Friday, June 3, 2011

அதிரடி வேலையில் ராஜா -கனிமொழி !

எந்த வேலையும் இல்லாமல் தினமும் திகார் ஜெயிலிருந்து, ஏதோ ஆபீஸ் போய்ட்டு வருவது போல, போலீஸ் வேனில் பாட்டியாலா கோர்ட்டுக்கு போய்ட்டு வரும் கனிமொழிக்கும் ராஜாவுக்கும் மிகவும் போர் அடிக்க ஆரம்பித்து விட்டதாம். அதுனால நேரம் போவதுக்கு ஏதாவது செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.

01-06-2011-ம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், "அம்மாவை மன்னித்துவிடு ஆதி" என்ற தலைப்பில் ஆர். சரவணனால் எழுதப்பட்ட கட்டுரையுடன் கனிமொழி, அவர் கணவர், வயதுக்கு வராத அவர் மகன் ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இது பள்ளியில் படிக்கும் இதர மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தனது மகனை அடையாளம் காணும் வகையில் இருப்பதால் அவனுக்கு  மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், அதனால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


 எல்லாம் சரி, மகன் ஆதித்தியா எதற்காக பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்தான்? வந்து கனிமொழியை பார்த்ததால் தானே, கனிமொழியை படம் எடுக்கும் பொழுது, அதில் அவனும் பதிவாகியிருக்கிறான். அம்மாவை பார்க்கவேண்டும் என்றால் திகார் ஜெயில் சென்று பார்க்க வேண்டியதுதானே?

 ==========================

அடுத்ததாக தனது பங்குக்கு ராஜாவும் எதுவும் செய்ய வேண்டாமா? அதனால் 2001 ஆண்டு முதல் 2007 ஆண்டுவரையிலான காலத்தில் தொலை தொடர்பு துறையில் வழங்கப்பட்ட ஸ்பெக்டரம் லைசென்ஸ் விவகாரத்தை சி.பி.ஐ விசாரித்து முடித்த பின்பே தங்கள் மீதுள்ள வழக்கை விசாரிக்க வேண்டும். அதனால் அதுவரை பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தடை கோரும் மனுவை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து வருகிறாராம். இந்த வழக்கில் கைதாகியுள்ள மற்றவர்களையும் தன்னுடன் சேர்ந்து மனு செய்ய ஆதரவு திரட்டுகிறாராம். 

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மாறனும் இவர் போலத்தான் லைசென்ஸ் வழங்கியுள்ளார். அதனால் அவரும், அவர் காலத்தில் பணிபுரிந்த அதிகாரிகளும்  இதில் சிக்கி திகார் ஜெயிலுக்கு வருவார்கள் என்ற நல்ல எண்ணம் தான். 

பாவம் இந்த விஷயத்திலும் பெயர் வாங்க ராஜாவால் முடியவில்லை. இவருக்கு முந்தி "டெஹெல்கா" பத்திரிகை கிழி கிழி என கிழித்து எழுதிவிட்டது. விடுவாரா மாறன்?. அவரும் பதிலுக்கு  அந்த பத்திரிகைக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நீதிபதி பட்டீலின் அறிக்கையிலும் இந்த முறைகேடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் CPIL தனது இதே குற்றச்சாட்டை குறிப்பிட்டு, வழக்கறிஞர் பிரஷந்த் பூஷன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.

மேற்குறிப்பிட்ட இருவர் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர வக்கீல் நோட்டீஸ் அனுப்புவாரா மாறன்?

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். அது போல கொள்ளைக்காரர்கள் இரண்டு பட்டு, ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்தால் நாட்டுக்கு நல்லது தானே?


4 comments:

 1. நீரா ராடியா கூட பேசும் போது யோசிச்சு இருக்கலாம்ல.. ஒட்டுமொத்த திமுக-வுக்கு நேரம் சரியில்லை...


  ஐயா, நான் பிரானூர் பார்டரில் பணிபுரிகிறேன். மின் நகரில் வீடு.

  ReplyDelete
 2. அப்படியா சந்தோஷம். பிரானூர் கணக்கப்பிள்ளை அருணாசலம் பிள்ளை என் சித்தப்பா. இப்பொழுது அவர் இல்லை அவர் பேரன் வக்கீல் பால சுப்பிரமணியன் எனது அக்கா பையன்.

  ReplyDelete
 3. ‎1) A.Raja Caught & Bowled - CBI ---176,000 Crores
  2) K.Kanimozhi Caught & Bowled --CBI ---214 Crores
  3) Dhayanidhi Maran--Run Out (CBI/Media)- 3rd umpire Referral-----440 Crores
  4) Kalanidhi Maran (batting)
  5) Azhagiri (next)

  ReplyDelete