Tuesday, June 14, 2011

லேப்டாப் உதவியுடன் விவசாயம் செய்வோம்.........

இந்த பதிவை எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது எது என்பதை முதலில் தெரிந்து கொள்வது நல்லது. விவசாயம் சம்பந்தமாக நேற்று இரவு கூகிளில் சர்ச் செய்த பொழுது நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அதில் குறிப்பாக நெல் சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் ஆஸ்திரேலியா பற்றிய விபரங்கள், வியப்பை தந்ததுடன் நம் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது.

ஆதி காலம் தொட்டே நெல் சாகுபடியில் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வரும் தென் மாநிலங்களில் இன்று சாகுபடியில் நஷ்டம், விளை பொருளை சேமிக்க, விற்க வாய்ப்பில்லாத நிலை என தொடரும் சோகங்கள். அரசாங்கம் அரசாங்கமாக செயல்படாமல் வணிக நிறுவனமாக செயல்படுவதே காரணம். விளை நிலங்கள் குடியிருப்புகள், தொழில்சாலைகளாக மாறும் அவலம்!.

ஆனால் அரிசி விலையோ, நெல் கொள்முதல் விலையை காட்டிலும் பலமடங்கு அதிகம். இதைப்போலவே வட மாநிலத்தின் நிலையும். விவசாயிகளின் நலனில் துளியும் அக்கறை இல்லாத, கமிஷன் மண்டிகாரர்கள், ஏற்றுமதியாளர்களுடன் நெருங்கிய உறவுள்ள சரத்பவார் விவசாய அமைச்சராக, கூட்டணி தர்மத்தின் படி பதவியிலிருப்பது முக்கிய காரணம்.

சுமார் 70% இந்தியா கிராமங்களால் ஆனது. விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு கல்வி அறிவு அதிகம் தேவை கிடையாது. அனுபவ அறிவும் கடுமையான உழைப்புமே அதன் மூலதனம். எனவே விவசாயத்தின் மூலமே இந்த கிராம மக்களின் பொருளாதாரம் மேன்மை அடையும்.விவசாயத்தில் ஆஸ்திரேலியர்களின் செயல்பாடு மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. நெல் சாகுபடியை அவர்கள் தொழில் நுட்ப அறிவை பயன்படுத்தி தொழிற்சாலையாகவே நடத்துகிறார்கள்.
Aerial Machinery Experienced agricultural pilots use satellite guidance technology to distribute seeds and other inputs across a rice bay with precision and accuracy. This works hand in hand with precision farming.
Remote Sensing Spectral imaging obtained from satellites and aircrafts assist planning and management of the farm system. Farmers can work out the exact capabilities of their farm by identifying enterprises to suit each area.

GPS (Global Positioning Systems) and Precision Farming: The use of satellite networks assist in precisely matching crop needs with crop requirements
GIS (Geographical Information Systems) GIS is used to organise geographical information which is then stored digitally on a data  base.                                                                                                
 Computerised Whole Farm Design and Laser Landforming The use of computer aided design (CAD) and laser technology to design efficient farm irrigation systems. Land forming using laser landforming ensures the most efficient use of water. Farmers have precise control over the flow of water on and off the land.

நெல் சாகுபடியை செப்டம்பர் - மார்ச் மாத கோடைகால் பயிராகவே செய்கிறார்கள். சாகுபடியை துவங்கு முன் தங்கள் நிலம் நெல் சாகுபடிக்கு உகந்ததாக இருக்கிறதா என்பதை நிர்ணயம் செய்து கொள்கிறார்கள். இவர்கள் சுழ்ற்சி முறையில் பயிர் செய்வதே இதற்கு காரணம். ஒவ்வொரு சாகுபடிக்கும் நிலம் எவ்வாறு தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்கு கடுமையான தரக்கட்டுப்பாடு நெறிமுறைகள் உண்டு                

லேசர் தொழில் நுட்பத்தின் மூலம்  நிலம் சமப்படுத்தப்படுகிறது.

களைகள் வராமலிருக்கவும், பூச்சிகள் பயிரை தாக்காமலிருக்கவும் தகுந்த ஆய்வுக்கு பின் தேவையான பூச்சி கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது.

விதைகளை விதைப்பதற்கு முன் 24 மணி நேரம் நீரில் ஊற வைக்கப்படுகிறது.

அதன் பின் நீர் வடிக்கப்பட்டு விதைகள் 24 மணி நேரம் வைக்கப்படுகிறது.

ஒரு ஹெக்டேருக்கு (1ஹெக்டேர் = 2.47 ஏக்கர்) 120 கிலோ கிராம் விதை தேவை. ஒரு ஏக்கருக்கு 45-50 கிலோ.

இதன் படி ஒரு சதுர மீட்டருக்கு 300 பயிர்கள் இருக்கும்.

தயார் நிலையில் இருக்கும் நிலத்தில் ஹெலிகாப்டர் மூலம் விதை தெளிக்கப்படுகிறது. இதற்கு விண்வெளி வழிகாட்டு தொழில் நுட்பம் (satellite guidance technology) பயன்படுத்தப்படுகிறது. இதனால் துல்லியமாக விதை நடவு செய்யமுடியும்.


விதைப்பு முடிந்த பின் விதைகள் முளைத்து நிலத்தில் வேர்களை பரப்பும் வரை தேவைக்கு ஏற்ப 5-25 செ.மீ உயரத்திற்கு தண்ணீர் இருக்கும்படி நீர் பாய்ச்சப்படுகிறது.


ஜனவரி- பிப்பிரவரி மாதத்தில் பயிரில் பூக்கள் தோன்றும். இச்சமயத்தில் அதற்கு நைட்ரஜன், பாஸ்பேட் சத்துக்கள் தேவை. எனவே தேவையான அளவு மேற்கண்ட உரங்கள் கணக்கிடப்பட்டு போடப்படுகிறது.


மார்ச்-ஏப்ரல் மாதத்தில் வயலில் இருக்கும் நீரை அப்படியே தேங்க விட்டு விடப்படுகிறது. இது முற்றிலும் பயிரால் உறிஞப்படுகிறது. அதன் பின் நெற்கதிர்கள் நன்கு முற்றி காய்ந்த பின் அறுவடை செய்யப்படுகிறது.


அறுவடைக்கு அறுவடை இயந்திரத்தையும் அதன் மூலம் பிரிக்கப்படும் நெல்லை வயலிலேயே டிரக்கில் நிரப்பப்படுகிறது.


இவ்வாறு டிரக்கில் நிறப்பபடும் நெல் சேமிப்புக்கு தேவையான சகல வசதிகளும் கொண்ட சேமிப்பு கிடங்குக்கு எடுத்து செல்லப்படுகிறது.
சேமிப்பு கிடங்கு.

அரிசி ஆலை
அங்கு நன்கு காய்ந்து அரிசியாக ஆக்கும் நிலைக்கு வந்த பின் அரிசி ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உமி மட்டும் நீக்கப்பட்டு, தவிடுடன் கூடிய பழுப்பு அரிசியாக தயார் செய்து விற்பனைக்கு அனுப்பபடுகிறது. அதோடு, பழுப்பு அரிசியில் இருக்கும் தவிட்டை நீக்கியும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.


ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் அரிசி உலக தர சான்று பெற்றுள்ளது. 

ஆண்டு ஒன்றுக்கு 25 மில்லியன் டன் அரிசியை வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நெல் சாகுபடிக்கோ அல்லது அரிசி ஏற்றுமதிக்கோ அரசாங்கம் எவ்விதமான மானியமும் வழங்குவதில்லை.


RICE MARKETING BOARD FOR THE STATE OF NSW என்பது நெல்லை சேமித்து வைக்கும் வசதியை விவசாயிகளுக்கு வழங்குகிறது.


SUN RICE என்ற நெல் சாகுபடியாளர்களின் கூட்டுறவு அமைப்பு அரிசி உணவு பதார்த்தங்களை தயார் செய்தல் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வேலைகளை செய்கிறது.


RICE GROWERS ASSOCIATION OF AUSTRALIA  என்ற நெல் விவசாயிகளின் அமைப்பு  கொள்கை முடிவெடுத்தல், உதவி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளது.


இவர்கள்  நெல் பயிரிடும்  ஒரு விவசாய குடும்த்தினர்!  இந்நிலை நம் நாட்டில் என்று வரும்?  கம்ப்யூட்டர் விஞ்ஞானிகளே நீங்கள்தான் இதை செய்ய முடியும். செய்வீர்களா?

2 comments:

 1. அவர்களின் விவசாய முறைமை ஆச்சரியமானதாக உள்ளது.. உண்மையில் தொழில்நுட்ப அபிவிருத்தி எங்கும் வியாபித்துள்ளது கீழைத்தேய நாடுகள் இன்னும் அந்தளவுக்கு முன்னேறாதது துர்ப்பாகியமே....

  இறுதியாக ஐயா கேட்டிருக்கும் வினாவில் தொக்கி நிற்கும் ஏக்கம் எனக்கும் உண்டு.........

  ReplyDelete
 2. கறுவல் said...

  அவர்களின் விவசாய முறைமை ஆச்சரியமானதாக உள்ளது.. உண்மையில் தொழில்நுட்ப அபிவிருத்தி எங்கும் வியாபித்துள்ளது கீழைத்தேய நாடுகள் இன்னும் அந்தளவுக்கு முன்னேறாதது துர்ப்பாகியமே....

  இறுதியாக ஐயா கேட்டிருக்கும் வினாவில் தொக்கி நிற்கும் ஏக்கம் எனக்கும் உண்டு.......////

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete