Wednesday, June 11, 2014

தமிழக அரசின் " Solar Rooftop Capital Incentive Scheme " - ஒரு அலசல்

தமிழக அரசு இந்த சோலார் மின்சார திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது கிரிட் டை சோலார் சிஸ்டம் (Grid Tie Solar System) ஆகும். முந்தைய சோலார் பற்றிய பதிவுகளில் இது பற்றி விரிவாக சொல்லப்படாத காரணத்தால் இந்த பதிவை எழுதுகிறேன்.

செயல்படும் முறை

கிரிட் டை சோலார் சிஸ்டம் சாதாரண சோலார் சிஸ்டத்தை போன்றதே. ஆனால் இரண்டு விஷயங்களில் மாறுபட்டது. 

1. இதில் பாட்டரிகள் கிடையாது.

2. இதில் பொருத்தப்படும் Bi-directional மின்சார மீட்டர், சாதாரண மீட்டரை போல ஒரே திசையில் (Clockwise Direction) மட்டுமே சுற்றாமல், முன் நோக்கியும் பின் நோக்கியும் (Clockwise & Anti clockwise) இயங்கக்கூடியது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் இந்த சிஸ்டம் இயங்கும் முறையை விளக்குகிறது.



மொட்டை மாடியில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்களின் மீது விழும் சூரிய ஒளிக்கதிரானது, டி.சி மின்சாரமாக மாற்றப்பட்டு, டிசி-ஏசி இன்வெர்ட்டருக்கு செல்லும். அங்கு 220 வோல்ட் ஏசி மின்சாரமாக மாற்றப்படும்.  அச்சமயம் வீட்டில் நீங்கள் மின்வாரிய மின்சாரத்தை உபயோகித்துக்கொண்டு இருந்தால், அதை துண்டித்து விட்டு சோலார் மின்சாரத்தை கொடுக்கும். நீங்கள் உபயோகிக்கும் மின்சாரம், சோலார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விட குறைவாக இருந்தால், மீதியுள்ள சோலார் மின்சாரத்தை மின்வாரிய சப்ளைக்கு (மின்வாரிய டிரான்ஸ்ஃபார்மருக்கு) அனுப்பும். இப்பொழுது மீட்டர் மறுபக்கமாக சுழலும். நீங்கள் உபயோகிக்கும் மின்சாரம், சோலார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விட அதிகமாக இருந்தால் தேவைப்படும் அதிகப்படியான மின்சாரத்தை மின்வாரிய சப்ளையிலிருந்து எடுத்துக்கொள்ளும். அப்பொழுது மீட்டர் முன்பக்கமாக சுழலும்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மீட்டர் ரீடிங் எடுக்கும் பொழுது, நீங்கள் உபயோகித்த மின் வாரிய மின்சாரம், நீங்கள் மின்வாரியத்திற்கு கொடுத்த மின்சாரம் இவற்றை கணக்கிடுவர்.

இதன் அடிப்படையில் நீங்கள் செலுத்தவேண்டிய மின் கட்டணம் அதாவது மின்வாரியத்திற்கு நீங்கள் சப்ளை செய்த சோலார் மின்சாரத்தின் அளவு, நீங்கள் உபயோகித்த மின்சாரத்தின் அளவைக்காட்டிலும் குறைவாக இருந்தால், வித்தியாச அளவிற்கு மட்டுமே நிர்ணயிக்கப்படும். அதை செலுத்தினால் போதும்.

நீங்கள் மின் வாரியத்திற்கு சப்ளை செய்த மின்சாரத்தின் அளவு, நீங்கள் உபயோகித்த மொத்த மின்சாரத்தின் அளவை காட்டிலும் அதிகமாக இருந்தால், வித்தியாச அளவு மின்சாரம் அடுத்த மாத கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்விதம் நடக்க வாய்ப்பே இல்லை. காரணம் ஒரு வீட்டிற்கு அனுமதிக்கப்படும் சிஸ்டத்தின் அளவே 1Kw ஆகும். இது அதிக பட்சமாக நன்கு வெயில் அடிக்கும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 5  யூனிட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்யும். ஆனால் நாம் 5 யூனிட்டுகளுக்கு அதிகமாகவே உபயோகிப்போம்.

 வருடக்கடைசியில் நம் கணக்கு மின்வாரியத்தால் செட்டில் செய்யப்படும்.

1.  அரசின் இத்திட்டப்படி 1KW சோலார் சிஸ்டமே அமைக்க வேண்டும்.

2. மத்திய அரசின் மானியமாக 30%  மற்றும் மாநில அரசின் மானியமாக ரூ. 20,000/-  உண்டு.

3. இந்த சிஸ்டத்தை அமைக்க ஆகும் செலவு ரூ. 91,000- 1,10,000/-. மானியம் நீங்கலாக நாம் செலுத்த வேண்டிய தொகை ரூ. 43,700 - ரூ.60,000/- ஆகும்.

4. சிஸ்டம் இன்ஸ்டால் செய்து கொடுக்கும் நிறுவனங்கள், அவை வசூலிக்கும் கட்டண விபரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்-ஐ கிளிக் செய்யவும்.
 
System Installer Details

குறைபாடுகள்
மின்வாரிய சப்ளை இல்லாத பொழுது, இந்த சிஸ்டத்தில் உள்ள Anti-Islanding Protection செயல்பட்டு சோலார் மின்சப்ளையை துண்டித்து விடும். இதனால் வீட்டில் மின் சப்ளை இருக்காது. இந்த Anti-Islanding Protection வைத்திருப்பதன் காரணம், மின்சப்ளையை ஆஃப் செய்து விட்டு மின்வாரிய ஊழியர்கள் பழுது சரி செய்து கொண்டிருக்கும் பொழுது, நம் வீட்டு சோலார் மின்சாரம் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது என்பது தான்.

இந்த சிஸ்டத்தின் மூலம் மின்வாரிய மின்சாரம் இல்லாத நேரங்களில் சோலார் மின்சாரத்தை உபயோகிக்க முடியாது. 


 

16 comments:

  1. Why can't we use battery to store the extra generated current? This can utilize during power outage - Right?
    You might mention the option in other posts but Government wont' support battery with solar energy?

    ReplyDelete
    Replies
    1. இந்த சிஸ்டத்தில் பாட்டரிகளை இணைக்க முடியும். பகல் நேரத்தில் உபயோகப்படுத்தாத சோலார் மின்சாரத்தை பாட்டரியில் சேமிக்கலாம். ஆனால் மின்வாரிய மின்சாரம் இல்லாத பொழுது, Anti-Islanding Protection இன்வெர்ட்டரை ஆஃப் செய்துவிடும். இதனால் நமக்கு மின்சாரம் கிடைக்காது.

      Delete
  2. நன்றி ஐயா. நல்ல தகவல்கள், அனைவருக்கும் மிகவும் பயனளிக்க கூடியது.

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  5. மின் தடை இருக்கும்போது சோலார் மின்சாரத்தையும் உபயோகிக்க முடியாது என்பது பெரிய கொடுமையாக தெரிகிறது. இது எதற்க்காக சோலாரை நாடுகிறோமோ அதையே கேள்விக்குறி ஆக்குகிறது.

    மிகப் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி ஸார் !

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஆஃப் கிரிட் சோலார் சிஸ்டத்தை உபயோகித்தால், மின்சாரம் இல்லாத நேரத்திலும் உபயோகிக்கலாம். எனது முந்தைய சோலார் பதிவுகளை பார்க்கவும்.

      Delete
  6. தங்களின் பதிவுகளை இத்தனை நாள் தவறவிட்டிருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்து சேமித்து வைத்துவிட்டேன். மிகவும் பயனுள்ள பதிவுகள். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  7. ஒரு சிறிய பேனல் (தெருவிளக்கைப் போன்று) அமைத்து ஒரே ஒரு விளக்கை வீட்டுத்தோட்டத்தில் அமைப்பது எப்படி அதற்கு ஆகும் செலவைக் கூற முடியுமா?

    ReplyDelete
  8. ரெடிமேடாகவே மார்க்கெட்டில் கிடைக்கிறது. நீங்கள் வசிக்கும் பகுதி அல்லது மாவட்ட தலைநகரில் உள்ள சோலார் கடைகளில் விசாரிக்கவும்

    ReplyDelete
  9. நன்றி ஐயா. நல்ல தகவல்கள், அனைவருக்கும் மிகவும் பயனளிக்க கூடியது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  10. I already install a UPS in my home. Can I install grid-tie solar system also? Is it acceptable by TNEB?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வீட்டில் இருக்கும் UPS -க்கும் சோலார் சிஸ்டத்திற்கும் சம்பந்தம் கிடையாது. எனவே கிரிட் டை அல்லது ஆஃப் கிரிட் சோலார் சிஸ்டம் அமைக்க அரசிடம் விண்ணப்பிக்கலாம்.

      Delete