Tuesday, November 18, 2014

வீட்டு காய்கறி தோட்டம் -1 ( சதுர அடி தோட்டம்)

வீட்டில் சமையலுக்கு தேவையான காய்களுக்காக காய்கறி தோட்டம் போடுவது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. ஆனால் நம் நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நாம் நிலத்தை நன்கு கிளறி அதில் செடியை நடுவோம். ஆனால் அவர்கள் நிலத்தின் மீது  தேவையான நீளம், அகலம் மற்றும் 16 அங்குல உயரம் கொண்ட மர சட்டத்தை வைத்து அதன் உட்புறம் தோட்ட மண், தொழு உரம்,  மக்கிய குப்பை ஆகியவை கலந்து நிரப்புவார்கள்.  பொதுவாக காய்கறி செடிகளின் வேர் பரவ இந்த ஆழம் போதுமானது. இந்த முறையில் தோட்டம் அமைப்பது ’சதுர அடி தோட்டம்’ (Square Foot Garden) என அழைக்கப்படுகிறது. கீழே 32 சதுர அடி  (8 அடி நீளமும் 4 அடி அகலமும்) உள்ள  தோட்ட அமைப்பு காட்டப்பட்டுள்ளது. 16 அங்குல உயரமுள்ள இந்த மர சட்டத்தினுள் மேலே குறிப்பிட்டபடி நன்றாக கலக்கப்பட்ட தோட்ட மண், தொழு உரம் மற்றும் மக்கிய குப்பை உர கலவை முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. மரசட்டத்தின்  மேல் நீள வாக்கில் 8 அடி நீளமுள்ள மர ரீப்பர் சம இடைவெளியில் பொருத்தப்பட்ட்ள்ளது. அதைப்போலவே அகலவாக்கில் 7 ரீப்பர்கள் பொருத்தப் பட்டுள்ளது.  இப்பொழுது 32 கட்டங்களாக (சதுர அடிகளாக) பிரிக்கப்பட்டு விட்டது. இந்த ரீப்பர்கள் அவசியம் கிடையாது. இது செடியை நடுவதற்கு அல்லது விதையை ஊன்றுவதற்கு ஒவ்வொரு சதுர அடியையும் பிரித்து காட்டுவதற்கு மட்டுமே. இதற்கு பதிலாக கயிற்றை கட்டலாம். இது அடையாளத்துக்கு தான்.


இனி ஒவ்வொரு சதுரத்திலும் என்னென்ன செடிகளை வளர்க்கலாம், எத்தனை செடிகளை வளர்க்க முடியும் என்பதை பார்க்கலாம். கிழே உள்ள படம், வெளி நாடுகளில் சதுர அடி தோட்டத்தில் வளர்க்கப்படும் காய்கறி செடிகளின் எண்ணிக்கை (சதுர அடிக்கு) விபரம் காட்டப்பட்டுள்ளது.

இதில் நாம் உபயோகிக்கும் காய்கறி செடிகள் பற்றி பார்க்கலாம்.


சதுர அடி தோட்டம் என்பது கிடத்தட்ட மேட்டு பாத்தி விவசாயம் போன்றதே. இம் முறை மூலம், குறைந்த நில பரப்பில் அதிக செடிகளை வளர்த்து அதிக காய்கறிகளை பெறுவதே மேலை நாட்டினரின் நோக்கமாகும். ஏக்கர் கணக்கில் வீட்டை சுற்றி இடமிருந்தும் ஏன் இந்த சதுர அடி தோட்டத்தை விரும்புகிறார்கள்? அதற்கான காரணம் இவைதான்.

1. நிலத்தை கொத்தி பக்குவப்படுத்த தேவையில்லை.

2. தோட்ட மண், மக்கிய குப்பை இவை கலந்து செடி வளர தேவையான உயரத்துக்கு நிரப்பப்படுவதால், இம் மண் எப்பொழுதுமே இறுகாமல் லூஸாக இருக்கும். இதனால் வேர்களுக்கு தேவையான காற்றோட்டம் தாராளமாக கிடைக்கும்.

3. கீழேயுள்ள மண் (நிலம்) இறுக்கமாக இருப்பதால், செடிக்கு ஊற்றும் நீர் மண்ணுக்குள் இறங்கி வீணாகாது. அதனால் குறைவான தண்ணீரே தேவை.

4. செடி வளர்வதற்காக நிரப்பப்பட்டுள்ள மண்ணில் உள்ள உர சத்து நீரில் கரைந்து பூமிக்குள் செல்லாமல், செடிக்கே செல்லும்.

5. ஒவ்வொரு வகை செடிக்கும் மாறுபட்ட சத்துக்கள் தேவை. பல வைகையான செடிகள் வள்ர்க்கப்படுவதால், மண்ணில் கலந்துள்ள உரத்தில் இருக்கும் பலவிதமான சத்துக்கள் பரவவலாக தேவைப்படும் செடிகளுக்கு கிடைக்கும்.

நம் நாட்டை பொறுத்தவரை மரத்திலான சட்டம் அமைப்பது என்பது அதிக செலவு ஏற்படுத்தும் விஷயம். மேலும் மழை வெயில் இவற்றால் இற்றுப்போகும். எனவே மரத்துக்கு பதிலாக மண் சரிந்து விழாமல் இருக்க சிமிண்ட் ஸ்லாப் அல்லது பழைய செங்கல் இவற்றை அடுக்கி வைக்கலாம். அல்லது பாக்கிங் கேஸ் ( மரப்பெட்டி) உபயோகப்படுத்தலாம்.

அடுத்த பதிவில் செடிவளர்ப்பு பையில் (GROW BAG) எப்படி காய்கறி தோட்டம் அமைக்கலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

சந்திப்போம்...........


13 comments:

 1. பயனுள்ள பதிவு
  முயற்சித்துப் பார்க்கிறேன்
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

  ReplyDelete
  Replies
  1. இப்பொழுது கிடைக்கும் காய்கறிகள் எல்லாம் பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்பட்ட செடிகளில் காய்த்தவை. இதை சாப்பிடுவதால் கேன்சர் போன்ற நோய்கள் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. தங்கள் வருகைக்கு நன்றி.

   Delete
 2. வணக்கம்
  யாவருக்கும் பயன் பெறும் பதிவு பகிர்வுக்கு நன்றி..த.ம1
  என்பக்கம் சிறுகதையாகவாருங்கள். அன்புடன்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை):
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 3. Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 4. பலநாள் எண்ணம் வாழைக்கு அருகே செய்து பார்க்க வேண்டியது தான் .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. பயனுள்ள பதிவு.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 6. பயனுள்ள தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete