Thursday, July 12, 2012

அரசியல்வாதிகளின் "சமூக நீதியும்-இட ஒதுக்கீடு கொள்கையும்" தொடர்.2

இந்தியா சுதந்த்திரம் அடைந்த பொழுது, பல நூற்றாண்டுகளாக கல்வி உரிமை மற்றும் சமூக நீதி மறுக்கப்பட்ட  பிரிவினர்களுக்கு உடனடியாக, ஒரு தற்காலிக நிவாரணம் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டதுதான், அரசியல் அமைப்பு சட்டதின்  இட ஒதுக்கீடு  பிரிவு.

இதை எளிமையாக புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட  பயணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையுடன் ஒப்பிடலாம். விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து வரும் மீட்பு குழுவினர் என்ன செய்வார்கள்?. விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ்சில் ஏற்றி மருத்துவ மனைக்கு எடுத்து செல்வார்கள். அங்கு, கொண்டுவரப்பட்டவர்களின் காயத்தை பரிசோதித்து, அவர்களில் யார் யாருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்படவேண்டும். லேசாக காயம் பட்டவர்களுக்கு அதற்குரிய சிகிச்சை அளித்து உடனே அனுப்பிவிடலாம். அதிகமாக காயம் பட்டவர்களுக்க்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த பல நாட்கள் ஆகும். அவர்களை சிகிச்சை பிரிவில் சேர்த்து பல நாட்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். உயிருக்கு போராடும் நிலையில் உள்ளவர்களை  அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல், உயிருக்கு போராடுபவர்களை ஆஸ்பத்திரி வராண்டாவில் அம்போ என போட்டுவிட்டு, சுண்டுவிரலில் சிராய்ப்பு ஏற்பட்டவனுக்கும், காயமே படாதவனுக்கும் விட்டமின், போஷாக்கு மருந்துகள்,  பால், முட்டை போன்றவற்றை கொடுத்து  ஆஸ்பத்திரியில் அவன் விரும்பும் வரை தங்க வைத்தால் என்ன நடக்கும்?   காயம்பட்டவர்கள் தகுந்த சிகிச்சை இல்லாமல் செத்துப்போவார்கள்.

இந்த செயல்தான் இட ஒதுக்கீட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அரசு பணி, பொறியியல் படிப்பு, மருத்துவ படிப்பு, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணியிடங்கள் எல்லாவற்றிலும் SC/ST பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. அதன் படி வருடா வருடம் நிரப்பப்படுகிறது.

இந்த பணிகள் அல்லது படிப்புகளுக்கு கல்வி தகுதி தேவை. இந்த பிரிவினரில் 90% நபர்கள் வசிப்பது கிராமங்களில். மேலே குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டை பெற தேவையான கல்வி தகுதியை பெற பெரும்பாலான கிராமங்களில் பள்ளிக்கூடங்களே கிடையாது. அப்படியே இருந்தாலும் குடும்ப பொருளாதார சூழ்நிலை இடம் கொடுப்பதில்லை. போதுமான வருமானம் இல்லாமையால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குழந்தை தொழிலாளர்களாக வேலைக்கு அனுப்பும் சூழ்நிலை! இந்த முட்டுக்கட்டையையெல்லாம் மீறி, பிளஸ்டூ முடித்து விட்டு இட ஒதுக்கீட்டின் பலனை பெறுபவர்கள் மிக சிலரே!

நம் நாட்டின் நிர்வாக லட்சணம் உலகம் அறிந்ததே. காசு வாங்கிக்கொண்டு இந்திய ஜனாதிபதியையும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் கைது செய்ய "அரெஸ்ட் வாரண்ட்" வழங்கும் கீழ் நீதிமன்றங்கள், இரண்டு கையும் இல்லாதவனுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் வாகன போக்குவரத்து துறை. இந்த நிலையில் ஜாதி சான்றிதழ் வழங்கும் தாசில்தார்கள் மட்டும் அரிச்சந்திரனின் பேரன்களா?. காசு கொடுத்தால், கொடுக்கும் காசுக்கு ஏற்ப செட்டியாரும் தலித் ஆகலாம். மூப்பனாரும் பழங்குடியினர் ஆகலாம். இது ஏன் பிராமணனும் ஆதிவாசியாகலாம்.  இவர் இன்ன ஜாதி என்பதை கண்டறிய விஞ்ஞான ரீதியான முறை எதுவும் இல்லாததால் இந்த நிலை தொடரும்.

ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்களை பார்த்தால் சில உண்மைகள் தெரியவரும்.

