Saturday, June 11, 2011

பிரதமருக்கு ஒரு பகிரங்க கடிதம்........தொடர்ச்சி.

எனது முந்தைய கடிதத்தின் தொடர்ச்சி இது. தொடரும் கேள்விகள் கீழே.

8. இப்பொழுது உங்கள் கட்சிக்காரர்கள் புதிதாக அறிவுறை வழங்க ஆரம்பித்துள்ளார்கள்."In my opinion, religious gurus should stay away from the political field" என யூனியன் மினிஸ்டர் ஜோதிரடித்யா சிந்தியா அவர்கள் கூறியுள்ளார். அப்படி என்றால் மத தலைவர்கள் அரசியலுக்கு வரவோ அல்லது நாட்டு நலனுக்காக அரசின் குறைபாடான செயலை சுட்டி காட்டவோ இந்த நாட்டில் உரிமை கிடையாதா? இந்திய அரசியலமைப்பு சட்டம் அப்படி எதுவும் தடை செய்திருக்கிறதா? 

9. பாபா ராம்தேவின் கருப்பு பணத்திற்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்திற்கு பின்னால் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிண்டு பரிஷத் ஆகியன இருக்கிறது. அதனால் தான் உண்ணாவிரத போராட்டத்தை பலாத்த்காரமாக நிறுத்தினோம் என உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். வேடிக்கையாக இருக்கிறது. பி.ஜே.பி. சட்ட பூர்வமாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி. மற்ற இயக்கங்கள் (VHP, RSS) இதுவரை அரசால் தடை செய்யப்படவில்லை. அப்படி இருக்கும் பொழுது அவை, பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்திற்கு பின்னால் இருந்தாலும் தப்பேதும் இல்லையே? 

10. தங்கள் அமைச்சர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்த பொழுது அரசுக்கு பாபா ராம் தேவ் குண்டர், ஏமாற்றுக்காரர் என்று தெரியாதா? ஏன் அவர் மீது முன்பே நடவடிக்கை எடுக்கவில்லை?  அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு பெருகி வந்த ஆதரவை கண்டு அஞ்சி, அந்த இயக்கத்தை பின்னுக்கு தள்ளும் சூழ்ச்சியாக பாபா ராம்தேவையும், அவர் உண்ணாவிரதத்தையும் பயன்படுத்த போட்டிருந்த உங்கள் திட்டத்திற்கு அவர் உடன்படாததால் தான் இப்பொழுது உங்கள் அரசு இவ்விதம் நடந்து கொள்கிறது என்ற பொதுவான குற்றச்சாட்டை மறுக்க முடியுமா?

11. இந்த சம்பவத்திற்கு பின் பாபா ராம்தேவ், அரசின் வன்முறைக்கு எதிராக தேசிய படையை உருவாக்குவேன் என கூறினார். அவர் என்ன கூறினார் என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது பத்திரிகையில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. 

I appeal that 20 young men from every district should come here. We will train them in both shahstra (Vedas) and shastra (weapons),” Ramdev, who is continuing his hunger strike, told his followers here.

The yoga guru said, “We will prepare 11,000 men and women so that next time we don't lose any battle at the Ramlila Maidan in Delhi.”

முழு செய்தியையும்  படிக்க இதை கிளிக் செய்யவும். எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. அதோடு கருணாநிதி புண்ணியத்தால் இந்தியையும் படிக்க முடியாமல் போய்விட்டது. எனவே "shastra" என்பது சாஸ்திரம் என பொருள்படும் என நினைக்கிறேன். கூகுளில் இதற்கு பொருள் என்ன என்று தேடிய பொழுது "
A treatise for authoritative instruction among the Hindoos; a book of institutes; especially, a treatise explaining the Vedas." என விளக்கம் கிடைத்தது. அப்படி இருக்கும் பொழுது  ஆயுத பயிற்சி என எப்படி பொருள் கொண்டார்கள் என புரியவில்லை. அப்படியே இருந்தாலும் அதை தற்காப்பு பயிற்சி என்று தான் கருத முடியும்.  ஒவ்வொருவரும் மற்றவர்களின் தாக்குதலிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்வதை நம் நாட்டு சட்டமும் ஏற்றுக்கொண்டுள்ளது. 

12.  வெளிநாட்டு வங்களில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ராம்ஜெத்மலானி மற்றும் சிலரால் அரசு மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தங்கள் அரசோ DTAA ( Double Tax Avoidance Agreement) பற்றி பேசுகிறது. அதாவது சட்டவிரோதமாக இந்தியர்களால் வெளிநாடுகளில் சேமிக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்திற்கான வரியை மட்டும் வசூலிக்க வழி செய்யும் ஒப்பந்தம். அதாவது வரியை வசூலிப்பதன் மூலம் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக ஆக்கும் ஒப்பந்தம் இது. இதன் மூலம் எப்படி கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து அரசு கஜனாவில் சேர்க்க முடியும்?

13. கருப்பு பணத்தை வெளிநாட்டில் போட்டிருப்பவர்கள் மூன்று ரகமானவர்கள். a) ஊழல் மூலம் சம்பாத்தியம் செய்த பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள அரசியல்வாதிகள். b) போதைப்பொருட்கள் விறபனை, ஆயுதக்கடத்தல், தீவிரவாத செயல் மூலம் பணம் சேர்த்துள்ள கிரிமினல் குற்றவாளிகள். c). வருமான வரி செலுத்துவதை தவிர்க்க வெளிநாட்டில்  கருப்பு பணமாக வைத்திருக்கும் தொழில் அதிபர்கள். கருப்பு பனத்தை வெளிநாட்டில் வைத்திருக்கும் அரசியல்வாதிகளையும், அவர்களின் நெருங்கியவர்களையும் பாதுகாக்கவே அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாக செயல்படுகிறது என நினைக்க வேண்டியுள்ளது. 

14. "வெளிநாட்டு வங்கியில் கருப்பு பணத்தை போடுவது தேசதுரோகம். இக்குற்றத்தை செய்பவர்களின் கருப்பு பணம் உட்பட அவர்களின் குடும்பத்தினர் பெயரிலுள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் மரண தண்டனையும் வழங்கப்படும் என அறிவித்து அதற்கான ஓட்டை இல்லாத சட்டத்தை கொண்டு வரவேண்டும். இப்படி ஒரு சட்டம் வரும் பட்சத்தில், இச்சட்டத்தை காட்டி எல்லா நாடுகளிலிருந்தும்  கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயரையும், பணம் பற்றிய விபரத்தையும் கேட்க முடியும். தர மறுக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் அந்த நாட்டின் நீதிமன்றத்தை அணுக முடியும். ஒத்துழைக்க மறுக்கும் நாடுகளுடன் இருக்கும் அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதுடன், அந்நாட்டோடு இருக்கும் உறவுகளை ஒட்டு மொத்தமாக துண்டித்துக்கொள்ளலாம். அதனால் இந்தியாவிற்கு எவ்வித இழப்பும் ஏற்பட போவதில்லை. இதை செய்ய அரசுக்கு தயக்கம் ஏன்?
 

2 comments:

  1. அவர விட்டுடாதீங்க ......

    ReplyDelete
  2. koodal bala said...

    அவர விட்டுடாதீங்க ////

    மாங்கு மாங்குன்னு நான் எழுதி என்ன பிரயோஜனம்? எல்லோரும் ஒன்னு சேரணும்!

    ReplyDelete