Friday, June 15, 2012

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9

மத்திய அரசின் MNRE -ன் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களின் விற்பனை பிரதிநிதிகளின் முகவரியை தெரிந்து கொள்ள கீழே  லிங்க் கொடுத்துள்ளேன். இது பி.டி.எஃப் பைல்.இதிலிருந்து உங்கள் ஊரில் அல்லது அருகாமையில் உள்ள டீலர்களை அணுக உங்களுக்கு வசதியாக இருக்கும். இந்த லிங்க்-கை கிளிக் செய்யவும்
https://dl.dropbox.com/u/85335284/MNRE%20approved%20dealers%20list%20for%20solar%20lighting.pdf

இனி மத்திய அரசின் இந்த மானிய திட்டத்தை தமிழ்நாடு அரசு எப்படி செயல்படுத்துகிறது என்பதை பார்க்கலாம். 1 வாட்ஸ்-க்கு பாட்டரியுடன் கூடிய சிஸ்டத்திற்கு ரூ.81 /-, பாட்டரி இல்லாத சிஸ்டத்திற்கு ரூ.57 /- என்ற கணக்கில் மானியம் வழங்குகிறது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்க அரசின் "Tamil Nadu Energy Development Agency தான் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இவர்களால் அங்கிகரிக்கப்பட்ட டீலர்களின் விபரப்பட்டியலின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

இந்த பட்டியலில், இந்த திட்டத்திற்காகவே உருவான லெட்டர் ஹெட் கம்பெனிகளும் இருக்கலாம். இவர்களிடம் தரமான பொருட்களையோ அல்லது நியாயமான விலையையோ எதிர்பார்க்க முடியாது. அதோடு இந்த சிஸ்டம் 25 ஆண்டுகளுக்கு மேல் செயல்படக்கூடியது. பி.வி மாடுல்ஸ்-களுக்கு 25 ஆண்டு கால உத்திரவாதம் உண்டு. இதை லெட்டர்ஹெட் கம்பெனிகளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. எனவே டீலர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனம் வேண்டும். நீங்கள் சோலார் சிஸ்டத்தை நிறுவ முடிவு செய்த பட்சத்தில் எனக்கு மெயில் செய்யுங்கள். இந்த பட்டியலில் உள்ள சிறந்த நிறுவனங்கள் பற்றி தகவல் தருகிறேன். இதை பதிவில் தெரியப்படுத்த கூடாது.

அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...........

 
14 comments:

 1. Dear Sir,

  For my personal and commercial use of Solar Energy can i have ur contact details.
  My personal email ID: murali.target@gmail.com, +91 94884 11861. kindly SMS ur email id and cell no for more details

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய இ-மெயில் முகவரி பிளாக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து எனக்கு பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளதையே குறிப்பிட்டு மெயில் செய்துள்ளீர்கள். உங்களுக்கு என்ன தகவல் வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டு மெயில் செய்யுங்கள்.

   Delete
 2. ennidam 35w 2board 800w inverter 150amp battary ullathu 5amp charge controler vendum help me

  ReplyDelete
  Replies
  1. சோலார் பேனல் எத்தை வோல்ட்?
   150 ஆம்பியர் பாட்டரி எத்தனை வோல்ட்?
   இன்வெர்ட்டரின் டி.சி. இன்புட் எத்தனை வோல்ட்?

   5 ஆம்பியர் சார்ஜ்கண்ட்ரோலர் பத்தாது. விபரம் சொல்லுங்கள்

   Delete
 3. மிக்க நன்றி சார் நீங்கள் இனப்பு கொடுத்த Manufacturing list-ல்
  Manufactur-க்கு தனியாக ஒரு காலத்தில் குறிப்பிட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் பட்டியலில் யாருமே உற்பத்தியாளர்கள் கிடையாது. மத்திய அரசு பட்டியலில் உற்பத்தியாளர் விபரம், அவர்களின் பிரதிநிதிகள் பட்டியல் என தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த பட்டியலை சொல்லுகிறீர்கள்?

   Delete
 4. சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த ரொம்ப காலமாக பார்த்தேன் தமிழ் எந்த விவரமும் கிடைக்கலை நீங்கள் தான் ஐயா விளக்கமாய் தந்து உள்ளீர் ரொம்ப நன்றி இப்போதைக்கு பணம் இல்லை அதனால் இன்னும் சிறிது காலம் கழித்து சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும்

  ReplyDelete
 5. சூரிய ஒளி மின்சாரம் வெயில் அடிக்கும் போது பிரச்னை இல்லை மழை காலத்தில் சூரியன் அவ்வளவாக வருவது இல்லை அப்போது எப்படி மின்சாரம் தயாரிக்கும் இதை பற்றி தாங்கள் கூறவும்...

  ReplyDelete
 6. Sir,

  Despite the concessions of governments, still the investments costs are not affordable to common man and ROI is practically after first 10 years of investment.
  So unless government support this system and subsidies the cost of equipments, the implementation seems to be impractical

  ReplyDelete
 7. சோலார் பேனலில் நேரிடையாக சூரிய ஒளி படவில்லை என்றால் இந்த அமைப்பின் நிலை என்ன? சிறிதளவு வெளிச்சம் இருந்தாலும் இந்த அமைப்பு வேலை செய்யுமா? எனது சந்தேகம் ஏறக்குறைய இனிய நண்பர் சின்னமலை கடந்த ஜூன் 18,கேட்டிருந்த சந்தேகத்தையும் உள்ளடக்கியது. சாதாரணமாக நாம் உபயோகிக்கும் சோலார் கால்குலேட்டர் அமைப்புக்கும் இந்த சூரியஒளி சக்தி அமைப்புக்கும் வித்தியாசம் உண்டா என்ன? தங்களின் கடந்த பதிவுகளை தவறாமல் படிக்கவும், சேமிக்கவும், எனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து எனதருமை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளேன். உங்களின் இந்த சேவைக்கு(சிறு குழந்தைக்கு கூட புரியும்படி)தமிழில் வெகு அழகாக, நேர்த்தியாக வெளியிட்டு சுற்றுச்சூழலையும் காத்து, மின்சக்தி உபயோகத்தில் பிற்கால சந்ததியினர் தன்னிறைவு அடைய, என்னைப் போன்றோரும் அறிந்து கொள்ள கொடுத்தமைக்கு மிக்க வந்தனங்களும், வாழ்த்துக்களும் !!!

  ReplyDelete
 8. Sir

  The link given in your site for the PDF file is not working. Please check and correct.

  Moyenudeen - chittarkottai.com

  ReplyDelete
 9. link cannot opened. try to use adrive.com and save files in My Public Files/Directories

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. Dear Sir,
  Please mail me the good company list. I want to install 1 kva power plant for my home. is the subsidy available for less than 1 kva plant?
  Thanks sir,

  ReplyDelete