Saturday, September 8, 2012

நிலக்கரி ஊழல் - மகாத்மா பாடுகிறார்!

ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் கேம் ஊழல், நிலக்கரி ஊழல் என  ஊழல்களால் நொந்து போயிருக்கும்  பாரத தாயை பார்த்து வேதனையுடன் மகாத்மா காந்தி பாடும் பாடல்.

(தங்க பதக்கம் படத்தில் வரும் "சோதனைமேல் சோதனை" என்ற பாடல் மெட்டு)

ஊழல்மேல் ஊழல் போதுமடா சாமி
ஊழல்தான் ஆட்சியென்றால் தாங்காது நாடு

(ஊழல்மேல்.....)

தேர்தல் ஒரு கைவிலங்கு ஜனநாயகம் போட்டது - அதில்
ஓட்டு ஒரு கால்விலங்கு மக்கள் போட்டது

(ஊழல்மேல்.....)

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல

பரிகாரம் தேடி நான் எவ்விடம் செல்ல - எனக்கு 
அதிகாரமில்லையம்மா பூலோகம் செல்ல

ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்த
திருநாளை அரசியல்வாதி கொடுத்தான் யாரிடம் சொல்ல!

(ஊழல்மேல்.....)

(பாரத மாதா வசன நடையில் பேசுவது)

மகனே, காஞ்சுபோன பூமியெல்லாம்
வத்தாத நதியை பார்த்து ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சி போயிட்டா..........

துன்பப் படுறவங்க எல்லாம்
அவங்க கவலையை  தெய்வத்துக்கிட்ட
முறையிடுவாங்க. ஆனா அந்த தெய்வமே
கலங்கி நின்னா - அந்த தெய்வத்துக்கு
யாராலே ஆறுதல் சொல்ல முடியும்?

பாட்டு தொடர்கிறது,

தானாடவில்லையம்மா சதையாடுது - அது
தேசதந்தை என்றும் அரசியல்வாதி என்றும் விளையாடுது

பூவாக வைத்திருந்தேன் பாரதமென்பது - அதில்
கருநாகம் புகுந்து கொண்டு சூறையாடுது

அடிதாங்கும் நாடிது  இடிதாங்குமா?
இடிபோல அரசியல்வாதி வந்தால் நாடுதாங்குமா?

(ஊழல்மேல்.....)
 



9 comments:

  1. உண்மைக் கருத்துக்கள்...

    [ இப்படி எழுதுவது மிகவும் கஷ்டம்... பாடிப் பார்த்தேன்... நன்றாகத் தான் இருந்தது... ஆனால் நிலைமையை நினைத்து நொந்து போக வேண்டியது தான்... ]

    ReplyDelete
  2. அங்கலாய்ப்பதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?

    ReplyDelete
    Replies
    1. எதற்கும் ஒரு எல்லை உண்டு. நிச்சயம் ஒரு அதிரடி மாற்றம் வரும். நம்புவோம்

      Delete
    2. i am also waiting for that revolution

      Delete


  3. பாடலும் பொருளும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. கண்ணதாசன் கண்ணதாசந்தான். அவர் பாடல் இது. ஒரு சில வார்த்தைகளை மாற்றினேன். அவ்வளவுதான்.

      Delete
  4. இந்த புதிய திருக்குறளின் பாடலும் அதன் பொருளும் மிகவும் அருமை....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  5. பழைய பல்லவி தான் ,ஊழல் ராகம் புது மெட்டில் ,அருமை!

    ReplyDelete