Thursday, June 28, 2012

சோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு - ஒரு ஒப்பீடு

தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற, சோலார் சிஸ்டம் அமைத்து தரும் கம்பெனிகளின் ரேட்டை ஒப்பிட்டு ஒரு பட்டியல் கீழே கொடுத்துள்ளேன். அடுத்த பதிவில் இந்த 1KW சிஸ்டத்தை நீங்கள் அமைப்பது எப்படி என்பதை Do-It-Your self என்ற ரக பதிவை பதிவிடுகிறேன்.

Tuesday, June 26, 2012

நான் ஒன்னும் வெத்து வேட்டு இல்லை!

" இவன் என்னமோ கன்ஸ்யூமர் கோர்ட் அப்படி இப்படின்னு புருடா விடுறான்" அப்படி என்று யாரும் தப்புக்கணக்கு போட்டுவிட கூடாது என்பதற்காக அத்தாட்சியை கீழே தந்துள்ளேன்.Sunday, June 24, 2012

பாட்டரி கம்பெனியுடன் ஒரு தர்ம யுத்தம் !

முன் பதிவில் குறிப்பிட்டபடி TEDA -வின் சோலார் பிரிவின் துணை பொது மேலாளருக்கு மெயில் அனுப்பியுள்ளேன் பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையில், HBL பாட்டரி கம்பெனி நமக்கு தேவையான எல்லா சாதனங்களையும்  உற்பத்தி செய்வதை கூகுல் ஆண்டவர் உதவியுடன் இணையத்தில் மேய்ந்த பொழுது அறிய முடிந்தது. அவர்களின் பிராந்திய அலுவலகம் சென்னையில் இருக்கிறது. அவர்களின் இ-மெயில் முகவரிக்கு தகவல் கேட்டு ஒரு மெயில் அனுப்பினேன். அந்த மெயிலின் நகலை கீழே கொடுத்துள்ளேன்.

From: thiraviam natarajan <thiravianatarajan@gmail.com>
Date: Thu, Jun 14, 2012 at 5:25 PM
Subject: request for price list
To: chennai@hbl.in

Thiravia Natarajan
Chennai

HBL Power System Ltd,
Regional Office,
Chennai

Respected Sir,
As I have to choose solar lighting materials such as PV Modules, Inverters, Solar Tubular Batteries for my clients to execute solar units as per their requirements, I request you kindly mail me the price list for your below mentioned product with technical specification as early as possible

1. PV Modules - all wattage & volt
2. battery
3. inverter - Off- grid upto 2KW

Thanking you
thiravianatarajan
14-06-2012
 நானும் பொறுமையாக 20-ம் தேதிகாலை வரையில் இருந்தேன். அதற்குமேல் சும்மா இருக்க முடியவில்லை. அவர்களின் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது, குண்டை தூக்கி தலையில் போட்டார்கள். மேற்படி இ-மெயில் முகவரியை யாரும் உபயோகிக்கவில்லை என்றார்கள். அப்படி என்றால் ஏன் அதை உங்கள் கம்பெனி வெப்சைட்டில் போட்டிருக்கிறீர்கள்? என கேட்டதற்கு பதில் மவுனம்தான். எரிச்சலில் கீழ் கண்ட மெயிலை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினேன். பாருங்கள்.

Sent: Wednesday, June 20, 2012 11:17 AM
Subject: Fwd: request for price list

As I have not received any response from your Chennai office for my e-mail, I forward it to you. I think your Chennai branch has reached the sales target and so they are not willing to exceed it.

Thanking you

Thiravia Natarajan
20-06-2012

எனது மெயிலை அவர்கள் பார்வேர்டு செய்திருக்கிறார்கள். அதன் பின் தனிநபர் பெயரில் உள்ள மெயில் ஐடி-யிலிருந்து ஒரு மெயில் வந்தது. அதையும் அதற்கு பின் நடைபெற்ற மெயில் தொடர்புகளையும் கீழே கொடுத்துள்ளேன்.

On Wed, Jun 20, 2012 at 3:05 PM, Rajesh <pdrajeshkumar@hbl.in> wrote:
please give your m no.

regards

RAJESH KUMAR P D
95000 22960
 -------------------------------------------------------

From: thiraviam natarajan <thiravianatarajan@gmail.com>
Date: Wed, 20 Jun 2012 15:54:02 +0530
Subject: Re: request for price list

You have got my e-mail id. it is sufficient to respond my mail dated 14-06-2012.

Thiravia Natarajan

-----------------------------------------------

On Wed, Jun 20, 2012 at 4:11 PM, <pdrajeshkumar@hbl.in> wrote:
Sir,

We need to know that you r an end user or an dealer & which area & for which application & to offer you an better service.
Kindly reveal your identity.

Regards

Rajesh kumar p d
Sent from BlackBerry® on Airtel
 --------------------------------------------------
From: thiraviam natarajan <thiravianatarajan@gmail.com>
Date: Wed, 20 Jun 2012 16:49:30 +0530
Subject: Re: request for price list

I cant understand your procedure. I have got more than 25 years experience as contractor & consultant in electrical field. I know very well business procedure. List price means, the maximum price ie MRP for the product and will be supplied to the party with out any question. If the party is a dealer or supplier or contractor, some % discount will be given depends upon the quantity of the order placed. 

In my case, I have asked only the list price for your product.

All the items mentioned in my e-mail is for solar power system application.

Thiravia Natarajan.
----------------------------------------------------

From: thiraviam natarajan <thiravianatarajan@gmail.com>
Date: Wed, 20 Jun 2012 17:18:39 +0530
Subject: Re: request for price list
call me 2xxxxxxxx

On Wed, Jun 20, 2012 at 5:12 PM, <pdrajeshkumar@hbl.in> wrote:
Which area your business is & we have only DP price list. MRP is 40% on the dp & what is the problem in revealing your identity. Without your business details we don't have the habit of throughing the pricelist just like that, HBL policy is different & unique. It shouldn't effect the existing dealer.

Regards

Rajesh kumar P D
SALES HEAD- CSB-HBL-TN & PY
Sent from BlackBerry® on Airtel
-------------------------------------------
On Wed, Jun 20, 2012 at 5:38 PM, <pdrajeshkumar@hbl.in> wrote:
Thanks for the enquiry & HBL policy don't allow to reveal the prices to end user & for better service please contact the nearest dealers


Regards

Rajesh kumar P D
Sent from BlackBerry® on Airtel

 From: thiraviam natarajan <thiravianatarajan@gmail.com>
Date: Wed, Jun 20, 2012 at 6:13 PM
Subject: Fwd: request for price list
To: contact@hbl.in
Dear sir,
During phone conersation you have told me that the MRP of your product will not be given to the end user. As per per law in each & every product must be labelled with MRP & Date of manufacturing. Also you have told me if you give it to the consumer or end user , it will affect your existing dealers. That means your dealers are selling your product over the MRP  and you are supporting your dealers for their illegal practice by not giving MRP to the end user.

Just like giving affidavit you have mailed me with the same content as"HBL policy don't allow to reveal the prices to end user"

As your company policy is against the law, I have to file a consumer case in District Consumer Court against you and your company. I will send legal notice to both of you tomorrow by e-mail
Thanking you
Thiravia Natarajan
20-06-2012
Copy to HBL Head Office.
------------------------------------------------------

Ganesan mganesan@hbl.in
Jun 22 (3 days ago)

to me
Dear Sir,

Thanks for your enquiry and comments, kindly forward your details and contact no if any for further process. And we enclosed our interdiction letter for your reference, pls do the needful.

Reg,
M.Ganesan,
HBL Power Systems Ltd,
Chennai,
09500022915.
044 – 4297 0300 (10 Lines)
 ---------------------------------------------
கடைசியாக சீன்-க்கு புதிதாக ஒரு நபர் வந்திருக்கிறார். "மறுபடியும் ஆரம்பத்திலே இருந்தா?" என சினிமாவில் வடிவேலு அலறுவதை போல அலறிய நான் இவருக்கு பதில் அனுப்பவில்லை.

நுகர்வோர் வழக்கு தொடர முதலில் அவர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதற்கு கம்பெனியின் தலைமை அதிகாரி மற்றும் பிராந்திய அலுவலகத்தின் தலைமை அதிகாரியின் பதவியின் பெயர் தேவை. இதை கேட்பதற்காக  பிராந்திய அலுவலகத்தை தொடர்பு கொண்ட பொழுது, எதற்காக இந்த விபரம் தேவை என கேட்டார்கள். " உங்கள் விஷயத்தை டீல் செய்தவர் வேலையை ரிஸைன் செய்துவிட்டார்" என கூறியவர் நான் கேட்ட தகவலை தராமலே போனை கட் பண்ணி விட்டார்.

தர்ம யுத்தம் இன்னும் தொடரும் ................Friday, June 22, 2012

நான் ஒதுங்கி போனாலும் என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்?

