Monday, December 12, 2011

இவர்களால் தான் இந்தியா வாழ்கிறது!

தியாகத்திற்கு கண்ணீர் அஞ்சலி

ரெம்யா ராஜன், கோட்டயம், கேரளா.

வினீதா, கோட்டயம், கேரளா.


 சென்ற வெள்ளிக்கிழமை இரவு கல்கத்தாவில்,  AMRI மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் புகையால் ஏற்பட்ட மூச்சு திண்றி 91 பேர் இறந்து போனார்கள். அதில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் நான்கு பேர். இவர்களில் ரெம்யா, வினிதா என்ற நர்ஸ்கள், பொது வார்டில் டூட்டியில் இருந்தனர். அங்கு இருந்த 9 நோயாளிகளில் 8 பேர்களை காப்பாற்றினர். கடைசி நபரை காப்பாற்றும் முயற்சியின் போது அவர்களும் மரணமடைந்தனர். நர்ஸிங் பயிற்சி முடித்து  சில மாதங்களுக்கு முன் வேலையில் சேர்ந்த அந்த இளம் பெண்களின் உயிர் தியாகத்திற்கு நம் கண்ணீர் அஞ்சலி.

இந்தியா வாழ்வது சேரிகளில்!

காந்தி எதை வைத்து " இந்தியா கிராமங்களில் வாழ்கிறது" என்று சொன்னாரோ அது நமக்கு தெரியாது. ஆனால், பூகம்பம், வெள்ளம், சுனாமி, விபத்து என்று வரும் பொழுது அன்றாடம் கூலி வேலை செய்யும் சேரி மக்கள் தான் உயிரை பணயம் வைத்து காப்பாற்ற வருகிறார்கள் என்பது நிதர்சனம். இந்த ஆஸ்பத்திரியில் தீ விபத்து ஏற்பட்ட பொழுது, அருகாமையில் உள்ள சேரியை சேர்ந்த இளைஞர்கள் தான் உள்ளே சென்று நோயாளிகளில் பலரை காப்பாற்றினர். காம்பவுண்ட் கதவு பூட்டப்பட்டிருந்ததாலும், காம்பவுண்ட்க்கு மேல் பல அடி உயரத்திற்கு கம்பியிலானான முள் வேலி போடப்பட்டிருந்ததால், அதை தாண்டி உள்ளே நுழையா முடியாததால், காம்பவுண்ட் சுவரை உடைத்து உள்ளே சென்று, பூட்டியிருந்த அறைகளின் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே சென்று நோயாளிகளை காப்பாற்றினர்.  பாராளுமன்றத்திற்கும், சட்ட சபைக்கும் செல்ல வேண்டியவர்கள் சேரியில்! சேரியில் வசிக்க கூட தகுதியற்றவர்கள் அங்கே இருக்கிறார்கள்!. இந்தியாவின் கஷ்ட காலம்.  விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதை கண்காணிக்காமல் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி கொண்டு ஆஸ்பத்திரியை செயல்பட அனுமதித்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமே இந்த கொடூர மரணங்களுக்கு காரணம். ஊழல்வாதிகளை நடுத்தெருவில் நிறுத்தி சுட்டு கொல்ல வேண்டும்.


3 comments:

  1. ரம்யாவும், வினிதாவும் இறக்கவில்லை. அவர்கள் உடல்தான் அழிந்து விட்டது. மற்றபடி அவர்கள் தங்களின் மட்டற்ற தியாகத்தின் மூலம் பிறப்பெடுத்து, ஒவ்வொரு நல் இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மட்டற்ற தியாகிகளுக்கு என் இதயத்தில் கோவில் கட்டுவதை நான் பெருமையாய்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. ───────────────────╫───────────────────────╫╫──
    ───╫╫╫╫╫───╫──────────────────────────────╫──╫─
    ──╫─╫───╫──╫────╫╫╫╫╫╫╫─────╫╫╫╫╫────╫╫───╫──╫─
    ───╫────╫──╫─╫──╫────╫──────╫──╫────╫──╫───╫─╫─
    ╫╫╫╫╫╫╫╫╫╫╫╫─╫─╫─╫───╫╫╫──╫╫╫╫╫╫╫╫─╫─╫──╫──╫─╫─
    ─╫──────╫──╫─╫─╫─╫───╫──╫─╫────╫───╫─╫──╫──╫─╫─
    ──╫╫╫╫╫╫───╫─╫──╫────╫──╫──╫╫╫╫─────╫────╫╫──╫─
    ──────────────╫────────╫───────────────────────
    ───────────────╫╫╫╫╫╫╫╫────────────────────────

    இவர்கள் பிறந்த மண்ணில் நாமும் இருக்கிறோம் என்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  3. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    எனது ப்ளாக்கில்:
    பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
    புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
    A2ZTV ASIA விடம் இருந்து.

    ReplyDelete