Friday, March 30, 2012

என்ன நடக்குது இந்தியாவில்?

பாகிஸ்தானுக்கு வலியப்போய் மின்சாரம் கொடுக்கும் மன்மோகன் சிங்.


இந்தியாவில் கன்னியா குமரியிலிருந்து காஷ்மீர் வரை எங்கும் மின் வெட்டு. காரணம் மின் உற்பத்தி குறைவு. அதனால் அணுமின் உலைகளை நிறுவப்போகிறோம் எனக்கூறி, அமெரிக்காவுடன் செய்து கொண்ட 123 அணு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 80 அணுமின் உலைகளை நிறுவ முட்டுக்கட்டையாக இருக்கும் கூடாங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு மக்கள் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.இந்நிலையில் ஏதோ இந்தியாவில் மின்சாரம் உபரியாக இருப்பது போல, அணு சக்தி பாதுகாப்பு மாநாடுக்கு சியோலுக்கு சென்றிருந்த மன்மோகன் சிங், பாகிஸ்தானுக்கு 5000 மெகா வாட் மின்சாரம் வழங்க தான் தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் பிரதமரிடம் கூறியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், பாகிஸ்தான் மின்சாரம் வேண்டும் என இந்தியாவிடம் கேட்கவே இல்லை ! கஷ்ட காலம்.


6 comments:

  1. நமது பிரதமருக்கு இந்திய குடிமகன்கள், இந்தியா என்றல் மட்டும் வாய் ஊமை ஆகி விடும்..யார் கண்டார், சத்தமில்லாமல் இந்தியாவை ஏதாவது ஒரு அமெரிக்க,ஐரோப்பிய நாட்டிற்கு விற்றாலும் விற்று விடுவார்..

    ReplyDelete
  2. திரவியம் சார்,

    செய்தி படிக்கும் போதும் இது என்னய்யா கூத்தா இருக்கேன்னு நினைத்தேன் , உண்மையில் இவங்களுக்கு எல்லாம் மூளை இருக்கா இல்லை வேலை செய்யாதானு ஒரே டவுட்டா இருக்கு. இது போதாதுனு பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சர் பெட்ரோல் வேணும்னு இந்தியாக்கிட்டே கேட்டு இருக்கோம்னு பேட்டிக்கொடுக்கிறார். அதையும் பரிசீலிக்க இருப்பதாக செய்தி.

    பெட்ரோல் ,மின்சாரம் எல்லாம் இங்கே தாராளமா இருக்கா , நம்ம மக்களுக்கு தான் இல்லைனு சீன் போடுறாங்கள அரசியல்வாதிங்க.

    ReplyDelete
  3. Sir, அவ்வளவு தூரத்தில் இருந்து இங்கு மின்சாரம் கொண்டு வர முடியாது என்றும் அவ்வாரே 1000 மெகா வாட் மின்சாரம் கொண்டு வந்தால், அதில் 300 முதல் 500 வரை மின்சாரம் மட்டுமே இங்கு வந்து சேரும் எனவும், 500 மெகா வாட் மின்சாரம் வரை வீணாக கசிவு ஏற்படும் என்பதாலும் இவ்விசயம் தொடர்பாக தமிழக முதல்வர் அவர்களிடம் பேசிய பின்னரே பிரதமர் அவர்கள் அவ்வாறு கூறியுள்ளார் எனவும், மேலும் பாகிஸ்தானுக்கு 5000 மெகா வாட் கொடுப்பதால் தமிழகத்துக்கு கூடன்குளம் மூலமாக கிடைக்கப்பெறும் 1900 மெகா வாட் மின்சாரமும் தமிழகத்துக்கே கிடைக்க வழி வகை செய்யுமாறு பிரதமரை முதல்வர் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் உள்ளதே. அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள் அது உண்மையா?

    ReplyDelete
  4. நாடோடிMar 30, 2012 08:40 AM

    //நமது பிரதமருக்கு இந்திய குடிமகன்கள், இந்தியா என்றல் மட்டும் வாய் ஊமை ஆகி விடும்..யார் கண்டார், சத்தமில்லாமல் இந்தியாவை ஏதாவது ஒரு அமெரிக்க,ஐரோப்பிய நாட்டிற்கு விற்றாலும் விற்று விடுவார்..//

    உண்மைதான்

    ReplyDelete
  5. ////செய்தி படிக்கும் போதும் இது என்னய்யா கூத்தா இருக்கேன்னு நினைத்தேன் , உண்மையில் இவங்களுக்கு எல்லாம் மூளை இருக்கா இல்லை வேலை செய்யாதானு ஒரே டவுட்டா இருக்கு. இது போதாதுனு பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சர் பெட்ரோல் வேணும்னு இந்தியாக்கிட்டே கேட்டு இருக்கோம்னு பேட்டிக்கொடுக்கிறார். அதையும் பரிசீலிக்க இருப்பதாக செய்தி.

    பெட்ரோல் ,மின்சாரம் எல்லாம் இங்கே தாராளமா இருக்கா , நம்ம மக்களுக்கு தான் இல்லைனு சீன் போடுறாங்கள அரசியல்வாதிங்க.////

    எல்லாமே இங்கு தட்டுப்பாடுதான். குரூடு ஆயில் வெளிநாட்டிலிருந்து வாங்கி பெட்ரோல் தயாரிக்கிறோம். அதைப்போலவே மின்சாரமும் தேவைக்கு ஏற்ற அளவில் உற்பத்தி இல்லை. 60% உற்பத்தி. ஆனால் மன்மோகன் சிங் வாரி வழங்குகிறார். இவர் யாருக்கு பிரதமர்? கேட்டால் இது ராஜ தந்திர நடவடிக்கை என்பார்கள்.

    ReplyDelete
  6. அரசியல்வாதிApr 1, 2012 09:16 PM

    /// Sir, அவ்வளவு தூரத்தில் இருந்து இங்கு மின்சாரம் கொண்டு வர முடியாது என்றும் அவ்வாரே 1000 மெகா வாட் மின்சாரம் கொண்டு வந்தால், அதில் 300 முதல் 500 வரை மின்சாரம் மட்டுமே இங்கு வந்து சேரும் எனவும், 500 மெகா வாட் மின்சாரம் வரை வீணாக கசிவு ஏற்படும் என்பதாலும் இவ்விசயம் தொடர்பாக தமிழக முதல்வர் அவர்களிடம் பேசிய பின்னரே பிரதமர் அவர்கள் அவ்வாறு கூறியுள்ளார் எனவும், மேலும் பாகிஸ்தானுக்கு 5000 மெகா வாட் கொடுப்பதால் தமிழகத்துக்கு கூடன்குளம் மூலமாக கிடைக்கப்பெறும் 1900 மெகா வாட் மின்சாரமும் தமிழகத்துக்கே கிடைக்க வழி வகை செய்யுமாறு பிரதமரை முதல்வர் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் உள்ளதே. அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள் அது உண்மையா? /////

    அப்பட்டமான பொய். நேஷ்னல் கிரிட் என்பது காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை எல்லா மாநிலங்களின் மின் தொடர்புகளை இணைக்கும் ஒரு வலையாகும். மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உயர் மின் அழுத்தம் கொண்டதாக இருக்கும். அதாவது 110 கிலோ வோல்ட்டிலிருந்து, அதற்கும் மேற்பட்ட அளவில் இருக்கும். எனவே இந்த உயர் அழுத்த மின்சாரத்தை நேஷ்னல் கிரிட் மூலமாக தொலை தூரம் மின் அழுத்த இழப்பு இன்றி பிற மாநிலங்களின் மின் இணைப்புக்கு அனுப்ப முடியும். அதன் பின் மின்சாரவாரியத்தால் 11 கிலோ வோல்ட் மின்சாரமாக மினழுத்தத்தை குறைத்து இறுதியில் தெருவுக்கு தெரு வைக்கப்பட்டிருக்கும் டிரான்ஸ்பார்மர்கள் மூலம் 220 வோல்ட் மின்சாரமாக மாற்றி வீடுகளுக்கு வழங்கப்படுகிறது.

    அடுத்து கூடாங்குளம் அனுமின் நிலையத்தின் இரு பிரிவுகளின் உற்பத்தி திறன் 1000 X 2 ( 2000 M W) ஆகும். இதில் 20% அனுமின் நிலையம் இயங்க தேவை. முழு உற்பத்தி இருந்தால் 800 X 2 = 1600 MW மின்சாரம் கிடைக்கும். இதுவரை எனத அனுமின்நிலையமும் 40-50% மேல் அதன் திறனில் உற்பத்தி செய்ததாக சரித்திரம் கிடையாது. ஆக இரு யூனிட்டுகளிலிருந்து அதிக பட்சமாக 800 மெகா வாட் கிடைதாலே ஆச்சரியமான விஷயம்.

    கூடாங்குளம் அணுமின் நிலையம் கேரளாவின் மின் தேவைக்காக முடிவு செய்யப்பட்டது. கேரள மக்கள் மற்ரும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் தமிழ்நாட்டில் துவங்க முடிவு செய்யப்பட்டது. இதன் உற்பத்தியின் ஒரு பகுதியை கடலில் கேபிள் போட்டு அதன் மூலம் இலங்கைக்கு வழங்க, இலங்கையுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கேபிள் போடும் பணிக்கான சர்வேயும் முடிந்துவிட்டது. எனவே இந்த அணுமின் நிலையம் கேரளா மற்றும் இலங்கைக்காகவே அமைக்கப்பட்டுள்ளது.இதுதான் உண்மை நிலை

    ReplyDelete