Thursday, November 15, 2012

சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம்.

தவிற்க முடியாத காரணத்தால் கழிந்த ஏழு வாரமாக வலை பக்கமே வர முடியவில்லை. அதனால் சோலார் மின்சாரம் தொடர்பாக பலர் அனுப்பியிருந்த மெயில்களை படிக்க முடியவில்லை. பெரும்பாலும் மெயில்களில் காணப்பட்ட விஷயங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் அவற்றிற்கு தனித்தனியாக பதில் அனுப்புவதை காட்டிலும் அவற்றிற்கான பதிலை ஒரு பதிவாக போட்டு விட்டால், எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என்பதால் இந்த பதிவு.

இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள்.

1. அரசு அங்கிகாரம் பெற்ற சப்ளையர்களின் பட்டியலுக்கான லிங் திறக்கவில்லை.

2. எந்த சப்ளையர் நம்பிக்கையானவர்? நியாயமான விலையில் அமைத்து கொடுக்கும் சப்ளையர் யார்?.

3. எனது தேவை இதுதான். இதற்கு எத்தனை வாட் சோலார் சிஸ்டம் தேவை?

இது போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு வரக்கூடாது. நீங்களே தேவையை கணக்கு பார்த்து நிர்ணயம் செய்து, சரியான சப்ளையரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு நீங்கள் விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே  சோலார் மின்சாரம் பற்றிய பதிவு - பல பகுதிகளாக பதிவிடப்பட்டது.

தகவல்கள்.

1.மத்திய அரசால் (MNRE) அங்கீகரிக்கப்பட்ட, சோலார் சிஸ்டம் அமைத்து கொடுப்பவர்களின் முகவரி பட்டியலின் விபரம் இப்பொழுது எனது டிராப் பாக்ஸ்-ல் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அரிக்கேன் விளக்கு மாடலில் உள்ள சிறிய விளக்குகள், தெரு விளக்குகள், குடிசை வாழ் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் சிலமணி நேரம் மட்டுமே ஒன்று அல்லது இரண்டு சி.எஃப் எல் விளக்குகளை எரிய வைக்க் கூடிய சிஸ்டங்கள், நம் தேவைக்கு ஏற்ப சிஸ்டத்தை( 1கிலோ வாட், 2 கிலோ வாட் .. etc) நிர்மானித்து கொடுப்பவர்கள் ஆகியோர் அடங்குவர். எனவே நமக்கு தேவையான 1கிலோ வாட் சிஸ்டத்தை அமைப்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  பட்டியலின் லிங் கீழே தரப்பட்டுள்ளது.

https://dl.dropbox.com/u/85335284/list_manufacturers_SPV_NABARD.pdf.pdf

2. தமிழ் நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்களின் பட்டியலின் லிங் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் நம் தேவைக்கு ஏற்ற சிஸ்டம் (1 கிலோ வாட்) அமைத்து தருபவர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும்  

http://www.teda.in/site/index/id/5j9q4z2i5v.

1கிலோவாட் சிஸ்டத்தை தமிழ் நாட்டில் அமைத்துக்கொடுக்கும் சில நிறுவனங்களின் (எனது தேர்வு) முகவரியை கீழே கொடுத்துள்ளேன்.

1.  Thakral Services (India) Ltd, 15. Saravana Street, T.Nagar, Chennai-600 017.                      Ph. 45011440/41/42
website"  http://www.thakral-india.co.in/

2. SELCO Solar Light (P) Ltd, 742, 15 cross, 6th phase, JP NAGAR, BANGALORE-560 078.

Contact Person for Tamil Nadu  --- VIKSHUT MUNDKUR    Ph. 99724 20922


website:  http://www.selco-india.com/

3. Solariz Green Power Pvt Ltd, Chennai 
M.Selvakumar, ME, Ph. 95000 70195.

website:  http://www.solarizgreenpower.com/ 

 தமிழ் நாட்டில் உள்ள சில சப்ளையர்களின் ரேட்-ஐ ஒப்பிட்டு ஒரு பதிவு போடப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் சரியான சப்ளையரை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். பதிவின் லிங் கீழே.

http://lawforus.blogspot.com/2012/06/blog-post_28.html

விவசாயத்திற்கான சோலார் பம்புசெட்
விவசாயத்திற்கான சோலார் பம்பு செட் அமைக்க மத்திய அரசு நபார்டு வங்கி மூலம் கடன் உதவியும், மானியமும் வழங்குகிறது.

1800 வாட் சோலார் பேனல் மூலம் இயங்கும் 2 ஹெச்.பி மோட்டார் பம்பு(மோனோ பிளாக், சப்மெர்சிபிள் பம்பு, புளோட்டிங் பம்பு போன்றவை, 6-7 மீட்டர் ஆழத்திலிருந்து 1,40,000 லிட்டர் தண்ணீரை  ஒரு நாளைக்கு இறைக்கும்.  இதை அமைக்க ஆகும்  உத்தேச செலவு 4.5 லட்சம். இதில் மானியமாக 1.8 லட்சம் கிடைக்கும். விபரங்களுக்கு நபார்டு வங்கியை அணுகினால் அனைத்து விபரங்களும் கிடைக்கும். அல்லது கிராமிய வங்கியை அணுகவும். இந்த சிஸ்டத்தை அமைத்துக்கொடுக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.மீண்டும் சந்திப்போம்..............

20 comments:

 1. மிகவும் பயனுள்ள தகவல் ஐயா! பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி

   Delete
 2. Usefull at the right time ! bala.dubai

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 3. Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 4. மிகவும் விளக்கமான பகிர்வு ஐயா...

  நண்பர்களுக்கும் பகிர்கிறேன்.... நன்றி...
  tm1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 5. payanulla padhivu nandri thiru thiraviya nataraajan avargale nandri
  surendran

  ReplyDelete
 6. நல்ல பயன் உள்ள பதிவு !!!!

  ReplyDelete
 7. Thiravia Natarajan Iyya avargalukku en manamarntha nandigal
  Nellai Moorthy

  ReplyDelete
 8. நெல்லை மூர்த்தி அவர்களின் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 9. Dear Sir, Presently I am studying design and installation of pv in Singapore Polytechnic. I would like to do own bussiness in Tamilnadu.I would also like to teach solar panel instalation to others. I need to puchase solar panels and other instruments to install in my house. Do you tell me who is the best suplyer?

  ReplyDelete
 10. பயனுள்ள தகவல் ஐயா!
  பகிர்வுக்கு நன்றி....

  ReplyDelete