Friday, June 22, 2012

நான் ஒதுங்கி போனாலும் என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்?

அது என்னமோ எனக்கு ஒரு ராசி. நான் ஒதுங்கி போனாலும் சிலர் வலிய வந்து என்னிடம் "எனக்கு ஆப்பு வையுங்கள்" என ஆர்வத்துடன் பிரச்சனை செய்கிறார்கள். பி. எஸ். என். எல், அரசுடமையாக்கப்பட்ட வங்கி, பஜாஜ் டூ வீலர் டீலர் என பலர் மீது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்ற ஆயுதத்தை எடுத்து அவர்களுக்கு ஆப்பு வைத்தேன். வெற்றியும் பெற்றேன். அதற்கு பின் சலிப்பு ஏற்பட்டதால் எவனும் எக்கேடு கெட்டு போறான். நமக்கென்ன?" என்று கண்டுக்காமல் விட்டு விட்டேன். ஆனால் விதி யாரை விட்டது?

"சூரிய ஒளி மின்சாரம்" என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்தவுடனே என் மனதில் ஒரு குரல் ரிங்காரமிட்டது "மக்கா! இந்த பதிவை எழுதப்போற, அப்ப எதையாவது நோண்ட, பிரச்சனை வரும். வேண்டாம். சிவனே என்று சும்மா இரு" என்றது

அதெல்லாம் ஒன்னும் வராது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து எழுதினேன். பல நண்பர்கள்  என்னிடம் சோலார் சிஸ்டம் அமைக்க என்ன செலவாகும் என விபரம் கேட்டு மெயில் செய்தார்கள். என்னை ஒரு மனுஷன் என்று மதித்து என் பதிவை படிப்பவர்கள் மற்றும் என்னிடம் விபரம் கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமையல்லவா? அதனால்  விபரம் சேகரிக்க தொடங்கினேன்.

முதல் கட்டமாக Tamil Nadu Energy Development Agency -ஐ தொடர்பு கொண்டு அவர்களின் அங்கீகாரம் பெற்ற சப்ளையர்கள் / டீலர்களின் விபர பட்டியலை பெற்றேன். அதை பதிவில் வெளியிட்டுள்ளேன். அதைப்போலவே மத்திய அரசின் (MNRE) பட்டியலையும் வெளியிட்டுள்ளேன்.

அடுத்த கட்டமாக தமிழக அரசிடம் பதிவு செய்துள்ள டீலர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களால் அமைத்து தரப்படும் சோலார் சிஸ்டத்தில் என்னென்ன சாதனங்கள் உண்டு? தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர், உத்திரவாத விபரம், அவற்றின் விலை ஆகியவற்றை பற்றி கேட்ட பொழுது, இவற்றிற்கு எல்லாம் பதில் சொல்லாமல், மொத்த தொகையையும் மானியத்தொகையையும் மட்டுமே கூறினார்கள்.

எனவே அவர்கள் எல்லோருக்கும் இ-மெயில் முகவரிக்கு மேற்குப்பிட்ட விரங்களை கேட்டு மெயில் செய்தேன். பலர் பதில் அனுப்பவே இல்லை. ஒரு நபர் மட்டும் "Thanks for your enquiry. But please note that we wont be in a position to give you details about the individual products make or their prices. The products shall be supplied in our company name. We always quote to client after understanding their requirements very well. Therefore, kindly give your contact details so that our representative can get in touch with you personally." என வெளிப்படையாக பதில் கொடுத்துள்ளார்.

அவருக்கு நான் அனுப்பிய பதில் "Received your reply for my mail. Really I surprised to hear from you that you are not in a position to give me details about the individual products make or their price. You have also stated that the products which will be installed, will be labelled as your company product.

You are not a private solar system installation contractor. You have registered as a supplier cum installation company with Tamil Nadu Energy Development Agency.

You are liable to install only the certified product by MNRE , in your solar power system execution work. The beneficiary has full right to know the make, model & price for individual items. Secondly after installation, in case of any fault in SPV modules or in Inverter or in Battery we have to contact the authorised service center of the product.  The company must have a broad service network in Tamil Nadu. So we have to think a lot before choosing a company for execution.

Thirdly make, model, price of individual items are essential for filling application form to get sanction from TEDA. Please see the form which is available in their web site." இதற்கு பின் இந்த நபர் பதிலே எழுதவில்லை

ஆக மொத்தத்தில்  நமக்கு சிஸ்டம் அமைத்துக்கொடுக்க அங்கீகாரம் பெற்ற இந்த நபர்கள், சாதனங்களின் விலை, அமைப்பதற்கான கூலி, லாபம் இவற்றையெல்லாம் சேர்த்து என்ன தொகை வருமோ அதைப்போல இரு மடங்கு வசூலிக்கிறார்கள். அதாவது 100% அதிகப்படியான லாபம்.

சட்டப்படி அரசு மானியம் பெறவேண்டுமானால், MNRE -யிடமிருந்து தர சான்று பெறப்பட்ட கம்பெனியின் குறிப்பிட்ட சாதனங்களையே இந்த நபர்கள் உபயோகிக்க வேண்டும். மானியம் அனுமதிப்பதற்கு முன் இதை தமிழ்நாடு அரசின் TEDA அதிகாரிகள் சரிபார்க்கவேண்டும். எனவே இந்த சாதனக்களின் பட்டியல் அவர்களிடம் இருக்கும். அதனால் இந்த பட்டியலை கேட்டு TEDA -ன் சோலார் பிரிவுக்கு மெயில் அனுப்பினேன்.


"தமிழ்நாடு அரசின், வீட்டு தேவைக்கான 1KW சோலார் சிஸ்டத்தை அமைக்க தேவைப்படும் சாதனங்களாகிய சோலார் பேனல்கள், சார்ஜ் கண்டிரோலர், இன்வெர்ட்டர்,  பவர் கண்டிஷ்னர், பாட்டரி ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்களின் எந்தெந்த தயாரிப்புகள்(Make) மற்றும் மாடல்கள்(Model) தங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதற்கான பட்டியலை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசின் "MNRE"-ன் சான்று அல்லது அங்கீகாரம் பெற்ற பொருட்களின் பட்டியலையே தாங்கள் பின்பற்றுவதாக இருப்பின் அந்த பட்டியலின் நகலை எனக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்."

இந்த மெயிலுக்கு கீழ்கண்டவாறு பதில் அனுப்பினர்
"I can’t view this file, Pl send in the proper format"
நான் மீண்டும் அனுப்பிய பதில் கீழே தந்துள்ளேன்.


Dear sir, 
I have typed my mail using unicode font ( E-Kalappai). it is universal one. Anybody can read it without installing any font. Two weeks back I have sent one mail to you using the same unicode and got reply from you. Ok leave it.
I wish to know the make & models of PV Modules (solar panels), Charge Controllers, Inverters, Power Conditioners & Batteries which are approved by you for Solar Power Pack (1KWp) ( Serial No.2 of your list). If you are following the list of  product make & models which are certified & approved by Ministry of New and Renewable Energy, please send me the same list.

இதுவரை பதில் வரவில்லை. 


மீண்டும் சந்திப்போம்....................

17 comments:

 1. என்னைய்யா இது அநியாயமாய் இருக்கு... ????

  ReplyDelete
  Replies
  1. அநீதிகளின் உறைவிடமே இந்தியாதான்!

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. வணக்கம் , நம்ம இந்திய உருபடாம போக காரணம் . எந்த ஒரு விசயமும் வெளிபடையான பதில் கிடைபதில்லை .

  We have to do something .. otherwise we cant get any info from any of our Govt office ...

  I felt very bad Sir .

  ReplyDelete
  Replies
  1. சும்மா வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. எதையாவது செய்யனும்.

   Delete
 4. Dear Sir,
  your service is indeed very valuable and you are a saviour to all the consumers like us.
  A Piece of information on this.
  This morning i enquired abou the vendor on 1KW installation which can support 3 cfl , 5 tubelights, 2, fans and 1 tv.
  this doesn't support A/C.washing machine, geyser .
  Total investment cost is 2.15 and which excludes 60k of central govt subsidy.
  they will help us to get govt subsidy also.
  but ROI seems to be very late and there is guarantee of panels for 20 years and battery life is 5 years.

  Still this seems to be expensive and not an affordable product to the middle class mass of india.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்? விபரம் சொல்லுங்கள். 1KWp என்பது1000 வாட்ஸ். அதாவது 1000 வாட்ஸ் சாதனத்தை 1 மணி நேரம் உபயோகிக்க மின்சாரத்தை தரும். 500 வாட்ஸ் சாதனம் என்றால் 2 மணி நேரம். மேலும் அதிகமாக பாட்டரியை இணைத்தால் அதிக நேரம் மின்சாரம் கிடைக்கும். 1KW இன்வெர்ட்டர் என்றால் ஒரே சமயத்தில் 1000 வாட்ஸ் மின்சாரத்தை தரும் திறன் கொண்டது என பொருள்.எனது 10 பதிவுகளையும் படியுங்கள். நன்றாக புரியும்.

