Wednesday, August 22, 2012

மொட்டை மாடியில் ஆர்கானிக் காய்கறி தோட்டம்

இன்றைக்கு இருக்கும் விலைவாசியில் சுமார் குழந்தைகள் உட்பட நான்கு நபர்கள் இருக்கும் குடும்பத்துக்கு சராசரியாக ரூ.40-50 க்கு காய்கறி வாங்க வேண்டும். எப்படி பார்த்தாலும் மாதத்துக்கு ரூ.1500/- செலவாகிறது. இவ்விதம் வாங்கும் காய்கள், பூச்சி கொல்லி மருந்து தெளித்து வளர்க்கப்பட்ட செடிகளிலிருந்து கிடைப்பவை. அதன் நச்சு தன்மை காய்களிலும் இருக்கும். எவ்வித ரசாயனப்பொருளும் உபயோகிக்காமல் இயற்கை முறையிலேயே நமக்கு தேவையான காய்களை ஏன் நாம் உற்பத்தி செய்யக்கூடாது? அதற்கு வீட்டில் தோட்டம் போட இடம் வேண்டும் என கவலைப்படவேண்டாம். இருக்கவே இருக்கிறது மொட்டை மாடி!

பிளாஸ்டிக் கோணிகள் அல்லது பிளாஸ்டிக் கேன் இவற்றை செடி வளர்க்க பயன்படுத்தலாம். மினரல் வாட்டர் பாட்டிலிலின் கீழ் பக்கம் ஊசியால் சிறிய துளை போட்டு அதில் நீர் நிரப்பி, செடியின் மூட்டில் வைப்பதன் மூலம் சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீர் ஊற்றலாம். தண்ணீர் செலவு குறைவு.

மிளாகாய், தக்காளி, கத்தரி, வெண்டை, முட்டைகோஸ், காலிஃப்ளவர், அவரை, பாகற்காய், காராமணி(தட்டப்பயறு) பீக்கங்காய், புடலங்காய், சுரைக்காய், வெங்காயம் போன்ற எல்லா காய்களையும் உற்பத்தி செய்யலாம்.

சில செடிகளின் விதைகளை நேரடியாக விதைக்க(ஊன்றுதல்) வேண்டும். உதாரணம் வெண்டை, அவரை, முட்டைகோஸ். சிலவற்றை விதைத்து பின் நாற்றாக வளர்ந்த பின் தனித்தனியாக நடவு செய்ய வேண்டும். உதாரணம் கத்தரி, மிளகாய், தக்காளி.

தேவையான பொருட்கள்

1. நாற்றுக்கள் தயார் செய்ய: குழித்தட்டு (Multi Cell Tray) & பிளாஸ்டிக் டிரே(Plastic Tray)
  

பிளாஸ்டிக் டிரே

குழித்தட்டுகள் செடி மற்றும் விதைகள் விற்கும் நர்சரியில் கிடைக்கும். இது நம் ரெஃப்பிரிஜியேட்டரில் ஐஸ் கியூப்புக்கு உள்ள தட்டை போலவே இருக்கும். இதற்கு பதில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடையில் கிடைக்கும் டிரேயை உபயோகப்படுத்தலாம். ஆனால் இவை 5அங்குல ஆழம்(Depth)) உள்ளதாக இருக்க வேண்டும். சாதாரணமாக 1 /12 அடிக்கு 1 1/4 போன்ற சைஸ்களில் கிடைக்கும். தேவையான சைஸ் பார்த்து வாங்கலாம்.

2. செடி வளர்க்க:  பிளாஸ்டிக் கோணிகள் / பெரிய பிளாஸ்டிக் கேன்
செடியை வளர்க்க பிளாஸ்டிக் கோணியை பயன்படுத்தலாம். இப்பொழுதெல்லாம் அரிசியிலிருந்து ரசாயன பொருட்கள் வரை எல்லாவற்றையும்  சணல் கோணிகளுக்கு பதிலாக பேக் செய்ய கம்பெனிகள் இந்த பிளாஸ்டிக் கோணிகளைத்தான் உபயோகிக்கிறது. எனவே இவற்றை பழைய புட்டி கடையில் தேவையான அளவிற்கு மலிவாக வாங்கலாம்.