1. இட ஒதுக்கீட்டு சலுகையில் அரசு அல்லது பொதுத்துறையில் அதிகார்களாக பணிபுரியும், வசதியுள்ள பெற்றோர்களின் மகன் அல்லது மகளாக இருப்பார்கள். அதிலும், பெயர் பெற்ற கல்வி நிறுவனத்தில் படித்தவர்களாக இருப்பார்கள். படிப்பில் போட்டி போடுமளவிற்கு இவ்வளவு நல்ல வாய்ப்பு இருந்தும்  இவர்கள் கோட்டாவில்  வந்து மற்றவர்களின் வாய்ப்பை பறித்தவர்கள்.

2. தேர்வானவர்களில் சிலரின் பூர்வீகத்தை கிளறினால் அவர்கள் SC/ST ஆகவே இருக்க மாட்டார்கள்.   
.
ஆக இந்த இட ஒதுக்கீடு சலுகை விழலுக்கு நீர் பாய்ச்சிய முட்டாளின் கதையை போலத்தான்.

சாமானியனான எனக்கு தெரிந்த உண்மை, ஊருக்காக உழைக்க வந்த தியாகிகளாகிய அரசியல்வாதிகளுக்கும், ஜாதி தலைவர்களுக்கும் ஏன் புரியவில்லை? என்று கேட்காதீர்கள். இதைத்தானே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்!

சாக்கடை அள்ளுபவன் வாரிசுகள் சாக்கடை அள்ளும் நிலையிலும், செருப்பு தைப்பவன் வாரிசு அப்பன் வழியிலும், கூலி வேலை செய்பவன் வாரிசு அப்பனை போலவே சோத்துக்கு அல்லாடும் நிலையில் இருந்தால்தானே அரசியல்வாதி பொழைப்பை நடத்த முடியும்!

மீண்டும் சந்திப்போம்......................5 comments:

 1. எழுதுபவர்கள் கொஞ்சம் உண்மைகளைத் தெரிந்து கொண்டு எழுதுவது நல்லது.இந்தியாவிகு வந்த வெள்ளைக் காரன் பார்த்தான் என்ன எங்கே பார்த்தாலும் பார்ப்பனர்களே வெலைகளில், அதுவும் முக்கிய வேலைகள் முழுதிலும் இருக்கிறார்களே என்று.பின்னர் மற்றவர் படிக்கவும், நீதிக் கட்சி ஆட்சியில் இட ஒதுக்கீடும் கொண்டு வரப் பட்டது.
  இந்தியா சுதந்திரம் அடைந்ததும் சட்டம் இயற்றிய குழுவிலே இருந்த அல்லாடி கிருட்டிணசாமி உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டார்.இட ஒதுக்கீட்டால் ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை யென்று.(அந்தப் பெண் விண்ணப்பமே செய்ய வில்லை என்ற உண்மையை மறைத்து).உச்ச நீதி மன்றம் இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தது.உடனே தந்தை பெரியார் அவர்களும் மற்றவர்களும் போராடி பெற்றது தான் முதல் இந்திய சட்டதிருத்தம்.
  ரேசன் கார்டு வைத்திருக்கும் பெரும்பாலான பணக்காரர்கள் எல்லாம் இலவசப் பொருள்களையும், கேசு மற்ற வற்றை வாங்கிக் கொள்கிறார்கள். அது ரேசன் கார்டு செய்த குற்றந்தானே !
  முதலில் சட்டத்தில் சாதியை ஒழிக்கச் சொல்லுங்கள். அனைவரும் அர்ச்சகராகலாம், சங்கராச்சாரிகளாகலாம் என்று.
  பலர் இன்று படித்து முன்னேறியிருப்பது எதனால் என்று புரியாமல் குறைகளை மட்டுமே பெரிதாக்கும் சூழ்ச்சி வேண்டாம்..

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிவிற்கும், உங்கள் பின்னூட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை.

   Delete
 2. this comment is very useful but castes are not important in our India. One true Indian is essential for India. Thank you.

  ReplyDelete
 3. அரசுப்பணியில் இருக்கும் அதிகாரிகளின் மாத சம்பளம் ரூபாய் முப்பதாயிரத்திற்கு மேல் இருந்தால் அவர்களது குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு நிராகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மிகக் கீழ நிலையில் உள்ள குப்பன் மகன் இட ஒதுக்கீட்டு பலனை அடைய முடியும்

  ReplyDelete
 4. unless you have a proper system to calculate the economic status of a person, unless you have stringent rules to punish if some one lies on this , unless the whole system of quota is based on economic status, nothing is going to change.
  the so called creamy layer has already become and doing more atrocities than the so called upper castes

  ReplyDelete