   Delete
 5. dear sir,
  the articles 1 to 10 are very useful who are new to this subject,
  however you have made us to witness what is going on regarding GRANTS PAID BY BOTH CENTRAL & STATE GOVTs., public / quasi govt under takings like BSNL, boards like EB,ctc.Huge amount of public money is lootted by politicians & high-govt officials, as usual.we must be very vigilant at least from now on wards.

  abubakkar km

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மயிரை கட்டி மலையை இழுப்போம். வந்தால் மலை. அறுந்து போனால் தலைமயிர் தானே? நஷ்டம் ஒன்றும் இல்லை

   Delete
 6. இனிய நண்பர் திரு.திரவிய நடராஜன் அவர்களே, தங்களின் மகத்தான சேவையை பாராட்ட எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. தொடரட்டும் தங்களின் பணி. தங்களின் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் படிக்கவும், சேமித்துக் கொள்ளவும் செய்தேன். தங்களுக்கு மிக்க வந்தனங்களும் வாழ்த்துக்களும் !!! இந்த ஜனநாயக நாட்டில் மக்களுக்காக அரசாங்கம் நடக்கவில்லை என்பதையே அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காண்பிக்கின்றது. இப்போக்கு மிகவும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. நண்பர் அபூபக்கர் அவர்களின் கருத்தினை தங்களின் பதிவினைக் கண்ட அனைத்து தரப்பினரும் எதிரொளிப்பார்கள் என்றே நினைக்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம். தங்கள் கருத்துக்கு நன்றி. மொத்தத்தில் நமக்கென்ன வந்தது என்ற மனப்போக்கே இதற்கு காரணம். நாம் மாறினால் நாடும் மாறும்

   Delete
 7. Replies
  1. ஏங்க இது அநியாயம். என் அவஸ்தையை சொல்லியிருக்கேன். நீங்க ரசித்திருக்கீங்க! பரவாயில்லை இன்னும் ரசிக்கலாம். அடுத்தும் வரும்.

   Delete
 8. திரவியம் சார்,

  ebay online shopping ல இதை விட கம்மியான விலையில் சூரிய சக்தி உபகரணங்கள் கிடைக்குது. இந்திய நிறுவனங்களின் மாநிய விலை என சொல்லப்படுவது விலை அதிகமாக இருக்கு. இத்தனைக்கும் இவர்களும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்து தான் விற்கிறார்கள்.

  பெரும்பாலும் தனியாக நுகர்வோர்கள் வாங்கும் போது மாநியத்தினை அவர்கள் கழித்துக்கொண்டு தான் விற்கிறார்கள், நாம் தனியாக கிளெய்ம் செய்ய தேவை இல்லை என நினைக்கிறேன்.

  மொத்தமாக நிறுவனங்களுக்கு என விற்கும் போது மாநிய தொகை அதிகம் இருக்கும் என்பதால் ,வாங்குபவர்கள் கெளெய்ம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

  பொருளின் விலையை விட அதிக விலை வைத்து விற்கிறார்கள் என்பது மட்டும் உண்மை,அதனாலேயே மக்கள் பெருமளவில் பயன்ப்படுத்த முன்வருவதில்லை.

  இந்தியாவில் சூரிய சக்தி உபகரணங்கள் விற்பதே அரசு நிறுவனங்கள், தனியார்கள் தாங்கள் "பசுமை கட்டிடமாக" வைத்திருக்கிறோம் எனக்காட்ட சில மாற்று எரிசக்தி உபகரணங்கள் நிறுவவேண்டும், மேலும் உள்ளாட்சி அமைப்புகள் அரசிடம் இதற்கென நிதி பெறுகிறார்கள்,அவர்கள் சொன்ன விலைக்கு வாங்குவார்கள் ,என்றே இத்தகைய நிறுவனங்கள் செயல்படுகின்றன, பொது மக்கள் வாங்கிப்பயன்ப்படுத்த அல்ல.

  ReplyDelete
 9. எனது சிற்றறிவுக்கு எட்டாத பல தகவல்களை அறிகிறேன்.
  தகவல்களை மறைத்து , மக்களை முட்டாள்களாக வைப்பது நமது தேசீய பண்பாடல்லவா!அதனால்தான் விலையில் ஏமாற்றுகிறார்கள். என்னை போல விழிப்பவர்கள் , நட்றாக ஏமாறலாம். அட இந்தியாவே!

  ReplyDelete