Monday, June 6, 2011

பரபரப்பு செய்தி

சனிக்கிழமை இரவு ராம்லீலா மைதானத்தில் போலீசார் நுழைந்து கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பாபா ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை ஒடுக்கிய ஜனநாயக படுகொலை செயல் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை கால பென்சு இன்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் செய்திகளின் அடிப்படையில் தானாகவே இந்த வழக்கை " SUO MOTU" ஆக பதிவு செய்துள்ளது.

மத்திய அரசு சார்பாக உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை, டெல்லி போலீஸ் கமிஷ்னர் பி.கே. குப்தா, டெல்லி அரசின் தலைமை செயலாளர் பி.கே. திரிபாதி, மற்றும் டெல்லி நிவாகம் ஆகியோருக்கு இச்சம்பவம் தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



No comments:

Post a Comment