Monday, July 30, 2012

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.1

நாம் தினமும் வெளியே தூக்கியெறியும் சமயல் கழிவுகளாகிய, அழுகிய காய், பழம், பழத்தொலி, சமைத்த உணவு பொருட்கள் போன்றவற்றிலிருந்து நமக்கு தேவையான சமையல் எரிவாயுவை தயாரிக்க முடியும். இன்னும் ஒரு சில மாதத்தில் ஆயில் கம்பெனிகள் முற்றிலுமாக எரிவாயுவிறகு வழங்கப்பட்டு வரும் மானியத்தை நிறுத்த போகின்றன. இதனால் நாம் உபயோகிக்கும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை சுமார் ரூபாய்.850-ஐ தொடும். அதாவது இரட்டிப்பு விலையாகி விடும்.

இந்த சூழ்நிலையில் வீட்டில் நாமே கேஸை உற்பத்தி செய்வது நல்லது என்பதால் நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு. சமையலறை கழிவிலிருந்து எரிவாயுவை உற்பத்தி செய்ய பயன்படும் சாதனத்தின் பெயர் " பயோ கேஸ் சிஸ்டம்(ANAEROBIC DIGESTER SYSTEM)"  ஆகும். கீழே உள்ள படத்தை பாருங்கள். 

 சிஸ்டம், ஆன் ஏரோபிக் சிஸ்டம் என கூறுவதால் இது ஏதோ பெரிய கருவி என்று நினைத்துவிடாதீர்கள். ரெம்ப சிம்பிளாக சொல்லப்போனால், முன்பெல்லாம் உடுப்பி ஹோட்டலில் காப்பியை தம்ளரில் ஊற்றி அதை வட்டகை கப் கொண்டு மூடி, அதை தலைகீழாக்கி கொண்டு வந்து டேபிளில் வைப்பார்கள். வட்டகை கப் மேல் நோக்கி இருக்கும். தம்ளர் தலைகீழாக இருக்கும். அதைப்போலவே இதில் பெரிய பிளாஸ்டிக் தொட்டியினுள் சிறிய தொட்டி ஒன்று தலைகீழாக கவிழ்த்தி வைக்கப்பட்டிருக்கும்.  சிறிய தொட்டியின் மேல் பக்கத்தில் நடுவில் ஒரு வால்வு பொருத்தப்பட்ட பைப் மாட்டப்பட்டிருக்கும். பெரிய தொட்டியின் பக்கவாட்டில் மேல் பக்கம் ஒரு பைப், எதிர் பக்கத்தில்  கீழ் புறத்தில் புனலுடன் கூடிய நீளமான பைப் என இரு பைப்புகள் பொருத்தப்பட்டிருக்கும்.  அவ்வளவுதான்.  கீழே உளள படத்தை பாருங்கள்.சமயலறை கழிவுகளை  3/4 அங்குல சிறு சிறு துண்டுகளாக்கி தண்ணீருடன் கலந்து "A" பைப்பினுள் ஊற்ற வேண்டும். இவ்விதம் ஊற்றப்படும் கழிவுகளிலிருந்து பாக்டீரியாக்கள் மூலம் மீதேன்(CH4) மற்றும் கார்பன்-டை ஆக்சைடு(CO2) ஆகிய வாயுக்கள் உற்பத்தியாகி உட்புறமுள்ள தொட்டியின் மேல்பகுதியில் தங்கும். இந்த தொட்டி "கேஸ் ஹோல்டர்" என சொல்லப்படும். இவ்விதம் கழிவிலிருந்து எரி வாயு உற்பத்தியாக 48 மணி நேரம் ஆகும். தினந்தோறும் தண்ணீருடன் சேர்த்து கழிவை இதனுள் போடுவதால் தொடர்ச்சியாக எரிவாயு உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும். மக்கிப்போன கழிவு கூழின் மேல்மட்டத்தில் எரிவாயு  தொடர்ந்து சென்று தங்குவதால் அங்கு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம், உட்புற தொட்டியை மேல்புறமாக தூக்கும் அளவிற்கு உயரும் பொழுது, தொட்டி மேல் நோக்கி உயரும். இவ்விதம் தொட்டி உயரும் பொழுது எரிவாயு தங்க இடம் கிடைக்கும். 

கேஸ் அடுப்பு எரிய தேவையான அளவுக்கு எரிவாயு அழுத்ததுடன் கிடைக்க இந்த தொட்டியின் மீது கல்லை வைக்கலாம்.  இந்த தொட்டியின் மேல் பக்கத்திலுள்ள வால்வுடன் (C) தேவையான அளவிற்கு வளையும் தன்மை கொண்ட கேஸ் டியூப்பை இணைக்க வேண்டும். அதன் மறு நுனியை அடுப்புடன் இணைக்க வேண்டும். இனி தொட்டியின் மீதுள்ள வால்வை திறந்தால், எரி வாயு டியூப் வழியாக அடுப்புக்கு செல்லும். கேஸ் அடுப்பை உபயோகப்படுத்துவது போல இனி உபயோகிக்கலாம்.

தொட்டியினுள் இருக்கும் கூழான கழிவின் அளவு வெளிப்புறத்திலுள்ள தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள அவுட் லெட் பைப்பின்(B) மட்டத்தை அடைந்தவுடன், உபரி பால்/கூழ்(SLURRY) அந்த குழாய் வழியாக வெளியே வர ஆரம்பிக்கும். இதில் உரச்சத்து இருப்ப்பதால் இதை செடி, மரங்களுக்கு ஊற்றலாம்.

நமக்கு மூன்று விதத்தில் இதனால் லாபம்.

1. குப்பையை போட இடந்தேடி அலைய வேண்டாம்.
2. வீட்டு சமையலுக்கு தேவையான எரிவாயு பைசா செலவில்லாமல் கிடைக்கிறது. சிலிண்டர் வெடித்து விடுமோ என்ற பயம் இல்லை.
3. வீட்டிலுள்ள செடி, மரம் இவற்றிற்கு இலவசமாக உரம் கிடைக்கிறது.

எவ்வளவு எரிவாயு கிடைக்கும், இந்த சிஸ்டத்தை அமைக்க எவ்வளவு இடம் வேண்டும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.


16 comments:

 1. எங்கள் வீட்டில் நிறுவவேண்டும் என ரொம்ப நாளாக ஒரு எண்ணம்.

  அது இந்த பதிவை படித்ததும் அதிகரித்துவிட்டது...நிறுவவேண்டும் என முடிவே பண்ணியாச்சு :)

  மேலும் சில தகவல்கள் வேண்டும் என்பதற்காக தொடரும் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்...

  நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் கௌசல்யா, அடுத்த பதிவில் அனைத்து விபரங்களும் இருக்கும் படித்து விட்டு உங்கள் வீட்டில் அமையுங்கள்.

   Delete
 2. அனைவருக்கும் தேவையான பதிவு....
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன்...

  (த.ம. 2)
  நன்றி.  பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

  ReplyDelete
 3. வாருங்கள் தனபாலன், கோரல் டிராவோ அல்லது போட்டோ ஷாப்போ படிக்காமல் நானாகவே ஓரளவிற்கு கோரல் டிராவில் படங்கள் போட்டு பதிவு போடுகிறேன். எப்படி இருக்கு?

  ReplyDelete
 4. தற்போது நாட்டிற்கு மிகவும் தேவையான பதிவு ஐயா. இதை அமைப்பது எப்படி என்று தெரியாமல் நிறைய பேர் திண்டாடிக்கொண்டிருப்பார்கள் உங்கள் பதிவு நிச்சயம் அவர்களுக்கு உதவியாக அமையும் வாழ்த்துக்களும், வணக்கங்களும் ஐயா. நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. அன்பு நண்பர் திரவிய நடராசன் அவர்களுக்கு மிக்க வந்தனங்களும் வாழ்த்துக்களும். தங்களின் இந்த பதிவு மிகவும் உபயோகமானதாக உள்ளது. சிறு சந்தேகம், இரண்டு தொட்டிகளுக்கிடையில் உள்ள இடைவெளி அளவும், உள் தொட்டிக்கும் - வெளித் தொட்டிக்கும் மேல்புறம் ஏற்படும் இடைவெளியை எதனைக் கொண்டு மூடி வைக்கலாம் என்பதனையும் விளக்கினால் நலமாயிருக்கும். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பன் கே எம் தர்மா..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம். வரும் இந்த தொடரில் உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான பதில் கிடைக்கும் வகையில் விபரங்களை தருகிறேன். நன்றி

   Delete
 6. நல்ல பதிவு
  நல்ல முயற்சி  நன்றி,
  http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 7. இரண்டு தொட்டிகளின் விட்டத்தின் அலவுகள் குழாய்களின் விட்டத்தின் அலவுகளையும் பிரசுரித்தால் இன்னும் உபயோகமாய் இருக்கும் .

  ReplyDelete
  Replies
  1. தொட்டிகளின் அளவு, எங்கு துளை போடவேண்டும், அவற்றின் அளவு எல்லாம் விபரங்கள் அடங்கிய படத்துடன் இனி விளக்கப்படும். தொடர்ந்து வரும் பதிவுகளை படியுங்கள்.

   Delete
 8. நன்றி ஐயா,
  வெகு நாட்களாக வீட்டில் அமைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அனைத்து விபரங்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி. இரண்டாம் பகுதியை பதிவிட்டுள்ளேன். தொடர்ந்து படியுங்கள்.

   Delete
 9. veettukkum naattukkum nalla kandu pidippu.vazhthukkal..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete