Monday, June 16, 2014

இரட்டிப்பு மின்சார உற்பத்தி செய்யும் பத்ரி சேஷாத்ரி வீட்டு சோலார் சிஸ்டம் !

பத்ரி சேஷாத்ரி அவர்கள் தனது "சோலார் விளக்கு + மொபைல் சார்ஜர்" என்ற பதிவில்,

"நான் சுமார் ஓராண்டுக்குமுன் சூரிய ஒளி மின்சாரத்துக்கான அமைப்பை என் வீட்டில் ஏற்படுத்தியிருந்தேன். சென்ற ஆண்டு முழுதும் அதனால் என்ன சேமிப்பு என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தேன்.
சூரிய ஒளி மின் அமைப்பை ஏற்படுத்துவதற்குமுன் ஓராண்டில் நான் செலவழித்த மின் கட்டணம் சுமார் ரூ. 43,000. சூரிய ஒளி மின் அமைப்பை நிறுவியதன்பின் ஓராண்டில் செலவழித்த தொகை சுமார் ரூ. 20,000. ஓராண்டில் சேமிப்பு சுமார் ரூ. 23,000/-"

என குறிப்பிட்டுள்ளார்.வருடம் 1-க்கு இவர் செலுத்திய மின் கட்டணம் ரூ.43,000 என்றால் சராசரியாக மாதம் 3,583 ரூபாய் ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் வாரிய கட்டண பட்டியல் படி இரண்டு மாதத்திற்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் செலவு செய்திருக்கவேண்டும்.


 இந்த பட்டியலின் படி ஒரு யூனிட்டின் கட்டணம் ரூ.5.75 ஆகும். இது தான் அதிக பட்ச கட்டணம்.

சோலார் இணைப்புக்கு முன் செலுத்திய கட்டணம்(ஆண்டுக்கு) = ரூ. 43,000

அதாவது உபயோகப்படுத்திய யூனிட்டுகள்  = 7,478.
 (Rs 43,000 divided by 5.75 = 7,478 Units )

சோலார் இணைப்புக்கு பின் செலுத்திய கட்டணம் (ஆண்டுக்கு) = ரூ.20,000.

அதாவது உபயோகப்படுத்திய யூனிட்டுகள் = 3,478.
( Rs. 20,000 divided by 5.75 = 3,478 Units)

வித்தியாச யூனிட்கள் அல்லது கிடைக்கப்பெற்ற சோலார் மின்சாரம் = 4000 யூனிட்கள்
( 7,478 - 3,478 = 4000)

அமைக்கப்பட்டுள்ள சோலார் சிஸ்டம் பற்றிய அவர் பதிவு கீழே.

என் வீட்டுக் கூரைமீது சூரிய ஒளி மின்சார உற்பத்தி

அதாவது  அவர் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அவர் அமைத்திருப்பது  1.15 கிலோ வாட் (5 x 230W = 1.150 Kw) சோலார் சிஸ்டமாகும்.  இந்த சிஸ்டம் ஒரு ஆண்டில் (365 நாட்களில்) 4000 யூனிட்டுகளை உற்பத்தி செய்திருக்குமானால் அது உலக மகா அதிசயமாகும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை பாருங்கள். 

இது இந்திய அரசின் வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கும் புள்ளி விபரமாகும். இதன்படி சென்னையில் சராசரியாக ஒரு வருடத்தில், நாள் தோறும் கிடைக்கும் சூரிய ஒளி மூலம் ஒரு சதுர மீட்டர் சூரிய ஒளி பரப்பில் 5.16 கிலோ வாட் (5.16 யூனிட்) சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். ஒரு கிலோ வாட் சோலார் பேனல்களின் மொத்த பரப்பளவு ஒரு சதுர மீட்டராக இருக்கும் படியே சோலார் பேனல்கள் தயாரிக்கப்படுகிறது. எனவே  இந்த பட்டியலை ஒரு கிலோ வாட் பேனல்கள் நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதன்படி பத்ரி வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் 1.15 கிலோ வாட் சோலார் பேனல்கள் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்ய வேண்டிய யூனிட்கள் எவ்வளவு?

1.15 Kw X 5.16 X 365 = 2,166 (2,165.9) யூனிட்டுகள்.

ஆனால் பத்ரி வீட்டில் உள்ள சிஸ்டம் 4,000 யூனிட்டுகள் உற்பத்தி செய்துள்ளது!

அதாவது இரட்டிப்பு உற்பத்தி ஆகும்.

