Thursday, August 23, 2012

மொட்டை மாடியில் ஆர்கானிக் காய்கறி தோட்டம்-முட்டைகோஸ்(Cabbage)

முட்டைக்கோஸ் (Cabbage)


நம் வீட்டு சமையலில் வாழைக்கய், கத்தரிக்காய், உருளை கிழங்கு போன்று முக்கிய இடம் பெறும் காய் முட்டைகோஸ் ஆகும். வீட்டு தோட்டத்திலும், தொட்டியிலும் எளிதாக வளர்க்க முடியும். இந்த பதிவில் இதைப்பற்றி பார்க்கலாம்.

இதை பயிர் செய்ய ஏற்ற காலம் மலைப்பாங்கான பகுதியில்(Hills) ஜனவரி-பிப்பிரவரி, ஜூலை-ஆகஸ்ட், செப்டம்பர்-அக்டோபர். சமவெளி பகுதியில் ஆகஸ்ட்-நவம்பர். இந்த கால விபரங்கள் பெரும் விவசாயிகளுக்குத்தான். நாம் எப்பொழுது வேண்டுமானாலும் பயிரிட்டு பார்க்கலாம். இதன் விதையை  தொட்டியில்/பிளாஸ்டிக் டிரேயில் விதைக்கலாம்.  பத்து செ.மீ இடைவெளியில் விதைகளை பரவலாக விதைக்க வேண்டும். கீழே விதையின் படம் காட்டப்பட்டுள்ளது.கீழே உள்ள படத்தில், மூன்றில் இரண்டு பாகம் மண் கலவை நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேனில் விதையை நடும் முறை காட்டப்பட்டுள்ளது. பென்சிலால் சுமார் அரை அங்குல ஆழத்திற்கு பள்ளத்தை ஏற்படுத்தி அதனுள் ஒரு விதை என்ற கணக்கில், ஒரு விதைக்கும் அடுத்த விதைக்கும் சுமார் 10 செ.மீ இடைவெளியில் தேவையான விதைகளை விதைக்கவேண்டும். விதை போட்ட குழிகளை பக்கத்திலுள்ள மண்ணால் நிரப்பி விட வேண்டும். அதன் பின் பூவாளியால் தொட்டி மண் மீது மிதமான ஈரப்பதம் வரும் வரை தண்ணீர் தெளிக்க வேண்டும். 


இவ்விதம் தினமும் தொடர்ந்து மண்ணில் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு சில நாட்களில் விதை முளையிட்டு, செடி வெளியே வரும். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


நான்கு ஐந்து இலைகள் வந்த பின், செடியை பிடுங்கி வேறு தொட்டிகளில் (கேன்) தொட்டிக்கு ஒன்றுவீதம்  நட வேண்டும். அவ்வாறு செடியை நடுவதற்காக  நாற்றை பிடுங்கும் பொழுது அதன் வேர்கள் அறுந்து விடக்கூடாது.  கீழே உள்ள படத்தில் காட்டியபடி செடியின் பக்கவாட்டில் மண்ணை கம்பியால் லேசாக கிளறி  செடியை எடுக்க வேண்டும்.


அதற்கு முன்பாகவே தேவைப்படும் கேன்களை மரப்பலகையின் மீதோ அல்லது செங்கல்களின் மீதோ வைத்து மண்கலவையை ஒவ்வொரு தொட்டியிலும் மூன்றில் இரண்டு பாகம் நிரப்பி ரெடியாக வைத்திருக்க வேண்டும்.கீழே உள்ள படத்தில் காட்டியபடி ஒவ்வொரு தொட்டியின் நடுவிலும் ஒரு செடியை நடவேண்டும்.  நடுதல் என்றால் தொட்டியின் நடுவில் செடியின் வேர்கள் புதையும் அளவிற்கு குழியாக்கி அதனுள் வேர்கள் இருக்குமாறு நிற்க வைத்து பக்கத்திலுள்ள மண்ணால் குழியை நிரப்ப வேண்டும்.
சுமார் 50-60 நாட்களில் முட்டைகோஸ் உருவாகும். அது நன்றாக பெரியதாக ஆனவுடன் அறுத்தெடுத்து  உபயோகப்படுத்தலாம். கீழே உள்ள படத்தில் சிறிய அளவில் முட்டைகோஸ் வந்துள்ளது.


செடி வளர்ப்பவர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் சில நிமிடங்களாவது செடியை கவனிக்க வேண்டும். செடியில் எதாவது புழு அல்லது பூச்சி இருந்தால் அதை அழித்து விட வேண்டும்.  செடியின் இலையை பூச்சி அரித்து இருந்தால் அந்த இலையை வெட்டி எடுத்து விட வேண்டும். கீழே உள்ள படத்தை பார்க்கவும். உடனடியாக வேப்பெண்ணை, வேப்பெண்ணை சோப்பு கரைசல் இவற்றை தண்ணீரில் கலந்து செடியின் மீது ஸ்பிரே செய்ய வேண்டும்.


கீழே உள்ள படம் ஸ்பிரேயர் மூலம் மேலே கூறிய கரைசலை தெளிப்பதை காட்டுகிறது.


ஒவ்வொரு வாரமும் மக்கிய தழை உரம் அல்லது மண்புழு உரத்தை போட்டு மண்ணை கம்பால் செடிக்கு பாதிப்பு வராதவாறு கிளறி விட வேண்டும்.  தொட்டியில் இருக்கும் அதிகப்படியான நீர் துளையின் வழியாக வெளியே வரும். செங்கல் அல்லது பலகையின் மீது தொட்டியை வைப்பதால் துளைக்கு கீழ் புறம் சிறிய பிளாஸ்டிக் டப்பாவை வைத்து அந்த நீரை சேமித்து மீண்டும் பயன்படுத்தலாம். இதனால் மொட்டை மாடியின் தரை வீணாகாது. தண்ணீர் ஊற்ற பூவாளிக்கு பதில் துளையிடப்பட்ட மினரல் வாட்டர் பாட்டிலில் நீரை நிரப்பி தொட்டியினுள் வைக்கலாம். சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாயும்.


மீண்டும் சந்திப்போம்............


25 comments:

 1. இத இத இத தாங்க எதிர்பார்த்தோம் .. இன்னும் நிறைய வரும் என்று ஆவலுடன் எதிர் பாக்குறோம் .. நன்றி

  ReplyDelete
  Replies
  1. பதிவு போட்டா காசா பணமா செலவு? தொடர்ந்து நிறைய வரும். தெரிந்துகொள்ள நீங்கள் தயாராக இருந்தால்.

   Delete
 2. வீட்டுத் தோட்டம் போடுவோருக்கு பயனுள்ள பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 3. இப்படியே போனா எங்களை விவசாயியாக மாற்றிவிடுவீர்கள் போல் இருக்கு. :-)

  ReplyDelete
  Replies
  1. ஐந்து தலைமுறைக்கு முன்னால் பார்த்தால் நம்ம முன்னோர்கள் எல்லோரும் விவசாயிகளே! சுருக்கமா சொல்லப்போனா உலகில் முதலில் தோன்றிய தொழிலே விவசாயம் தான்.

   Delete
 4. Sir,

  I am continuously following your posts from the solar power serious. Its really amazing and very useful.

  I appreciate your effort on this. Kindly continue on various useful subjects.

  Thanks

  Ananth.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. ஐயா அந்த "பயோ கேஸ்" பத்தின விவரம் இன்னும் போடலிங்களே, கோஸ் பத்தின பதிவு ரொம்ப யூஸ்புல்.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பயோ கேஸ் பற்றிய மீதி பகுதி பதிவிடப்படும்.

   Delete
 6. மிக மிக பயனுள்ள தகவல்


  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 7. Neengal poodum ovoru pathivum payanullathakeve ullathu.neeraiya pathivai padikka maranthu vettean.neram kedaikkum poodhu nichayam padipean.
  Thangalathu sevai thotara vendukirean.nandr !
  :-)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 8. thodarungal ungal payanulla pathivugalai

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 9. அருமையான பதிவு, விதை எங்கே கிடைக்கும். நன்றி. -ராஜா, சென்னை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.விதை தொட்டக்கலை துறையிடமும் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்திலும் கிடைக்கும். தனியார் நர்சரியிலும் வாங்கலாம்

   Delete
 10. sattam mattum alla na,m kaiyil indha muraiyil payir seydhaal veettukku thaevaiyaana kaay karigalum nam kaiyil THODARATTUM UNGAL NARPANI

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 11. படங்களுடன் விளக்கங்கள் அருமை...

  நாமும் செய்வோம் என்னும் ஆவலைத் தூண்டுகிறது...

  மிக்க நன்றி ஐயா... (TM 2)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 12. நன்றி, தங்கள் பதிவு மிகவும் பயனுள்ள பதிவு. மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete