Thursday, June 2, 2011

கலைஞர் குடும்பத்துக்கு ஆப்பு மேல ஆப்பு!

கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் தலையில் இப்ப ஏழரை நாட்டு சனியன் ஸ்டேஜ் போட்டு ஆட ஆரம்பிச்சுட்டுது. ஸ்பெக்ட்ரம் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ராஜா, கனிமொழி, மற்றும் பல உயர் மட்ட அதிகாரிகளை திகார் ஜெயிலுக்கு அனுப்பி, வழக்கை நடத்திவரும் "CENTRE FOR PUBLIC INTEREST LITIGATION"  என்ற பொது நல அமைப்பு நேற்று புதிதாக ஒரு இணைப்பு மனுவை  வழக்கறிஞர் " பிரஷாந்த் பூஷன்" மூலம் தாக்கல் செய்துள்ளது. அதில் தயாநிதிமாறன், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கருணாநிதியின் சின்ன வீடு ராசாத்தி அம்மாள் ஆகிய மூவரையும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சேர்த்து, சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்திரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 700 கோடி லஞ்சம்!


2004 மே 23-ம் தேதியிலிருந்து 2007 மே 15-ம் தேதிவரை மாறன் தொலை தொடர்பு துறையின் அமைச்சராக இருந்தார். ஏர்டெல் நிறுவனம் சில சர்க்கிள்களுக்கு லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்திருந்தது. சுமார் 2 வருட காலம் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அப்பொழுது ஏர்டெல், சிவா குரூப் சேர்மன் C. சிவசங்கரனிடம் இருந்தது. அப்பொழுது விதிமுறைகளின் படி வெளிநாட்டவர் 24% பங்குகளை மட்டுமே வாங்கமுடியும். 74% பங்குகளை வாங்கும் வகையில் விதியை மாறன் மாற்றினார். இரண்டு ஆண்டுகாலங்களாக தேவையற்ற தகவல்கள் மற்றும் விபரங்களை கேட்டு இழுத்தடித்து, ஏர்டெல்லுக்கு லைசென்ஸ் வழங்காமல் நெருக்கடியை ஏற்படுத்தினார். அதன் காரணமாக ஏர்டெல் நிறுவனர் சிவசங்கரன் வேறு வழியின்றி, மலேஷியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியராகிய  அனந்த கிருஷ்னன் என்பவருக்கு சொந்தமான "மேக்ஸிஸ் குரூப்"-க்கு 74% பங்குகளை 3390.82 கோடிக்கு விற்றார். அதன் பின் ஏர்டெல் நிறுவனத்திற்கு 14 சர்க்கிள்களுக்கு 3 மாத காலத்திற்குள்ளாக, 22,000 கோடிக்கு வழங்க வேண்டிய லைசென்ஸ்சை 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையான ரூ 1399 கோடிக்கு வழங்கினார். இதனால் 20,600 கோடி அரசுக்கு நஷ்டம். இதற்கு பிரதி உபகாரமாக மாக்ஸிஸ் நிறுவனம், மாறனின் கம்பெனியான  SUN DIRECT - ல் 599.01 கோடியை முதலீடு செய்துள்ளது. அதோடு 23 FM ரேடியோ ஸ்டேஷன்களை நடத்தி வரும் மாறனின் "SOUTH ASIA FM LTD" என்ற நிறுவனத்தில் 100 கோடி முதலீடு செய்துள்ளது. ஆக 700 கோடி ரூபாய் மாறனுக்கு வந்துள்ளது.


கலைஞர் டிவி -ன் 60% பங்குதாரர் தயாளு அம்மாள்  வழக்கில் சேர்க்கப்படவில்லை!

20% பங்குகளை வைத்திருக்கும் சரத் குமாரை குற்றப்பத்திரிகையில் 16- நபராகவும், 20% பங்கு வைத்திருக்கும் கனிமொழியை 17 நபராகவும் சிபிஐ சேர்த்துள்ளது. ஆனால் 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாள், முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் தி..மு.க கட்சியின் தலைவரின் மனைவி என்ற காரணத்தாலேயே அவர் பெயரை சி.பி.ஐ சேர்க்கவில்லை. மேலும் இவர் ஆக்டிவ் பங்குதாரர் அல்ல, இவர் போர்டு மீட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என சி.பி.ஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது தவறு. இவர் முக்கியமான கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார் என்பது மே மாதம் 10-ம் தேதி செய்திதாளில் வெளியாகி உள்ளது.


200 கோடி மதிப்புள்ள வோல்டாஸ் நிலம் 25 கோடிக்கு ராசாத்திக்கு விறகப்பட்ட விவகாரம்.

கருணாநிதியின் சின்ன வீடு ராசாத்தி அம்மாளுக்கு டாட்டா கம்பெனியாகிய வோல்டாசுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த நிலத்தின் மதிப்பு 200 கோடி. ஆனால் அது வெறும் 25 கோடிக்கு ராசாத்தி அம்மாளுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம்,  பதிவு செய்யப்பட்ட நிரா ராடியா தொலை பேசி பேச்சின் மூலம் உறுதியாகிறது. ஆனால் ராசாத்தி அம்மாளையும், டாட்டாவையும் காப்பாற்றும் வகையில் சிபிஐ செயல்பட்டுள்ளது.

எனவே மாறன், ராசாத்தி அம்மாள், தயாளு அம்மாள் மூவரையும் விசாரித்து இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க சி.பி.ஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

2G வழக்கை பொறுத்த வரை அது ஒருவழி பாதை. விசாரிக்க படுபவர்களுக்கு திகார் ஜெயில் உறுதி. ஆக மொத்தத்தில் திருவாரூர் மகாராஜா கருணாநிதி குடும்பத்துக்கு நேரம் சரியில்லை. அதான் ஏழறை நாட்டு சனி பகவான் அவர்கள் தலையில் ஸ்டேஜ் போட்டு "மானாடா மயிலாட" நிகழ்ச்சியை நடத்த துவங்கி விட்டார்!.

அடுத்த ரவுண்ட் ஆட்டத்தை பார்க்கலாம்.


6 comments:

 1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.

  Share

  ReplyDelete
 2. தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்...

  ReplyDelete
 3. ஜெயா மேலுள்ள வழக்குகள் என்னாச்சு., ( நான் திமுக காரன் அல்ல)

  ReplyDelete
 4. சங்கவி said...

  ///தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்////

  இப்பொழுதான் சட்டம் தன் வேலையை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

  ReplyDelete
 5. ஷர்புதீன் said...

  /// ஜெயா மேலுள்ள வழக்குகள் என்னாச்சு., ( நான் திமுக காரன் அல்ல)///

  இந்த கொள்ளைகளையெல்லாம் ஒப்பிடும் பொழுது ஜெயா மீதுள்ள வழக்குகள் எல்லாம் பிக்பாக்கட் கேசு மாதிரித்தான். எல்லா வழக்குகளும் முடிந்து விட்டது. ஒன்றை தவிர. (நான் அதிமுக.காரன் அல்ல)

  ReplyDelete
 6. அது "ஏர்டெல்" இல்லை. "ஏர்செல்" ஆகும். கவனித்து எழுதவும்

  ReplyDelete