Tuesday, December 18, 2012

விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது எப்படி?

நான் முன் பதிவில் கூறியபடி கூகுள் ஆண்டவர் துணையுடன் விண்டோஸ் 8-ஐ டோரண்ட் வடிவில் தேடியபொழுது ஒரு சில டோரெண்ட்டுகள் கிடைத்தது. நான் ஏன் டோரண்ட் ஃபைலை தேடினேன் என உங்களுக்கு சந்தேகம் வரலாம். பெரிய ஃபைல்களை சாதரணமாக டவுன் லோடு செய்வது இயலாத காரியம். காரணம் கரண்டு போனாலோ அல்லது இண்டர்நெட் டிஸ்கனெக்ட் ஆனாலோ, அதுவரை நாம் டவுன்லோடு செய்தது எல்லாம் டெலிட் ஆகிவிடும். மறுபடியும் ஆரம்பத்திலிருந்தே டவுன் லோடு செய்ய வேண்டும். அதனால் சினிமா டி.வி.டி, விடீயோ போன்றவற்றை டோரண்ட் ஃபைலாக கன்வெர்ட் பண்ணி அப்லோடு செய்து விட்டால், U Torrent, Bit Torrent போன்ற டோரெண்ட் கிளையண்ட் மூலம் டவுன்லோடு செய்ய வசதி. நாம் கம்பியூட்டரை ஆன் செய்திருக்கும் பொழுது(இண்டர் நெட் இணைப்பு இருந்தால்) தானாகவே தொடர்ந்து டவுன்லோடு ஆகும். ஆஃப் செய்துவிட்டால், அதுவரை டவுன்லோடு செய்தது அப்படியே இருக்கும். அடுத்த முறை ஆன் செய்யும் பொழுது தொடர்ந்து டவுன்லோடு ஆகும். 

நான் U Torrent இன்ஸ்டால் செய்திருக்கிறேன். கூகுள் சர்ச்சில் கிடைத்த விண்டோஸ் 8 டோரெண்ட் ஃபைல் "Windows 8 Pro VL(x86+x64) Untouched DVD(EN) + Permanent Activator" ஆகும். அதாவது விண்டோஸ் 8 புரபொஷ்னல் -  வி. எல் என்பது வால்யூம் லைசென்ஸ் என்பதாகும். இது போன்ற லைசென்ஸ்  கம்பியூட்டர் தயாரிப்பாளர்கள் தங்கள் கம்பியூட்டர்களில் ஆபரேட்டிங் சிஸ்டத்தை பிரி இன்ஸ்டால் செய்வதற்கு  மைக்ரோஸாப்டால் வழங்கப்படும் லைசென்ஸ் ஆகும். இந்த ஓ. எஸ்-ல் ப்ராடக்ட் கீ அதனுள்ளே இருக்கும். எனவே ஒரு டிவிடியை வைத்து எத்தனை கம்பியூட்டரிலும் இன்ஸ்டால் செய்யலாம்.  அதன் பின் இந்த கம்பியூட்டர்களை மைக்ரோ ஸாஃப்டின் ஆக்டிவேட்டர்  சாப்ட்வேர் மூலம் ஆக்டிவேட் செய்யும் பொழுது, கம்பியூட்டர் கம்பெனியின் கணக்கில் அது சேர்க்கப்படும். அதன் அடிப்படையில் கம்பெனி மைக்ரோசாஃப்ட்டுக்கு பணம் கொடுக்கும். எனவே இதற்கு 25 இலக்க கீ கிடையாது. 

x86,x64 என்பது 32 பிட், 64 பிட் ப்ராஸசரை குறிக்கும்.

நீங்கள் ஒரிஜினல் Windows 8 Professional -ஐ உங்கள் கம்பியூட்டரில் இன்ஸ்டால் செய்து பெர்மனெண்ட் ஆக்டிவேஷன் செய்ய  விரும்பினால்  முதலில் உங்கள் கம்பியூட்டரில் U Torrent-ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்து "U Torrent Stable (3.2.3 Build 28705) என்பதை டவுன் லோடுசெய்யுங்கள். இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.