உதாரணத்திற்கு 2 அடி அகலமும் 3 அடி உயரமும் உள்ள கோணியை எடுத்துக்கொள்வோம். கோணியின் வாய் பகுதியை உட்புறமாக அடிப்புறத்தை தொடுமாறு  மடக்க வேண்டும். இப்பொழுது கோணியின் உயரம் 1 1/2 அடியாக ஆகிவிடும். அதன் சுற்றுப்பகுதி இரண்டு லேயர் உள்ளதாக ஆகிவிடும்.  இதனுள் செடிவளர்க்க தேவையான மண்ணை நிரப்ப வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்பதை தவிற்க  கோணியின் பக்க வாட்டில், கீழ் பக்கமாக கனமான ஊசியால் ஒரு சில துவாரங்களை போடவேண்டும்.


பிளாஸ்டிக் கோணி

அல்லது பெரிய பிளாஸ்டிக் கேன்களை பயன்படுத்தலாம்.இவை பல வருடங்கள் உழைக்கும். படத்தில் காட்டியபடி பெரிய கேன்களை எடுத்து இரண்டாக ஹாக்சா பிளேடினால் அறுத்தால் இரண்டு தொட்டிகள் கிடைக்கும். அவற்றின் கீழ் பக்கம் தண்ணீர் வடிய துளையை போடவேண்டும். அதன் பின் இதில் மண்ணை நிரப்பி செடி வளர்க்கலாம்.
3. செடி வளக்க தேவையான மண்: 
 தோட்ட மண், சாண தூள், மக்கிய கம்போஸ்ட் உரம், மணல். இவை நான்கையும் சம அளவில்(1:1:1:1) கலந்து மண் கலவையை தேவையான அளவிற்கு  தயார் செய்து கொள்ள வேண்டும். இதில் கல், செங்கல் கட்டி, சிமிண்ட் கலவைகள், செடி, களைகள் இவை இல்லாதவாறு சுத்தம் செய்து உதிரியாக ஆக்க வேண்டும்.


காய்ந்த சாணத்தூள், மக்கிய கம்போஸ்ட் உரம் இல்லை என்றால் மண்புழு உரத்தை அதற்கு பதிலாக உபயோகிக்கலாம்.

4.  நீர் பாசனம்:  காலி ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில்கள்

நாம் வளர்க்கும் செடிகளுக்கு சொட்டு நீர் பாசன முறையில் தாண்ணீர் விட்டால் தண்ணீர் வீனாகாது. காலியான மினரல் வாட்டர் பாட்டில்களின் அடிப்புறம் படத்தில் காட்டியபடி ஊசியால் ஒரு சிறய துளையை போட்டு அதில் தண்ணீரை நிரப்பி செடியின் மூட்டில் வைத்து விட்டால் தண்ணீர் சொட்டு சொட்டாக செல்லும். 

நமக்கு தேவையான காய்கறி செடியின் தரமான் விதைகளை தமிழ் நாடு அரசு தோட்டக்கலை துறையிடமிருந்தும், விவசாய பல்கலைகழகத்திடமிருந்தும் பெறலாம். வீட்டு காய்கறி தோட்டத்திற்கான விதை பாக்கெட்டுகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. பாக்கெட்டின் விலை ரூ.15 அல்லது 20 இருக்கும். இவர்களிடம் வாங்கும் விதைகள் தரமானதாக இருக்கும். அல்லது தனியார் நர்சரியிலிருந்தும் வாங்கலாம்.

அடுத்த பதிவில் கத்தரி செடி வளர்ப்பது பற்றி பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்.................

19 comments:

 1. வாவ்.. என்ன ஒரு அருமையான படைப்பு... மிக மிக உபயோகப்படும் ஒரு விஷயத்தை கூறி இருக்குறீர்கள். அருமை.. அருமை..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 2. விளக்கம் அருமை... தொடர வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 3. உபயோகப்படும் ஒரு விஷயத்தை கூறி இருக்குறீர்கள். அருமை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 4. Super,sir,
  If only everyone follows these tips and starts a terrace garden, how green our lives will be!
  Kindly visit my blog at http://gardenerat60.wordpress.com/2012/06/26/garden-after-the-first-rains/
  Thanks a lot.

  ReplyDelete
 5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 6. Replies
  1. தங்கள் வருகைக்கும் அட்டகாசம் பாராட்டுதலுக்கும் நன்றி

   Delete
 7. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 8. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 9. இதுதான் உங்கள் வலைப்பதிவினுள் எனது முதல் நுழைவு. நான் புதிதாக வீடு கட்டிக்கொண்டிருக்கிற நேரத்தில் மொட்டை மாடியில் காய்கறித்தோட்டம் பற்றிய பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. இன்னும் பல தகவல்கள் இது பற்றித் தருவீர்கள் என்று நம்புகிறேன். அவை எனக்கும் என்போன்ற பலருக்கும் மிக உதவிகரமாக இருக்கும்.


  அதுமட்டுமல்லாமல் மின்சாரம் பற்றிய உங்களது பல பதிவுகளைப் படித்தேன். கைதேர்ந்த ஒரு தொழில்நுட்ப வல்லுனரின் நேர்த்தியுடன் பல தகவல்களைச் சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி

  அப்புறம் ஒரு வேண்டுகோள். " ஒரு கையாலாகதவனின் புலம்பல் " என்று குறிப்பிட்டுள்ளதை தயவு செய்து நீக்கவோ, மாற்றவோ வேண்டுகிறேன். இவ்வளவு தூரம் மக்களுக்குத் தேவையான பலப்பல அருமையான தகவல்களைத் தந்து உதவும் உங்களுக்கு இப்படி ஒரு அடைமொழி பொருத்தமில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. ஆக்கப்பூர்வமான தகவல்களுக்குச் சொந்தக்காரரான உங்களுக்கு எதிர்மறை அடைமொழி சற்றும் பொருந்தவில்லை


  ReplyDelete
 10. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 11. உபயோகப்படும் ஒரு விஷயத்தை கூறி இருக்குறீர்கள். அருமை

  ReplyDelete
 12. அருமைங்க.


  ==

  இதைப் படிக்கும் ஆர்வலர்களுக்கு எனக்குத் தெரிந்த சில விசயங்கள்..

  குழித்தட்டுகள் கிடைக்காதவர்கல் ட்ரேயை பயன்படுத்தும்போது அதன் அடியிலும் துவாரங்கள் இடவேண்டும்தானே?

  குழித்தட்டை தேடி அலைபவர்கள், அது கிடைக்காவிடில், தண்ணீர்/காபி அருந்தும் பேப்பர் கப்புகளைக் கொண்டும் நாற்றுகளை உருவாக்கலாம். இதிலும் அடியில் துவாரங்கள் இடப்படவேண்டியது அவசியம், அதிகத் தண்ணீர் தேங்காமல் இருக்கவே இது தேவைப்படுகிறது.


  //நமக்கு தேவையான காய்கறி செடியின் தரமான் விதைகளை தமிழ் நாடு அரசு தோட்டக்கலை துறையிடமிருந்தும், விவசாய பல்கலைகழகத்திடமிருந்தும் பெறலாம்.//

  இதில் பெரும்பாலும் ஹைப்ரிட் வகைகள்தான் இருக்கும். அதற்கு ரசாயண உரங்கள் தேவைப்படலாம். நல்ல நாட்டு ரக விதைகளை சாலை ஓரத்தில் ஒரு கோணி விரித்து விதைகள் விற்கும் எளிமையான மனிதர்களிடமிருந்தும் பெறலாம். சாதாரண பூச்சி விரட்டிகள் கொண்டே இந்த நாட்டு வகைச் செடிகள் பிழைத்துக்கொள்ளும்.

  நன்றி!

  ReplyDelete
 13. PLZ VISIT WWW.FACEBOOK.COM/FIRSTNGO u can find in pic also

  ReplyDelete