Friday, July 27, 2012

மின்சாரம்-பகுதி.4

இந்த பதிவில் முதலில் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களை பற்றி பார்க்கலாம். பல்பை பொருத்துவதற்கு கோல்டர்(HOLDER) பயன்படுகிறது. இது பேட்டன் ஹோல்டர், பேட்டன் ஆங்கிள் ஹோல்டர், பாயோனெட் ஹோல்டர் என மூன்று வகைப்படும். படத்தை பார்க்கவும்.

 பேட்டன் ஹோல்டர்


பேட்டன் ஆங்கிள் ஹோல்டர்

பாயோனெட் ஹோல்டர்

அடுத்தபடியாக சீலிங்ரோஸ். இது வயரிங் பாயிண்டிலிருந்து சீலிங் பேன், சீலிங்கில் தொங்க விடப்படும் லைட்டுகள், டியூப் லைட் ஆகியவற்றிற்கு மின் இணைப்பை தர உபயோகப்படுத்தப்படும் சாதனமாகும். படம் கீழே தரப்பட்டுள்ளது.

சீலிங் ரோஸ்

3 பின் பிளக் சாக்கெட், 2-பின் பிளக் சாக்கெட்( இவற்றை நாம் பேச்சு வழக்கில் பிளக் பாய்ண்ட் என சொல்லுவோம்), 3-பின் பிளக் டாப், 2 பின் பிளக் டாப்(இவற்றை பிளக் என சொல்லுவோம்) இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்தவைகளே. படம் போட்டு காட்ட வேண்டிய அவசியமில்லை.

இனி நாம் உபயோகப்படுத்தும் "EXTENSION PLUG BOX"  அசெம்பிள் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். நாம் எல்லோரும் கம்பியூட்டருக்கு இந்த பாக்ஸ்-ஐ பயன் படுத்துவோம்.


நாம் இப்பொழுது பார்க்கப்போவது ஒரு இண்டிகேட்டர், இரண்டு சுவிட்ச்கள், இரண்டு பிளக்குகள் உள்ள  பாக்ஸ் ஆகும்.

தேவையான பொருட்கள்.
1. கேங் பாக்ஸ் (for 3 switches + 2 three pin sockets. Back side covered) = 1
2. இண்டிகேட்டர் = 1
3. 5ஆம்பியர் சுவிட்ச் = 2
4. 3 கோர் வயர் = 5 மீட்டர்
5. 5 ஆம்பியர் 3 பின் டாப் =1
6. 5 ஆம்பியர் 3பின் சாக்கெட்.

கீழே காட்டியுள்ள படத்தில் காட்டியுள்ளபடி கேங் பாக்ஸ்-ல் இண்டிகேட்டர்,  சுவிட்ச், சாக்கெட் எல்லாவற்றையும் மாட்டவும்.

3 கோர் வயரின் ஒரு நுனியில் 1 அடி நீளத்திற்கு மேல் சிலீவை (SLEEVE) நீக்கி விடவும். இப்பொழுது 1 அடி நீளத்திற்கு உள்ளே இருக்கும் 3 வயர்களும் தனித்தனியாக இருக்கும். இவற்றின் நிறம் சிகப்பு, கருப்பு, பச்சை என இருக்கும். சிகப்பு கலர் வயரை பேஸ்-க்கும், கருப்பை நியூட்ரலுக்கும், பச்சையை எர்த்-க்கும் உபயோகிக்கவும். கீழே உள்ள படத்தில் காட்டிய்படி சுவிட்ச், சாக்கெட், இண்டிகேட்டர் ஆகியவற்றை இந்த வயரால் இணைக்கவும்.

இந்த கேங் பாக்ஸ்-ல் நீங்கள் செய்துள்ள வயரிங் சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும். அதன் பின் இந்த பாக்சின் பின் புற மூடியை பொருத்தவும். 3 கோர் வயரின் மறு நுனியில்  சுமார் 2 அங்குலத்திற்கு வெளிப்புற சிலீவை நீக்கி, 3 வயர்களையும் வெளியே எடுக்கவும். 3பின் டாப்பின்  மேல்புறத்தில் உள்ள ஸ்குருவை கழற்றுங்கள். இப்பொழுது பிளக்கின் மூடி தனியாக வந்துவிடும்.  படத்தில் காட்டியபடி இணைப்பை கொடுக்கவும்.
இப்பொழுது EXTENTION POWER BOX ரெடியாகிவிட்டது.

குறிப்பு:  வயரின் மீதுள்ள இன்சுலேஷன் (பிளாஸ்டிக்) -ஐ நீக்கி செப்பு கம்ம்பியை  நன்றாக முறுக்கிய( TWIST) பின்பே அதை இணைக்க வேண்டும்.

இப்பொழுது இந்த பாக்ஸ்-ன் பிளக் டாப்பை  வீட்டிலுள்ள பிளக்கில் மாட்டினால், போர்டுக்கு மின் சப்ளை வரும். போர்டிலுள்ள இண்டிகேட்டர் லைட்  எரியும். முதல் சுவிட்ச்சை ஆன் செய்தால் முதல் பிளக்கிற்கு மின்சார சப்ளை கிடைக்கும். அதை போலவே இரண்டாவது பிளக்கிற்கும்  சப்ளை வரும்.

இனி இந்த பாக்ஸ் எப்படு செயல்படுகிறது என்பதை பார்க்கலாம். பிளக் டாப்பின் எர்த் முனை(பச்சை நிற வயர்) பாக்ஸில் உள்ள பிளக் சாக்கெட்களின் எர்த் முனைகளுடன் நேரடியாக் இணைக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே  பிளக் டாப்பின் நியூட்ரல் முனை(கருப்பு நிற வயர்) பிளக்குகளின் நியூட்ரல் முனைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. லைன் அல்லது பேஸ் வயர்(சிகப்பு நிற வயர்) பிளக் டாப்பில் இருந்து பாக்ஸின் சுவிட்ச்களின் கீழ் பக்கமுள்ள கனெக்டரில் இணைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது நீங்கள் பிளக் டாப்பை வீட்டிலுள்ள பிளக்கில் இணைக்கும் பொழுது எர்த், நியூட்ரல் ஆகியவற்றின் இணைப்பு நேரடியாக பிளக் சாக்கெட்டிற்கு கிடைக்கும்.  ஆனால் பேஸ் அல்லது லைன் சப்ளை பிளக் சாக்கெட்டுக்கு கிடைக்காது. அது சுவிட்ச்களின் கீழ் பக்க இணைப்புடன் நின்று விடும். நீங்கள் சுவிட்ச்சை ஆன் செய்தால், சுவிட்ச்சின் இரு முனைகளுக்கும்  தொடர்பு கிடைக்கும். அப்பொழுது சுவிச்சின் மேல் முனை வழியாக பேஸ் பிளக் சாக்கெட்டிற்கு வரும். சுவிட்ச்சை ஆஃப் செய்து விட்டால் சுவிட்ச் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பிளக்கிற்கு சப்ளை வருவது நின்று விடும்.

இந்த முறையில்   நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப பல பிளக்குகள் கொண்ட பாக்ஸ்-ஐ தயார் செய்யலாம்.

இதே பாக்சில் பியூஸ் யூனிட்டை இணைக்க வேண்டும் என்றால் எளிதாக செய்யலாம். பியூஸ் யூனிட், சுவிட்ச்சு, இண்டிகேட்டர் எல்லாமே ஒரே அளவு கொண்டைவைதான். எனவே  4 சுவிட்ச் + 2 3பின் சாக்கெட்டுக்கான கேங் பாக்ஸை வாங்கினால் அதிகப்படியாக இந்த பியூஸ் யூனிட்டை இணைக்க முடியும். அவ்வாறு செய்யும் பொழுது, முதலில் பியூஸ் யூனிட் அதன் பின் இண்டிகேட்டர் என பொறுத்த வேண்டும். 3கோர் வயரில் உள்ள சிகப்பு வயரை  பியூஸ் காரியரின் ஒரு முனையில் இணைக்க வேண்டும். மறுமுனையை இண்டிகேட்டரில் இணைக்கவேண்டும்.

இப்பொழுது பேஸ் சப்ளையானது பியூஸ் யூனிட்டினுள் சென்று அதில் நாம் மாட்டியிருக்கும் பியூஸ் வயர் வழியாக மறு முனையை அடைந்து இண்டிகேட்டர் மற்றும் சுவிச்சு-களுக்கு செல்லும். பாக்ஸிலோ அல்லது இந்த பாக்ஸில் உள்ள பிளக்குடன் இணைக்கப்பட்ட சாதனங்களிலோ ஏதாவது ஷார்ட் சர்க்குயூட் இருந்தால் பியூஸ் யூனிட்டில் பியூஸ் போய் விடும்.

மீண்டும் சந்திப்போம்..................


32 comments:

  1. சில சந்தேகங்கள் இருந்தது. உங்கள் பதிவின் மூலம் விளக்கம் பெற்றேன் ஐயா... பாராட்டுக்கள்....
    நன்றி... (த.ம. 1)

    ReplyDelete
    Replies
    1. தாங்களை போன்ற ஒரு சிலர் தான் ஆர்வத்துடன் என் பதிவை படிக்கிறீர்கள் என நினைக்கிறேன். இது உன்ப்மையிலேயே எனக்கு இதுமாதிரி உபயோகப்படும் தொழில் நுட்ப பதிவுகள் போடுவது வேலை மெனக்கெட்ட வேலையோ என சந்தேகம் வருகிறது!

      Delete
    2. படிப்பவர்கள் எல்லாரும் பதில் எழுதுவதில்லை என்பதுதான் உன்மை. ஆனால் இது போன்ற சேவைகளை தனி ஃபைல் போட்டு நான் வைத்திருக்கிறேன். தொடருங்கள். பலனை எதிர்பாராதே என்று கீதை சொன்னதெல்லாம் பலனில்லை என்ற அர்த்தத்தில் அல்ல. எங்கோ அதற்கான எதிர்வினை நடந்து கொண்டே இருக்கிறது என்ற அர்த்தத்தில்தான்.

