்பதம் வரும் வரை தண்ணீர் தெளிக்க வேண்டும்.  இந்த டிரேயை நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மண்னில் ஈரப்பதம் குறையாதவாறு காலையிலும் மாலையிலும் தண்ணீர் ஸ்பிரே செய்ய வேண்டும். டிரே பக்கம் எறும்ம்பு வரக்கூடாது. விதைகள் முளைக்க ஒரு வார காலம் ஆகும். அதிலிருந்து 30 வது நாளில் அந்த நாற்றை பிடுங்கி  ஒரு பக்கெட் அல்லது  பிளாஸ்டிக் கோணிக்கு இரண்டு செடி வீதம் சேர்த்து நடவேண்டும். நாற்றை பிடுங்கும் முன்பு நன்கு நீர் ஊற்றி மண் இளகிய நிலைக்கு வந்த பின் வேர் அறுந்து விடாதவாறு பக்குவமாக எடுக்க வேண்டும். 

டிரேயில் வளரும் நாற்றுக்கள்.

இந்த நாற்றுக்கள் நடப்பட்ட பின் சுமார் 30 நாட்களில் பூ பூக்கும். அதாவது விதை முளைத்ததிலிருந்து 60 -ம் நாள் பூக்கும்.அதன் பின் பூக்கள் சில நாட்களில் காயாக மாறி வளர ஆரம்பிக்கும். 

தோட்டத்தில் பாத்தி அமைத்து நாற்று நடவு செய்திருப்பதை கீழே உள்ள படங்கள் விளக்கும்.
நாற்று நட்டதிலிருந்து தினமும் ஒரு முறை தேவையான அளவு தண்ணீர் ஊற்றவேண்டும். அதாவது "காய்ச்சலும் பாய்ச்சலும்" என்பது போல மண் காய்ந்த பின் தண்ணீர் ஊற்ற வேண்டும். பூ பூக்கும் பருவத்தில் சிறிது மண்புழு உரம் போடவேண்டும். அதிகமாக மண்புழு உரம் போட்டாலும் அது ரசாயன உரத்தை போல பயிருக்கு கேடு செய்யாது.

இப்பொழுது தோட்டத்தில் அல்லது மொட்டை மாடியில் பக்கெட் / பிளாஸ்டிக் கோணியில் செடி வளர்ப்பது பற்றி புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.Friday, June 24, 2011

உங்களுக்கு தெரியுமா?

1. ராஜிவ் காந்தி சோனியா காந்தியை மணப்பதற்காக "ரோபெர்ட்டோ" ( ROBERTO) என தன் பெயரை மாற்றி கத்தோலிக்கராக மதம் மாறினார்.

2. சோனியா காந்தியின் உண்மையான பெயர் "சேனியா மைனோ" (SANIA MAINO).

3. ராகுல் காந்தியின் உண்மையான பெயர் "ரால்" ( RAUL).

4.  பிரியங்காவின் உன்மையான பெயர் ( BIANCA).

5. சோனியா காந்தி பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்தவர். லென்னாக்ஸ் ஷாப் (LENNOX SCHOOL)) என்ற ஆங்கிலம் கற்பிக்கும் பள்ளியில் ஆங்கிலம் படித்தார். இந்த பள்ளி கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி கேம்பஸ்சில் இருக்கிறது. 

6. கேம்பிரிட்ஜ் டவுனில் உள்ள ஒரு உணவு விடுதியில்  சப்ளையராக பணியாற்றினார்.

7.இந்திரா காந்தி சுடப்பட்டவுடன், அவரை  Dr. ராம் மனோகர் லோகியா  மருத்துவமனைக்கு சோனிய காந்தி எடுத்து செல்ல வேண்டும் என நிர்ப்பந்தித்தார். இது AIIMS மருத்துவமனைக்கு எதிர் திசையில் உள்ளது. அங்கு சென்றவுடன், AIIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என தன் முடிவை மாற்றினார். இதனால் ஏற்பட்ட 24 நிமிட கால தாமத்தால் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டே இந்திரா காந்தி மரணமடைந்தார்.

8. ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின் சோனியா பிரதமர் பதவிக்கு வர அவருக்கு போட்டியாக இருந்தவர்கள் ராஜேஷ் பைலட் மற்றும் மாதவராவ் சிந்தியா. இவர்கள் இருவரும்  சந்தேகத்திற்கு இடமான வகையில் விபத்துகளில் உயிரிழந்தனர்.

9. பிறப்பால் சோனியா காந்தி இத்தாலியர். அதன் பின் இந்திய குடியுரிமை பெற்றார். 1992 -ம் ஆண்டு இத்தாலிய குடியுரிமை சட்டப்படி இரட்டை குடிஉரிமை ரத்து செய்யப்பட்டதால்  இத்தாலிய குடியுரிமையை இழந்தார். அதை போலவே  ராகுல் காந்தியும், பிரியங்காவும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள். அதன் பின் இத்தாலிய குடியுரிமையை இழந்தனர்.

10.  2001 செப்டம்பர் மாதம் 27 -ம் தேதியன்று அமெரிக்கவில் போஸ்டன் விமான நிலையத்தில் FBI  ராகுல் காந்தியை கைது செய்தது. அதன் பின் இந்திய அரசின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டார்.

11.  சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பெயரில் உள்ள சுவிஸ் வங்கி கணக்கில் ரஷ்ய உளவுத்துறை கொடுத்த பணம் 10,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. விபரங்களுக்கு என்னுடைய இந்த பதிவை பார்க்க இதை கிளிக் செய்யவும்.

12.  இந்திய அரசியலமைப்பு சட்ட நடைமுறைப்படி  ஜனாதிபதி, பிரதமர் போன்ற பதவிகளுக்கு  பிறப்பால் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். அதனால் தான், " இப்பொழுது ராகுல் காந்தி பிரதமராகலாம்" என திக்விஜய சிங் கூறியதற்கு, சுப்பிரமணிய சாமி "இதில் சட்ட சிக்கல் உள்ளது" என குறிப்பிட்டார்.Wednesday, June 22, 2011

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது!


"கொடுக்காத இடையன் சினை ஆட்டை காட்டினான்" என்பது போல, ஊழலில் சாதனை புரிந்து வரும் காங்கிரஸ், நிர்ப்பந்தத்தின் காரணமாக ஏதோ பெயரளவில் ஒரு லோக்பால் சட்டத்தை கொண்டு வர விரும்பியது. அதன் சூழ்ச்சியை உணர்ந்த காந்தியவாதியும் பொது நல சேவகருமாகிய அன்னா ஹசாரே மக்கள் ஆதரவுடன், கடுமையான லோக்பால் சட்டத்தை இயற்ற கோரி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

வேறு வழியின்றி அரசு பொதுமக்கள் பிரதிநிதிகள், அரசு பிரதிநிதிகள் கொண்ட லோக்பால் வரைவு மசோதா கமிட்டியை அமைத்தது. 9 முறை கூடி விவாதித்த இந்த கமிட்டியில், மக்கள் பிரதிநிகள் கூறிய, முக்கிய 9 விஷயங்களை அரசு தரப்பினர் ஏற்க மறுத்து விட்டனர். அதனால் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தை துவங்க உள்ளார். 

அரசு ஏற்க மறுக்கும் விஷயங்கள் இதோ.


அதாவது ஒட்டு மொத்தத்தில், லோக்பால் அங்கத்தினர் நியமனத்திலிருந்து எல்லா விஷயங்களிலும் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளின் கட்டுப்பட்டில் லோக்பால் குழுவை கொண்டு வரவே அரசு விரும்புகிறது. கிட்டத்தட்ட சி.பி.ஐ எப்படி அரசின் கைப்பாவையாக செயல்படுகிறதோ அதை போலவே  லோக்பாலும் இருக்கவேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம்.

பாபா ராம்தேவ் உண்ணாவிரத்தின் போது நடுச்சாமத்தில் போலீஸ் தடியடி நடத்திய விவகாராம், லோக்பால் மசோதா, கருப்பு பண விவகாரம் ஆகிய விஷயங்களை எதிர்கட்சிகள் வரும் பாராளுமன்ற கூட்டத்தில் எழுப்பும் என்பதால், அதை எதிர் கொள்ள தேவையான கால அவகாசம் காங்கிரசுக்கு தேவைப்படுகிறது. எனவே பராளுமன்ற கூட்டம் காலதாமதமாகவே கூட்டப்படும் என தெரிகிறது.

தன்னுடைய நிலைக்கு ஆதரவு பெற அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளது. எப்படியானாலும் லோக்பால் மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்கப்பட்டு  சட்டம் ஆவது என்பது  சந்தேகமே! 

ஊழல் செய்து பணம் சம்பாதிக்கவே அரசியலுக்கு வந்துள்ள அரசியல்வாதிகள், தங்களுக்கு எதிரான லோக்பால் சட்டத்தின் மூலம் தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்ள விரும்புவார்களா???????????????????Tuesday, June 21, 2011

கடைசி பயணம்

நம் வாழ்க்கையோடு ஒன்றிப்போனது ரயில் பயணம். தினந்தோறும் அல்லது அடிக்கடி பயணிக்கும் பொழுது அதன் அருமை நமக்கு புரிவதில்லை. அது நம்மை கைவிட்டு போகும் பொழுது நாம் விலை மதிக்க முடியாத ஒன்றை இழந்து விட்டது போல நினைக்கத்தோன்றும்.

எங்க ஊர் செங்கோட்டையிலிருந்து கடைசியாக ஓடிக்கொண்டிருந்த  செங்கோட்டை - புனலூர் - செங்கோட்டை  பாசஞ்சர் ரயில் 19-09-2010 அன்றோடு  மீட்டர் கேஜ் அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக நிறுத்தப்பட்டது. ஏற்கனவே கொல்லம் - புனலூர் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுவிட்டது. அதைப்போலவே செங்கோட்டை - தென்காசி ரயில் பாதையும் மாற்றப்பட்டு விட்டது. செங்கோட்டை புனலூர் ரயில் பாதை மலை மீது அமைந்திருப்பதாலும் அதிகமான வளைவுகளை கொண்டது என்பதாலும் கடைசியாக மாற்ற ரயில்வே துறை திட்டமிட்டிருந்தது. 

