Monday, June 6, 2011

தானே தனக்கு ஆப்பு வைத்துக்கொள்ளும் சோனியா & கோ.......

உண்மையிலேயே இப்பொழுது இந்தியாவுக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது என நினைக்க தோன்றுகிறது. இல்லையென்றால் ஊழல் அரசியல்வாதிகள், ஆப்பை தேடிப்போய்  ஏன் அதில் உட்கார வேண்டும்? 

அன்னாஹசாரே ஒரு பொது நல தொண்டர். அவர் தலைமையில் ஊழல் அரசியல்வாதிகளையும், உயர் அதிகாரிகளையும் தண்டிக்க வகை செய்யும் "லோக்பால்" சட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும் என ஜந்தர் மன்தர் மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அவருடைய போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு பெருகியதை கண்ட சோனியா & கோ, சம்மதித்தது. ஆனால் நிச்சியமாக அதற்கு ஓட்டை இல்லாத கடுமையான் லோக்பால் சட்டத்தை கொண்டு வரும் எண்ணமே கிடையாது. இது எல்லோரும் அறிந்த விஷயம். விவகாரத்தின் சூட்டை தணித்து, பின் அதை நீர்த்து போக வைப்பதே அதன் திட்டம். 

ஒரு பக்கம் பேச்சு வார்த்தை , கமிட்டி அமைத்தல் என சாதகமாக நடந்து கொள்வது போல நடித்தது. மறுபக்கம் அன்னாஹசாரேயின் லோக்பால் கமிட்டி மெம்பர்களாகிய சாந்திபூஷன், பிரஷாந்த்பூஷன், சதோஷ் ஹெக்டே மீது காங்கிரஸ் கட்சி, திக்விஜயசிங் மூலம் ஆதாரமற்ற கூற்றச்சாடுகளை கூறி இயக்கத்தை பலவீனப்படுத்த முயற்சி செய்தது. ஆனால் அம்முயற்ச்சி கைகூடவில்லை. அதன் பின் இப்பொழுது, பிரதமர், நீதிபதிகள், உயர்மட்ட அதிகாரிகளை இதில் உட்படுத்தக்கூடாது என வ்ரைவு கமிட்டியில் அர்சு தரப்பில் முட்டு கட்டை போடுவதுடன், அனைத்து கட்சிகளின் ஆலோசனையை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. இது இந்த லோக்பால் சட்டத்தை அரசு கொண்டுவர விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.


யோகா குரு "ராம்தேவ்" ஊழல் ஒழிப்பு, வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை தேசிய சொத்தாக அறிவித்து அவற்றை இந்தியாவுக்கு கொண்டுவரவேண்டும் போன்ற பல கோரிக்கைகளுக்காக தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலையில்  டெல்லியில் "ராம்லீலா" மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார். இதில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இவர் சத்தியாகிரக போராட்டத்தை துவங்க உஜ்ஜைனியிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்த பொழுது, அவரை வரவேற்க  யூனியன் மினிஸ்டர்கள் கபில்சிபல், சுபோத்காந்த் சாஹி, பிரனாப் முகர்ஜி, பவன்குமார் பன்ஸால் ஆகியோர் விமான நிலையம் சென்று இவரிடம் , உண்ணாவிரதத்தை கைவிடும் படி கேட்டுக்கொண்டனர். அவர் மறுத்து விட்டார். அதனால் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்க்கே சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அவர் இதற்கெல்லாம் மசியாமல், அறிவித்திருந்த படி 4-6-2011 சனிக்கிழமை அன்று காலையில் சத்தியாகிரகத்தை துவங்கினார்.

வெளிநாட்டில் பதுக்கப்பட்டு கருப்பு பணத்தை தேசிய சொத்தாக அறிவிக்கவும், கருப்புபணம் வைதிருப்பவர்களுக்கு மரணதண்டனை அளிப்பது தொடர்பான கோரிக்கையை தவிர அவரின் எல்லா கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் எனவே உண்ணாவிரதத்தை கைவிடும்படி அரசு தரப்பிலிருந்து  இரவு சுமார் 11 மணி அளவுக்கு கடிதம் துங்கிக்கொண்டிருந்த அவரிடம் கொடுக்கப்பட்டது. மேல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால், அவர்  உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டர்.

சுமார் 12 மணி அளிவில் மைதானத்தில் பாபா ராம்தேவுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்லதாகவும், டெல்லியில் 144 தடை உத்த்ரவு பாடப்பட்டுள்ளதாகவும், ராம் தேவ் டெல்லியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக்வும் கூறி, 5 கம்பெனி ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் போலீசாருடன் மைதானத்திற்கு வந்த காவல் துறையினர் தூங்கி கொண்டிருந்த ஆயிரக்கணக்கான முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை தட்டி எழுப்பி வலுக்கட்டாயமாக மைதானத்தை விட்டு வெளியேற்றினர். அத்துடன் தடியடியும் நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதில் சுமார் 150 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. பாபா ராம்தேவையும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்து சென்றனர். பின் ஹரித்வாருக்கு அனுப்பப்பட்டார். 

