Saturday, December 6, 2014

தமிழக அரசு தோட்டக்கலை துறையின் “ DO IT YOURSELF" திட்டம்.

சென்னை மற்றும் கோவை நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் ஆர்கானிக் முறையில் செடிகளை வளர்த்து பெறும் வகையில் 50% மானியத்துடன் அதற்கான பொருட்களை வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதன்படி வழங்கப்படும் பொருட்களின் (கிட்) விலை மானியம் போக 1325 ரூபாய். 

இதற்காக அரசு ஒதுக்கியிருக்கும் பட்ஜெட் ரூ. 5 கோடி. சென்னைக்கு 9500 Kits, கோவைக்கு 3000 kits என ஒதுக்கப்பட்டுள்ளது. நபர் ஒன்றுக்கு அதிக பட்சமாக 5 கிட்டுகள் வழங்கப்படும். 

ஒவ்வொறு கிட்டிலும் உள்ள பொருட்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


செய்முறை விளக்க கையேடு (Technical Booklet) டவுன்லோடு செய்ய கிளிக் செய்யவும்.

விபரங்களுக்கும், பதிவு செய்யவும்  விளக்க கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை தொடர்பு கொள்ளவும்.