ஆரியங்காவுக்கும் தென்மலைக்கும் இடையில் இருக்கும்  கழுதுருட்டியில் இருக்கும் பாலம் இரண்டு மலைகளை இணைக்கும் பாலமாகும். சதுர கருங்கற்களினால் 13 ஆர்ச்சுகள் அமைக்கப்பட்டு, அதன்  மேல் அமைக்கப்பட்ட பாலமாகும்.102.72 மீட்டர் நீள்மும், 5.18 மீட்டர் உயரமும் கொண்டது. 13 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.


இந்த பாலம் 1902ல் திருவிதாங்கூர் மன்னரும், வெள்ளையரின் கிழக்கிந்திய கம்பெனியும் சேர்ந்து கொல்லம் - செங்கோட்டை ரயில் பாதையை அமைக்கும் பொழுது கட்டப்பட்டது. 110 ஆண்டுகளுக்கு மேலாகியும் எவ்வித சிறு வெடிப்புகள் கூட ஏற்படாமல் , வலுவுடன் இருப்பதால் அதன் மீதே பிராட்கேஜ் அமைக்கப்படுகிறது. இப்பாதையில் வெள்ளைக்காரன் காலத்திலேயே 680 மீட்டர் நீளத்திற்கு மலையை குடைந்து குகை அமைத்து அதன் வழியாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது வியப்பான விஷயமாகும்.    வீடியோவை பார்த்து ரசியுங்கள்               


செங்கோட்டை - புனலூர் பாதை அமைக்கப்பட்டு விட்டால்  கேரளாவிலிருந்து (திருவனந்தபுரம்) சென்னை வர இப்பாதை தான் குறைவான தூரம் கொண்டதாகும்.


புனலூரிலிருந்து செங்கோட்டைக்கு வந்த கடைசி ரயில் பயணம் கீழே வீடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது.


Monday, June 20, 2011

முக்கிய செய்தி - கனிமொழி

இன்று உச்சநீதிமன்றம், கனிமொழியின் ஜாமின் மனுவை நிராகரித்து, விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது. இனி திகார் ஜெயில்தான்  கனிமொழியின் நிரந்தர வீடு.
Thursday, June 16, 2011

கலெக்டருக்கு ஒரு சல்யூட்!

 
 
ஈரோடு மாவட்ட கலெக்டராக கடந்த சில தினங்களுக்கு முன் பொறுப்பேற்றவர் அனந்தகுமார். இதற்கு முன் அவர் தர்மபுரி மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தார். ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு ஸ்ரீவித்யா என்ற மனைவியும், கோபிகா, தீபிகா என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

ஸ்ரீவித்யா தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிகிறார். மூத்த மகள் கோபிகா தர்மபுரியில் ஒரு மெட்ரிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தாள். தற்போது அவளை ஈரோடு பள்ளியில் கலெக்டர் அனந்குமார் சேர்த்துள்ளார். பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பெரிய தனியார் பள்ளிகளில் சேர்க்கவில்லை.

ஈரோடு குமலன்குட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் இன்று தனது மகளை 2-ம் வகுப்பில் கலெக்டர் சேர்த்தார். இன்று (புதன்கிழமை) காலை அவர் குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மகளுடன் சென்றார். கலெக்டர் பள்ளிக்கு வந்ததை கண்டு அப்பள்ளி தலைமை ஆசிரியை ராணி பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார்.

மற்ற ஆசிரியர்-ஆசிரியைகளும் அங்கு வந்தனர். அவர்கள் கலெக்டரை வரவேற்றனர். என் மகளை இந்த பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்க்கிறேன் என்று கலெக்டர் அனந்தகுமார் கூறியதும் ஒரு கனம் தலைமை ஆசிரியையால் எதுவும் பேச முடியவில்லை. பிறகு அவர் கலெக்டரை தான் அமரும் இருக்கையில் அமரச் சொன்னார். ஆனால் அதில் உட்கார மறுத்த கலெக்டர், பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து தனது மகள் கோபிகாவை 2-ம் வகுப்பில் சேர்த்தார்.

"என் குழந்தைக்கு இலவச சீருடை வழங்கப்படுமா?" என, கலெக்டர் கேட்டார். "சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளி மூலம் இலவச சீருடை வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படாது,'' என, தலைமை ஆசிரியை கூறினார். "என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து, பள்ளி சீருடை வழங்குங்கள்" என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். பின், குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இதையறிந்த நிருபர்கள், கலெக்டரிடம் கேட்டபோது, "இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை," என்றார். 
 
 இதைப்போல உயர் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிக்கூடங்களில் சேர்த்தால் பள்ளிகளின் நிலையில் மாற்றம் வர வாய்ப்பு உண்டு.Tuesday, June 14, 2011

சென்னை - டெல்லி - சென்னை -- சமச்சீர் கல்வி பயணம்!

கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வந்த சமச்சீர்கல்வி திட்டத்தை ரத்து செய்து மேலும் மாற்றங்கள் கொண்டு வந்து மேம்படுத்த வேண்டியிருக்கின்ற காரணத்தினால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி தொடர முடியாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அரசின் உத்தரவை இந்த எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதில் சென்னை ஐகோர்ட் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து ‌சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்‌தது. 
இந்த மனுவை விசாரித்த கோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வி தொடர வேண்டும். இதர வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து நிபுணர்குழு ஆராயந்து முடிவு எடுக்கலாம். நிபுணர்குழு 2 வாரத்திற்குள் அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். நிபுணர் குழு அறிக்கை மீது சென்னை ஐகோர்ட் தினமும் விசாரணை நடத்தி ஒரு வார காலத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்.  

மேலும் தமிழக தலைமை செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர்குழு அமைக்கப்பட வேண்டும். குழுவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இரண்டு அதிகாரிகளும், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் இரண்டு அதிகாரிகளும், கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனரும் இடம் பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் வகுப்புகளில் பாடம் நடத்த வேண்டாம். சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு பின்னர் பாடம் நடத்தலாம் இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

லேப்டாப் உதவியுடன் விவசாயம் செய்வோம்.........

இந்த பதிவை எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது எது என்பதை முதலில் தெரிந்து கொள்வது நல்லது. விவசாயம் சம்பந்தமாக நேற்று இரவு கூகிளில் சர்ச் செய்த பொழுது நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அதில் குறிப்பாக நெல் சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் ஆஸ்திரேலியா பற்றிய விபரங்கள், வியப்பை தந்ததுடன் நம் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது.

ஆதி காலம் தொட்டே நெல் சாகுபடியில் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வரும் தென் மாநிலங்களில் இன்று சாகுபடியில் நஷ்டம், விளை பொருளை சேமிக்க, விற்க வாய்ப்பில்லாத நிலை என தொடரும் சோகங்கள். அரசாங்கம் அரசாங்கமாக செயல்படாமல் வணிக நிறுவனமாக செயல்படுவதே காரணம். விளை நிலங்கள் குடியிருப்புகள், தொழில்சாலைகளாக மாறும் அவலம்!.

ஆனால் அரிசி விலையோ, நெல் கொள்முதல் விலையை காட்டிலும் பலமடங்கு அதிகம். இதைப்போலவே வட மாநிலத்தின் நிலையும். விவசாயிகளின் நலனில் துளியும் அக்கறை இல்லாத, கமிஷன் மண்டிகாரர்கள், ஏற்றுமதியாளர்களுடன் நெருங்கிய உறவுள்ள சரத்பவார் விவசாய அமைச்சராக, கூட்டணி தர்மத்தின் படி பதவியிலிருப்பது முக்கிய காரணம்.

சுமார் 70% இந்தியா கிராமங்களால் ஆனது. விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு கல்வி அறிவு அதிகம் தேவை கிடையாது. அனுபவ அறிவும் கடுமையான உழைப்புமே அதன் மூலதனம். எனவே விவசாயத்தின் மூலமே இந்த கிராம மக்களின் பொருளாதாரம் மேன்மை அடையும்.விவசாயத்தில் ஆஸ்திரேலியர்களின் செயல்பாடு மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. நெல் சாகுபடியை அவர்கள் தொழில் நுட்ப அறிவை பயன்படுத்தி தொழிற்சாலையாகவே நடத்துகிறார்கள்.
Aerial Machinery Experienced agricultural pilots use satellite guidance technology to distribute seeds and other inputs across a rice bay with precision and accuracy. This works hand in hand with precision farming.
Remote Sensing Spectral imaging obtained from satellites and aircrafts assist planning and management of the farm system. Farmers can work out the exact capabilities of their farm by identifying enterprises to suit each area.

GPS (Global Positioning Systems) and Precision Farming: The use of satellite networks assist in precisely matching crop needs with crop requirements
GIS (Geographical Information Systems) GIS is used to organise geographical information which is then stored digitally on a data  base.                                                                                                
 Computerised Whole Farm Design and Laser Landforming The use of computer aided design (CAD) and laser technology to design efficient farm irrigation systems. Land forming using laser landforming ensures the most efficient use of water. Farmers have precise control over the flow of water on and off the land.

நெல் சாகுபடியை செப்டம்பர் - மார்ச் மாத கோடைகால் பயிராகவே செய்கிறார்கள். சாகுபடியை துவங்கு முன் தங்கள் நிலம் நெல் சாகுபடிக்கு உகந்ததாக இருக்கிறதா என்பதை நிர்ணயம் செய்து கொள்கிறார்கள். இவர்கள் சுழ்ற்சி முறையில் பயிர் செய்வதே இதற்கு காரணம். ஒவ்வொரு சாகுபடிக்கும் நிலம் எவ்வாறு தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்கு கடுமையான தரக்கட்டுப்பாடு நெறிமுறைகள் உண்டு                

லேசர் தொழில் நுட்பத்தின் மூலம்  நிலம் சமப்படுத்தப்படுகிறது.

களைகள் வராமலிருக்கவும், பூச்சிகள் பயிரை தாக்காமலிருக்கவும் தகுந்த ஆய்வுக்கு பின் தேவையான பூச்சி கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது.

விதைகளை விதைப்பதற்கு முன் 24 மணி நேரம் நீரில் ஊற வைக்கப்படுகிறது.

அதன் பின் நீர் வடிக்கப்பட்டு விதைகள் 24 மணி நேரம் வைக்கப்படுகிறது.

ஒரு ஹெக்டேருக்கு (1ஹெக்டேர் = 2.47 ஏக்கர்) 120 கிலோ கிராம் விதை தேவை. ஒரு ஏக்கருக்கு 45-50 கிலோ.

இதன் படி ஒரு சதுர மீட்டருக்கு 300 பயிர்கள் இருக்கும்.

தயார் நிலையில் இருக்கும் நிலத்தில் ஹெலிகாப்டர் மூலம் விதை தெளிக்கப்படுகிறது. இதற்கு விண்வெளி வழிகாட்டு தொழில் நுட்பம் (satellite guidance technology) பயன்படுத்தப்படுகிறது. இதனால் துல்லியமாக விதை நடவு செய்யமுடியும்.


விதைப்பு முடிந்த பின் விதைகள் முளைத்து நிலத்தில் வேர்களை பரப்பும் வரை தேவைக்கு ஏற்ப 5-25 செ.மீ உயரத்திற்கு தண்ணீர் இருக்கும்படி நீர் பாய்ச்சப்படுகிறது.


ஜனவரி- பிப்பிரவரி மாதத்தில் பயிரில் பூக்கள் தோன்றும். இச்சமயத்தில் அதற்கு நைட்ரஜன், பாஸ்பேட் சத்துக்கள் தேவை. எனவே தேவையான அளவு மேற்கண்ட உரங்கள் கணக்கிடப்பட்டு போடப்படுகிறது.


மார்ச்-ஏப்ரல் மாதத்தில் வயலில் இருக்கும் நீரை அப்படியே தேங்க விட்டு விடப்படுகிறது. இது முற்றிலும் பயிரால் உறிஞப்படுகிறது. அதன் பின் நெற்கதிர்கள் நன்கு முற்றி காய்ந்த பின் அறுவடை செய்யப்படுகிறது.


அறுவடைக்கு அறுவடை இயந்திரத்தையும் அதன் மூலம் பிரிக்கப்படும் நெல்லை வயலிலேயே டிரக்கில் நிரப்பப்படுகிறது.


இவ்வாறு டிரக்கில் நிறப்பபடும் நெல் சேமிப்புக்கு தேவையான சகல வசதிகளும் கொண்ட சேமிப்பு கிடங்குக்கு எடுத்து செல்லப்படுகிறது.
சேமிப்பு கிடங்கு.

அரிசி ஆலை
அங்கு நன்கு காய்ந்து அரிசியாக ஆக்கும் நிலைக்கு வந்த பின் அரிசி ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உமி மட்டும் நீக்கப்பட்டு, தவிடுடன் கூடிய பழுப்பு அரிசியாக தயார் செய்து விற்பனைக்கு அனுப்பபடுகிறது. அதோடு, பழுப்பு அரிசியில் இருக்கும் தவிட்டை நீக்கியும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.


ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் அரிசி உலக தர சான்று பெற்றுள்ளது. 

ஆண்டு ஒன்றுக்கு 25 மில்லியன் டன் அரிசியை வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நெல் சாகுபடிக்கோ அல்லது அரிசி ஏற்றுமதிக்கோ அரசாங்கம் எவ்விதமான மானியமும் வழங்குவதில்லை.


RICE MARKETING BOARD FOR THE STATE OF NSW என்பது நெல்லை சேமித்து வைக்கும் வசதியை விவசாயிகளுக்கு வழங்குகிறது.


SUN RICE என்ற நெல் சாகுபடியாளர்களின் கூட்டுறவு அமைப்பு அரிசி உணவு பதார்த்தங்களை தயார் செய்தல் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வேலைகளை செய்கிறது.


RICE GROWERS ASSOCIATION OF AUSTRALIA  என்ற நெல் விவசாயிகளின் அமைப்பு  கொள்கை முடிவெடுத்தல், உதவி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளது.


இவர்கள்  நெல் பயிரிடும்  ஒரு விவசாய குடும்த்தினர்!  இந்நிலை நம் நாட்டில் என்று வரும்?  கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளே நீங்கள்தான் இதை செய்ய முடியும். செய்வீர்களா?

Saturday, June 11, 2011

பிரதமருக்கு ஒரு பகிரங்க கடிதம்........தொடர்ச்சி.

எனது முந்தைய கடிதத்தின் தொடர்ச்சி இது. தொடரும் கேள்விகள் கீழே.

8. இப்பொழுது உங்கள் கட்சிக்காரர்கள் புதிதாக அறிவுறை வழங்க ஆரம்பித்துள்ளார்கள்."In my opinion, religious gurus should stay away from the political field" என யூனியன் மினிஸ்டர் ஜோதிரடித்யா சிந்தியா அவர்கள் கூறியுள்ளார். அப்படி என்றால் மத தலைவர்கள் அரசியலுக்கு வரவோ அல்லது நாட்டு நலனுக்காக அரசின் குறைபாடான செயலை சுட்டி காட்டவோ இந்த நாட்டில் உரிமை கிடையாதா? இந்திய அரசியலமைப்பு சட்டம் அப்படி எதுவும் தடை செய்திருக்கிறதா? 

9. பாபா ராம்தேவின் கருப்பு பணத்திற்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்திற்கு பின்னால் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிண்டு பரிஷத் ஆகியன இருக்கிறது. அதனால் தான் உண்ணாவிரத போராட்டத்தை பலாத்த்காரமாக நிறுத்தினோம் என உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். வேடிக்கையாக இருக்கிறது. பி.ஜே.பி. சட்ட பூர்வமாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி. மற்ற இயக்கங்கள் (VHP, RSS) இதுவரை அரசால் தடை செய்யப்படவில்லை. அப்படி இருக்கும் பொழுது அவை, பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்திற்கு பின்னால் இருந்தாலும் தப்பேதும் இல்லையே? 

10. தங்கள் அமைச்சர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்த பொழுது அரசுக்கு பாபா ராம் தேவ் குண்டர், ஏமாற்றுக்காரர் என்று தெரியாதா? ஏன் அவர் மீது முன்பே நடவடிக்கை எடுக்கவில்லை?  அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு பெருகி வந்த ஆதரவை கண்டு அஞ்சி, அந்த இயக்கத்தை பின்னுக்கு தள்ளும் சூழ்ச்சியாக பாபா ராம்தேவையும், அவர் உண்ணாவிரதத்தையும் பயன்படுத்த போட்டிருந்த உங்கள் திட்டத்திற்கு அவர் உடன்படாததால் தான் இப்பொழுது உங்கள் அரசு இவ்விதம் நடந்து கொள்கிறது என்ற பொதுவான குற்றச்சாட்டை மறுக்க முடியுமா?

11. இந்த சம்பவத்திற்கு பின் பாபா ராம்தேவ், அரசின் வன்முறைக்கு எதிராக தேசிய படையை உருவாக்குவேன் என கூறினார். அவர் என்ன கூறினார் என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது பத்திரிகையில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. 

I appeal that 20 young men from every district should come here. We will train them in both shahstra (Vedas) and shastra (weapons),” Ramdev, who is continuing his hunger strike, told his followers here.

The yoga guru said, “We will prepare 11,000 men and women so that next time we don't lose any battle at the Ramlila Maidan in Delhi.”

முழு செய்தியையும்  படிக்க இதை கிளிக் செய்யவும். எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. அதோடு கருணாநிதி புண்ணியத்தால் இந்தியையும் படிக்க முடியாமல் போய்விட்டது. எனவே "shastra" என்பது சாஸ்திரம் என பொருள்படும் என நினைக்கிறேன். கூகுளில் இதற்கு பொருள் என்ன என்று தேடிய பொழுது "
A treatise for authoritative instruction among the Hindoos; a book of institutes; especially, a treatise explaining the Vedas." என விளக்கம் கிடைத்தது. அப்படி இருக்கும் பொழுது  ஆயுத பயிற்சி என எப்படி பொருள் கொண்டார்கள் என புரியவில்லை. அப்படியே இருந்தாலும் அதை தற்காப்பு பயிற்சி என்று தான் கருத முடியும்.  ஒவ்வொருவரும் மற்றவர்களின் தாக்குதலிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்வதை நம் நாட்டு சட்டமும் ஏற்றுக்கொண்டுள்ளது. 

12.  வெளிநாட்டு வங்களில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ராம்ஜெத்மலானி மற்றும் சிலரால் அரசு மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தங்கள் அரசோ DTAA ( Double Tax Avoidance Agreement) பற்றி பேசுகிறது. அதாவது சட்டவிரோதமாக இந்தியர்களால் வெளிநாடுகளில் சேமிக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்திற்கான வரியை மட்டும் வசூலிக்க வழி செய்யும் ஒப்பந்தம். அதாவது வரியை வசூலிப்பதன் மூலம் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக ஆக்கும் ஒப்பந்தம் இது. இதன் மூலம் எப்படி கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து அரசு கஜனாவில் சேர்க்க முடியும்?

13. கருப்பு பணத்தை வெளிநாட்டில் போட்டிருப்பவர்கள் மூன்று ரகமானவர்கள். a) ஊழல் மூலம் சம்பாத்தியம் செய்த பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள அரசியல்வாதிகள். b) போதைப்பொருட்கள் விறபனை, ஆயுதக்கடத்தல், தீவிரவாத செயல் மூலம் பணம் சேர்த்துள்ள கிரிமினல் குற்றவாளிகள். c). வருமான வரி செலுத்துவதை தவிர்க்க வெளிநாட்டில்  கருப்பு பணமாக வைத்திருக்கும் தொழில் அதிபர்கள். கருப்பு பனத்தை வெளிநாட்டில் வைத்திருக்கும் அரசியல்வாதிகளையும், அவர்களின் நெருங்கியவர்களையும் பாதுகாக்கவே அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாக செயல்படுகிறது என நினைக்க வேண்டியுள்ளது. 

