Monday, July 9, 2012

சோலார் மின்சாரத்தின் அடக்க விலை..

சோலார் மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் சாதனங்கள் (1) சோலார் பேனல்கள், (2) பேட்டரி, (3)சார்ஜ் கண்டிரோலர் + இன்வெர்ட்டர் அல்லது பவர் கண்டிஷ்னர்.

சோலார் பேனல்கள் 25 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும். எனவே இந்த சிஸ்டத்தின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் என வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த 1KW சோலார் சிஸ்டம் நாள் ஒன்றுக்கு 5KW மின்சாரத்தை உற்பத்தி செய்யும். 20 ஆண்டுகளில் இதன் மொத்த உற்பத்தி 36,500 ( 5x 365x 20) யூனிட்களாகும்.

பாட்டரிக்கு 4 வருட உத்திரவாதம் உண்டு. 5 ஆண்டுகள் உழைக்கும். எனவே 5 ஆண்டுக்கு ஒருமுறை என பாட்டரியை மாற்றினால் 20 ஆண்டுகளில் 4 தடவை மாற்ற வேண்டியிருக்கும். அதாவது 8 பாட்டரிகள்.

இன்வெர்ட்டரை பொருத்தவரை டிவி போலத்தான். எளிதில் ரிப்பேர் ஆகாது. அப்படி ஆகும் பொழுது சரி செய்ய வேண்டும். மிகவும் பழையதாகும் பொழுது மாற்ற வேண்டும்.

பல கம்பெனிகள் இதை அமைத்து கொடுக்கிறார்கள். அவற்றில் குறைந்த ரேட்டை அடக்க விலை நிர்ணயம் செய்ய எடுக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள பட்டியலை பாருங்கள். உங்களுக்கு கிடைக்கும் மின்சாரத்தின் விலை ரூ.6.38 ஆகும். இந்த அடக்க விலை பொருட்களின் இன்றைய விலைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மீண்டும் சந்திப்போம்................


11 comments:

 1. Excellent Article Very Detailed One, not many people give details like this and you are one of the gifted person.

  ReplyDelete
 2. அய்யா,
  தற்காலத்தில் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு தொழில்நுட்பத்தைப் பற்றி எளிய தமிழில் அரிய அறிவியல் தகவல்களைத் தருவதற்கு உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. வணக்கங்கள்...

  நான் ஒரு கட்டிடப் பொறியாளர். ஆனால் மின்சாரத் துறை பற்றிய அறிவு குறைவு.
  நான் இந்த ஆண்டு இறுதியில் தஞ்சையில் வீடு கட்டத் திட்டமிட்டிருக்கிறேன்.
  எனக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வமுண்டு.
  எனவே என் வீடு பசுமை வீடாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
  அதனால் இந்த சூரிய ஒளி மின்சாரம் பற்றிய தகவல்களை இணைய வெளியில் தேடத் தொடங்கியபோது கூகிளாண்டவர் உங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  இப்போதுதான் உங்கள் கட்டுரைகளைப் படிக்கத்தொடங்கியுள்ளேன். மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் என்று நம்புகிறேன்.
  படித்து முடித்துவிட்டு மேலும் தெளிவுற உங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்வேன்
  அன்புடன்
  சங்கரவடிவேல்
  கத்தார்

  ReplyDelete
 3. சோலார் செல் பற்றிய் உங்கள் பதிவுகளை இப்போதுதான் பார்க்கிறேன். மிக சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். குறிப்பாக நடைமுறை விவரங்கள் (practical aspects) நன்றாக வந்திருக்கின்றது.

  இந்த கணக்கில், 2.3 லட்சத்தில் சுமார் 2 லட்சத்தை முதல் நாளே செலவு செய்ய வேண்டும். இதன் வட்டி ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லவா? அதைப் போலவே டீசல் மற்றும் மின்சாரத்தின் விலை ஒவ்வொரு வருடமும் ஏறுமுகமாகத்தான் இருக்கிறது. இன்று 100 ரூபாய்க்கு கிடைக்கும் மின்சாரம், 10 வருடங்களுக்கு பின்னர் 200 ரூபாய் ஆகலாம். இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்து, எவ்வளவு நாளில் சோலார் பேனலும், அரசு மின்சாரமும் (அல்லது டீசல் ஜெனரேட்டரும்) break even சரிசமம் ஆகும் என்று சொல்ல முடியுமா?

  நன்றி

  ReplyDelete
 4. உங்கள் கட்ட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.கோவையில் இதுபோல யார் செய்கிறார்கள் என்ற விவரங்களையும் தெரிவிக்கவும். மேலும் பேட்டரிகளை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தான் மாற்றவேண்டும் என்பதால் அந்த தொகையை முழுமையாக ஆரம்பத்திலெயே நாம் செலவளிக்க வேண்டியதில்லை. இதுவும் ஒரு விதத்தில் லாபமே.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. A.BALAMURUGAN KAMAKKUR 9095140265

  ReplyDelete
 7. i have a taken solar and ups dealarchip..contact T.Nehru biran B.E., cell :8760886546

  ReplyDelete
 8. i have a taken solar and ups dealarchip..contact T.Nehru biran B.E., cell :8760886546

  ReplyDelete
 9. அய்யா:
  மிகவும் நன்றி

  ReplyDelete
 10. அய்யா:
  மிகவும் நன்றி

  ReplyDelete