Thursday, October 13, 2011

கூடாங்குளம் அணுமின் நிலையம் இலங்கைக்கு மின்சாரம் வழங்கவே!

கூடாங்குளம் அணு மின்நிலைய ப்ணியை முடித்து உற்பத்தியை துவங்க தமிழக முதல்வர் உதவவேண்டும் என மன்மோஹன் சிங் முதல்வருக்கு மறுபடியும் கடிதம் எழுதியுள்ளார்.  இம்மின் நிலையம் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை தீர்க்கும் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாலும், உண்மையிலேயே  கூடாங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்  இலங்கைக்கு வழங்கவே முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 ஏற்கனவே கடல் மூலம் கேபிள் அமைத்து இலங்கைக்கு தமிழகத்திலிருந்து மின்சாரத்தை கொண்டு செல்ல கடலில் ஆய்வு பணிகளை மத்திய அரசு துவக்கிவிட்டது.  இத்திட்டம் தடைபட்டுவிட்டால் இலங்கைக்கு மின்சாரம் வழங்க முடியாதே என்ற ஆதங்கத்தில் தான் மன்மோஹன் சிங்  கடிதம் எழுதியுள்ளார்.

இன்று கூடாங்குளத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், சுமார் 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி, ஒப்பந்த தொழிலாளர்களையும், 700 மேற்பட்ட விஞ்ஞானிகளை அணுமின் நிலையம் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இச்செய்தி தமிழ் பத்திரிகளிலும், தொலைக்காட்சிகளிலும் இருட்டடிப்பு செய்ய பட்டுள்ளது. 24/ 7 என்.டி.டி.வியில் மட்டுமே வந்துள்ளது.

கூடாங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினர்க்கு ஆதரவு கொடுப்போம்.


8 comments:

  1. போராட்டத்திற்கு ஆதரவிற்கு நன்றி தோழர் .மறியல் போராட்டம் தொடந்து நடைபெறுகிறது ...மேலும் இன்று மாலைக்குள் அணு உலையை தற்காலிகமாக மூட அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் 20000 பேர் அணு உலையை முற்றுகையிட இருக்கிறார்கள் ...நன்றி !

    ReplyDelete
  2. // கூடாங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இலங்கைக்கு வழங்கவே முடிவு செய்யப்பட்டுள்ளது. //

    மிக தவறான தகவலை மிக அழகாக சொல்லி உள்ளீர்கள். அப்பாவி மக்களை போராட தூண்டும் சில விஷமிகளை நினைத்தால் நெஞ்சம் கொதிக்கிறது. என்ன செய்ய இது இந்தியாவின் விதி.

    ReplyDelete
  3. இருதயம் said...

    // கூடாங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இலங்கைக்கு வழங்கவே முடிவு செய்யப்பட்டுள்ளது. //

    மிக தவறான தகவலை மிக அழகாக சொல்லி உள்ளீர்கள். அப்பாவி மக்களை போராட தூண்டும் சில விஷமிகளை நினைத்தால் நெஞ்சம் கொதிக்கிறது. என்ன செய்ய இது இந்தியாவின் விதி//

    இது தவறான் செய்தி என எதைவைத்து சொல்கிறீர்கள்?

    இங்கிருந்து கேபிள் மூலம் இலங்கைக்கு மின்சாரம் வழங் மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான கல் ஆய்வு பணி கப்பல் மூலம் நடை பெற்ற விபரம் உங்களுக்கு தெரிய்வில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பு கிடையாது

    மேலும் இந்த ஆய்வை எதிர்த்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததும் பொய்யா?

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத்தகவல்கள் உண்மையா அல்லது பொய்யா என்பதை தெரிந்து கொண்டு பின் சொல்லுங்கள்.

    கூடாங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மத்திய அரசுக்கு சொந்தமானது. எனவே அது நேஷ்னல் கிரிட்டில் இணைக்கப்பட்டு பின் இலங்கைக்கு வழங்கப்படும். இதுதான் உண்மை.

    ReplyDelete
  4. koodal bala said...

    போராட்டத்திற்கு ஆதரவிற்கு நன்றி தோழர் .மறியல் போராட்டம் தொடந்து நடைபெறுகிறது ...மேலும் இன்று மாலைக்குள் அணு உலையை தற்காலிகமாக மூட அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் 20000 பேர் அணு உலையை முற்றுகையிட இருக்கிறார்கள் ...நன்றி //

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. @ திரவிய நடராஜன் : ஐயா , தங்கள் பதிலுக்கு நன்றி. நம்முடைய மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் நாம் உள்ள போது , எப்படி நாம் இலங்கைக்கு கொடுக்க முடியும்?. நீங்கள் தகவல் அறியும் சட்டத்தில் அறிந்து கொண்ட ஆதாரங்களை இப்படி பதிவுகளுடன் வெளியிடலாமே... ( இருந்தால்)

    ReplyDelete
  6. // இச்செய்தி தமிழ் பத்திரிகளிலும், தொலைக்காட்சிகளிலும் இருட்டடிப்பு செய்ய பட்டுள்ளது. 24/ 7 என்.டி.டி.வியில் மட்டுமே வந்துள்ளது. //

    புதிய தலைமுறை செய்திகளில் தெளிவாக காட்டுகிறார்கள். www.puthiyathalaimurai.tv

    ReplyDelete
  7. அடப்பாவிங்களா .... இது வேற நடக்குதா..????.

    ReplyDelete