இது உலக மகா சாதனைதான்!



14 comments:

  1. பத்ரி ஒரு வேலை கணக்கில் வீக்காக இருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. அவர் எப்படி கணக்கிட்டார் என தெரியவில்லை

      Delete
  2. இரு மாதத்திற்கு ஒரு கணக்கீடு என்பதையும், அப்படி இரு மாதத்திற்கு ஒரு முறை 501 யூனிட்டுகளுக்கு குறைவான உபயோகம் என்றால் ஒரு யூனிட்டின் விலை ரூ 3.50 என குறைந்து விடும் என்பதையும் கருத்தில் கொள்க. மறுபடியும் கணக்கிட்டுப் பார்த்தால் உங்கள் ஆச்சர்யம் குறையலாம்

    ReplyDelete
    Replies
    1. இரண்டு மாதத்திற்கு 600 யூனிட்டுக்கு குறைவான உபயோகம் என்றால், சோலார் மின்சாரத்தின் அளவு இன்னும் கூடும்!

      Delete
  3. ராஜன் சொல்வதிலும் உண்மை உள்ளது. ஒரு ஆண்டில் செலுத்திய தொகையை வைத்து மாத சராசரி யூனிட்டை கணக்கிடுவது எப்படி சரியாகும்? சரி..... எதற்காக அவர் எழுதியதை குறை கூற இவ்வளவு மெனக்கெட்டிருக்கிறீர்கள்?

    ReplyDelete
  4. இது குறை கூறுவதற்காக எழுதப்பட்டதல்ல. அவர் கணக்கீட்டின் படி சோலார் மின்சாரத்தால் லாபம் என கூறப்படும் தொகை தவறானது. எனவே இதை அடிப்படையாக வைத்து, சோலார் சிஸ்டத்தை அமைப்பது மிகவும் லாபமானது என யாரும் தவறான முடிவுக்கு வரக்கூடாது என்பற்கான விளக்கமே..

    ReplyDelete
  5. நீங்கள் சொல்வது உண்மையே. என் கணக்கில் ஒரே ஒரு பிழை இருந்தது. முதல் ஆண்டுக் கணக்கில் ஆறு இரு-மாதத் தொகைகளைக் கூட்டுவதற்குபதில் தவறாக ஏழாவது மாதத் தொகையையும் சேர்த்துக் கூட்டிவிட்டேன். எனவே முதல் ஆண்டில் உண்மையான தொகை 37,000 (ரூ. 37,829). மொத்த யூனிட்டுகள் 7,530 (1650 + 1620 + 1340 + 930 + 660 + 1330) அடுத்த ஆண்டில் ஆறு இரு-மாதத் தொகையின் கூட்டுத் தொகை ரூ. 20,176. மொத்த யூனிட்டுகள் 4,660 (1370 + 790 + 920 + 620 + 580 + 380). ஆக, எனக்கான சேமிப்பு சுமார் ரூ. 17,500. இதில் பெரும் பகுதி சூரிய ஒளி மின்சாரத்தாலும், சிறு பகுதி, நாங்கள் பிற கருவிகளை (ஏசி) குறைவாகப் பயன்படுத்தியதாலும் இருக்கலாம்.

    ReplyDelete
  6. மிக்க நன்றி. கணக்கிடும் பொழுது ஏற்பட்ட கவனக்குறைவே இதற்கு காரணம்.

    ReplyDelete
  7. இருந்தாலும் “இரட்டிப்பு மின்சார உற்பத்தி செய்யும்” என்று நீங்கள் இவ்வளவு விவரித்து எழுதியிருக்கவேண்டாம்:-) 17,000 ரூபாய் சேமிப்பு என்பது குறைந்த அளவு அல்ல. கணிசமானதுதான். சூரிய ஒளி மின்சாரத்தின் பங்கு எவ்வளவு என்பதைக் கண்டுபிடிக்கவேண்டுமானால் அதற்கெனத் தனியாக சப்-மீட்டர் பொருத்திப் பார்க்கலாம். அப்படிச் செய்யும் எண்ணமும் இருக்கிறது.

    ReplyDelete
  8. நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இவ்வளவு விரிவாக எழுதினேன். என்னைப்பொருத்தவரை நான் மற்றவர்களின் பதிவு பற்றி பின்னூட்டத்தில் என் அபிப்பிராயமோ அல்லது அதை பற்றி தனி பதிவு போடுவதோ என் பழக்கம் கிடையாது. இது டெக்னிக்கல் விஷயம் என்பதால்தான் எழுதினேன். நிற்க,

    உங்கள் சிஸ்டம் ஆண்டுக்கு 2,166 யூனிட் உற்பத்தி செய்யும் திறன் இருந்தாலும், அதிலுள்ள இன்வெர்ட்டர் 80% -85% efficiency கொண்டதாக இருக்கும் அதனால் டி.சி -ஐ 220 வோல்ட் ஏசியாக மாற்றும் பொழுது அது
    1850 யூனிட்டாக குறைந்துவிடும். மேலும் பாட்டரி ஒவ்வொரு நாளும் தன்னுடைய சார்ஜிங் கெபாசிடியை இழந்து வரும். அதனால் ஒவ்வொரு மாதமும் நமக்கு கிடைக்க கூடிய மின்சாரத்தின் அளவு குறையும். இதையும் கணக்கில் எடுக்க வேண்டும். மீட்டர் பொருத்தினால்தான் உண்மையாக சிஸ்டத்தின் மூலம் கிடைத்த மின்சாரத்தின் அளவு தெரியும்

    ReplyDelete
  9. "இரட்டிப்பு மின்சார உற்பத்தி செய்யும் பத்ரி சேஷாத்ரி..." இப்படி எழுதுவது பலரையும் படிக்க ஈர்க்கும் ஒரு உத்தி தான். பல்வேறு பத்திரிக்கைகள் இவ்வாறு தலைப்பு போடுவதுண்டு. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஒரு சிறு பகுதியில் லேசான நில நடுக்கம். அதற்கு வெகு தொலைவில் உள்ள மாகாணத்தில் ஒரு தமிழ் பட பிடிப்பு.செய்தியின் தலைப்பு என்னவோ அந்த நடிகர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதாக. போகட்டும் பத்ரி என்ன brand வீட்டில் போட்டிருக்கிறார் எனத் தெரிந்தால் நம்பி போடலாம். சொல்வாரா பத்ரி?

    ReplyDelete
  10. அவர் லோக்கல் டீலர் மூலமாக போட்டிருக்கிறார். சப்சிடி கிடையாது. அவருக்கு மெயில் செய்து விபரம் கேளுங்கள்

    ReplyDelete
  11. Rajan: முழுத் தகவல்களையும் என் பதிவில் ஏற்கெனவே கொடுத்துள்ளேன். கம்பெனி பெயர், அவர்களுடைய தொடர்பு எண் எல்லாமே இந்தச் சுட்டிகளில் உள்ளன.

    http://www.badriseshadri.in/2013/06/blog-post.html
    http://www.badriseshadri.in/2013/11/blog-post_27.html

    ReplyDelete
  12. //இதன்படி பத்ரி வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் 1.15 கிலோ வாட் சோலார் பேனல்கள் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்ய வேண்டிய யூனிட்கள் எவ்வளவு?

    1.15 Kw X 5.16 X 365 = 2,166 (2,165.9) யூனிட்டுகள்//

    இந்தியாவில் வணீக பயன்ப்பாட்டில் உள்ள மின் தகடுகளின் திறன் 20% அளவே ,எனவே குறிப்பிடப்பட்ட வாட்டில் 20% தான் உற்பத்தி ஆகும், அவர்கள் குறிப்பிட்டுள்ள வாட் என்ன எனில் சுமார் 12 மணி நேரம் செங்குத்தாக சூரிய ஒளீ விழுந்தால் ஆகும் மின் உற்பத்தி அளவு ஆகும், இயல்பில் அது சாத்தியமில்லை, இதற்காக வணிக சூரிய மின் உற்பத்தி நிலையங்களில் சூரியனின் பாதையை பின் தொடர்ந்து திசை மாறும் வகையில் பேனல்கள் தானியங்கியாக வடிவமைக்கப்படும்.

    நிலையான சூரிய தகடுகள் சுமார் 20% தான் எனவே மின்னுற்பத்தி அளவு இன்னும் குறைவாகவே இருக்கும்.

    20% எனில்,

    2,166*20/100= 433.2 யூனிட்கள்.

    40% திறனில் கூட மின் தகடுகள் உள்ளனவாம் ஆனால் விலை அதிகம், அவை எல்லாம் சேட்டலைட்டுகளில் பயன்ப்படுகின்றன.

    உண்மையான மின் உற்பத்தி என்ன என அறிய தனி மீட்டர் போட்டால் தான் தெரியும் என நினைக்கிறேன்.

    ReplyDelete