      Delete
  2. Replies
    1. வாருங்க சார். நான் கஷ்டப்பட்டு கத்துக்கிட்ட விஷயங்களை எழுதுகிறேன். ஆனால் மக்களுக்கு ரசிக்கவில்லை என நினைக்கிறேன்.

      Delete
  3. அன்பு நண்பர் திரவிய நடராஜன் அவர்களுக்கு, தங்களின் பதிவுகளை படிக்கும் அனைவரும் கருத்துப் பதிவு செய்வதில்லை என்றே எண்ணுகின்றேன். சந்தேகங்கள் தோன்றினால்தானே கேள்விகளைக் கேட்க முடியும். மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் தங்களின் பதிவுகள் அமைந்திருக்கின்றன. மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் அன்புடன் கே எம் தர்மா..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்ஹ்டுக்கு நன்றி

      Delete
  4. ஐயோ ! மாஸ்டர் ... கவலைப் படாதீங்க. உங்கள் தரவு மிகமிக பயனுள்ளது ... நான் பின்னூட்டம் போட
    சோம்பலாகவிருந்ததால் ... விட்டுவிட்டேன் .. என்னை போல பலர் இருப்பார்கள் கவலையை விடுங்க ..
    சேவையை தொடருங்க ..நன்றி! வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து பதிவிடுகிறேன். நன்றி

      Delete
    2. கணேஷ் தங்கள் கருத்துக்கு நன்றி

      Delete
  5. Excellent work.
    keep it up
    thank you

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து பதிவிடுகிறேன். மிக்க நன்றி

      Delete
  6. Very good service.Keep it up please.

    ReplyDelete
  7. சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் உபயோகமான பல தகவல்களுடன் அருமையாக உள்ளது. நிறைய பேர் படிக்கிறோம். பலன் அடைகிறோம். ஆனால் பதில் போடுவதில்லை. அதனால் வரவேற்பு இல்லை என சோர்வு அடையாதீர்கள். வீண் அரட்டை அடிக்கும் இடத்தில் நிறைய சலசலப்பு இருக்கும். இது வகுப்பு அறை. அமைதியாக உள்ளது. அவ்வளவே. நன்றி. வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து பதிவிடுகிறேன். மிக்க நன்றி

      Delete
  8. வணக்கம். இது வரை வாழ்க்கையில் , பல்ப் வேலைகளோ, மின்சார வேலைகளோ, அவசிம் ஏற்பட்டால், உடனே கணவன் கூப்பிட்டு , ஒப்படைத்து விட்டு தலைவலி விட்டது என்று, நிம்மதி அடைவேன்.
    ஏதோ, ராக்கெட் சயன்ஸ் மாதிரியும், எனக்கு புரியாத மாதிரியும் , மனசில் நினைப்பு.

    இப்போது முதல் முறையாக, உங்கள் பதிவை பார்க்கும் போது, ஆகா, இதில் பல விசயங்கள் நமக்கு தெரியவில்லையே, என்றும், அதற்கான ஆவலையும் என்னுள் உணர்கிறேன்.

    உங்கள் பதிவுகளை படித்து தெரிந்து கொள்ள வேண்டியது, நிறைய உள்ளன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து படியுங்கள்.

      Delete
  9. Sir,
    Excellant posts, please continue the good service.

    ReplyDelete
  10. நல்ல பயனுள்ள தகவல்


    நன்றி,
    http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  11. sir nalla use full nice thanks thodaratum ungal seavai

    ReplyDelete
  12. sir good work
    please continue

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  13. //எனக்கு இதுமாதிரி உபயோகப்படும் தொழில் நுட்ப பதிவுகள்
    போடுவது வேலை மெனக்கெட்ட வேலையோ என சந்தேகம் வருகிறது!//

    சந்தேகமே படாதீங்க சார், நம்மாளுகளுக்கு கொஞ்சம் சோம்பலே காரணமேயன்றி
    வேறொன்றுமில்லை, கவலைபடாம தொடருங்க.

    ReplyDelete
  14. It is very useful for me.Now i have understand many things about solar.So sir you write many things about solar we does not know.Thank you.By M.P.Subramanian,Ramakrishnanpuram karur.639001.
    email-subramaniyathav.gmail.com.
    Phone no:9942230508

    ReplyDelete
  15. Sir, It is very useful self house wiring. I want House Invertor wiring diagram.any indian local invertor.

    ReplyDelete
  16. என்னங்க ஐயா இதுகெல்லாம் வருத்த பட்டுகிட்டு ஆர்வம் கொண்டோர் தங்களது பதிவை தவற விட மாட்டார்கள்.தொடர்ந்து தங்களது சேவையை தொடருங்கள் நாங்கள் துணை நிற்கிறோம்.

    ReplyDelete
  17. என்னங்க ஐயா இதுகெல்லாம் வருத்த பட்டுகிட்டு ஆர்வம் கொண்டோர் தங்களது பதிவை தவற விட மாட்டார்கள்.தொடர்ந்து தங்களது சேவையை தொடருங்கள் நாங்கள் துணை நிற்கிறோம்.

    ReplyDelete