14. "வெளிநாட்டு வங்கியில் கருப்பு பணத்தை போடுவது தேசதுரோகம். இக்குற்றத்தை செய்பவர்களின் கருப்பு பணம் உட்பட அவர்களின் குடும்பத்தினர் பெயரிலுள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் மரண தண்டனையும் வழங்கப்படும் என அறிவித்து அதற்கான ஓட்டை இல்லாத சட்டத்தை கொண்டு வரவேண்டும். இப்படி ஒரு சட்டம் வரும் பட்சத்தில், இச்சட்டத்தை காட்டி எல்லா நாடுகளிலிருந்தும்  கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயரையும், பணம் பற்றிய விபரத்தையும் கேட்க முடியும். தர மறுக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் அந்த நாட்டின் நீதிமன்றத்தை அணுக முடியும். ஒத்துழைக்க மறுக்கும் நாடுகளுடன் இருக்கும் அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதுடன், அந்நாட்டோடு இருக்கும் உறவுகளை ஒட்டு மொத்தமாக துண்டித்துக்கொள்ளலாம். அதனால் இந்தியாவிற்கு எவ்வித இழப்பும் ஏற்பட போவதில்லை. இதை செய்ய அரசுக்கு தயக்கம் ஏன்?
 

Thursday, June 9, 2011

பிரதமருக்கு ஒரு பகிரங்க கடிதம்!

மதிப்பிற்க்குரிய ஐயா,


வணக்கம். வெளிநாட்டு பயணம், ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவது, கட்சியின் உயர்மட்ட குழுவில் பங்கேற்பது, கட்சி தலைவரை  சந்தித்து கலந்துறையாடுவது, ஊழல் பற்றி பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் எழுப்பினால், "கூட்டணி நிர்பந்தத்தால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த தவறுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்" என தன் அரசின் ஊழலுக்கு சப்பைகட்டு கட்டுவது மட்டும் தான்  பிரதமரின் தலையாய கடமை என்ற நம்பிக்கையில் பிரதமராக இருக்கும் தங்களுக்கு ஒரு சாதாரண பிரஜையான நான் கடிதம் எழுதுவது எனக்கு மனதுக்கு சிறிது நெருடலாக உள்ளது. 

அரசின் செயல்பாடுகள் தொடர்பான கேள்விகளுக்கு பிரதமர் என்ற முறையில் பதிலளிக்க வேண்டிய தார்மீக பொறுப்பும், சட்டரீதியான கடமையும் தங்களுக்கு உண்டு.
கேள்விகள்

1. இந்தியாவில் கோடிக்கணக்கானவர்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் பொழுது, பல லட்சம் டன் கோதுமை அரசாங்க கிடங்கில் மழை, வெயில் இவற்றால் பாழாக்கப்படுகிறது. இதை வறுமையில் வாடுபவர்களுக்கு வழங்குங்கள் என உச்ச நீதிமன்றம் கூறியதற்கு "அரசின் கொள்கை விஷயங்களில்  நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது" என கூறினீர்கள். அப்படியென்றால் மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்யப்பட்ட தானியங்களை வீணாக்குவதுதான் காங்கிரஸ் அரசின் கொள்கையா?

2. கருப்பு பணத்தை வெளிநாடிலிருந்து கொண்டு வரவும், கருப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குபவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரவும் அரசை நிர்பந்தித்து உண்ணாவிரதம் இருக்க டெல்லி வந்த யோகா குரு  பாபா ராம்தேவை சந்தித்து சமாதானம் செய்ய, மத்திய அமைச்சர்கள் விமானநிலையம் செல்லவேண்டிய அவசியம் என்ன? இதே நடைமுறை அனைவர் விஷயத்திலும் மேற்கொள்ளப்படுகிறதா?  ஆம் என்றால் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க டெல்லி வந்த பொழுது  அவரை வரவேற்று, சமாதானம் செய்ய ஏன் உங்கள் அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை?.

3. பாபா ராம்தேவ் தனி விமானத்தில் வந்து இறங்கினாரே, அதற்கு யார் பணம் கொடுத்தது? இந்த உண்ணாவிரதத்திற்கு பணம் வழங்கியவர்கள் யார்? அவர்களின் விபரத்தை வெளியிடுவாரா? என கேள்விமேல் கேளிவியாக கேட்டார் காங்கிரசின் பொது செயலாளர் திக் விஜசிங். பாபா ராம்தேவ் டிரஸ்ட் பதிவு செய்யப்பட்ட ஒன்று. அதற்கு பணம் வழங்கியவர்கள் எல்லோரும் காசோலை மூலமாகவே கொடுத்துள்ளனர்.  2010 அக்டோபர் மாதம் 15-ம் தேதி சோனியா காந்தி கலந்து கொண்ட (வர்தாவில்) காங்கிரஸ் ஊர்வலத்திற்கு, மஹாராஷ்டிரா முதல்வர் 2 கோடி ரூபாயும், மற்ற அமைச்சர்கள் தலா 10 லட்சம் ரூபாயும், ஆக மொத்தத்தில் சுமார் 9 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக பத்திரிகைகளில் ஆதாரத்துடன் செய்தி வெளிவந்தது. இந்த பணத்தை யார் கொடுத்தது, இதற்கான செலவு கணக்கை காங்கிரஸ் கொடுக்குமா? என கேள்வி எழுப்பினால் உங்கள் பதில் என்ன?

4.  பாபா ராம்தேவ் உண்ணாவிரத விவகாரம் அரசு சம்பந்தப்பட்டது. அதைப்பற்றி கேள்வி கேட்கவோ அல்லது பதிலளிக்கவோ திக்விஜய சிங்கிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?  திக்விஜயசிங்கை பொறுத்தவரை அவர் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர். அவருக்கு கட்சி பொதுச்செயலாளர் என்ற பதவி கட்சியால் கொடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் அல்ல. அவ்வளவு தான். அவர் தேர்தலில் நின்று ஜெயித்து வந்த பாராளுமன்ற அங்கத்தினர் கூட இல்லை!.அங்கத்தினராக இருந்தால் கூட பாராளுமன்ரத்தில் தான் பேச முடியும். "தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்" என்ற பழமொழிக்கு ஏற்ப காங்க்ரஸ் கட்சியின் உறுப்பினர்கள் செயல்படுவதையே காட்டுகிறது.

5.  நடு இரவில் உங்கள் அரசின் சார்பாக எழுதப்பட்ட கடிதம் பாபா ராம்தேவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கூறியிருந்தது. அவர் உண்ணாவிரதத்தை கைவிட சம்மதிக்காததால், உடனடியா அப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டதுடன், தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டு அங்கு கூடியிருந்த சிறுவர், சிறுமியர், பெண்கள், முதியவர்கள் எல்லோரையும் பலாத்காரமாக போலீசார் வெளியேற்றினர். இதில் 150க்கு மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆயுதம் தாங்கி வன்முறையில் ஈடுபடும் கூட்டத்தை கலைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கையை  உண்ணாவிரதம் இருந்து களைப்பில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் மீது எடுத்தது ஜனநாயக படுகொலை. இரண்டு நாள் கழித்து தாங்கள். "தவிர்க்க முடியாத நடவடிக்கை" என கூறியுள்ளீர்கள். அவர்கள் என்ன வெடி குண்டு, ஏகே47 துப்பாக்கியுடன் டெல்லியை சூறையாட வந்தவர்களா?. என்ன தவிர்க்க முடியாத சூழ்நிலை? 

6. உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் மற்றும் அங்கு குழுமியிருந்தவர்கள் மீது கலகம் விளைவிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன கொடுமை ஐயா இது? காந்தீய வழியில் உண்ணாவிரம் இருப்பது கலகம் விளைவிக்கும் முயற்சியா? நிச்சயமாக இது ஜனநாயக ஆட்சியாக இருக்கும் பட்ச்த்தில் இது போன்ற நிகழ்ச்சி நடக்க முடியாது! வெள்ளைக்காரனும் தன் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இதே முறையைதான் கையாண்டான். அப்படியென்றால் சோனியா காங்கிரஸ் ஆட்சி ஒரு காலனி ஆட்சியா?

7. ராம் லீலா மைதானத்தில் 5000 பேருக்கு  யோகா வகுப்பு நடத்த மட்டுமே அனுமதி வாங்கப்பட்டிருந்தது . ஆனால் 50,000 பேர் கூடியதினால் இந்த நடவடிக்கை  என காவல்துறை விளக்கம் தருகிறது. 50000 பேரும் காலையிலேயே கூடிவிட்டார்கள். அவர்கள் காவல் துறையினரின் பார்வையில் பட்டு தான் நுழைவு வாசல் வழியாக உள்ளே வந்திருக்கிறார்கள். அப்படியே ஆகாயத்திலிருந்து குதிக்கவில்லை. அப்பொழுதே அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேலே மற்றவர்களை அனுமதிக்காமல் இருந்திருக்கலாமே?  அரசின் விருப்பப்படி அவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்த மறுத்த பின் தான், 50000 ஆயிரம் பேர் கூடியிருக்கும் விஷயம் தெரிய வந்ததா?

இன்னும் பல கேள்விகள் உண்டு. அதை அடுத்த கடிதத்தில் எழுப்புகிறேன். மிக்க நன்றி.

இப்படிக்குகாந்திதேசத்தில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த விரும்பும் ஒரு பாமரன்.

Wednesday, June 8, 2011

முக்கிய செய்தி

கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது.Tuesday, June 7, 2011

கனிமொழிக்கு அடுத்து தயாநிதிமாறன்?

ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னேற்றமாக தயாநிதிமாறன் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த பொழுது, அவர் வழ்ங்கிய ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் குற்றப்பத்திரிகையில் தெரியாத நபர்கள் என குறிப்பிட்டுள்ளது.

ஏர்செல் நிறுவனம் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்கள் மீது சுமார் 2 வருடங்கள், தேவையற்ற சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு தாமதம் செய்ததுடன், அதன் உரிமையாளர் சிவசங்கரனுக்கு நெருக்கடி கொடுத்து மேக்சிஸ் நிறுவன உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்க செய்து அதன் மூலம் மேக்சிஸ் குரூப் மூலம் சுமார் 700 கோடியை சன் டி.வி ஆதாயம் அடைந்ததாக ஆதாரத்துடன் செய்தி வெளியானது.

இது தொடர்பாக விசாரித்து வந்த சி.பி.ஐ ஏர்செல்லின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரனிடம் விசாரித்து அவரிடமும் வாக்குமூலம் வாங்கியுள்ளது. அதில் தயாநிதிமாறன் தன்னை நிர்ப்பந்தித்து ஏர்செல் பங்குகளை அனந்த கிருஷ்ணனுக்கு விறக செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் கூறுவதை போலவே மாறனும் "நான் நிர்ப்பந்திக்கவில்லை" என மறுத்துள்ளார்.

இந்நிலையில் இது பற்றி மன்மோஹன் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டதிற்கு, :விசாரணையை சி.பி.ஐ நடத்தி வருகிறது. அது சட்டப்படி அச்சமின்ன்றி செயல்படும்" என கூறியுள்ளார்.

எனவே ஒரு சில நாட்களில்  மாறனின் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என தெரிகிறது. சி.பி.ஐ. அவரை விசாரித்து எப்படி ராஜா விஷயத்தில் நடந்து கொண்டதோ அதைப்போல இவரையும் கைது செய்யும் என தெரிகிறது. 

கலைஞர் டிவி விவகாரம் 200 கோடி - ராஜாவும், கலைஞர் டி.வியின் பங்குதாரகள் இருவரும் இப்பொழுது திகார் சிறையில் உள்ளனர்.

சன் டிவி விவகாரம் 700 கோடி  - தயாநிதிமாறன், சன் டிவி பங்குதாரகள் கலாநிதி மாறன், தயாநிதிமாறனின் மனைவி ஆகியோர் கைது செய்யப்படும் சூழ்நிலை உள்ளது.Monday, June 6, 2011

பரபரப்பு செய்தி

சனிக்கிழமை இரவு ராம்லீலா மைதானத்தில் போலீசார் நுழைந்து கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பாபா ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை ஒடுக்கிய ஜனநாயக படுகொலை செயல் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை கால பென்சு இன்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் செய்திகளின் அடிப்படையில் தானாகவே இந்த வழக்கை " SUO MOTU" ஆக பதிவு செய்துள்ளது.

மத்திய அரசு சார்பாக உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை, டெல்லி போலீஸ் கமிஷ்னர் பி.கே. குப்தா, டெல்லி அரசின் தலைமை செயலாளர் பி.கே. திரிபாதி, மற்றும் டெல்லி நிவாகம் ஆகியோருக்கு இச்சம்பவம் தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தானே தனக்கு ஆப்பு வைத்துக்கொள்ளும் சோனியா & கோ.......

உண்மையிலேயே இப்பொழுது இந்தியாவுக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது என நினைக்க தோன்றுகிறது. இல்லையென்றால் ஊழல் அரசியல்வாதிகள், ஆப்பை தேடிப்போய்  ஏன் அதில் உட்கார வேண்டும்? 

அன்னாஹசாரே ஒரு பொது நல தொண்டர். அவர் தலைமையில் ஊழல் அரசியல்வாதிகளையும், உயர் அதிகாரிகளையும் தண்டிக்க வகை செய்யும் "லோக்பால்" சட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும் என ஜந்தர் மன்தர் மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அவருடைய போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு பெருகியதை கண்ட சோனியா & கோ, சம்மதித்தது. ஆனால் நிச்சியமாக அதற்கு ஓட்டை இல்லாத கடுமையான் லோக்பால் சட்டத்தை கொண்டு வரும் எண்ணமே கிடையாது. இது எல்லோரும் அறிந்த விஷயம். விவகாரத்தின் சூட்டை தணித்து, பின் அதை நீர்த்து போக வைப்பதே அதன் திட்டம். 

ஒரு பக்கம் பேச்சு வார்த்தை , கமிட்டி அமைத்தல் என சாதகமாக நடந்து கொள்வது போல நடித்தது. மறுபக்கம் அன்னாஹசாரேயின் லோக்பால் கமிட்டி மெம்பர்களாகிய சாந்திபூஷன், பிரஷாந்த்பூஷன், சதோஷ் ஹெக்டே மீது காங்கிரஸ் கட்சி, திக்விஜயசிங் மூலம் ஆதாரமற்ற கூற்றச்சாடுகளை கூறி இயக்கத்தை பலவீனப்படுத்த முயற்சி செய்தது. ஆனால் அம்முயற்ச்சி கைகூடவில்லை. அதன் பின் இப்பொழுது, பிரதமர், நீதிபதிகள், உயர்மட்ட அதிகாரிகளை இதில் உட்படுத்தக்கூடாது என வ்ரைவு கமிட்டியில் அர்சு தரப்பில் முட்டு கட்டை போடுவதுடன், அனைத்து கட்சிகளின் ஆலோசனையை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. இது இந்த லோக்பால் சட்டத்தை அரசு கொண்டுவர விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.


யோகா குரு "ராம்தேவ்" ஊழல் ஒழிப்பு, வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை தேசிய சொத்தாக அறிவித்து அவற்றை இந்தியாவுக்கு கொண்டுவரவேண்டும் போன்ற பல கோரிக்கைகளுக்காக தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலையில்  டெல்லியில் "ராம்லீலா" மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார். இதில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இவர் சத்தியாகிரக போராட்டத்தை துவங்க உஜ்ஜைனியிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்த பொழுது, அவரை வரவேற்க  யூனியன் மினிஸ்டர்கள் கபில்சிபல், சுபோத்காந்த் சாஹி, பிரனாப் முகர்ஜி, பவன்குமார் பன்ஸால் ஆகியோர் விமான நிலையம் சென்று இவரிடம் , உண்ணாவிரதத்தை கைவிடும் படி கேட்டுக்கொண்டனர். அவர் மறுத்து விட்டார். அதனால் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்க்கே சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அவர் இதற்கெல்லாம் மசியாமல், அறிவித்திருந்த படி 4-6-2011 சனிக்கிழமை அன்று காலையில் சத்தியாகிரகத்தை துவங்கினார்.

வெளிநாட்டில் பதுக்கப்பட்டு கருப்பு பணத்தை தேசிய சொத்தாக அறிவிக்கவும், கருப்புபணம் வைதிருப்பவர்களுக்கு மரணதண்டனை அளிப்பது தொடர்பான கோரிக்கையை தவிர அவரின் எல்லா கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் எனவே உண்ணாவிரதத்தை கைவிடும்படி அரசு தரப்பிலிருந்து  இரவு சுமார் 11 மணி அளவுக்கு கடிதம் துங்கிக்கொண்டிருந்த அவரிடம் கொடுக்கப்பட்டது. மேல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால், அவர்  உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டர்.

சுமார் 12 மணி அளிவில் மைதானத்தில் பாபா ராம்தேவுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்லதாகவும், டெல்லியில் 144 தடை உத்த்ரவு பாடப்பட்டுள்ளதாகவும், ராம் தேவ் டெல்லியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக்வும் கூறி, 5 கம்பெனி ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் போலீசாருடன் மைதானத்திற்கு வந்த காவல் துறையினர் தூங்கி கொண்டிருந்த ஆயிரக்கணக்கான முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை தட்டி எழுப்பி வலுக்கட்டாயமாக மைதானத்தை விட்டு வெளியேற்றினர். அத்துடன் தடியடியும் நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதில் சுமார் 150 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. பாபா ராம்தேவையும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்து சென்றனர். பின் ஹரித்வாருக்கு அனுப்பப்பட்டார். 

இவர் விஷயத்திலும் காங்கிரஸ் தனது குள்ள நரி வேலையை காடியது. அமைச்சர்களை விமானநிலயத்திற்கு அனுப்பி பேசியது ஹோட்டலில் சந்தித்து பேசியது எல்லாம், அவரை சம்மதிக்க வைத்து உண்ணாவிரதத்தை நிறுத்தி அவர் மூலம் அன்னா ஹசாரேயின் இயக்கத்தை பலவீனப்படுத்தும் திட்டம் தான். அதைப்போலவே "திக்விஜசிங் மூலம் பாபா ராம் தேவ் 5 நட்சத்திர உண்ணாவிரதம் நடத்துகிறார். தனி விமானத்தில் அவர் வர யார் பணம் கொடுத்தது?  அவரிடம் கொடுக்கப்படும் பணம், செலவுகளுக்கு அவர் கணக்கு கொடுப்பதில்லை. அவர் ஏமாற்றுக்காரர்" என அவரை வசை பாடியது.

இப்பொழுது அவர் யோகாவுக்கு தான் அனுமதி பெற்றிருந்தார். ஆனால் உண்ணாவிரதம் இருந்தார். அதனால் அனுமதி ரத்து செய்யப்பட்டது. அவர் யோகா குருவாக இல்லாமல் அரசியல் செய்கிறார். ஆர்.எஸ்.எஸ், பிஜே.பி ஆதரவுடன் செயல்படுகிறார் என கபில் சிபல் குற்றம் சட்டுகிறார்.