இவர் விஷயத்திலும் காங்கிரஸ் தனது குள்ள நரி வேலையை காடியது. அமைச்சர்களை விமானநிலயத்திற்கு அனுப்பி பேசியது ஹோட்டலில் சந்தித்து பேசியது எல்லாம், அவரை சம்மதிக்க வைத்து உண்ணாவிரதத்தை நிறுத்தி அவர் மூலம் அன்னா ஹசாரேயின் இயக்கத்தை பலவீனப்படுத்தும் திட்டம் தான். அதைப்போலவே "திக்விஜசிங் மூலம் பாபா ராம் தேவ் 5 நட்சத்திர உண்ணாவிரதம் நடத்துகிறார். தனி விமானத்தில் அவர் வர யார் பணம் கொடுத்தது?  அவரிடம் கொடுக்கப்படும் பணம், செலவுகளுக்கு அவர் கணக்கு கொடுப்பதில்லை. அவர் ஏமாற்றுக்காரர்" என அவரை வசை பாடியது.

இப்பொழுது அவர் யோகாவுக்கு தான் அனுமதி பெற்றிருந்தார். ஆனால் உண்ணாவிரதம் இருந்தார். அதனால் அனுமதி ரத்து செய்யப்பட்டது. அவர் யோகா குருவாக இல்லாமல் அரசியல் செய்கிறார். ஆர்.எஸ்.எஸ், பிஜே.பி ஆதரவுடன் செயல்படுகிறார் என கபில் சிபல் குற்றம் சட்டுகிறார்.

யோகா வகுப்புக்குதான் அனுமதி பெற்றிருந்தார், ஆனால் அவர் உண்ணாவிரத போராட்டம் நடத்த்போகிறார் என்பது தெரிந்து தானே கபில் சிபல் உட்பட பல அமைச்சர்கள் விமான நிலையம் சென்று பேசினார்கள்?  சனிக்கிழமை இரவு 11 மணிவரையிலும் அவர் செய்தது சட்டம் விரோதமாக அரசுக்கு தெரியவில்லை. ஆனால் 12 மணிக்கு ஞானோதயம் ஏற்பட்டது ஏன்? அவரை வைத்து அன்னாஹசாரேயின் இயக்கத்தை பலவீனப்படுத்த முடியவில்லை என்ற ஆதங்கம் தான்.

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. பாபா ராம்தேவுடன் ஒன்று படாமல் இருந்த அன்னாஹசாரே இயக்கத்தினர், அரசின் ஜனநாயக படுகொலை செயலுக்கு பின்,   இப்பொழுது  கருப்பு பணம்- ஊழல் விவகாரத்தில் ஒன்று சேர்ந்து விட்டார்கள். அதுமட்டுமல்லாமல் அரசுக்கு ஊழலை ஒழிக்கவோ அல்லது கருப்பு பணத்தை வெளிநாட்டிலிருந்து கொண்டு வரவோ விருப்பம் இல்லை என்ற உண்மையை  தெளிவாக உணர செய்த்விட்டது.

ஏற்கனவே, லோக்பால் வரைவு மசோதாவை தயார் செய்வதில், காலதாமத்தையும், முட்டுக்கட்டையையும்  அரசு போடுவதால் அதிருப்தி அடைந்திருந்த அன்னாஹசாரே இயக்கத்தினர், இனி வரைவு மசோதா கூட்டங்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

பாவம்! காங்கிரசின் நிலை பரிதாபமாக ஆகிவிட்டது. காமன்வெல்த் கேம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், மாறன் ஊழல் என ஊழல்களில் திளைத்து, மக்கள் அதிருப்ப்தியை சம்பாதித்துவிட்ட காங்கிரஸ் இப்பொழுது ஒட்டு மொத்த மக்களின் எத்ர்ப்புக்கு ஆளாகியுள்ளது

கருப்பு பணத்தை அரசு பணமாக அறிவிக்கவேண்டும், கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற பாபா ராம் தேவின் விருப்பம் நிறைவேறினால், முதலில் தூக்கில் தொங்குபவர்கள்  சோனியா காந்தியும், அவரது வாரிசு ராகுல் காந்தியும் தான். இவ்விருபரும் ரஷ்ய உளவுத்துறையிடமிருந்து கைக்கூலி வாங்கி சுவிஸ் வங்கியில் போட்டுள்ளார்கள். இந்த விபரம் ஆதாரத்துடன் வெளிவந்து பலவருடங்கள் ஆகியியும் இதுவரை சம்பந்தப்பட்டவர்களோ, அல்லது காங்கிரஸ் கட்சியோ மறுப்பு தெரிவிக்க வில்லை. இது சம்பந்தமான் எனது பதிவை பார்க்க இதை கிளிக் செய்யவும்.

எப்படியோ சொந்த செலவில் காங்கிரஸ் தனக்கு ஆப்பு வைத்துக்கொள்வதில் ந்மக்கு சந்தோஷமே!

1 comment:

  1. ஏதோ ........கொஞ்சம் சீக்கிரமா இது நடக்கவேண்டும் என்பதே நமது விருப்பம் .......

    ReplyDelete