அடுத்தபடியாக  இந்த லிங்கை கிளிக்செய்யுங்கள். Extra Torrent பக்கம் திறக்கும். அதில் Download (Download Torrent) என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது ஒரு சிறிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் இருக்கும் ஓகே பட்டனை கிளிக் செய்யுங்கள். டோரண்ட் டவுன்லோடு ஆகி வேறு ஒரு பேஜ் தோன்றும். அதில் எந்த டிரைவில் டோரண்ட் பைலை சேமிக்க வேண்டுமோ அதை மார்க் செய்து  ஓகே கொடுங்கள்.  இனி  யூடோரண்ட் பேஜ் தோன்றி அதில் விண்டோஸ்8 பைஃல் சேர்ந்து விடும். அதன் பின் அந்த பைஃல் டவுன்லோடு ஆக ஆரம்பிக்கும். இந்த பைஃலின் அளவு 2.23 ஜி.பி ஆகும். இது முழுவதும் டவுன் லோடு ஆக எப்படியும் 5-6 மணி நேரம் ஆகும். இது இண்டர்நெட் ஸ்பீடை பொறுத்தது.

டவுன்லோடு ஆகும் பைஃல் WIN RAR பார்மெட்டில் இருக்கும். நீங்கள் உங்கள் கம்பியூட்டரில் வின்ரேர் இண்ஸ்டால் செய்திருக்கவில்லை என்றால் இந்த லிங்கை கிளிக் செய்து என் டிராப் பாஃக்சில் இருந்து டவுலோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.

டோரண்ட் பைஃல் முழுவதும் டவுன்லோடு ஆனவுடன் அதை வின்ரேர் மூலம் எக்ஸ்டிராக்ட் செய்யுங்கள்.  இப்பொழுது விண்டோஸ் 8 டிவிடியின் இமேஜ் பைல்,பெர்மனெண்ட் ஆக்டிவேட்டர், எப்படி இன்ஸ்டால் செய்யவேண்டும் என்பதை விவரிக்கும் வீடியோ ஆகியவை இருக்கும்.

நீங்கள் இமேஜ் பைஃலை டிவிடியில் ரைட் செய்து இன்ஸ்டால் செய்யலாம். அல்லது  யு.எஸ்பி பென் டிரைவில் இன்ஸ்டால் செய்து அதன் மூலம் சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்யலாம். பெண்டிரைவ் மூலம் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால்  மைக்ரோசாஃட்டின் " Windows 7 USB -DVD -Tool" ஐ இந்த லிங்கை கிளிக் செய்து அதில் இன்ஸ்டலேஷன் என்ற தலைப்பின் கீழ் windows7 usb dvd download tool என்ற சிகப்பு நிற வாசகத்தை கிளிக் செய்து டவுன்லோடு செய்து சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்யுங்கள்.

பென் டிரைவ் குறைந்த பட்சம் 4 ஜி.பியாக இருக்க வேண்டும். பென் டிரைவை சிஸ்டத்தில் இணைத்துவிட்டு, டெஸ்க்டாப்பில் இருக்கும்  யூ.எஸ்பி டூல் ஐகானை கிளிக் செய்யுங்கள். பேஜ் தோன்றும். அதில் கேட்டுள்ள படி யூ எஸ்பி, இமேஜ் பைல் ஆகியவற்றை தெரிவு செய்து ஓகே கொடுத்தால்  விண்டோஸ் இமேஜ் பைஃல் யூ.எஸ்பியில் இன்ஸ்டால் ஆகிவிடும்.

இனி இந்த யூ.எஸ்.பியை இணைத்தபடியே சிஸ்டத்தை ரிஸ்டார்ட் செய்து பூட் மெனுவில் யூ எஸ்பி என பூட் ஆஃப்ஷனை தேர்வு செய்துவிட்டால்  போதும். விண்டோஸ் 8 இன்ஸ்டால் ஆகிவிடும். அதன் பின் பெர்மனெண்ட் ஆக்டிவேட்டரை ஓடவிட்டால்  ஆக்டிவேட் ஆகிவிடும்.  இதை தெரிந்து கொள்ள  வீடியோ டுடோரியலை பார்க்கவும்.