யோகா வகுப்புக்குதான் அனுமதி பெற்றிருந்தார், ஆனால் அவர் உண்ணாவிரத போராட்டம் நடத்த்போகிறார் என்பது தெரிந்து தானே கபில் சிபல் உட்பட பல அமைச்சர்கள் விமான நிலையம் சென்று பேசினார்கள்?  சனிக்கிழமை இரவு 11 மணிவரையிலும் அவர் செய்தது சட்டம் விரோதமாக அரசுக்கு தெரியவில்லை. ஆனால் 12 மணிக்கு ஞானோதயம் ஏற்பட்டது ஏன்? அவரை வைத்து அன்னாஹசாரேயின் இயக்கத்தை பலவீனப்படுத்த முடியவில்லை என்ற ஆதங்கம் தான்.

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. பாபா ராம்தேவுடன் ஒன்று படாமல் இருந்த அன்னாஹசாரே இயக்கத்தினர், அரசின் ஜனநாயக படுகொலை செயலுக்கு பின்,   இப்பொழுது  கருப்பு பணம்- ஊழல் விவகாரத்தில் ஒன்று சேர்ந்து விட்டார்கள். அதுமட்டுமல்லாமல் அரசுக்கு ஊழலை ஒழிக்கவோ அல்லது கருப்பு பணத்தை வெளிநாட்டிலிருந்து கொண்டு வரவோ விருப்பம் இல்லை என்ற உண்மையை  தெளிவாக உணர செய்த்விட்டது.

ஏற்கனவே, லோக்பால் வரைவு மசோதாவை தயார் செய்வதில், காலதாமத்தையும், முட்டுக்கட்டையையும்  அரசு போடுவதால் அதிருப்தி அடைந்திருந்த அன்னாஹசாரே இயக்கத்தினர், இனி வரைவு மசோதா கூட்டங்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

பாவம்! காங்கிரசின் நிலை பரிதாபமாக ஆகிவிட்டது. காமன்வெல்த் கேம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், மாறன் ஊழல் என ஊழல்களில் திளைத்து, மக்கள் அதிருப்ப்தியை சம்பாதித்துவிட்ட காங்கிரஸ் இப்பொழுது ஒட்டு மொத்த மக்களின் எத்ர்ப்புக்கு ஆளாகியுள்ளது

கருப்பு பணத்தை அரசு பணமாக அறிவிக்கவேண்டும், கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற பாபா ராம் தேவின் விருப்பம் நிறைவேறினால், முதலில் தூக்கில் தொங்குபவர்கள்  சோனியா காந்தியும், அவரது வாரிசு ராகுல் காந்தியும் தான். இவ்விருபரும் ரஷ்ய உளவுத்துறையிடமிருந்து கைக்கூலி வாங்கி சுவிஸ் வங்கியில் போட்டுள்ளார்கள். இந்த விபரம் ஆதாரத்துடன் வெளிவந்து பலவருடங்கள் ஆகியியும் இதுவரை சம்பந்தப்பட்டவர்களோ, அல்லது காங்கிரஸ் கட்சியோ மறுப்பு தெரிவிக்க வில்லை. இது சம்பந்தமான் எனது பதிவை பார்க்க இதை கிளிக் செய்யவும்.

எப்படியோ சொந்த செலவில் காங்கிரஸ் தனக்கு ஆப்பு வைத்துக்கொள்வதில் ந்மக்கு சந்தோஷமே!

Saturday, June 4, 2011

சூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான பாடம்

எந்த விஷயமாக இருந்தாலும் அமெரிக்காவை பார், ஜப்பானை பார் என இண்டர்நெட்டில் தகவலை தேடியெடுத்து பதிவு போடுவதே நமக்கு தொழிலாகிவிட்டது. அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை தரம், நம் நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் இவற்றை ஒப்பிட்டு பார்த்து அதன் பின்பே அது ஒத்து வருமா வராதா என முடிவெடுக்க வேண்டும்.

தமிழக அரசு சூரிய மின் சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும், எளிய மக்களுக்கு அரசு கட்டி கொடுக்கும் வீடுகள் இனி சூரிய ஒளி மின்சார வசதியுடம் பசுமை வீடுகளாக கட்டிக்கொடுக்கப்படும் என கவர்னர் உரையில் குறிப்பிட்டுள்ளது.  அதனால் இனி மக்கள் இது தொடர்பான பதிவுகளை போடுவார்கள். மின்சாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மற்றவர்களை விட எனக்கு அதிகமாக தெரியும்.  

மின்சாரம் இரண்டு வகைப்படும். 1. ஏசி கரண்ட் (Alternative Current). இந்த வகை மின்சாரத்தை தான் நாம் வீடுகளில் உபயோகப்படுத்துகிறோம். இதன் மின் அழுத்தம் (VOLT) 220 V ஆகும். லைட்டிலிருந்து அனைத்து மின் சாதனக்களும் 220V. ஏசி -ல் இயங்குபவை. இவ்வகை மின்சாரத்தை சேமிக்க முடியாது. உதாரணத்திற்கு ஒரு மின்நிலையம் 100 MW மிசாரத்தை உற்பத்தி செய்யும் பொழுது, 60MW மின்சாரம் மட்டுமே உபயயோகப்படுத்தப்பட்டால், மீதி மின்சாரத்தை சேமிக்க முடியாது.

இரண்டாவது வகை டி.சி எனப்படும் டயரக்ட் கரண்ட் (DIRECT CURRENT). இதை நடைமுறையில் பாட்டரி கரண்ட் என சொல்லுவோம். அதாவது சேமிக்கப்பட்டு தேவைப்பட்ட நேரத்தில் உபயோகிக்ககூடியது. தேவைபடாத நேரத்தில் பாட்டரியில் இருக்கும் மீதி மின்சாரம் அடுத்த முறை உபயோகத்திற்கு பயன்படும்.

இனி சூரிய ஒளி மின்சாரத்தை பற்றி பார்க்கலாம். சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை தயாரிக்க கூடியது பி.வி (photovoltaicCell) எனப்படும் சிரிய பாட்டரியாகும். தேவைப்படும் மின்சாரத்திற்கேப பல பாட்டரிகளை இணைத்து பிளேட் வடிவத்தில் அமைக்கப்படுவது தான் சோலார் பேனல் ஆகும். இது 15W 12V, 30W-12V என பல அளவுகளில் தயாரிக்கப்படுகிறது.

இந்த படத்தில் 9 சோலார் பானல்கள் இணைக்கப்பட்டுள்ளது.

சோலார் பானல்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பாட்டரிகளில் சேமிக்க வேண்டும். அதன் பின் பாட்டரி மின்சாரத்தை நம் உபயோகத்திற்கான 220V ஏ.சி மின்சாரமாக மாற்ற வேண்டும். இதற்கு  இன்வெர்ட்டர் என்ற உபகரணம்  பயன் படுகிறது. 

சோலார் பானல்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு சூரிய ஒளியை பொருத்தது என்பதால், மின்சாரம் ஒரே அளவில் இருக்காது. அது பாட்டரியின் சார்ஜிங் அளவை காட்டிலும் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும். அப்படியே அதை பாட்டரியில் சார்ஜ் செய்தால் பாட்டரி கெட்டுவிடும். இதை தடுக்க சார்ஜ் ரெகுலேட்டர் என்ற கருவி வழியாக சோலார் மின்சாரத்தை பட்டரியில் சார்ஜ் செய்ய வேண்டும்.


 சார்ஜ் ரெகுலேட்டர்


12V / 100Ah பாட்டரி

இவ்விதம் பாட்டரியில் சேமிக்கப்பட்ட மிசாரத்தை  இன்வெர்ட்டர் மூலம் 220 வோல்ட் ஏசி மின்சாரமாக மாற்றவேண்டும்.


INVERTER
 
சோலார் பானல், ரெகுலேட்டர், பாட்டரி, இன்வெர்ட்டர் இவற்றை எல்லாம் எப்படி இணைக்கவேண்டும் என்பதை கீழே உல்ள படம் விளக்கும்


இணைப்பை விளக்கும் படம்

ஒரு சிறிய வீட்டிற்கு அல்லது ஒரு வீட்டின் ஒரு பகுதி மின்சார தேவையை சோலார் பவர் மூலம் பூர்த்தி செய்வதைப்பற்றி பார்ப்போம். இதற்கு முதலில் ஒரு நாள் ஒன்றிற்கு எவ்வளவு மின்சாரம் (UNIT) தேவை என்பதையும், ஒரே நேரத்தில் (Maximum Power Consumption at a time)  அதிகப்படியாக எவ்வளவு மின்சாரத்தை உபயோகிப்போம் என்பதை கணக்கிட வேண்டும்.

ஒரு யூனிட் என்பது 1000 வாட் பல்பு ஒரு மணி நேரம் எரிந்தால் அதற்கு தேவைப்படும் மின்சாரம் ஆகும் 100 வாட் என்றால் 10 மணி நேரத்திற்கு தேவைப்படும் மின்சாரம்.

எந்தெந்த உபகரணங்கள் எவ்வளவு வாட் என்பதை தெரிந்து கொள்வோம்.

Fan                                                  60WATTS
Tube Light                                        40WATTS
Television                                          100 WATTS

ஒரு நாளில் உபயோகப்படுத்தப்படும் மின் சாதங்களின் அட்டவணை

டி.வி                     1          100 W    3 மணி நேரம்                    300 வாட்ஸ்
ஃபேன்                 1            60 W     12 மணி நேரம்                  720 வாட்ஸ்
டியூப் லைட்     3            40 W      4 மணி நேரம்                   480 வாட்ஸ்
                                                                       மொத்தம்               1500 வாட்ஸ்

ஒரே நேரத்தில் அதிகப்படியாக உபயோகிக்கும் மின்சாரத்தை கணக்கிடலாம். அதிகப்படி மின்சாரத்தை செலவு செய்வது இரவு 6.30 முதல் 9.30 வரைதான். அதன்படி பார்த்தால் 3 டியூப் லைட்டுகள்( 3 * 40 =120 வாட்ஸ்), டிவி (1* 100= 100வாட்ஸ்), பேன்(1*60= 60 வாட்ஸ்) எல்லாம் சேர்ந்து 280 வாட்ஸ். ஆக நமக்கு தேவை 600 VA திறன் (Capacity) கொண்ட இன்வெர்ட்டர்.

