Friday, March 30, 2012

என்ன நடக்குது இந்தியாவில்?

பாகிஸ்தானுக்கு வலியப்போய் மின்சாரம் கொடுக்கும் மன்மோகன் சிங்.


இந்தியாவில் கன்னியா குமரியிலிருந்து காஷ்மீர் வரை எங்கும் மின் வெட்டு. காரணம் மின் உற்பத்தி குறைவு. அதனால் அணுமின் உலைகளை நிறுவப்போகிறோம் எனக்கூறி, அமெரிக்காவுடன் செய்து கொண்ட 123 அணு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 80 அணுமின் உலைகளை நிறுவ முட்டுக்கட்டையாக இருக்கும் கூடாங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு மக்கள் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.இந்நிலையில் ஏதோ இந்தியாவில் மின்சாரம் உபரியாக இருப்பது போல, அணு சக்தி பாதுகாப்பு மாநாடுக்கு சியோலுக்கு சென்றிருந்த மன்மோகன் சிங், பாகிஸ்தானுக்கு 5000 மெகா வாட் மின்சாரம் வழங்க தான் தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் பிரதமரிடம் கூறியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், பாகிஸ்தான் மின்சாரம் வேண்டும் என இந்தியாவிடம் கேட்கவே இல்லை ! கஷ்ட காலம்.