முடிந்தது கதை...............

மீண்டும் சந்திப்போம்.







40 comments:

  1. நல்ல பதிவு நண்பரே உங்கள் சேவை தொடரட்டும்

    ReplyDelete
    Replies

    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  2. தெளிவான விளக்கம். நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  3. ஐயா தங்களின் பதிவுக்கு எனது பாராட்டுகள்.

    இது போல் யாரும் விளக்கமாக சொல்லியது இல்லை.இருந்தாலும் இதை யெல்லாம் செய்து முடிக்க நினைக்கையில் எனக்கு தல சுத்துவது போல் பிரம்மை ஏற்படுகிறது.இதற்கு பொறுமையும் ,தெளிவும் அவசியம் வேண்டும் இப்போதைக்கு உள்ள விண்டொ 7னே போதும்.

    நீங்கள் எந்த பதிவை போட்டாலும் விளக்கமாக மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் வெளியிடுகிறீர்கள் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. யு டோரென்ட் மூலம் தரவிறக்கம் செய்யும் போது இருக்கிற வைரைசையும் சேர்த்து கொண்டு வந்து விடும் என்கிறார்கள் .உங்கள் முயற்சி எனக்கு நம்பிகையை தருகிறது .

    ReplyDelete
    Replies
    1. எதை டவுன் லோடு செய்தாலும் அதை ஓபன் செய்யும் முன் ஆண்டி வைரஸ் மூலம் செக் செய்ய வேண்டும். வைரஸ் இல்லை என்றால் அதை ஓபன் செய்து இன்ஸ்டால் செய்யலாம்.

      Delete
  5. இதற்கு பணம் கட்ட வேண்டியதில்லையா?

    ReplyDelete
    Replies
    1. தேவை இல்லை. இது பெர்மனெண்ட் ஆக்டிவேஷன் ஆகும். அப்டேட்டும் செய்யலாம்.

      Delete
  6. ஐயா எனக்கு ஒரே ஒரு சந்தேகம்? இது ஒரிஜினல் என்று சொல்லி விட்டீர்கள். ஆப்படியானால் அவ்வப்போது அப்டேட் கேட்டால் கொடுக்கலாமா..? கூடாதா...? விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இது பெர்மனெண்ட் ஆக்டிவேஷன் ஆகும். அப்டேட்டும் செய்யலாம்.

      Delete
  7. super sir. nan windows 7 ippadi pannidhan full version a use pannitu irukken. ennada windows 8 ku yarum olunga download option ne tharlaye nu yosichute irundhen. google la enna dhan windows 8 full version,crack, appadi ippadi nu search pannalum ellame preview version dhan ippodhaikku kidaikkudhu. neengal dhan enaku therinju 1st time windows 8 pro full version kudutthu irukinga. yeppadi install pannanum num solli irukinga. romba thanks.

    ReplyDelete
  8. sir. windows 8 download panten. aana dvd la eppadi boot panradhu nu enakku sutthama onnume puriyala. please help me. step by step a solla mudiyuma?