அது என்னமோ எனக்கு ஒரு ராசி. நான் ஒதுங்கி போனாலும் சிலர் வலிய வந்து என்னிடம் "எனக்கு ஆப்பு வையுங்கள்" என ஆர்வத்துடன் பிரச்சனை செய்கிறார்கள். பி. எஸ். என். எல், அரசுடமையாக்கப்பட்ட வங்கி, பஜாஜ் டூ வீலர் டீலர் என பலர் மீது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்ற ஆயுதத்தை எடுத்து அவர்களுக்கு ஆப்பு வைத்தேன். வெற்றியும் பெற்றேன். அதற்கு பின் சலிப்பு ஏற்பட்டதால் எவனும் எக்கேடு கெட்டு போறான். நமக்கென்ன?" என்று கண்டுக்காமல் விட்டு விட்டேன். ஆனால் விதி யாரை விட்டது?

"சூரிய ஒளி மின்சாரம்" என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்தவுடனே என் மனதில் ஒரு குரல் ரிங்காரமிட்டது "மக்கா! இந்த பதிவை எழுதப்போற, அப்ப எதையாவது நோண்ட, பிரச்சனை வரும். வேண்டாம். சிவனே என்று சும்மா இரு" என்றது

அதெல்லாம் ஒன்னும் வராது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து எழுதினேன். பல நண்பர்கள்  என்னிடம் சோலார் சிஸ்டம் அமைக்க என்ன செலவாகும் என விபரம் கேட்டு மெயில் செய்தார்கள். என்னை ஒரு மனுஷன் என்று மதித்து என் பதிவை படிப்பவர்கள் மற்றும் என்னிடம் விபரம் கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமையல்லவா? அதனால்  விபரம் சேகரிக்க தொடங்கினேன்.

முதல் கட்டமாக Tamil Nadu Energy Development Agency -ஐ தொடர்பு கொண்டு அவர்களின் அங்கீகாரம் பெற்ற சப்ளையர்கள் / டீலர்களின் விபர பட்டியலை பெற்றேன். அதை பதிவில் வெளியிட்டுள்ளேன். அதைப்போலவே மத்திய அரசின் (MNRE) பட்டியலையும் வெளியிட்டுள்ளேன்.

அடுத்த கட்டமாக தமிழக அரசிடம் பதிவு செய்துள்ள டீலர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களால் அமைத்து தரப்படும் சோலார் சிஸ்டத்தில் என்னென்ன சாதனங்கள் உண்டு? தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர், உத்திரவாத விபரம், அவற்றின் விலை ஆகியவற்றை பற்றி கேட்ட பொழுது, இவற்றிற்கு எல்லாம் பதில் சொல்லாமல், மொத்த தொகையையும் மானியத்தொகையையும் மட்டுமே கூறினார்கள்.

எனவே அவர்கள் எல்லோருக்கும் இ-மெயில் முகவரிக்கு மேற்குப்பிட்ட விரங்களை கேட்டு மெயில் செய்தேன். பலர் பதில் அனுப்பவே இல்லை. ஒரு நபர் மட்டும் "Thanks for your enquiry. But please note that we wont be in a position to give you details about the individual products make or their prices. The products shall be supplied in our company name. We always quote to client after understanding their requirements very well. Therefore, kindly give your contact details so that our representative can get in touch with you personally." என வெளிப்படையாக பதில் கொடுத்துள்ளார்.

அவருக்கு நான் அனுப்பிய பதில் "Received your reply for my mail. Really I surprised to hear from you that you are not in a position to give me details about the individual products make or their price. You have also stated that the products which will be installed, will be labelled as your company product.

You are not a private solar system installation contractor. You have registered as a supplier cum installation company with Tamil Nadu Energy Development Agency.

You are liable to install only the certified product by MNRE , in your solar power system execution work. The beneficiary has full right to know the make, model & price for individual items. Secondly after installation, in case of any fault in SPV modules or in Inverter or in Battery we have to contact the authorised service center of the product.  The company must have a broad service network in Tamil Nadu. So we have to think a lot before choosing a company for execution.

Thirdly make, model, price of individual items are essential for filling application form to get sanction from TEDA. Please see the form which is available in their web site." இதற்கு பின் இந்த நபர் பதிலே எழுதவில்லை

ஆக மொத்தத்தில்  நமக்கு சிஸ்டம் அமைத்துக்கொடுக்க அங்கீகாரம் பெற்ற இந்த நபர்கள், சாதனங்களின் விலை, அமைப்பதற்கான கூலி, லாபம் இவற்றையெல்லாம் சேர்த்து என்ன தொகை வருமோ அதைப்போல இரு மடங்கு வசூலிக்கிறார்கள். அதாவது 100% அதிகப்படியான லாபம்.

சட்டப்படி அரசு மானியம் பெறவேண்டுமானால், MNRE -யிடமிருந்து தர சான்று பெறப்பட்ட கம்பெனியின் குறிப்பிட்ட சாதனங்களையே இந்த நபர்கள் உபயோகிக்க வேண்டும். மானியம் அனுமதிப்பதற்கு முன் இதை தமிழ்நாடு அரசின் TEDA அதிகாரிகள் சரிபார்க்கவேண்டும். எனவே இந்த சாதனக்களின் பட்டியல் அவர்களிடம் இருக்கும். அதனால் இந்த பட்டியலை கேட்டு TEDA -ன் சோலார் பிரிவுக்கு மெயில் அனுப்பினேன்.


"தமிழ்நாடு அரசின், வீட்டு தேவைக்கான 1KW சோலார் சிஸ்டத்தை அமைக்க தேவைப்படும் சாதனங்களாகிய சோலார் பேனல்கள், சார்ஜ் கண்டிரோலர், இன்வெர்ட்டர்,  பவர் கண்டிஷ்னர், பாட்டரி ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்களின் எந்தெந்த தயாரிப்புகள்(Make) மற்றும் மாடல்கள்(Model) தங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதற்கான பட்டியலை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசின் "MNRE"-ன் சான்று அல்லது அங்கீகாரம் பெற்ற பொருட்களின் பட்டியலையே தாங்கள் பின்பற்றுவதாக இருப்பின் அந்த பட்டியலின் நகலை எனக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்."

இந்த மெயிலுக்கு கீழ்கண்டவாறு பதில் அனுப்பினர்
"I can’t view this file, Pl send in the proper format"
நான் மீண்டும் அனுப்பிய பதில் கீழே தந்துள்ளேன்.


Dear sir, 
I have typed my mail using unicode font ( E-Kalappai). it is universal one. Anybody can read it without installing any font. Two weeks back I have sent one mail to you using the same unicode and got reply from you. Ok leave it.
I wish to know the make & models of PV Modules (solar panels), Charge Controllers, Inverters, Power Conditioners & Batteries which are approved by you for Solar Power Pack (1KWp) ( Serial No.2 of your list). If you are following the list of  product make & models which are certified & approved by Ministry of New and Renewable Energy, please send me the same list.

இதுவரை பதில் வரவில்லை. 


மீண்டும் சந்திப்போம்....................

Monday, June 18, 2012

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி.10

இதுவரை பதிவிட்ட 9 பகுதிகளை படித்ததின் மூலம், சோலார் மின்சாரம் என்றால் என்ன? அது எப்படி நமக்கு தேவைப்படும் 230V ஏ.சி மின்சாரமாக மாற்றப்படுகிறது, அதற்கு என்னென்ன உபகரணங்கள் தேவை, அவற்றின் வேலை என்ன என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இறுதியாக சில விஷயங்கள்.

1. இது நீண்ட கால முதலீடு.

2. இந்த சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பி.வி. மாடுல்ஸ் எனப்படும் சோலார் பேனல்களின் ஆயுட்காலம் 25 ஆண்டுகளுக்கு மேல். 15 ஆண்டுகளுக்கு 90% செயல்படும் திறனுக்கும்,20 ஆண்டுகாலம் வரை 80% செயல் திறனுக்கும் உத்திரவாதம் உண்டு.

3. அடுத்து சார்ஜ் கண்டிரோலர். இதற்கும் சில வருட கால உத்திரவாதம் உண்டு. ஸ்டாண்டார்டு கம்பெனி தயாரிப்பாக இருந்தால் சர்வீஸ் சென்டரில் ரிப்பேர் செய்யும் வசதி உண்டு.அல்லது புதிதாக வாங்கி மாட்டவேண்டும். இது முற்றிலும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனம்.

4. இன்வெர்ட்டர். இது எளிதில் பழுதாகாது. அப்படி ஆனால் சர்வீஸ் சென்டரில் கொடுத்து சரி செய்துகொள்ளலாம்.

5. பாட்டரி. இதற்கும் 2-3 வருட உத்திரவாதம் உண்டு. பொதுவாக 4-5 ஆண்டுகள் உழைக்கும்(என் அனுபவத்தில்). அதற்கு பின் புது பாட்டரியை இணைக்க வேண்டும்.

6. 1KW மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் சிஸ்டத்தை அமைக்க அரசின் அங்கீகாரம் பெற்ற டீலர்களின் அதிக பட்ச ரேட் ரூ.2,50,000/- இதில் மானிய தொகை ரூ. 81,000/- ஐ கழித்தால் நாம் செலவு செய்ய வேண்டிய தொகை ரூ.1,70,000/- ஆகும். டீலர்கள் கூறும் ரேட் பேரத்திற்கு உட்பட்டது.

7. கடன் வசதி தேவை என்றால் வங்கியை அனுகலாம்.

8. இந்த சோலார் சிஸ்டம் நாள் 1-க்கு 5000W அல்லது 5 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது.

9. நீங்கள் அமைக்க விரும்பினால் "Tamil Nadu Energy Development Agency" தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். அவர்களின் வெப்சைட்டை பார்வையிட இதை கிளிக் செய்யவும்.