 நாள் ஒன்றுக்கு  1500 வாட்ஸ் அல்லது 1.5 யூனிட் மின்சாரம் தேவை.

சோலார் மின்சாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டியவர்கள் 3 நாட்களுக்கு தேவையான் மின்சாரத்தை பெற்று சேமிக்கும் வகையில் சோலார் பேனல்களையும், பாட்டரிகளையும் இணைக்கவேண்டும்.

நாம் இங்கு ஒரு நாள் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட சோலார் யூனிட்டை பற்றி பார்க்கலாம்.

100 வாட் / 12 வோல்ட் சோலார் பேனல்   1  உத்தேச விலை =  ரூ.20,000 
600 VA இன்வெர்ட்டர்  1    உத்தேச விலை                                         =   ரூ. 4000.    
100 Ah பாட்டரி 2                                                                                            =    ரூ.12,000
சார்ஜ் ரெகுலேட்டர்                                                                                   =     ரூ. 2000
இதர செலவுகள்                                                                                          =     ரூ.7000
ஆக உத்தேச செலவு                                                                                =  ரூ 45,000 -50000 

இது ஒரு நீண்ட கால் முதலீடு.

சோலார் பேனலின் ஆயுட் காலம் 30 ஆண்டுகளுக்கு மேல். கம்பெனி வாரண்டி 20 வருடங்கள்.
பாட்டரி சுமார் 4-5 வருடங்கள் வரும் 

இதை 20 வருடகால முதலீடாக பார்த்தால் 3 தடவை பாட்டரி மாற்ற வேண்டியிருக்கும்.  20 வருட காலத்தில் இன்வெர்ட்டர் பழுது ஏற்பட்டால் மாற்றவோ அல்லது ரிப்பேர் செய்யவோ வேண்டியிருக்கும். பாட்டரி, இன்வெர்ட்டர் வகைக்கு அதிகப்படியாக 40,000 ரூபாயை சேர்த்தால் 90,000 ரூபாய் முதலீடு ஆகும்                                                                                                                 

மாதம் ஒன்றுக்கு 50 யூனிட் என்றால் 20 வருட கால்த்தில் 12,000 யூனிட் மின்சாரம் கிடைக்கும்.

90,000 ரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் உற்பத்தி செலவு ரூ 8 ஆகும்.

இதே கணக்கை 5 வருடம் என பார்த்தால் பாட்டரி மாற்ற வேண்டாம் அப்பொழுது 1 யூனிட்டுக்கு  கிட்டத்தட்ட 16 -18 ரூ உற்பத்தி செலவு வரும்.


மாறனின் தில்லாலங்கடி வேலை!

சென்னை, ஜூன் 3: "தூங்குகிறது சிபிஐ அறிக்கை' (தினமணி, ஜூன் 2, 2011) என்ற செய்தி முழுக்க முழுக்க தயாநிதி மாறனின் வீட்டு தொலைபேசி இணைப்பகம் குறித்த சிபிஐ-யின் ரகசிய அறிக்கையை பிரதானமாகக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில் முக்கியமானது சுமார் ரூ. 440 கோடி இழப்பானது திருட்டுத்தனமாக பயன்படுத்தப்பட்ட 323 ஐஎஸ்டிஎன் இணைப்புகளால் ஏற்பட்டது என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் மீது தயாநிதி மாறன் வெளிப்படுத்தியுள்ள கோபம் நகைப்புக்குரிய கேலிக்கூத்தாகும்.

தயாநிதி மாறனின் தவறுகளைச் சுட்டிக்காட்டி சிபிஐ அளித்த அறிக்கையை யாருமே மறுக்க முடியாது. ஏனென்றால் சிபிஐ-யும் அரசு அமைப்புதான். இரண்டாவதாக இந்த விசாரணையை சிபிஐ தானாகவே மேற்கொண்டு நடத்தியுள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தயாநிதி மாறனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று இதைக் கூற முடியாது.

மூன்றாவதாக, மத்திய அரசின் சிபிஐ அறிக்கைக்கு பதில் அளிக்காமல், அறிக்கையை பட்டவர்த்தனமாக வெளியிட்ட தினமணி மீது குற்றம் காண்கிறார் தயாநிதி மாறன்.


தான் குற்றமற்றவர் என்பதற்கு ஆதாரமாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி பொதுமேலாளர் வி. மீனலோசனி 6-4-2009-ல் அளித்த கடிதத்தைக் காட்டுகிறார் தயாநிதி மாறன்.


இந்தக் கடிதம் தயாநிதி மாறன் எழுதி அனுப்பி பெறப்பட்ட பதில் கடிதமாகும். பிஎஸ்என்எல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரே ஒரு பிஎஸ்என்எல் இணைப்பு மட்டும் தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது; அந்த தொலைபேசி எண் 24371500 ஐஎஸ்டிஎன்-பிஆர்ஏ என்றும் வேறு எந்த பிஎஸ்என்எல் இணைப்பும் இதுவரை அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 4,50,000 அலகுகள் வரை மூன்று ஆண்டுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்றும் அதில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கே அவர் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அவர் பயன்படுத்திய கோடிக்கணக்கான அழைப்புகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவானது. இந்த கடிதத்தின்படி ஒரு எம்.பி.-க்கு அனுமதிக்கப்படும் தொலைபேசி அழைப்புகளின் அளவுக்குக் குறைவாக அவர் பயன்படுத்தியுள்ளார் என்பதே அது. மீனலோசனியின் கடிதத்தின் அடிப்படையில் தினமணியில் குறிப்பிட்டபடி அவரது வீட்டில் நிறுவப்பட்ட 323 பிஎஸ்என்எல் இணைப்புகளும் தவறு என்பதாகும். அது தவறா, சரியா என்பதை இப்போது பார்க்கலாம்

.
சிபிஐ அறிக்கையின்படி குறிப்பிட்ட 323 பிஎஸ்என்எல், ஐஎஸ்டிஎன் இணைப்புகளும் தயாநிதி மாறனின் போட்கிளப் வீட்டில் நிறுவப்பட்டது. ஆனால் மீனலோசனியின் கடிதத்தில் ஒரே ஒரு இணைப்பு அதாவது 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. வேறெந்த இணைப்பும் வழங்கப்படவில்லை என அவர் கூறுவது உண்மையல்ல. இதைக் காட்டி தப்பிக்க நினைக்கும் தயாநிதி மாறனின் திட்டமும் இதனால் தகர்ந்துவிட்டது. மீனலோசனியின் கடிதமும் தவறானது.

சென்னை தொலைபேசி டைரக்டரியில் விவரம் அறிய ட்ற்ற்ல்://210.212.240.244:8181/ஸ்ரீண்ல்க்வ்.ஹள்ல்ஷ் என்ற முகவரி உள்ள இணையதளத்திற்குச் சென்று தயாநிதி மாறன் எம்.பி. என்று டைப் செய்தாலே உங்களுக்கு பின்வரும் விவரங்கள் கிடைக்கும். தொலைபேசி எண் 24371515, தயாநிதி மாறன் எம்.பி., 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028 என்ற முகவரி கிடைக்கும். தொலைபேசி டைரக்டரியில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் 24371515 என்றிருப்பதைக் காணலாம். ஆனால் மீனலோசனி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது 24371500 என்ற தொலைபேசி எண்ணைப் பற்றிய விவரம்தான். ஆனால் அவர் 24371515 என்ற மாறன் வீட்டு தொலைபேசி எண்ணைப் பற்றி குறிப்பிடவில்லை.

இதே இணைய பக்கத்தில் சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ் என்ற எண்ணுடன் தயாநிதி மாறனின் போட் கிளப் முகவரியைப் பதிவு செய்தால் உங்களுக்கு தொலைபேசி எண் 24371500, சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ், வீட்டு முகவரி 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணமலைபுரம், சென்னை - 600 028 என்ற விவரம் இருக்கும். இதிலிருந்தே ஒரே ஒரு பிஎஸ்என்எல் இணைப்புதான் மாறன் வீட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல் என்று தெரியவருகிறது.

24371500 என்ற தொலைபேசி எண் தயாநிதி மாறனின் வீட்டில் இல்லை, அது சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இதன்படி தயாநிதி மாறனின் வீட்டில் இன்று வரை செயல்படும் தொலைபேசி எண் 24371515. இதுவே மீனலோசனி கடிதத்தில் குறிப்பிடும் 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டுமே தயாநிதி மாறனின் வீட்டில் செயல்படுவதாகக் குறிப்பிடும் கடித தகவல் தவறு என்பதை நிரூபிக்க போதுமானது.

24371515 என்ற தொலைபேசி எண்ணானது சாதாரண தொலைபேசி எண் அல்ல. இந்த எண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளை சிபிஐ பட்டியலிட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் சிபிஐ மேற்கொண்ட ஆய்வில் 48,72,027 அலகு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24371515 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதிலிருந்தே எந்த அளவுக்கு மல்டி-மீடியா தகவல் பரிமாற்றம் இந்த இணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.

48 மணி நேரத்திற்குள் தயாநிதி மாறனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக கடிதம் தயாரித்த மீனலோசனி, தொலைபேசி எண் 24371515 என்ற எண்ணை முற்றிலுமாக மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த எண்ணை சிபிஐ ஆய்வுக்குள்படுத்தியுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டு அதை விட்டிருக்கலாம்.

மேலும் இந்த எண் புழக்கத்தில் உள்ளது என்ற விவரம் சென்னை டெலிபோன்ஸ் இணையதளத்தில் இன்றளவும் உள்ளது. இருப்பினும் இது விடுபட்டு போனது எப்படி? ஏனெனில் இந்த எண் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது என்பதாலா? மேலும் பார்க்கலாம்.

"2437' என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணில் தொடங்கும் தொலைபேசி இணைப்பகத்தை சிபிஐ முதலில் கண்டறிந்து, 323 லைன்களைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகமே தயாநிதி மாறனின் வீட்டில் ஏற்படுத்தப்பட்டு, ரகசிய புதைகேபிள் மூலம் சன் டிவி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தது.

சென்னை டெலிபோன்ஸில் உள்ள மொத்த 323 இணைப்புகளும் மொத்தம் 2437 என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒருவேளை மீனலோசனியின் வாதம் சரி என்று ஏற்றுக் கொண்டால், சென்னை வட்டார தொலைபேசி எண்கள் அனைத்துமே 2437 என்ற எண்ணில் தொடங்குவதாக இருக்கும். தயாநிதி மாறனுக்கு மட்டும் ஏன் இப்படி பிரத்யேக, தனிப்பட்ட எண் வழங்கப்பட்டது? அதற்கான காரணத்தை மீனலோசனிதான் விளக்க வேண்டும்.

அல்லது அவரது கடிதத்தை தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் தயாநிதி மாறன்தான் விளக்கி, தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.

மேலும் மீனலோசனி இப்போது நிர்வாகப் பிரிவு பொதுமேலாளர் அல்ல, ஆனால் அவர் இன்னமும் சென்னை டெலிபோன்ஸில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தயாநிதி மாறனின் ஆலோசனையால் ஈடேறவில்லை. குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வீணாகிப்போனது.

 மேலும் சிபிஐ அறிக்கையில் 2437 எனத் தொடங்குவதில் 23 இணைப்புகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு இலக்கங்கள் பின்வரும் எண்களில் அதாவது 2211 முதல் 2213 வரை (3 இணைப்புகள்); 2222; 2233; 2244 முதல் 2246 வரை (3 லைன்); 2255 முதல் 2257 வரை (3 லைன்); 2266 முதல் 2268 வரை (3 லைன்); 2277 முதல் 2279 வரை (3 லைன்); 2288 முதல் 2290 வரை (3 லைன்); 2290; 2299; 2300; 2301; இதன்படி மொத்தம் 300 தொலைபேசி எண்கள் 2437 என்ற முதல் நான்கு இலக்கங்களில் தொடங்கும். மேலும் இந்த நான்கு இலக்கங்களில் தொடரும் பிற எண்கள் 1500-ல் தொடங்கி 1799-ல் 300 இணைப்புகள் முடியும். இந்த எண்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தவில்லை. காரணம் அவை ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன.

ஆனால் அவை எங்கே இருக்கின்றன? தயாநிதி மாறன் 24371515 என்ற தொலைபேசி எண்ணை மறந்தது எப்படி? அது தயாநிதி மாறன் எம்.பி. பெயரில்தானே போட்கிளப் வீட்டு முகவரியில் மார்ச் 2007 முதல் உள்ளது.

இந்த இணைப்பு மூலம் 48 லட்சம் அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை அவர் பயன்படுத்தியிருக்க முடியாது. அதை சன் டிவி பயன்படுத்தியிருக்கிறது என சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இதை மாறன் கவனிக்கவும்.

 இனி, தயாநிதி மாறன் தாராளமாக "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் மீது வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் அது அவரது பதவிக்கு சரியான படிப்பினையை அளிக்கும். உண்மையை மறைக்க முற்படாமல் மெளனமாக இருப்பதுதான் அவருக்கு நல்லது.

  நன்றி:  எஸ். குருமூர்த்தி.      

      

Friday, June 3, 2011

பிறந்த நாள் பரிசாக கருணாநிதிக்கு இரண்டு ஆப்புகள்!

இன்று கருணாநிதிக்கு 88 வது பிறந்த நாள்

இன்று அவருக்கு இரண்டு பிறந்த நாள் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

கருணாநிதியின் மகள் செல்வி. இவருடைய மருமகன் ஜோதிமணி. இவர் மீது காவல்துறை மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையை சார்ந்த நெடுமாறன் என்பவரிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.8 கோடி வாங்கியுள்ளார். ஆனால் நிலமும் வாங்கிக்கொடுக்காமல் பணத்தை மோசடி செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
=======
இன்று சட்டப்பேரவை கூட்டம் நடை பெறுகிறது. கவர்னர் உறையில், புதிய சட்டசபை கட்டியதில் நடைபெற்றுள்ள ஊழலை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
=======
கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் அரசு கேபிள் டிவி கார்பொரேஷன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கொசுறு தகவல்.
அதிரடி வேலையில் ராஜா -கனிமொழி !

எந்த வேலையும் இல்லாமல் தினமும் திகார் ஜெயிலிருந்து, ஏதோ ஆபீஸ் போய்ட்டு வருவது போல, போலீஸ் வேனில் பாட்டியாலா கோர்ட்டுக்கு போய்ட்டு வரும் கனிமொழிக்கும் ராஜாவுக்கும் மிகவும் போர் அடிக்க ஆரம்பித்து விட்டதாம். அதுனால நேரம் போவதுக்கு ஏதாவது செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.

01-06-2011-ம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், "அம்மாவை மன்னித்துவிடு ஆதி" என்ற தலைப்பில் ஆர். சரவணனால் எழுதப்பட்ட கட்டுரையுடன் கனிமொழி, அவர் கணவர், வயதுக்கு வராத அவர் மகன் ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இது பள்ளியில் படிக்கும் இதர மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தனது மகனை அடையாளம் காணும் வகையில் இருப்பதால் அவனுக்கு  மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், அதனால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


 எல்லாம் சரி, மகன் ஆதித்தியா எதற்காக பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்தான்? வந்து கனிமொழியை பார்த்ததால் தானே, கனிமொழியை படம் எடுக்கும் பொழுது, அதில் அவனும் பதிவாகியிருக்கிறான். அம்மாவை பார்க்கவேண்டும் என்றால் திகார் ஜெயில் சென்று பார்க்க வேண்டியதுதானே?

 ==========================

அடுத்ததாக தனது பங்குக்கு ராஜாவும் எதுவும் செய்ய வேண்டாமா? அதனால் 2001 ஆண்டு முதல் 2007 ஆண்டுவரையிலான காலத்தில் தொலை தொடர்பு துறையில் வழங்கப்பட்ட ஸ்பெக்டரம் லைசென்ஸ் விவகாரத்தை சி.பி.ஐ விசாரித்து முடித்த பின்பே தங்கள் மீதுள்ள வழக்கை விசாரிக்க வேண்டும். அதனால் அதுவரை பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தடை கோரும் மனுவை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து வருகிறாராம். இந்த வழக்கில் கைதாகியுள்ள மற்றவர்களையும் தன்னுடன் சேர்ந்து மனு செய்ய ஆதரவு திரட்டுகிறாராம். 

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மாறனும் இவர் போலத்தான் லைசென்ஸ் வழங்கியுள்ளார். அதனால் அவரும், அவர் காலத்தில் பணிபுரிந்த அதிகாரிகளும்  இதில் சிக்கி திகார் ஜெயிலுக்கு வருவார்கள் என்ற நல்ல எண்ணம் தான். 

பாவம் இந்த விஷயத்திலும் பெயர் வாங்க ராஜாவால் முடியவில்லை. இவருக்கு முந்தி "டெஹெல்கா" பத்திரிகை கிழி கிழி என கிழித்து எழுதிவிட்டது. விடுவாரா மாறன்?. அவரும் பதிலுக்கு  அந்த பத்திரிகைக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நீதிபதி பட்டீலின் அறிக்கையிலும் இந்த முறைகேடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் CPIL தனது இதே குற்றச்சாட்டை குறிப்பிட்டு, வழக்கறிஞர் பிரஷந்த் பூஷன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.

மேற்குறிப்பிட்ட இருவர் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர வக்கீல் நோட்டீஸ் அனுப்புவாரா மாறன்?

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். அது போல கொள்ளைக்காரர்கள் இரண்டு பட்டு, ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்தால் நாட்டுக்கு நல்லது தானே?


Thursday, June 2, 2011

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?


2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் 210 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் கருணாநிதியின் குடும்பத்துக்கு சொந்தமான கலைஞர் டிவி யின் 20% பங்கு வைத்திருக்கும் நிர்வாக இயக்குனராகிய சரத்குமாரும் 20% பங்குகளை வைத்திருக்கும் கனிமொழியும் இப்பொழுது திகார் ஜெயிலில் உள்ளனர். மீதி 60% பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் சில நாட்களில் இவர்களுடன் திகார் ஜெயிலில் ஐக்கியமாக உள்ளார். 

இந்நிலையில், அமலாக்க பிரிவு, இந்த ஊழலில் சம்பந்த பட்ட கலைஞர் டி.வி பங்கு தாரர்களின் வங்கி கணக்குகளையும், கலைஞர் டிவியின் வங்கி கணக்கையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் சானலின் லைசென்ஸ்சும் ரத்து செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கடந்த 23-ம் தேதியன்று கம்பெனியின் இயக்குனர் பி.அமிர்தம் ஊழியர்களை வைத்து கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அப்பொழுது, கம்பெனி புதிய இரண்டு சானல்களை துவக்க இருப்பதாகவும், அதற்கான அனுமதியை பெற்றுள்ளதாகவும், அதனால் யாரும் வேலை போய்விடும் என பயப்பட தேவை இல்லை என கூறியுள்ளார்.

தொழில் நுட்ப பிரிவை சார்ந்த பெரும்பாண்மை ஊழியர்கள் தங்கள் பதவி விலகும் கடிதத்தை அளித்துள்ளனர். அவர்களில் சிலர் வேறு இடங்களில் பணிக்கான உத்தரவையும் பெற்றுவிட்டதாக தெரிகிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10% இங்கிரீமெண்ட் மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 1-ம் தேதி வழங்கப்பட்டு வந்த சம்பளம் இப்பிரச்சனைக்கு பின் காலதாமதமாக வழங்கப்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இப்பொழுது எல்லா சானல்களின் செய்திக்கும் இந்த டிவி மைய இடமாக ஆகிவிட்டதால், தங்களின் நம்பகத்தன்மையை பொதுமக்களிடம் இழந்து விட்டதாகவும் நிருபர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

நன்றி : டெகல்கா