    ReplyDelete
  9. நீங்கள் டவுன்லோடு செய்திருக்கும் ஓ.எஸ் பைல் ISO ஃபார்மேட்டில் இருக்கும். நீங்கள் அதை டி.வி.டியில் ரைட் செய்ய விரும்பினால், உங்கள் டிவிடி பர்னரில் ( Nero etc போன்றவற்றை இன்ஸ்டால் செய்திருந்தால்) ISO to DVD என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து, டவுன்லோடு செய்திருக்கும் பைலை செலக்ட் செய்து டிவிடியில் ரைட் செய்யலாம். அப்படி ஃபர்னர் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருக்கவில்லை என்றால், FREE ISO BURNER-ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். அதன் மூலம் டி.வி.டி-ல் ரைட் செய்யலாம். பென் டிரைவ் மூலம் என்றால் மைக்ரோ சாப்ட் விண்டோஸ் 7 USB -DVD TOOL-ஐ உபயோகித்து பென் டிரைவில் இன்ஸ்டால் செய்யலாம். இதைப்பற்ரி ஏற்கனவே பதிவில் குறிப்பிட்டுள்ளேன். டிவிடியை பூட் செய்ய சிஸ்டத்தை ரிஸ்டார்ட் செய்து, ஓபனிங் பேஜ் வரும் பொழுது கீழே பூட் மெனுவுக்கு எந்த கீ என்பது டிஸ்பிளே ஆகும். அதன் படி மறுபடியும் ரீஸ்டார்ட் செய்து அந்த கீயை அழுத்தவும். இப்பொழுது பூட் ஆஃப்ஷன் 1- ஹர்ட் டிஸ்க், 2- சிடி டிரைவ்,3- யூ எஸ்பி என இருக்கும். அதில் யூ.எஸ்.பி என ஹைலைட் செய்து ஓகே கொடுக்கவும். சிஸ்டத்தில் அந்த பென் டிரைவை ஏற்கனவே இனைத்திருக்க வேண்ண்டும். டிவிடி ரைட் செய்திருந்தால் அதை டிரைவில் போட்டு ரிஸ்டார்ட் செய்து பூட் மெனுவுக்கு வரவும். அதில் சி.டி.டிரைவை ஹைலைட் செய்து ஓகே கொடுக்கவும். இனிதானாக இன்ஸ்டால் ஆகும்.

    ReplyDelete
  10. sir. neenga kuduttha windows 8 download panna winrar file dhan irukku. iso format la ye illaye? extract panna direct fila a dhan aagudhu.

    ReplyDelete
  11. ஆமாம். அது வின் ரேர் ஆக இருக்கும் அதை எக்ஸ்டிராட் செய்தால் ஐ.எஸ்.ஒ பைல் இருக்கும். அதை டிவிடியில் ரைட் செய்யவோ அல்லது பென் டிரைவில் இன்ஸ்டால் செய்யவோ செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. எக்ஸ்ட்ராக்ட் செய்தால் ஐ.எஸ் ஓ பைல், விடீயோ பைல், ஆகிவேட்டர் எல்லாம் அடங்கிய போல்டர் கிடைக்கும்.

      Delete
  12. porumaya badhil solringa. adhuku thanks. aana extract panna iso file la onnum varlaye sir.

    ReplyDelete
    Replies
    1. அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அந்த பைல்லின் அளவு 2489114 கே.பி என இருக்குதா?

      Delete
    2. K.J_121105 nu oru file winrar la irukku. adha extract panna
      mudiyala. password kekkudhu. enna password

      Delete
  13. aama sir. irukku. adha extract pannen. but adhula iso files edhuvum illaye sir

    ReplyDelete
    Replies
    1. en-windows-8-pro-vl-x86 -dvd என்பதுதான் ISO பைல். அதை ஓபன் பண்ணஃ முடியாது. அதை நான் சொல்லியபடி டிவிடி அல்லது பென் டிரைவில் இன்ஸ்டால் செய்யுங்கள்.

      Delete
    2. sir 1 doubt. windows 8 pottal ippa windows 7 la use panra winrar. winzip ponra ella software um windows 8 la appadiye install panna support aaguma? illa windows 8 ku nu thaniya download pannanuma?

      Delete
  14. ஐ.எஸ்.ஓ பைலை எக்ஸ்டிராக்ட் பண்ணக்கூடாது

    ReplyDelete
  15. thanks sir. burn panten. winrar file dhan iso nu neenga sonna apparam dhan purinjadhu.apparam succesful'a boot panni windows 8 copy panniten. mikka nanri

    ReplyDelete
  16. sir 1 doubt. windows 8 potta ippa windows 7 la use panra winrar. winzip ponra ella software um windows 8 la appadiye install panna support aaguma? illa windows 8 ku thaniya download pannanuma?

    ReplyDelete
  17. மறுபடியும் தெளிவாக சொல்கிறேன். நீங்கள் டவுன்லோடு செய்த பைல் ரேர் வடிவில் இருக்கும். அதை எக்ஸ்டிராட் செய்தால் பெர்மெனண்ட் ஆக்டிவேட்டர், வீடியோ டூட்டோரியல், en-windows-8-pro-vl-dvd ஆகியன இருக்கும். en-windows-8-pro-vl-dvd என்பது தான் ஐ.எஸ்.ஓ பைல். நீங்கள் C-Drive -ல் இன்ஸ்டால் செய்யும் பொழுது, அதில் உள்ள எல்லாம் டெலிட் ஆகிவிடும். எனவே முக்கியமானவைகளை காப்பி செய்து வேறு டிரைவில் (D/E/F) பேஸ்ட் செய்து விடவும். டவுன் லோடு செய்த ரேர் ஃபைல், எக்ஸ்டிராட் செய்த பொழுது கிடைத்த ஃபைல்கள் எல்லாவற்றையும் ஒரு போல்டரில் போட்டு D/E/F இதில் எதாவது ஒன்றில் சேமிக்கவும்.
    en-windows-8-pro-vl-dvd எனற ஐ.எஸ்.ஓ பைலை மட்டும் தான் டி.வி.டியில் ரைட் செய்ய வேண்டும். அதுதான் விண்டோஸ்-8 ஓ. எஸ் ஆகும்.

    பெர்மனெண்ட் ஆக்டிவேட்டர் ஃபைலில் KJ -121105 என்பது ஆக்டிவேட்டர். இன்ஸ்டால் செய்து முடித்த பின் வீடியோவில் காட்டியபடி இதை உபயோகித்து ஆக்டிவேசன் செய்யலாம்.

    ஓ.எஸ் இன்ஸ்டால் செய்த பின் வின் ரேர். வின்சிப் போன்றவற்றை மறுபடியும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  18. Ok. Windows 7 ku potta adhe software ellame windows 8 ku potta work aaguma?

    ReplyDelete
  19. Replies
    1. romba romba super'a irukku windows 8. indha windows 8'a kandupidichu yepadi install pannanum nu porumaya sollikudatthadharkku mikka nanri. nalla fast'a vum irukku.

      Delete
  20. நன்றி ஐயா, நீங்கள் சொல்லியபடியே விண்டோஸ் 8 ஐ எனது கணினியில் நான் இன்ஸ்டால் செய்து விட்டேன். மிகச்சிறப்பாக உள்ளது. எல்ல செயல்பாடுகளும் வேகமாக உள்ளது. நீங்கள் சொல்லியபடியே அப்டேட்டும் செய்கிறேன். கண்டுபிடித்து பயன்படுத்தக் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  21. but idhula 32 bit version mattum dhan irukku. 64 bit illaye sir. 64 bit ku thaniya download pannanuma?

    ReplyDelete
  22. ஆமாம். 64 பிட் சிஸ்டத்தில் 32 பிட் மேட்ச் ஆகலாம். சில டிரைவர்கள் மட்டும் தேவைப்படலாம். 32+64 பிட் ஓ.எஸ் -ஐ இப்பொழுதுதான் கண்டுபிடித்து டவுன் லோடு செய்து கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  23. ok. neenga potavudane engalum adha share pannunga

    ReplyDelete
  24. ஐயா விண்டோஸ் 8 pro வெர்ஷனுக்கு மைக்ரோசாப்ட் இப்போது இலவசமாக தந்து கொண்டிருக்கும் widows media center என்ற இலவச மென்பொருளை அப்டேட் செய்யமுடியவில்லையே..? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

    ReplyDelete
  25. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
  26. பொருமை மிக்க ஐயா அவர்களுக்கு,
    வணக்கம். நான் விண்டோ xp உபயோகிக்கின்றேன். எனது IE 8-ல் தமிழ் எழுத்துக்கள் கட்டங்களாக வருகின்றது. மேலும் google chrome எல்லா version-களிலும் bookmarks-ல் தமிழ் எழுத்துக்கள் கட்டங்களாகவே வருகின்றன.ஆனால் கர்சரில் click செய்தால் தமிழ் எழுத்துக்கள் தெரிகின்றது.google-லிலும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன். பலனில்லை. microsoft fix it உபயோகித்துப்பார்த்துவிட்டேன். தங்களின் விளக்கம் வேண்டும்,
    அன்பன், விஸ்வநாதன்.

    ReplyDelete