Thursday, June 7, 2012

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி 4.

முந்தைய பதிவில் நாம் அமைத்திருக்கும் சோலார் பேனல் அமைப்பு (array) நாள் ஒன்றுக்கு சுமார் 5000 வாட்ஸ் அல்லது 5 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என பார்த்தோம். 

பூமியின் சுழ்ற்சி, சூரியனின் சுழற்சி இவற்றின் அடிப்படையில் பூமியில் ஒவ்வொரு பகுதி அல்லது ஊரிலும் சூரியனுடைய ஒளி கதிர்கள், வெவ்வேறு கோணத்தில் , வெவ்வேறு கால (duration) அளவில் இருக்கும். ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒவ்வொரு மாதமும் விழும் சூரிய ஒளியின் மூலம் தினசரி உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை கணக்கிட முடியும். இது நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் மாறுபடும். தமிழ் நாட்டில் முக்கியமான ஊர்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக கிடைக்க கூடிய மின்சாரத்தின் அளவை காட்டும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.


இந்த பட்டியலின் படி திருச்சியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5.13KWh வீதம் ஒரு வருடத்தில் 1872.45 KWh / யூனிட் மின்சாரத்தை ஒரு சதுர மீட்டர் பரப்பில் பெற முடியும். 1KWh என்பது 1000Wh அல்லது 1 யூனிட் ஆகும்.

ஒரு நிறுவனம் தயாரிக்கும் 100W சோலார் பேனலின் விபர குறிப்பை (Specification) கீழே கொடுத்துள்ளேன். அதில் பேனலின் அளவு (size) 56.7 இஞ்ச் நீளம், 25.1 இஞ்ச் அகலம் என கூறப்பட்டுள்ளது. இந்த அளவு கிட்டத்தட்ட எல்லா கம்பெனிகளின் பேனல்களின் அளவும் ஒரே மாதிரியாகத்தான். இருக்கும். அதிக அளவில் வித்தியாசமிருக்காது. இப்பொழுது நாம் அமைத்திருக்கும் சோலார் பேனல் அமைப்புக்கு எவ்வளவு இடம் தேவைப்படும் என்பதை பார்க்கலாம்.

(56.7"x 2) = 113.4" = 9' 9" =10 அடி 
25.1" x 5) = 125.5" = 10' 6" = 10 1/2 அடி

அதாவது 10 1/2 அடி அகலமும் 10 அடி நீளமும் தேவை. இதை சரியான திசையில் , சரியான கோணத்தில் வருடம் முழுவதும் அதிக பட்ச சூரிய ஒளி படும் வகையில் பொருத்த வேண்டும். கீழே 1 MW சோலார் பேனல் வீட்டின் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டுள்ளதை காட்டும் புகைப்படம்.


இனி சோலார் பேனலின் விபர குறிப்பை பார்க்கலாம்.   
Spec:
* 150x150mm multi-crystalline solar cells
* Typical Power: 100W
* Minimum Power: 95W
* Voltage at Typical Power: 17V
* Current at Typical Power: 5.9A
* Open Circuit Voltage: 22V
* Short Circuit Current: 6.69A
* Dimension: 56.7" L x 25.1"W x 1.38" D
* Weight: 24lbs

1. 150x150mm multi-crystalline solar cells என்பது 150 mm X 150 mm அளவுள்ள  கிரிஸ்டலைன் செல்களால் உருவாக்கப்பட்ட சோலார் பேனல் என்பதை குறிக்கிறது.

2.  Typical Power: 100W அதாவது சூரிய ஒளி அதிகமாக அதன் மீது விழும் பொழுது பேனல் தரும் மின் சக்தி 100 W.ஆகும்.

3. Minimum Power: 95W  குறைந்த பட்ச சக்தி 95W 

4. Voltage at Typical Power: 17V அதிக பட்ச மின் அழுத்தம் 17V

5. Current at Typical Power: 5.9A  அதிக பட்ச மின் அழுத்தத்தில் தரும் கரண்ட் 5.9 ஆம்பியராகும்.

6. Open Circuit Voltage:22V  பாட்டரியுடன் (லோடு) இணைக்காமலிருக்கும் பொழுது உள்ள மின் அழுத்தம் 22V.

7. Short Circuit Current: 6.69A ஆரம்ப நிலையில் இருக்கும் நமக்கு இந்த விபரம் தேவை இல்லை.

8. Dimension: 56.7"L x  25.1"W x 1.38"D  56.7 அங்குல நீளம், 25.1 அகலம், 1.38 அங்குல பருமன் உடையது.

9. Weight: 24 lbs இதன் எடை 24 பவுண்ட் (10.9 Kg)

இதர விபரங்களைஅடுத்த பதிவில் பார்க்கலாம்........


24 comments:

 1. Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 2. salaam

  இதை நிறுவ எவ்வளவு செலவு ஆகும் ... தொடர்ந்து எழுதுங்கள் ...

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து படியுங்கள். உங்கள் கேள்விக்கான பதில் அதில் விரிவாக இருக்கும். நன்றி

   Delete
 3. Do we need to inform TNGEDCO or other regulatory authority for installing these solar panels?

  ReplyDelete
  Replies
  1. தமிழ் நாடு சக்தி மேம்பாட்டு கழகத்திடம் ( Tamil Nadu energy Development Agency - TEDA) விண்ணப்பித்து அவர்களிடம் பதிவு செய்துள்ள சப்ளையாலர்கள் மூலம் நிறுவினால் மானியம் பெறலாம். இது விபரம் இந்த தொடரின் இறுதி பதிவில் கொடுக்கப்படும்.

   Delete
 4. அன்புடையீர் வணக்கம்!

  தங்களின் மூன்று பதிவுகளையும் முறையாக படித்தேன்! நாட்டின் நலத்திற்குத் தேவையான, இன்றைய சூழலுக்கு அவசியமான செய்தி! மிகவும்விரிவாகவும் விளக்க மாகவும் எழுதியுள்ளீர்கள். இனி மற்ற விபரங்களையும் அதை அமைப்பதற்கான பணம் (ஒரு வீட்டிற்கு,15முதல்20வரை,ஒருநாளுக்கு) எவ்வளவு ஆகும் என்பதையும் விரிவாக விளக்க, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. இந்த தொடரை தொடர்ந்து ப்டியுங்கள். தொடரின் இறுதி பகுதியில் இதற்கான உத்தேச மதிப்பீடு கொடுக்கப்படு. வருகைக்கு நன்றி

   Delete
 5. 15முதல் 20 வரை என்பது யூனிட்

  சா இராமாநுசம்

  ReplyDelete
 6. Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 7. தங்களின் இந்த சீரிய பணிக்கு எங்களது பாரட்டுகளும், வாழ்த்துகளும். நன்றி .

  ReplyDelete
 8. Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 9. iyya,

  thangallukku iraivan nalla health kodukka irivanai vendigiren
  Thangal seeriya pani sirakkattum.

  ReplyDelete
 10. அற்புதமான தொடர். முழுமையும் படிக்கக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 11. The problem I foresee is the storage battery area and maintenance of it. Probably you might have explained in your earlier posts which I didn't read yet.

  ReplyDelete
  Replies
  1. இப்பொழுது வரும் பேட்டரிகளை பராமரிப்பது மிகவும் எளிது. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆசிட் லெவல் குறைந்திருப்பதை டிஸ்டில்டு வாட்டரை கொண்டு நிரப்ப வேண்டும். அவ்வளவுதான். அடுத்த படியாக ரேக் ஸ்டோரேஜ் முறையில் பேட்டரிகளை அடுக்கினால் குறைவான இடமே தேவைப்படும்.தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
  2. இன்று காலை தான் வீட்டில் உள்ள inverter battery யை மாற்றினேன், ரூபாய் 9000 ஆனது.இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இப்படி செலவு செய்யவேண்டுமா?
   Distilled water ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அதிகமாக குடிக்கிறது.

   Delete
  3. நான் எனது வீட்டில் மைக்ரோடெக் 600VA இன்வெர்ட்டர் மாட்டியிருக்கிறேன். பாட்டரி எக்ஸைட் 100 Ah. சரியாக 5 வருடங்கள் முடிந்து விட்டது. இப்பொழுது பேட்டரி வீக்-ஆகி விட்டது மாற்றப்போகிறேன். எக்ஸைட் பேட்டரி 5 வருடம் உழைக்கிறது.இன்வெர்ட்டர் நல்ல கம்பெனியாக இல்லை என்றால் ஓவர் சார்ஜிங் ஏற்பட்டு பாட்டரி ஆயுள் குறையும்.

   Delete
 12. your informations are very useful to mankind.GOD BLESS YOU, KEEP IT UP.

  ReplyDelete