Thursday, August 9, 2012

மின்சாரம்-பகுதி.8

மூன்று அறைகள் கொண்ட வீட்டின் 3-பேஸ் மின் இணைப்பில், பேஸ் சேஞ்ச் ஓவர் சுவிட்ச்சை எப்படி பொருத்துவது என்பதை பார்க்கலாம். முதலில் இந்த சுவிட்ச் எப்படி இயங்குகிறது என்பதை பார்ப்போம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இந்த சுவிட்ச்சில் நான்கு காண்டாக்ட்-கள் உள்ளன. அவை 1,2,3, OFF ஆகும். இதில் 3-பேஸ் சப்ளையின் மூன்று பேஸ்களையும் வ்ரிசை கிரமத்தில் சிகப்பு பேஸ் 1-வது காண்டாக்கிலும், மஞ்சள் பேஸ் 2-வது காண்டாக்டிலும், நீல நிற பேஸ் 3- வது காண்டாக்ட்டிலும்  இணைக்க வேண்டும். இந்த பேஸ் கனெக் ஷனை மெயின் சுவிட்ச் பியூஸ் யூனிட்களின் மேல் பக்க இணைப்பிலிருந்து (அவுட் புட்)  எடுக்க வேண்டும். சுவிட்சின் கைப்பிடியுடன் இணைக்கப்பட்டுள்ள  சுழலும் காண்டாக்ட்டுடன் உள்ள டெர்மினலுடன்  செக்ஷன் பியூஸ் யூனிட்டின் கீழ் பக்க (இன்புட் டெர்மினல்) டெர்மினலுடன் இணைக்க வேண்டும்.

இப்பொழுது சுவிட்ச்சின் கைப்பிடியை 1-வது நம்பரை நோக்கி திருப்பினால் 1-வது காண்டாக்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ள சிகப்பு பேஸ்-உடன் தொடர்பு ஏற்பட்டு பியூஸ் யூனிட்டுக்கு சப்ளை வரும். இதைப்போலவே சுவிட்ச்சை 2,3 ஆகிய நம்பர்களை நோக்கி திருப்பும் பொழுது மஞ்சள் நிற பேஸ், நீல நிற பேஸ் என மாறி பியூஸ் யூனிட்டுக்கு செல்லும். எனவே ஒரு பேஸ் இல்லையென்றால் வேறு ஒரு பேஸ்-க்கு எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். 

மூன்று அறைகளிலும் உள்ள லோடு(இணைப்பு சாதனங்களின் வாட்ஸ்) குறைவாக இருக்கும் பட்சத்தில் ஒரு சேஞ்ச் ஓவர் சுவிட்ச்சே போதுமானது. மூன்று செகஷன் பியூஸ் யூனிட்களின் கீழ் பக்க கனெக்ட்டர்கள் அனைத்தும் லூப் செய்து விட வேண்டும். அதாவது கீழ் பக்க கனெக்ட்டர்களையும் ஒன்றாக இணைத்து விட வேண்டும்.  கீழே படம் கொடுக்கப்பட்டுள்ளது.


இவ்விதம் இணைக்கும் பொழுது ஏதாவது ஒரு பேஸ் சப்ளையில்தான் வீட்டிலுள்ள மின் சாதனக்கள் இயங்கும். 

வீட்டில் லோடு அதிகம் என்றால் மூன்று பேஸ் சேஞ்ச் ஓவர் சுவிட்ச்களை இணைக்க வேண்டும். அதன் இணைப்பு படம் கிழே காட்டப்பட்டுள்ளது.


இதை எவ்வாறு மின் இணைப்பில் இணைக்க வேண்டும் என்பதை கீழே உள்ள படம் விளக்குகிறது.



கீழே உள்ள படம் மெட்டல் பாக்ஸ்-ல் ஒரு சுவிட்சு பொருத்தப்பட்டுள்ளதையும், அடுத்த படம் மூன்று சுவிட்ச்கள் பாக்ஸ்-ல் பொருத்தப்பட்டுள்ளதையும் காட்டுகிறது. 



இதில் இண்டிகேட்டர்கள் மாட்டப்பட்டுள்ளது.

மீண்டும் சந்திப்போம்.........




14 comments:

  1. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

    வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

    தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

    ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

    அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


    மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
    95666 61214/95666 61215
    9894124021

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்வு ஐயா...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)

    ReplyDelete
  3. ஒரு வீட்டின் மொத்த மின் தேவை குறைவாக இருந்தால் சிங்கிள் பேஸ் கனெக்ஷனே போதுமல்லவா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். பெரும்பாலான வீடுகளில் 3-பேஸ் மின் சப்ளை பெறுவதே, ஒரு பேஸ் இல்லாவிட்டால் மற்ற பேஸ் இருக்கும். அதை உபயோகித்து கொள்ளலாம் என்பதே. பொதுவாக 2000 வாட்ஸ் -க்கு மேல் லோடு இருந்தால் (ஒரே சமயத்தில் உபயோகிக்க வேண்டியது) மட்டுமே 3-பேஸ் தேவை.

      Delete
  4. கல்லூரியில் மின்னியல் துறையில் சேர்ந்து கற்ற பாடத்தை விட இங்கு அதிகமாக கற்றேன் என்பதுதான் உண்மை..

    ReplyDelete
    Replies
    1. என் பதிவு பொறியியல் கல்லூரியில் கற்றுத்தராததையும் கற்றுத்தருவதாக இருக்கிறது என கூறியது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது.

      Delete
  5. அருமையான முயற்சி,பயனுள்ள பதிவு, நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  6. தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  7. எனக்கு தெரியாத ,(யாரும் கற்று கொடுக்க தயங்கும் விஷயங்களை )ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக ஒரு எலக்ரிசியனிடமிருந்து கற்று கொள்ள பல வருடங்கள் ஆகலாம் ,அதை எளிமையாக கூறும் உங்களுக்கு கோடானு கோடி நன்றி ......

    ReplyDelete
    Replies
    1. நான் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்ட விஷயங்களை, ஆர்வமுள்ளவர்கள் கஷ்டப்படாமல் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. அதனால்தான் இந்த தொடர்பதிவு.

      Delete
    2. இந்த பெருந்தன்மை அவ்வளவு சுலபத்தில் யாருக்கும் வந்து விடாது ஐயா மிக்க நன்றி

      Delete