10. நான் ஏற்கனவே அரசின் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்களின் பட்டியலை முன்பே கொடுத்துள்ளேன். அதில் லாண்டர்ன் விளக்கு, சோலார் தெரு விளக்கு, வீட்டிற்கான சிறிய அளவிலான சிஸ்டம், சோலார் வாட்டர் ஹீட்டர், 1KW சோலார் பவர் சிஸ்டம் ஆகிய அனைத்துக்குமாக சேர்த்து கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் ஆகும். இந்த பட்டியலில் 4-வது காலத்தில் "PRODUCT" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எந்ததெந்த  உற்பத்தியாளர்களுடைய 4-வது காலத்தில் "Solar Photovoltaic Systems"  என குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவர்கள் மட்டுமே 1KW சிஸ்டத்தை அமைக்க அனுமதி பெற்றவர்கள். வரிசை எண்:57,58,67-73-ல் குறிப்பிடப்பட்டவர்கள(9 நபர்கள்) மட்டுமே.

அடுத்த பதிவில் உங்களுடைய சந்தேகங்களையும் அதற்கான விளக்கத்தையும்  தொகுத்து  போடலாம் என நினைக்கிறேன். எனவே உங்கள் சந்தேகங்களை என்னுடைய இ-மெயில் முகவரிக்கு எழுதுங்கள்.

thiravianatarajan@gmail.com

மீண்டும் சந்திப்போம்.................

Friday, June 15, 2012

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9

மத்திய அரசின் MNRE -ன் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களின் விற்பனை பிரதிநிதிகளின் முகவரியை தெரிந்து கொள்ள கீழே  லிங்க் கொடுத்துள்ளேன். இது பி.டி.எஃப் பைல்.இதிலிருந்து உங்கள் ஊரில் அல்லது அருகாமையில் உள்ள டீலர்களை அணுக உங்களுக்கு வசதியாக இருக்கும். இந்த லிங்க்-கை கிளிக் செய்யவும்
https://dl.dropbox.com/u/85335284/MNRE%20approved%20dealers%20list%20for%20solar%20lighting.pdf

இனி மத்திய அரசின் இந்த மானிய திட்டத்தை தமிழ்நாடு அரசு எப்படி செயல்படுத்துகிறது என்பதை பார்க்கலாம். 1 வாட்ஸ்-க்கு பாட்டரியுடன் கூடிய சிஸ்டத்திற்கு ரூ.81 /-, பாட்டரி இல்லாத சிஸ்டத்திற்கு ரூ.57 /- என்ற கணக்கில் மானியம் வழங்குகிறது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்க அரசின் "Tamil Nadu Energy Development Agency தான் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இவர்களால் அங்கிகரிக்கப்பட்ட டீலர்களின் விபரப்பட்டியலின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

இந்த பட்டியலில், இந்த திட்டத்திற்காகவே உருவான லெட்டர் ஹெட் கம்பெனிகளும் இருக்கலாம். இவர்களிடம் தரமான பொருட்களையோ அல்லது நியாயமான விலையையோ எதிர்பார்க்க முடியாது. அதோடு இந்த சிஸ்டம் 25 ஆண்டுகளுக்கு மேல் செயல்படக்கூடியது. பி.வி மாடுல்ஸ்-களுக்கு 25 ஆண்டு கால உத்திரவாதம் உண்டு. இதை லெட்டர்ஹெட் கம்பெனிகளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. எனவே டீலர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனம் வேண்டும். நீங்கள் சோலார் சிஸ்டத்தை நிறுவ முடிவு செய்த பட்சத்தில் எனக்கு மெயில் செய்யுங்கள். இந்த பட்டியலில் உள்ள சிறந்த நிறுவனங்கள் பற்றி தகவல் தருகிறேன். இதை பதிவில் தெரியப்படுத்த கூடாது.

அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...........

 
Thursday, June 14, 2012

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8

மத்திய அரசு "Ministry of Renewable Energy - (MNRE)" அமைச்சகத்தின் மூலம் சூரிய ஒளியை சக்திக்கு பயன்படுத்த பொது மக்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கி வருகிறது.நேரடியாக இத்திட்டத்தை எல்லா மாநிலங்களிலும் National Bank for Agricultural and Rural Development - NABARD" மூலமாகவும், மாநில அரசுகளின் மின்சக்தி மேம்பாட்டு ஏஜன்ஸிகளின் மூலமாகவும் செயல்படுத்துகிறது. அது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

நிதி உதவி தேவைப்படுபவர்கள் நபார்டு வங்கியை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மானிய தொகை நீக்கி மீதியுள்ள தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் கடனாக வழங்கப்படும்.  MNRE-யால் அங்கீகாரம் வழங்கப்பட்ட சப்ளையர்களிடமிருந்தே வாங்கவேண்டும். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளையும் கடன் வழங்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.

MNRE-யால் அங்கீகரிக்கப்பட்ட மாடல்கள், அவற்றின் விலை, அதற்கு கிடைக்கும் மானியம் இவற்றை விளக்கும் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாடல்களுக்கு அதில் உபயோகப்படுத்தப்படும் பி.வி. மாடுல்ஸ்(சோலார் பேனல்) வாட்ஸ்சின் அளவை பொருத்து ஒரு வாட்-க்கு ரூ. 108 /- என்ற அளவில் மானியம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

வங்கி கடன் தேவை இல்லை என்றால் நாம் நேரடியாக அங்கீகாரம் பெற்ற சப்ளையர்கள் அல்லது உற்பத்தியாளர்களை அணுகினால் அவர்களே மானிய தொகைக்கு ஏற்பாடு செய்வார்கள். வாங்கப்படும் சிஸ்டத்திற்கு MNRE பொறுப்பு கிடையாது. எனவே அவர்களுடைய பட்டியலில் உள்ள நல்ல டீலரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு உண்டு. உத்திரவாதம், சர்வீஸ் ஆகியவற்றை செய்து தருபவராக இருக்கவேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சோலார் சிஸ்டம் மிக குறைந்த வாட்ஸ் கொண்டது என்பதால், கிராமப்பகுதி மக்களுக்கே பயன்படும் என நினைக்கிறேன்

அடுத்த பதிவில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்கள், அவர்களின் விற்பனை பிரதிநிதிகளின் விபரங்களை தருகிறேன். 370 பக்கங்கள் கொண்ட பி.டி.எஃப் பைலாக என்னிடம் இருக்கிறது. அதில் தமிழ் நாட்டில் உள்ள டீலர்களின் விபரத்தை தனியாக பிரிக்க வேண்டும். மொத்தமாக உங்களுக்கு தரலாம் என்றால் அதை எப்படி அப்லோடு செய்து லிங்க்-ஐ பெறுவது என தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

மீண்டும் சந்திப்போம்................

Wednesday, June 13, 2012

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7

கிரிட்-டை சோலார் சிஸ்டம் (Grid-Tie Solar Power System)
கிரிட்-டை என்றால் மின்வாரிய இணைப்புடன் இணைக்கப்பட்டது என பொருள். அதாவது நாம் சோலார் சிஸ்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நம் தேவைக்கு அதிகமாக இருந்தால், அதிகப்படியான மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்கவும், குறைவாக இருந்தால் குறைவாக இருந்தால் அதை மின்வாரியத்திடமிருந்து பெறும் வகையில் அமைக்கப்படுவதே கிரிட்-டை சிஸ்டம் ஆகும். உதாரணத்திற்கு நாம் நாள் ஒன்றுக்கு 15 யூனிட் (15,000W) மின்சாரத்தை சோலார் மூலம் உற்பத்தி செய்வதாக வைத்துக்கொள்வோம் சராசரியாக நமக்கு 8-10 யூனிட்டுகள்தான்  உபயோகத்திற்கு தேவை. தினந்தோறும் உற்பத்தியாகும் அதிகப்படியான மின்சாரத்தை பாட்டரி பேங்க்-ன் திறன் எவ்வளவோ அந்த அளவுக்கு தான் சேமிக்க முடியும். அதன் பின் தினமும் உற்பத்தியாகும் அதிகப்படியான மின்சாரம் வீணாகிக்கொண்டே இருக்கும். சில நாட்களில் நமக்கு உற்பத்திக்கு மேல் அதிகமாக மின்சாரம் தேவைப்படும். எனவே தேவைப்படும் பொழுது பற்றாக்குறை மின்சாரத்தை மின்வாரியத்திடமிருந்து பெறவும், தேவை இல்லாத நேரத்தில் அதிகப்படியான உற்பத்தி மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்றுவிடவும் இந்த அமைப்பால் முடியும். இதற்கு மின்வாரியத்துடன் நெட்-மீட்டரிங் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த முறை அமுலில் உள்ளது. கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


இந்த சிஸ்டத்தில் மீட்டர் பொறுத்தும் முறையில் ஒவ்வொரு நாடும் வெவ்வெறு முறைகளை பயன்படுத்துகிறது. மேலே காட்டப்பட்ட படம் பாட்டரி பேங்க் இல்லாத சிஸ்டத்திற்கு உரியது. மின்வாரியத்திடமிருந்து அவர்கள் பெறும் மின்சாரத்திற்கு வீடுகளுக்கான ரேட்டும், அவர்கள் மின் வாரியத்திற்கு விற்கும் உபரி மின்சாரத்திற்கு அதிகப்படியான ரேட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தேவைக்கு மேல் திறன் கொண்ட சிஸ்டத்தை அமைத்து லாபம் பெறுகிறார்கள். அரசுக்கும் மின் பற்றாக்குறை ஓரளவிற்கு குறையும்

 பாட்டரி பேங்குடன் கூடிய கிரிட்-டை சோலார் சிஸ்டம்

வட நாட்டில் சில மாநிலங்களில், நம் தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை கிரிட்-டை இன்வெர்டர் மூலமாக மின்வாரியத்திற்கு திருப்பி கொடுக்கும் திட்டம் அமுலில் உள்ளது.  அதாவது நம்மிடமிருந்து மின்வாரிய சப்ளைக்கு மின்சாரத்தை நம் இன்வெர்டர் அனுப்பும் பொழுது மின் வாரிய மீட்டர் எதிர் திசையில் சுற்றி, மீட்டர் ரீடிங் மின் அளவுக்கு ஏற்ப குறையும். இரு திசையிலும் (Clockwise&Anti-clockwise) சுற்றக்கூடிய மீட்டரை பொருத்தி விடுகிறார்கள். இதனால் மின்வாரிய சப்ளையிலிருந்து உபயோகித்த மின்சாரத்திலிருந்து, நாம் அவர்களுக்கு கொடுத்த மின்சாரத்தை கழித்து மீதி உள்ள மின்சாரத்தின் அளவையே அது காட்டும். நாம் அதிகமாக கொடுத்திருந்தால் அதற்கான கட்டணத்தை நமக்கு தரும். இந்த தகவலை என்னால் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை.

ஆஃப்-கிரிட்(Standalone) சிஸ்டத்திற்கும், கிரிட்-டை சிஸ்டத்திற்கும், இன்வெர்ட்டர் தவிர வேறு எந்த மாற்றமும்  கிடையாது. கிரீட்-டை சிஸ்டம் அமைத்தால், இன்வெர்ட்டர் எப்பொழுதும் ஆன்(ON) நிலையிலேயே இருக்க வேண்டும். காரணம், மின்வாரிய இணைப்பு இன்வெர்ட்டர் மூலமாகத்தான் வீட்டு இணைப்புக்கு வரும். மேலும் நாம் மின்சாரத்தை உபயோகிக்காமலிருந்தாலோ அல்லது குறைவாக மின்சாரத்தை உபயோகித்துக்கொண்டிருந்தாலோ, சோலார் மின்சாரம்  கிரிட் எனப்படும் மின்வாரிய சப்ளைக்கு போய்கொண்டிருக்கும். அதனால் நமக்கு பாட்டரியில் பேக்-அப் மின்சாரம் இருக்காது. எனவே பாட்டரிக்கும் இன்வெர்ட்டருக்கும் இடையிலான இணைப்பில் ஆன் -ஆஃப் (ON-OFF) சுவிட்ச் இணைக்க வேண்டும். இது பற்றி தனியாக ஒரு பதிவு போடுகிறேன்.

அடுத்த பதிவில் சந்திக்கிறேன்..................Monday, June 11, 2012

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 6

முந்தைய பதிவில் இறுதியாக பேட்டரி பேங்க் பற்றி விளக்கியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக சில விபரங்களை பார்ப்போம்.

பாட்டரியில் சேமிக்கப்பட்டிருக்கும் டி.சி கரண்ட்(ஆம்பியர்) -ஐ ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக உபயோகப்படுத்த முடியாது. பேட்டரி கரண்டில் 50% தான் பயன் படுத்தலாம். அதிகமாக பயன்படுத்தினால் பேட்டரி டிஸ்சார்ஜ் லெவலுக்கு கீழே போய்விடும். இதனால் பாட்டரியின் வாழ்நாள் குறைந்து விடும். எனவே இன்வெர்ட்டர் தானாகவே அந்த லெவலுக்கு கீழே போனால் மின் இணைப்பை துண்டித்து விடும். எனவே நாம் கவலைப்பட தேவையில்லை. நம்முடைய பேட்டரி பேங்க் 24V-450Amp ஆக இருந்தால்  அதில் சேமிக்கப்பட்டுள்ள 450 ஆம்பியரில் 225 ஆம்பியர் கரண்டை மட்டுமே உபயோகிக்கமுடியும். இந்த கரண்டை இன்வெர்ட்டர் 230V ஏ.சி மின்சாரமாக மாற்றும் பொழுது நமக்கு கிடைக்கும் மின்சாரம் உத்தேசமாக 5400வாட்ஸ். ஆனால் பாட்டரியில் மீதி இருக்கும் கரண்ட் பிக்சட் டெப்பாசிட் போல பாட்டரியிலே இருக்கும். அதன் பின், சோலார் பேனலில் இருந்து கிடைக்கும் கரண்ட் பாட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிடும். சோலார் பேனல் தினமும் 5 யூனிட்டுக்கு தேவையான் கரண்டை மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. எனவே தினந்தோறும் நாம் 5 யூனிட் மின்சாரத்தை தான் உபயோகிக்கவேண்டும்.

இப்பொழுது 24V-600 ஆம்பியர் பேட்டரி பேங்கை உபயோகித்தால் சுமார் 7200 வாட்ஸ் மின்சாரத்தை பேட்டரியிலிருந்து பெறலாம். இதனால் பாட்டரியில் குறைந்த மின்சாரத்தை சோலார் பேனல் சார்ஜ் செய்ய ஒன்றரை நாட்கள் தேவைப்படும். நீங்கள் முன்பு போலவே தினமும் 5000 வாட்ஸ் உபயோகித்தால் மீதி 2200 வாட்ஸ் மின்சாரம் ரிசர்வ்-ல் எப்பொழுதும் இருக்கும். 

சுருக்கமாக சொல்லப்போனால் உங்கள் சிஸ்டம் ஒரு நாளைக்கு எத்தனை வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறதோ அதே அளவு மின்சாரத்தை தான் நீங்கள் உபயோகிக்க வேண்டும். 1000வாட்ஸ் சிஸ்டம் என்றால் 5000 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சிஸ்டத்தின் திறனைப்போல 5 மடங்கு. உங்கள் விருப்பப்படி ரிசர்வ் மின்சாரத்தை அதிகரிக்க பாட்டரியை அதிகப்படுத்த வேண்டும். பட்டியலை கீழே தந்துள்ளேன்.


முதல் வரிசையை பார்க்கலாம்.

12V-150A. 6 பேட்டரிகள் தேவை. இரண்டு இரண்டாக சீரியஸ் முறையில் இணைக்க வேண்டும். இவ்விதம் இணைத்தால் 3 செட் கிடைக்கும். இந்த 3 செட்களையும் பேரலெல் முறையில் இணைக்க வேண்டும். இதைத்தான் 2 S x 3 P என சுருக்கமாக ஒரு சீரியஸ் இணைப்புக்கு  2 பாட்டரிகள் (2S),  3 பேரலல் இணைப்புகள் (3P) என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து அதில் கிடைக்கும் கரண்ட். 450 ஆம்பியர். அதில் உபயோகிக்க கூடியது 225 ஆம்பியர். அதிலிருந்து இன்வெர்ட்டர் மூலமாக நமக்கு கிடைக்கும் மின்சாரம் 5400 வாட்ஸ். ஒரு நாளைக்கு உபயோகப்படுத்த வேண்டிய வாட்ஸ் 5000. மீதி ரிசர்வில் இருப்பது 400 வாட்ஸ்.  இதைப்போலவே மற்றவற்றை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அடுத்த நிலைக்கு வருவோம். நம்முடைய சிஸ்டம் 1KW என்பதால் இன்வெர்ட்டரும் 1KW ஆக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரே நேரத்தில் நாம் எத்தனை வாட்ஸ்களை அதிகப்படியாக உபயோகிக்கிறோமோ அதை விட கூடுதலாக இருக்க வேண்டும். மார்க்கெட்டில் நல்ல கம்பெனி தயாரிப்புகள், சில குறிப்பிட்ட திறன் மற்றும் மின்அழுத்ததில் கிடைக்கும். அதில் நமக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இன்வெர்ட்டர்களில் வாட்ஸ் என குறிப்பிடப்படுவது கிடையாது.  600VA, 800VA, 1200VA என குறிப்பிடப்பட்டிருக்கும். 1 VA = 0.8W ஆகும். 600VA என்றால் 480W ( 600 x 0.8)

சோலாருக்கென்றே பிரத்யோகமாக தயாரிக்கப்படும் சில இன்வெர்ட்டர்களில் MPPT சார்ஜ் கண்டிரோலரும் பில்ட்-இன் ஆக இருக்கும். இத்தகைய இன்வெர்ட்டரை உபயோகப்படுத்தும் பொழுது நாம் சார்ஜ் கண்ட்ரோலரை தனியாக வாங்க வேண்டியது இல்லை.

தற்சமயம் Micro Inverter கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அளவில் மிகவும் சிறியது.ஆனால் இதில் MPPT சார்ஜ் கண்ட்ரோலரும் உள்ளடங்கியது.இதை சோலார் பேனலின் பின் பக்கத்தில் இணைத்துக்கொள்ளலாம். இவ்விதம் இணைக்கும் பொழுது சோலார் பேனலில் இருந்து வெளி வரும் மின்சாரம் 230 V A.C ஆக இருக்கும். நாம் 10 பேனல்கள் உபயோகித்தால் ஒவ்வொரு பேனலுடனும் ஒரு மைக்ரோ இன்வெர்ட்டர் இணைக்க வேண்டும்.அதன் ஏ.சி அவுட்புட்டை பேரலெல் ஆக இணைக்க வேண்டும். இப்பொழுது மொத்த பேனலின் அவுட்புட் மின்சாரமும் 230 வோல்ட் ஏ.சி-யாக இருக்கும். இதை சேமிக்க முடியாது. உடனே நாம் உபயோகிக்க வேண்டும். இது கிரிட்-டை (GRID-TIE) சிஸ்டத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். நாம் இதுவரை தெரிந்து கொண்டது OFF-GRID SYSTEM.

OFF-GRID SYSTEM:  நாம் இதுவரை பார்த்த ஆஃப்-கிரீட் சிஸ்டத்தை நம் வசதிக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.

நாம் ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யும் சோலார் மின்சாரம் தினசரி உபயோகத்திற்கு போதுமானதாக இருந்தால் அதையே உபயோகப்படுத்தலாம். மின் வாரிய இணைப்பை எமெர்ஜென்ஸிக்கு மட்டுமே பயன்படுத்தலாம். ஒரு சேஞ் ஓவர் சுவிட்ச் இணைப்பதன் மூலமாக மின்வாரிய மின்சாரம், இன்வெர்ட்டரிலிருந்து வரும் சோலார் மின்சாரம் இவற்றை நம் விருப்பப்படி உபயோகிக்கலாம். ஜெனரேட்டர் உபயோகிப்பவர்கள் இந்த சேஞ்ச் ஓவர் சுவிட்ச்சைதான் பயன்படுத்துவார்கள்.

அடுத்த பதிவில் GRID-TIE SYSTEM பற்றி விரிவாக பார்க்கலாம்................

   

Saturday, June 9, 2012

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி 5.

முந்தைய பதிவில் சோலர்ர் பேனல்களை கொண்டு 12V/24V மின் அழுத்தம் கொண்ட 1KWh (1000 வாட்ஸ்) Solar Array-ஐ அமைக்கும் விதத்தை கூறியுள்ளேன். இனி அடுத்த நிலையாகிய சோலார் ஆரே மூலம் கிடைக்கும் மின்சாரத்தை ஒழுங்கு படுத்துவது (Regulate)  பற்றி இனி பார்க்கலாம். 

12V சோலார் பேனல் விபர குறிப்பை பாருங்கள். அதிக அளவு வெயிலில் மின் அழுத்தம் (Voltage at Typical Power) 17V ஆகும். 12V பாட்டரியை சார்ஜ் செய்ய முதலில் 14.4V - 14.6V மின் அழுத்தமும், அதன் பின் 13.4V-13.7V மின் அழுத்தமும் வேண்டும். சோலார் ஆரேயிலிருந்து கிடைக்கும் மின் அழுத்தம் வெயிலின் அளவுக்கு ஏற்ப மாறுபட்டு கொண்டிருக்கும். இதை ஒழுங்கு படுத்தி பாட்டரி சார்ஜிங்-க்கு தேவையான மின் அழுத்தத்தை கொடுக்க ஒரு சாதனம் வேண்டும். அதுதான் சார்ஜ் ரெகுலேட்டர் ஆகும். இது சார்ஜ் கண்டிரோலர் என்றும் கூறப்படும்.

சார்ஜ் கண்டிரோலர் 6V, 12V, 24, 36V, 48V என பல மின் அழுத்தத்தில் 6A,10A, 20A, 30A, 40A, 60A என பல திறன்களில் கிடைக்கிறது.சில கம்பெனிகள் 12V/24V ஆட்டோ மாடல்களிலும் தயாரிக்கிறது. அதாவது இது 12V, 24V மின் அழுத்தத்தில் இயங்கும்.

நம்முடைய சோலார் பேனலை இணைத்திருக்கும் விதத்தில் அதன் மின் அழுத்தம், கரண்ட் (ஆம்பியர்) திறன் ஆகியவற்றை வைத்து நமக்கு தேவையான சார்ஜ் கண்டிரோலரை தேர்வு செய்ய வேண்டும்.

முன் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விபர குறிப்பில் 100W பேனல் 5.9 ஆம்பியர் கரண்டை தரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி 100W -12V பேனல்கள் 10-ஐ பேரலல் முறையில் இணைத்திருந்தால் அந்த ஆரேயிலிருந்து கிடைக்கும் கரண்ட் 59 ஆம்பியராகும் (5.9 x 10). கிட்டதட்ட 60 ஆம்பியர் கரண்டை ரெகுலேட்டருக்கு எடுத்து செல்ல மிகவும் தடிமனான வயர் தேவை. வயர் கனம் அதிகமாக ஆக அதன் விலையும் அதிகமாக இருக்கும். மொட்டை மாடியில் இருக்கும் சோலார் பேனல்களின் இணைப்பிலிருந்து கீழே வீட்டுக்குள் சார்ஜ் கண்டிரோலர், பாட்டரி, இன்வெர்ட்டர் ஆகியவைகள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் சார்ஜ் கண்டிரோலருடன் இணைக்க அதிக நீளம் வயர் தேவை. இந்த செலவை குறைக்க வேண்டும். அதனால் 400W வரையிலான சோலார் பவர் சிஸ்டத்தை மட்டுமே 12V ஆக டிசைன் செய்ய வேண்டும். அதற்கு மேல் வாட்டேஜ் உள்ளவற்றை 24V-க்கு டிசைன் செய்ய வேண்டும். 12V சிஸ்டத்திற்கு வயருக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல, 12V-60ஆம்பியர்  சார்ஜ் கண்ட்ரோலரும் பல மடங்கு விலை அதிகம். கிடைப்பதும் கஷ்டம். வாட்டேஜ் அதிகரிக்க அதிகரிக்க சிஸ்டத்தை 24V, 36V, 48V என வடிவமைக்க வேண்டும்.

முந்தைய பதிவில் 100W-12V சோலர்ர் பேனல்களை சீரியல் மற்றும் பேரலெல் முறையில் இணைக்க வேண்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது. இரண்டு பேனல்களை சிரியஸ் முறையி இணைக்க வேண்டும். இப்பொழுது இந்த இரண்டு பேனல்களும் சேர்ந்து  200W-24V ஆக மாறிவிடும். கிடைக்கும் கரண்ட் 5.9 ஆம்பியராகும். இவ்விதம் 5 செட் (set) இணைக்க வேண்டும். இவற்றை இனி பேரலெல் முறையில் இணைக்கும் பொழுது 1KW-24V ஆரே கிடைத்து விடும். ஆனால் இதிலிருந்து கிடைக்கும் கரண்ட் 29.5(5.9x 5) ஆம்பியராக இருக்கும். இதனால் 24V-30A சார்ஜ் கண்ரோலர் போதுமானது.ஆனால் 30 ஆம்பியர் அளவுக்கு அதிகமான திறன் கொண்ட சார்ஜ் கண்ட்ரோலரை உபயோகிப்பது நல்லது.

இது சோலார் பேனலில் கிடைக்கும் மின்சாரத்தை அப்படியே பாட்டரியை சார்ஜ் செய்யும் அளவிற்கு கட்டுப்படுத்தி பாட்டரிக்கு கரண்டை கொடுக்கும். சோலர்ர் பேனலில் இருந்து அதிகப்படியான அளவுக்கு கரண்டை பெறும் தொழில் நுட்பத்திற்கு "Maximum Power Point Tracking" என்று பெயர். இது சுருக்கமாக MPPT என சொல்லப்படும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்திய சார்ஜர் கண்ட்ரோலர் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
இனி அடுத்த நிலை, பாட்டரி பேங்க் டிசைன் செய்வது. ஒன்றுக்கு மேற்பட்ட பாட்டரிகளை இணைக்கும் பொழுது அது, பாட்டரி பேங்க் என அழைக்கப்படும். இப்பொழுது நம்முடைய 1KW-24 சிஸ்டத்திற்கான பாட்டரி பாங்க் டிசைன் செய்வதை பார்க்கலாம். சார்ஜ் கண்ட்ரோலரால் சீராக்கப்பட்ட, சோலார் ஆரேயிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை  சேமிக்க பாட்டரி பேங்க் பயன்படுகிறது. இப்பொழுது இந்த பாட்டரி பேங்க் எவ்வளவு திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

1000W-24V-30Ah. அதாவது ஒரு மணி நேரத்தில் 24 வோல்ட் மின் அழுத்தத்தில் 30 ஆம்பியர் கரண்ட் நமக்கு கிடைக்கும். சராசரியாக நாள் 1-க்கு 5 மணி நேரம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கரண்ட் 150 ஆம்பியராகும்(24 வோல்ட் மின் அழுத்தத்தில்). வெளி நாடுகளில் 3 நாட்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் பாட்டரி பாங்க்கை வடிவமைப்பார்கள். இந்த கணக்குப்படி நமக்கு 450 Ah (24 volt) பாட்டரி தேவை. பாட்டரிகள் நம் தேவைக்கு ஏற்ற அளவில் கிடைக்காது. எளிதில் கிடைக்கும் பாட்டரிகளை சீர்யஸ் மற்றும் பேரலெல் முறையில் இணத்து நமக்கு தேவைப்படும் அளவில் பாட்டரி பேங்கை அமைத்துக்கொள்ள வேண்டும்.

தேவை ------ 24V-450Ah பாட்டரி

12V-150Ah பேட்டரி =  6 Nos
இரண்டு பேட்டரிகளை சீரியல் முறையில் இணைக்கும் பொழுது அது 24V-150Ah பேட்டரியாக மாறிவிடும். இவ்விதம் 3 செட்(set) இனைத்துக்கொள்ளவேண்டும்.
 அதன் பிறகு 3 செட்டையும் பேரலில் இணைக்கும் பொழுது நமக்கு 24V-450Ah பேட்டரி பேங்க் கிடைத்து விடும். சீரியஸ் + பேரலெல் இணைப்பு பற்றி படத்துடன் முன்பு விளக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்தால் போதும் என்றால் நமக்கு தேவை 24V-300Ah பேட்டரி பேங்க். அதற்கு தேவை 12V-150Ah பேட்டரிகள் 4. மேலே கூறியபடி இணைக்க வேண்டும்.

ஒரு வேளை 150 ஆம்பியர் பேட்டரி கிடைக்கவில்லை என்றால் 100 ஆம்பியர் பேட்டரியை உபயோகிக்கலாம்.

12V-100Ah பேட்டரி தேவை = 8 / 10 Nos

சீரியஸ் முறையில் இரண்டு பேட்டரிகளை இணைக்கும் பொழுது 24V-100ஆம்பியர் பேட்டரியாக மாறிவிடும். இவ்விதம் இணைக்கப்பட்ட 4 செட் பேட்டரிகளை பேரலெல் முறையில் இணைக்கும் பொழுது 24V-400 ஆம்பியர் கிடைக்கும். இது நம் தேவையை விட 50 ஆம்பியர் குறைவு 5செட்களை இணைதால் 24V-500 ஆம்பியர் கிடைக்கும். இது தேவையை விட 50 ஆம்பியர் அதிகம்.

இரண்டு நாள் உற்பத்தியை சேமித்தால் போதும் என்றால் நமக்கு தேவை 24V-300ஆம்பியர் பாட்டரி. இதற்கு தேவை ஆறு எண்ணிக்கை பேட்டரிகள்.

முக்கிய குறிப்பு: பேட்டரியை சீரீயஸ் முறையில் இணைக்கும் பொழுது முதல் பாட்டரியின் நெகடிவ் முனையை 2-வது பாட்டரியின் பாசிடிவ் முனையுடன் இணைக்க வேண்டும். இப்பொழுது முதல் பாட்டரியின் பாசிடிவ் முனையும் 2-வது பேட்டரியின் நெகடிவ் முனையும் இணைப்பின்றி இருக்கும். இவ்விதம் இணைக்கப்பட்ட பாட்டரி செட்களை பேரலெல் முறையில் இணைக்கும் பொழுது அனைத்து செட்களின் பாசிடிவ் முனைகளை ஒன்றாகவும், நெகடிவ் முனைகளை ஒன்றாகவும் இணைக்க வேண்டும். இந்த இரு முனைகள் வழியாகத்தான் நமக்கு பேட்டரி கரண்ட் கிடைக்கும். படம் கீழே.

 
பேட்டரி பேங்கை ரேக்கிலும் அமைக்கலாம். அல்லது இடவசதி இருந்தாலும் தரையிலும் வைக்கலாம். உங்கள் வசதியை பொருத்தது. படங்கள் கீழே.அடுத்த பதிவில் சந்திப்போம்...............

Thursday, June 7, 2012

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி 4.

முந்தைய பதிவில் நாம் அமைத்திருக்கும் சோலார் பேனல் அமைப்பு (array) நாள் ஒன்றுக்கு சுமார் 5000 வாட்ஸ் அல்லது 5 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என பார்த்தோம். 

பூமியின் சுழ்ற்சி, சூரியனின் சுழற்சி இவற்றின் அடிப்படையில் பூமியில் ஒவ்வொரு பகுதி அல்லது ஊரிலும் சூரியனுடைய ஒளி கதிர்கள், வெவ்வேறு கோணத்தில் , வெவ்வேறு கால (duration) அளவில் இருக்கும். ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒவ்வொரு மாதமும் விழும் சூரிய ஒளியின் மூலம் தினசரி உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை கணக்கிட முடியும். இது நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் மாறுபடும். தமிழ் நாட்டில் முக்கியமான ஊர்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக கிடைக்க கூடிய மின்சாரத்தின் அளவை காட்டும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.


இந்த பட்டியலின் படி திருச்சியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5.13KWh வீதம் ஒரு வருடத்தில் 1872.45 KWh / யூனிட் மின்சாரத்தை ஒரு சதுர மீட்டர் பரப்பில் பெற முடியும். 1KWh என்பது 1000Wh அல்லது 1 யூனிட் ஆகும்.

ஒரு நிறுவனம் தயாரிக்கும் 100W சோலார் பேனலின் விபர குறிப்பை (Specification) கீழே கொடுத்துள்ளேன். அதில் பேனலின் அளவு (size) 56.7 இஞ்ச் நீளம், 25.1 இஞ்ச் அகலம் என கூறப்பட்டுள்ளது. இந்த அளவு கிட்டத்தட்ட எல்லா கம்பெனிகளின் பேனல்களின் அளவும் ஒரே மாதிரியாகத்தான். இருக்கும். அதிக அளவில் வித்தியாசமிருக்காது. இப்பொழுது நாம் அமைத்திருக்கும் சோலார் பேனல் அமைப்புக்கு எவ்வளவு இடம் தேவைப்படும் என்பதை பார்க்கலாம்.

(56.7"x 2) = 113.4" = 9' 9" =10 அடி 
25.1" x 5) = 125.5" = 10' 6" = 10 1/2 அடி

அதாவது 10 1/2 அடி அகலமும் 10 அடி நீளமும் தேவை. இதை சரியான திசையில் , சரியான கோணத்தில் வருடம் முழுவதும் அதிக பட்ச சூரிய ஒளி படும் வகையில் பொருத்த வேண்டும். கீழே 1 MW சோலார் பேனல் வீட்டின் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டுள்ளதை காட்டும் புகைப்படம்.


இனி சோலார் பேனலின் விபர குறிப்பை பார்க்கலாம்.   
Spec:
* 150x150mm multi-crystalline solar cells
* Typical Power: 100W
* Minimum Power: 95W
* Voltage at Typical Power: 17V
* Current at Typical Power: 5.9A
* Open Circuit Voltage: 22V
* Short Circuit Current: 6.69A
* Dimension: 56.7" L x 25.1"W x 1.38" D
* Weight: 24lbs

1. 150x150mm multi-crystalline solar cells என்பது 150 mm X 150 mm அளவுள்ள  கிரிஸ்டலைன் செல்களால் உருவாக்கப்பட்ட சோலார் பேனல் என்பதை குறிக்கிறது.

2.  Typical Power: 100W அதாவது சூரிய ஒளி அதிகமாக அதன் மீது விழும் பொழுது பேனல் தரும் மின் சக்தி 100 W.ஆகும்.

3. Minimum Power: 95W  குறைந்த பட்ச சக்தி 95W 

4. Voltage at Typical Power: 17V அதிக பட்ச மின் அழுத்தம் 17V

5. Current at Typical Power: 5.9A  அதிக பட்ச மின் அழுத்தத்தில் தரும் கரண்ட் 5.9 ஆம்பியராகும்.

6. Open Circuit Voltage:22V  பாட்டரியுடன் (லோடு) இணைக்காமலிருக்கும் பொழுது உள்ள மின் அழுத்தம் 22V.

7. Short Circuit Current: 6.69A ஆரம்ப நிலையில் இருக்கும் நமக்கு இந்த விபரம் தேவை இல்லை.

8. Dimension: 56.7"L x  25.1"W x 1.38"D  56.7 அங்குல நீளம், 25.1 அகலம், 1.38 அங்குல பருமன் உடையது.

9. Weight: 24 lbs இதன் எடை 24 பவுண்ட் (10.9 Kg)

இதர விபரங்களைஅடுத்த பதிவில் பார்க்கலாம்........


Tuesday, June 5, 2012

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி.3

டி.சி. கரண்ட் (DIRECT CURRENT) - ஏஸி கரண்ட் (ALTERNATIVE CURRENT)
டி.சி கரண்ட் என்பது பாட்டரி மற்றும் சோலார் செல், கம்யூடேட்டர் டைப் டைனமோ ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் ஆகும். டிசி மின்சாரத்தை நெடுந்தொலைவுக்கு கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அதிக அளவு இழப்பு ஏற்படும். எனவே டி.சி மின்சாரம் இப்பொழுது வீட்டு உபயோகம், தொழில்சாலைகளுக்கு உகந்தது அல்ல.

ஏ.சி மின்சாரம் என்பது ஆல்டர்னேட்டர் அல்லது ஜெனெரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும். குறைந்த இழப்பில் இதை நெடுந்தொலைவிற்கு எடுத்து செல்ல முடியும். எனவே தான் இது இப்பொழுது வீட்டு உபயோகம், தொழில்சாலை ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. 

டி.சி மின்சாரம், ஏ.சி மின்சாரம் ஆகியவற்றிற்குரிய வேறுபாட்டை கீழே உள்ள படம் விளக்குகிறது.

முதல் படத்தில், பாட்டரியின் பாஸிடிவ் முனையிலிருந்து எலெக்ட்ரான்கள் லோடு என கூறப்படும் பல்பு அல்லது டி.சி மின்சாரத்தில் இயங்கக்கூடிய சாதனத்திற்கு சென்று மறு முனைவழியாக பாட்டரியின் நெகடிவ் முனைக்கு செல்லுகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக ஒரே திசையில் எலெக்ட்ரான்கள் டி.சி மின்சாரத்தில் பயணிக்கும்.

இரண்டாவது படத்தை பாருங்கள்.  பாட்டரிக்கு பாசிடிவ் , நெகடிவ் என இரு முனைகள் இருப்பது போல ஏ.சி மின்சாரத்திற்கு பேஸ் (Phase),  நியூட்ரல் (Neutral) என இரு முனைகள் உண்டு. இது சுருக்கமாக P, N என அழைக்கப்படும்.

 இந்த படத்தில் ஏ.சி. கரண்ட்டின் எலெக்ட்ரான்கள் இரு திசையிலும் மாறி மாறி செல்வதை அம்பு குறியீடு காட்டுகிறது. அதாவது பேஸ் முனையிலிருந்து எலெக்ட்ரான்கள் லோடுக்கு சென்று மறு முனை வழியாக ஏசி மின்சாரத்தின் நியூட்ட்ரல் முனைக்கு செல்லும். அடுத்து நியூட்ரல் முனை வழியாக எலெக்ட்ரான்கள் லோடுக்கு சென்று பேஸ் முனையை அடையும். இவ்விதம் வினாடிக்கு 50 சுழச்சிகள் (CYCLES) நடைபெறும். நம் நாட்டில் உள்ள மின் இனைப்புகள் 220V.AC,50Cycle/sec ஆகும். இப்பொழுது உங்களுக்கு ஏசி, டி.சி மின்சாரத்தின் வேறுபாடு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

சோலார் சிஸ்டம் வடிவமைத்தல்.

சோலர்ர் மின்சாரத்தின் தேவை ஒவ்வொரு நபரை பொருத்தும் மாறுபடும். அவற்றை பார்ப்போம். 

1. இரவில் காய்கறி, பழம், போன்றவற்றை தள்ளுவண்டியில் வைத்து இரவில் வியாபாரம் செய்பவர்கள் பெட்ரோமாக்ஸ் லைட், அல்லது சிமினி விளக்குகளை உபயோகிக்கிறார்கள். மண்ணெண்ணைக்காக வருமானத்தில் ஒரு கணிசமான பகுதியை செலவு செய்கிறார்கள். இவர்களுக்கு சோலார் மின்சாரம் லாபகரமானது.  பகலில் சோலார் பேனல் மூலம் பாட்டரியை சார்ஜ் செய்து, இரவில் உபயோகிக்க கூடிய வைகையில் சோலார் லாண்டர்ன் (Solar Lantern)  எல்ல ஊர்களிலும் கிடைக்கின்றன.  இதை எமெர்ஜென்சி விளக்காகவும் பயன்படுத்தலாம்.  மின்சாரமே இல்லாத பகுதியில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு மிகவும் பயன் படும். அதன் படம் கீழேஇது பலவடிவங்களில் கிடைக்கிறது. இவற்றை டாட்டா ( TATA BP) போன்ற பெரிய கம்பெனிகள் முதல் லோக்கல் டுபாக்கூர் கம்பெனிகள் வரை தயாரிக்கிறது. இதை அரசிடம் பதிவு செய்த சப்ப்ளையர்கள் /தயாரிப்பாளகளிடம் வாங்கினால் அரசு மானியம் உண்டு. விபரங்கள் கடைசி பகுதியில் தருகிறேன். 

மின் இணைப்பு இல்லாத கிராமங்களிலிருக்கும் வீடுகளுக்கு இரண்டு அல்லது மூன்று லைட்டுகள் எரியும் வகையில் வீட்டின் மேல்பகுதியில் ஓடு அல்லது ஆஸ்பெட்டாஸ் ஷீட் கூறையிலும் சோலார் பேனலை அமைத்து  CFL பல்புகளை எரிய வைத்து வெளிச்சத்துக்கான மின்தேவையை பூர்த்தி செய்யலாம்.ஆக மொத்தத்தில் நம் தேவைக்கு ஏற்ப சிஸ்டத்தை அமைத்துக்கொள்ளலாம். இதற்கும் அரசு மானியம் உண்டு.

1 K Watt (1000 Watts) சோலார் சிஸ்டம்
ஒரு கிலோ வாட் (1000 வாட்) சோலார் சிஸ்டம் என்பது, சூரிய ஒளியிலிருந்து ஒரு மணி நேரத்தில் 1 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது ஆகும். இதை எப்படி கணக்கிடுவது என்பதை பார்க்கலாம்.  சோலார் பேனல்கள் பல அளவுகளில்  50 W -12V/24V , 75 W - 12V/24V, 80W - 12V/24V, 100W - 12V/24V, 150W - 12V/24V, 200W - 12V/24V என கிடைக்கிறது. அதாவது 50வாட் சோலார் பேனல்கள் 12வோல்ட் மின் அழுத்தம், 24 வோல்ட் மின் அழுத்தம் ஆகிய இரு மின் அழுத்த அளவுகளில் கிடைக்கிறது. இதைப்போலவே மற்ற வாட் பேனல்களும் கிடைக்கிறது. 

எனவே 12வோல்ட் சிஸ்டம் அல்லது 24வோல்ட் சிஸ்டம் இவற்றில் எது நமக்கு தேவை என்பதை முதலில் முடிவு செய்யவேண்டும்.  12வோல்ட் சிஸ்டம் என்றால் 

100W-12V பேனல்  = 10 (100W x 10 = 1000W) அல்லது
200W-12V பேனல்  = 5 (200W x 5 =1000W)                                                                         

தேவை. இவற்றை பேரலெல் முறையில் இணைக்க வேண்டும். உதாரணத்திற்கு 3 பேனல்கள் இணைக்கப்பட்டுள்ளதை விளக்கும் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது பேனலகளிலிருந்து வெளியே வரும் பாஸிடிவ் மற்றும் நெகடிவ் முனைகளின் வழியாக 1 KW -12V (1000W-12V)  டி.சி மின்சாரம் கிடைக்கும்.

நீங்கள் 24 வோல்ட் சிஸ்டம் என முடிவு செய்தாலும் மேலே குறிப்பிட்டபடியே 1000 வாட்டுக்கு தேவையான 24வோல்ட் மின் அழுத்தம் கொண்ட பேனல்களை  இணைக்க வேண்டும்.

ஒருவேளை  24 வோல்ட் பேனல் கிடைக்கவில்லை என்றால், பத்து 12 வோல்ட் பேனல்களையே சீரியஸ் + பேரெலெல் என்ற கூட்டு இணைப்பின் மூலம் இணைக்க முடியும்.  இரண்டு 12 V பேனல்களை சீயஸ் முறையில் இணைத்தால் அது 24V ஆக செயல்படும். முதலில் இரண்டு இரண்டாக பேனல்களை சீரியஸ் முறையில் இணைக்க வேண்டும். இப்பொழுது 5 செட் பேனல்கள் கிடைக்கும். இவற்றை பேரலெல் முறையில் இணைக்க வேண்டும். இப்பொழுது இந்த பேனல்களின் பாஸிடிவ் மற்றும் நெகடிவ் முனைகள் வழியாக 1KW-24V மின்சாரம் கிடைக்கும். இந்த இணைப்பை விளக்குவதற்காக நான்கு 12V பேனல்கள் இம்முறையில் இணைக்கப்பட்டுள்ள படம் கீழே தரப்பட்டுள்ளது.


இப்பொழுது நீங்கள் விரும்பிய வகையில் 1KW -12V அல்லது 1KW-24V சோலார் பேனல்களை இணைத்து விட்டீர்கள். இவ்வாறு அமைக்கப்ப்டும் அமைப்பை  ஆங்கிலத்தில் "ARRAY" என கூறுவோம்.

இவ்வாறு அமைக்கப்பட்ட சோலார் பேனல் அமைப்பின் மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். 100 W பேனல் என்றால் அது ஒரு மணி நேரத்தில் 100W மின்சாரத்தை தரும் என்று பொருள். எனவே நாம் அமைத்திருக்கும் ARRAY எனப்படும் சோலர் அமைப்பு ஒரு மணி நேரத்திற்கு 1KW அல்லது 1000W மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சூரிய ஒளி பிரகாசமாக இருப்பது எத்தனை மணி நேரம் என்பதை பார்க்கலாம். பொதுவாக காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை. 7 மணி நேரம் என வைத்துக்கொள்ளலாம். இதை சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் என கணக்கிட்டால் நாம் குறைந்த பட்சம் 5KW அல்லது 5000W (வாட்) மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

அதாவது 1KW சோலார் பேனல் சிஸ்டம் நமக்கு நாள் ஒன்றுக்கு 5KW அல்லது 5000 வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

இனி மீதி விஷயங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்........

Saturday, June 2, 2012

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி.2

மின்சார தேவையை கணக்கிடல்

இனி நமக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் மின்சாரம் எவ்வளவு என்பதை கணக்கிட வேண்டும். ஒவ்வொரு சாதனமும் எவ்வளவு மின்சாரத்தை உபயோகப்படுத்தும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

சாதாரண பல்பு  மிகவும் அதிகமாக கரண்ட் எடுக்கும். உதாரணத்திற்கு 60 வாட் பல்பு என்றால் ஒரு மணி நேரம் எரிய 60 வாட் சக்தி வேண்டும். அதாவது  0.272 ஆம்பியர் கரண்ட் வேண்டும். அதே வெளிச்சத்தை 13 - 15 வாட் காம்பேக்ட் புளோரசென்ட்  லாம்ப் ( CFL - COMPACT FLUORESENT LAMP )  தரும். அதாவது  நான்கில் ஒரு பங்கு மின்சாரமே தேவைப்படும். கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்.


எனவே சாதாரண பல்புகளுக்கு பதில் CFL பல்புகளை உபயோகித்தால் மின் செலவு குறையும். சீலிங் ஃபேன் = 65 W -75 W, டி.வி = 100 W . இது கம்பெனி, மாடல்களை பொருத்து மாறுபடும். எனவே நம் டி.வி.யின் சர்வீஸ் மேனுவலை பார்க்கவேண்டும்.  இப்பொழுது நாம் எந்தெந்த சாதனங்களை எவ்வளவு நேரம் ஒரு நாளைக்கு உபயோகிக்கிறோம் என்பதை பார்க்கலாம்.

சீலிங் ஃபேன்      6 மணி நேரம்    =   6 x 70 W  = 420 W
லைட்                    6 மணி நேரம்    =   6 x  40 W  = 240 W
டி.வி                       4 மணி நேரம்    =    4 x  100W = 400 W
ஆக மொத்தம் வாட்ஸ்   ------------------------        = 1060 W

இதைப்போலவே நாம் உபயோகிக்கும் சாதனங்கள் எத்தனை வாட்ஸ், எவ்வளவு நேரம் உபயோகிக்கிறோம் என்பதை கணக்கிட்டு மொத்த மின் தேவையை கணக்கிடலாம்.

இனி வோல்ட், கரண்ட், வாட்  என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

பேச்சு வழக்கில் நாம் கரண்ட் என்று சொல்வோம். அது மின்சாரத்தை குறிக்கும். ஃபேன் மெதுவாக சுற்றினாலோ அல்லது டியூப் லைட் எரியாமல் விட்டு விட்டு எரிந்தால் லோ வோல்ட் என்று சொவோம். அடுத்தபடி கடையில் பல்பு வாங்கும் பொழுது 40W அல்லது 60 வாட் பல்பு கொடுங்கள் என்று கேட்ப்போம். அதற்கு மேல் நமக்கு மின்சாரத்தை பற்றி தெரியாது. அவசியம் வோல்ட், கரண்ட், வாட்ஸ் என்றால் என்ன? அவை ஒன்றோடு ஒன்று எப்படி தொடர்பு உடையது என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 

வோல்ட் (VOLT)


மின்சாரத்திலிருக்கும் எலெக்ட்ரான்களை (ELECTRONS) லோடு அல்லது சர்க்கியூட்  என அழைக்கப்படும் நம் மின்சாதனத்திற்கு அனுப்பும் அழுத்தமே வோல்ட் ஆகும்.  எனவேதான் வோல்ட்டை மின் அழுத்தம் என தமிழில் சொல்கிறோம். மேலே உள்ள படத்தில் தரை மட்டத்திலிருந்து 1 மீட்டர் உயத்தில் தண்ணீர் தொட்டி இருக்கிறது. அதன் அடிப்பாகத்தில் 1 cm அளவுள்ள குழாய் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.  அடுத்ததாக அதே தொட்டி 10 மீட்டர் உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது முதல் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பொழுது அதன் வெளியேறு குழாய் வழியாக வெளிவரும் தண்ணீரின் அழுத்தம் குறைவாக இருக்கும். 10 மீட்டர் உயரத்திலிருந்து வெளிவரும்  தண்னீரின் அழுத்தம் 10 மடங்கு அதிகமாக இருக்கும்.6 வோல்ட், 12 வோல்ட், 24 வோல்ட் பாட்டரிகளை இப்பொழுது ஒப்பிட்டு பார்ப்போம். 24 வோல்ட் பாட்டரி 6 வோல்ட் பாட்டரியை விட 4 மடங்கு மின் அழுத்தம் அதிகமானது. அதைப்போல 12 வோல்ட் பாட்டரியை விட 2 மடங்கு அதிக மின் அழுத்தம் கொண்டது.

கரண்ட் (CURRENT)
தண்ணீர் தொட்டியிலிருந்து குழாய் வழியாக வாட்டர் மாலிகுல்ஸ் என்ற தண்ணீர் வெளியேறும் அளவை போல மின்சார எலெக்டிரான்ஸ் வெளியேறும் அளவை கரண்ட் குறிக்கும். அதாவது நம் சாதனம் உபயோகிக்கும் எலெக்டிரான்ஸ் அளவை குறிக்கும். பொதுவாக கரண்ட் என்பது ஆம்பியர் என அழைக்கப்படும்.

மேலே உள்ள படத்தை பாருங்கள். முதல் தொட்டியின் அவுட்லெட் பைப் 1 செ.மி, இரண்டாவது படத்தில் 10 செ.மி பைப் இணைக்கப்பட்டுள்ளது. 1 செ.மி அளவிலுள்ள குழாய் 1 மணி நேரத்தில் 100 லிட்டர் தண்ணீர் வெளிவருவதாக வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் 10 செ.மி அளவுள்ள குழாய் மூலம் 100 லிட்டருக்கு அதிகமாக பல மடங்கு தண்ணீர் வெளிவருமல்லவா?. ஆமாம். அதைப்போலவே மின் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ள சாதனம் அதிக அளவில் மின்சாரத்தை எடுக்கக்கூடியதென்றால், அதற்கேற்ப இணைப்பு வயரின் பருமனை ( cross-sectional area) அதிகரிக்க வேண்டும்.

இப்பொழுது  Ohms's Law  பற்றி தெரிந்து கொள்வோம்.

POWER = VOLTAGE  X  CURRENT   ( P = V x  I )
 or
WATT  = VOLTAGE  X  AMPERE  ( W = V x  A )

இதுதான் அடிப்படை விதி. இப்பொழுது வாட், வோல்ட், ஆம்பியர் இவற்றில் ஏதாவது 2 தெரிந்திருந்தால் மூன்றாவதை கண்டுபிடித்து விட முடியும். உதாரணத்திற்கு  டி.வியை எடுத்துக்கொள்ளலாம். அது இயங்கும் வோல்ட் 220. 100 வாட் என டிவி. காபினட்டில் போட்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அது எவ்வளவு கரண்டை எடுக்கும்?   
W = V x A  
ie   100 W = 220 x A
ie   100 / 220 = A  (Watt divided by Volt)
ie   = 0.455 Amp

அதாவது 0.455 ஆம்பியர் கரண்ட் அதற்கு தேவை.

இனி சீரியஸ் ( SERIES CONNECTION) இணைப்பு மற்றும் பேரலல் (PARALLEL CONNECTION)  பற்றி பார்க்கலாம்.

சீரியஸ் இணைப்பு


( ஒவ்வொரு பாட்டரியும் 1.5 V / 1.7 Amp )

இந்த படத்தில் 3 பாட்டரிகள் (1.5V,1.7Amp) சீர்யஸ் முறையில் இணைக்க பட்டுள்ளது.முதல் பாட்டரியின் பாசிடிவ் முனை இரண்டாவது பாட்டரியின் நெகடிவ் முனையிடனும், 2-வது பாட்டரியின் பாஸிடிவ் முனை 3-வது பாட்டரியின் நெகடிவ் முனையிடனும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது 1-வது பாட்டரியின் நெகடிவ் முனையும் 3-வது பாட்டரியின் பாஸிடிவ் முனையும்  எதனுடனும் இணைக்கப்படாமல் உள்ளது இந்த இரு முனைகளின் வழியாக நமக்கு 4.5 வோல்ட் / 1.7 ஆம்பியர் கிடைக்கும்.

பாரலெல் (PARALLEL) இணைப்பு
மேலே குறிப்பிடப்பட்ட அதே பாட்டரிகள் பாரெலெல் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று பாட்டரிகளின் பாஸிடிவ் முனைகள் ஒன்றாகவும் நெகடிவ் முனைகள் ஒன்றாகவும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது பாஸிடிவ் மற்றும் நெகடிவ் முனைகள் வழியாக நமக்கு  1.5 V / 5.1 ஆம்பியர் மின்சாரம் கிடைக்கும்.

சீரியஸில் இணைக்கும் பொழுது மின் அழுத்தம் (வோல்ட்) மட்டுமே கூடுதலாகும். ஆம்பியர் அதிகரிக்காது.                                                                

பேரலில் இணைக்கும் பொழுது மின் அழுத்தம் (வோல்ட்) அதிகரிக்காது. ஆம்பியர் மட்டுமே அதிகரிக்கும்.

அடுத்த பதிவில் சந்திப்போம்..............