Wednesday, September 19, 2012

காணாமல் போகும் "வாத்தியார்" இனம்-2

இந்த பதிவின் முன் பகுதியை படிக்க இதை கிளிக் செய்யவும்.

அவரை உற்று பார்த்தேன். "சார். எப்படி இருக்கீங்க?" என்று பேச்சை ஆரம்பித்தேன்.

"நீ எப்படிருக்க அத முதல்ல சொல்லு. எனக்கு வயசாயிட்டுது. இனி என்ன இருக்கு?. ஏதோ நாளை எண்ணிட்டு இருக்கேன்" என்றார்.

நான் கல்லூரியை முடித்துவிட்டு வந்த பொழுது அவர் வேறு ஊருக்கு மாற்றலாகி போய்விட்டார். அதனால் அவரை சந்திக்கவே முடியவில்லை. தமிழ் எம்.ஏ முடித்து விட்டதால் அவர் அரசு கலைக்கல்லூரிக்கு விரிவுரையாளர் பணிக்கு மாற்றம் கேட்டு விண்ணப்பித்ததாகவும், சீனியாரிட்டி அடிப்படையில் அவருக்கு சில வருடங்களில் கிடைத்ததாகவும். ரிடயர்டு ஆகும் வரை ஊர் ஊராக சுற்ரியதாகவும் தன் கதையை கூறினார். அவர் மனைவியும் அரசு ஆசிரியை. அவர் அப்பொழுதான் சென்னையில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றாராம். எல்லாவிபரங்களையும் ஆர்வத்துடன் கூறினார். என்னைப்பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார். நேரம் போனதே தெரியவில்லை. மதியம் ஒரு ம்ணி ஆகிவிட்டபடியால் அவரிடம் விடை பெற்றேன்.

ஒரு சில மாதங்கள் கழித்து என் அண்ணன் மகளுக்கு திருமணம். அம்பத்தூரில் தான். திருமணத்தன்று முழுக்க முழுக்க அவருடந்தான் இருந்தேன்.என்னுடன் பள்ளிக்கூடத்தில் நடந்த சிறு சிறு நிகழ்ச்சிகளை அவர் பேசும் பொழுது அவருக்கு ஒரு சந்தோஷம். அது அவர் முகத்திலேயே தெரிந்தது. எழுபது வயதை தாண்டிவிட்டாலும் அவர் மனதில் ஒரு முப்பத்தி ஐந்து வயது இளமை ஊஞ்சலாடியது தெரிந்தது.

அவர் சொன்னார்... "பள்ளிக்கூடத்தில் வாத்தியாரா இருந்தப்போ இருந்த சந்தோஷம் காலேஜில் வேலை பார்த்த போது இல்லடா!. அந்த காலத்தை நினைச்சே வாழ்க்கையை ஒட்டிட்டு இருக்கேன். இப்ப வாத்தியாரும் வாத்தியாரா இல்லை. பையங்களும் அப்படித்தான். என்னவோ போ. உலகம் ரெம்ப மாறிப்போச்சு. ம்....." என்றார்.  எனக்கும் அவர் ஆதங்கம் புரிந்தது.

அந்த சந்திப்புக்கு பின் ஒருமுறை அவர் வீட்டுக்கு சென்றேன். அதன் பின் அவர் வேறு எங்கேயோ போய்விட்டார். அத்துடன் தொடர்பு அறுந்து விட்டது.

அவர் இருக்கிறாரா? எங்கு இருக்கிறார் என தெரியாது. ஆனால் அவரை பற்றிய என் எண்ணங்கள் நான் இருக்கும் வரை என் மனதில் இருக்கும். இவரைப்போலவே என் பள்ளி வாத்தியார்கள் பாலு சார், ஜகநாதன் சார், முஸ்தபா சார், தஸ்தகீர் சார் இவர்கள் எல்லாம் என் நினைவில் அடிக்கடி வருவார்கள்.

இதுதான் என் காலத்திய வாத்தியார் மாணவர் உறவு. இப்பொழுது இருக்கிறதா?

தேடுகிறேன்..................

அடுதத பதிவில் சந்திப்போம்............

 

 

4 comments:

 1. காலம் மாறுகிறது. உறவுகளும் மாறுகின்றன.

  ReplyDelete
 2. காலம் என்ன தான் மாறினாலும் உறவுகள் அப்படியே தான் இருக்கிறது...அது அவரவர் மனநிலையை பொருத்தது...


  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  ReplyDelete
 3. அறிந்தேன்... தொடர்கிறேன்...

  ReplyDelete
 4. பொதுவாக நானும் இந்த மாதிரி ஓய்வு பெற்ற வயது முதிர்ந்தவர்களிடமே எனது பொழுதை கழிப்பேன் .........ஏன்னா ...அவர்கள் தான் பேச்சு துணைக்கு ஆள்கள் இன்றி ..........ஒருவித மனோ நிலையில் இருப்பார்கள் .........அவர்களிடம் நல்ல அறிவுரைகள் கிடைக்கும் ......டாஸ்மாக் போக வேண்டிய அவசியம் கிடையாது ......அவர்களுக்கு அவர்கள் பேச்சை கேட்க ஒரு ஆல் வேண்டும் ...இருவர்க்கும் உர்ப்படியாக பொழுது போகும் .......

  ReplyDelete